பெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்கன் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்கன் துஆவுடன் அவர்களும் துஆச்செய்வார்கள். அந்த நான் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி 971 இந்த ஹதீஸில் பெருநாள் தினத்தில் ஆண்களும், பெண்களும் தக்பீர் சொல்வோம் என்று கூறப்பட்டுள்ளது. தக்பீர் என்பது அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்து ல்லாஹி கஸீரா… என்ற ஒரு நீண்ட பைத்தை ஓதும் வழக்கம் உள்ளது. இவ்வாறு பெருநாட்கல் ஓத வேண்டும் என்பதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. இன்ன தக்பீர் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு வரக்கூடிய ஹதீஸ்கள் பலவீனமானவையாகவே உள்ளன. அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா என்ற தக்பீர் சல்மான் பார்ஸி (ரலி) கூறியதாக ஆதாரப்பூர்வமான அறிவிப்பு உள்ளது. ஆயினும் இது சல்மான் (ரலி)யின் சொந்தக் கூற்றாகவே அறிவிக்கப்பட்டுள்ளது எனவே இது மார்க்கமாக முடியாது.
No comments:
Post a Comment