அனைத்துப் புகழும் அகில உலகையும் படைத்தது பரி பக்குவப்படுத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக -

Wednesday, 12 December 2012

மனித உடல் ஒரு பார்வை…

  1. மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639.
  2. மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
  3. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
  4. மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400.
  5. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.
  6. மனித மூளையின் எடை 1.4 கிலோ.
  7. உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்.
  8. மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்.
  9. உடலின் மெல்லிய சருமம் கண் இமை.
  10. மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி.
  11. ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
  12. மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.
  13. நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
  14. மனித நாக்கின் நீளம் 10 செ. மீ.
  15. ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர்.
  16. மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
  17. நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
  18. நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
  19. நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
  20. நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
  21. நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.
  22. நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
  23. நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
  24. நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன. நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.
  25. உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.
  26. நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும். ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
  27. புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.
  28. மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
  29. மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.
  30. ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.
  31. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.
  32. நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.
  33. 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.
  34. க‌ண் தான‌த்‌தி‌ல் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.
  35. மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

மனித மூளை

 


1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை (~1.4 kg) என்றாலும், நாம் சுவாசிக்கும் பிராணவாயுவில் 20%-தை மூளையே எடுத்துக்கொள்கின்றது. அதாவது, ஐந்தில் ஒரு பகுதி பிராணவாயுவை மூளையே பயன்படுத்திக்கொள்கின்றது. சுமார் 4-6 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் இருக்க முடியும்.
2. அதுபோல, இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தில் 15-20% நேரடியாக மூளைக்கு செல்கின்றது.
3. உங்கள் மண்டை ஓட்டை திறந்து மூளையை எடுத்தால், உங்கள் கண்களும் அதனோடு சேர்ந்து வந்துவிடும். ஒரு கணிப்பொறியில் கீபோர்ட் இணைந்திருப்பது போல மூளையுடன் நேரடியாக இணைந்திருக்கின்றன நம் கண்கள். ஆனால் மற்ற புலன்களுக்கு இம்மாதிரியாக நேரடி இணைப்புகள் கிடையாது.
4. மனித மூளை சுமார் 10 வாட் சக்தியை உற்பத்தி செய்கின்றது. இது, ஒரு சிறிய அளவிலான மின் விளக்கை எரிய வைக்க போதுமானது. (அதனாலும் தான் மனித மூளையில் பல்ப் எரிவது போல காட்டுகின்றார்களோ!)
5. உடலின் மற்ற பகுதிகளின் வலியை மூளை உணர்ந்தாலும் தன்னுடைய வலியை அதனால் உணர முடியாது. இதற்கு காரணம், வலி உணரும் உணர்விகள் மூளைக்கு கிடையாது. இந்த காரணத்தினால், மனிதன் முழு நினைவோடு இருக்கும்போதே மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த காரணத்தினாலேயே தலைவலி பிரச்சனைகளை மூளையோடு தொடர்புபடுத்த முடியாது. மூளையை சுற்றி இருக்கும் நரம்புகளின் அழுத்தத்தாலும், இரத்த நாளங்களின் அழுத்தத்தாலுமே வலி ஏற்படுகின்றது.
6. மனித மூளையில் 80% தண்ணீரே உள்ளது. நீர் வறட்சி மூளையை பாதிப்புக்குள்ளாக்கலாம். ஆகையால், நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும். தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
7. மூளையிலிருந்து வெளிவரும்/உள்வரும் நரம்பு சமிக்கைகள், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 170 மைல்கள் வேகத்தில் பயணிக்கின்றன. இதனாலேயே நம்மால் எந்தவொரு உணர்வையும் உடனடியான உணர முடிகின்றது.
8. மூலையில் உள்ள இரத்த நாளங்களின் நீளம் மட்டும் சுமார் ஒரு லட்சம் மைல்கள்.
9. சுமார் நூறு பில்லியன் நியுரான்கள் மூளையில் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொள்வதில்லை (physically).
10. நியுரான்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புக்கொள்வதை மந்தமாக்குகின்றது மதுப்பழக்கம். (இருப்பினும் டாஸ்மாக் நடத்துவதை அரசாங்கம் கைவிடபோவதில்லை. மதுவை எதிர்க்காத பலருக்கு, தமிழன் முன்னேறவில்லை(?) என்ற ஆதங்கம் மட்டும் இருக்கும்).
11. கருவுறலின் போது, நிமிடத்திற்கு 2,50,000 நியுரான்கள் என்ற கணக்கில் மூளை வளர்ச்சியடைகின்றது. குழந்தை பிறந்த ஒரு வருடத்தில், அதன் மூளை அளவு மூன்று மடங்கு பெரிதாகி விடுகின்றது. (குழந்தைகளின் தலை பெரிதாக இருக்கின்றது என்பது இயல்பான விசயமே!!)
12. ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் (switches) எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம்.
இறைவன் அமைத்துக்கொடுத்துள்ள இந்த மிக அற்புதமான அமைப்பை நல்ல முறையில் பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோம்.
நன்றி : உடையநாடு

எலும்புகள்

man_bones_200நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச்சட்டம் என்று பெயர்.
உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச்சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.

bones_250 
எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர்.
மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு. இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.
அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும். அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன.
தகவல்: மு.குருமூர்த்தி

நம் உடலைப் பற்றிய உண்மைகள்

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
நமது மூளை 80% நீரால் ஆனது.
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்,
கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள்

Tuesday, 11 December 2012

மனித நுரையீரலின் ஒப்பற்ற பணிகள் !!!

மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயுப் ப ரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வதும் இதன் மற்ற பணிகளாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிஜனை உள் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன்-டை- ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் 22,000 முறை மூச்சு விடுகிறான். கிட்டத்தட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறான்.

நுரையீரலின் செயல்பாடு

நுரையீரல் எவ்வாறு தன்னுடைய பணியை திறம்பட செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று மூச்சுக் குழாய் (Trachea) வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக் குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்குச் செல்கிறது. நுரையிரலுக்குள் நுழைந்தவுடன் மூச்சுக்குழல் ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும். பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு கிளைகள் என நிறைய பிரிவுகள் ஒரு மரத்தின் பெரிய கிளையிலிருந்து பரந்து பிரிந்து சின்னச்சின்ன தளிர்கள் வருவதுபோல் பிரிகின்றன. அதனாலேயே இதனை மூச்சுமரம் (Respiratory tree) என்று அழைக்கின்றோம். முதல் நிலை மூச்சுக் குழல் (Primary bronchi), இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக் குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச் சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி அறைகளுக்குள் இந்த குழல்கள் நீட்டிக் கொண்டிருக்கும். இவற்றை காற்று நுண்ணறைகள் (Alveoli) என்று அழைக்கிறோம். நாம் இழுக்கும் மூச்சுக்காற்று மூச்சு மரம் வழியாக காற்று நுண்ணறைகளுக்குள் வந்துவிடும்.

உடலில் பல பாகங்களிலும் இருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தம் இதயத்தின் வலது வெண்டிரிக்கலை அடையும். அங்கிருந்து நுரையீரல், தமணி மூலம் நுரையீரலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரல் தமணியும், வலது கிளை, இடது கிளை, என்று இரண்டாகப் பிரிந்து இரண்டு நுரையீரலுக்கும் செல்கிறது. இதுவும் பலமுறை கிளைகளாகப் பிரியும். இப்படிப் பிரியும்போது காற்று நுண்ணறைகளின் பக்கத்தில் தமணிகளின் மிக மிகச் சிறிய கிளைகள் அமைந்திருக்கும். இந்தச் சின்ன தமணிக் கிளைகள்தான் தந்துகிகள் (Capillaries) எனப்படுகிறது.
காற்று நுண்ணறை பக்கத்திலேயே தந்துகிகள் இரண்டின் சுவர்களும் மிக மிக நுண்ணியவையாக இருக்கும். அடுத்தடுத்து நுண்ணறைக்குள் காற்று நிறைந்திருக்கும் தந்துகிக்குள் ரத்தம் நிறைந்திருக்கும்.
வெளியிலிருந்து மூச்சுக்குழல் மூலம் உள்ளிழுக்கப்பட்ட காற்றில் நிறைய ஆக்ஸிஜன் இருக்கும். எனவே, நுண்ணறைக்குள்ளும் அதே அளவு ஆக்ஸிஜன் இருக்கும். தந்துகியில் உள்ள ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு குறைவு. கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகம். உடலுக்கு வேண்டாத உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மற்ற சில பொருட்களும் தந்துகியில் உண்டு.

இந்த நிலையில் நுண்ணறை – தந்துகி சுவர்களின் வழியாக ஒரு பரிமாற்றம் நடக்கிறது. நுண்ணறையில் அடர்த்தியாக இருக்கும் ஆக்ஸிஜன் தந்துகிக்குள் பாயும். தந்துகியில் அடர்த்தியாக இருக்கும் கார்பன்டை ஆக்ø-ஸடு நுண்ணறைக்குள் பாயும். இதுதான் வாயுப் பரிமாற்றம் (Exchange & gases). இதைத்தான் ரத்த சுத்திகரிப்பு என்று அழைக்கிறோம்.

ஆக்ஸிஜன் ஊட்டப்பட்ட ரத்தம் நுரையீரலிலிருந்து சிரைகள் மூலமாக இதயத்தின் இடது வெண்டிரிக்கிளுக்குள் எடுத்துச் செல்லப் படுகிறது. அங்கிருந்து மீண்டும் உடலின் பல பாகங்களுக்கு தமனிகள் மூலம் இந்த சுத்த ரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.

நுரையீரலைச் சுற்றி இரண்டு உறைகள் உள்ளன.

1. வெளிப்படலம் (Outer pleura)
2. உள்படலம் (Inner pleura)
இந்த இரண்டு படலங்களுக்கும் இடையே ஒரு இடம் உண்டு. அதற்கு ஃப்ளூரல் இடம் என்று பெயர். இதனுள் மிகச் சிறிய அளவு ஃப்ளூரல் திரவம் இருக்கும். இந்தத் திரவம்தான் சுவாசத்தின் போது நுரையீரல்களின் அசைவினால் உராய்வு ஏற்படாமல் தடுக்கிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தி சீராக வைப்பதே முகுளப்பகுதி. அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 18 முதல் 20 சுவாசம் என சீராக வைப்பது மூளையில் உள்ள முகுளத்தின் வேலை.

மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான். எப்போதும் நுரையீரலுக்குள்ளே இருந்துகெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர்.
பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். இதுபோல் மூச்சுக் குழாய்களில் மேல் சிலியா என்ற பொருள் இருக்கும். இதுவும் மிக நுண்ணிய தூசியைக் கூட அகற்றிவிடும்.
இது மூச்சுக் குழாய்களில் வரும் தூசியை மேல்நோக்கி திருப்பி அனுப்பிவிடும். நாம் அறியாமலே சில சமயங்களில் அதை விழுங்கிவிடுவோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள்ளே நுழைந்தால் இருமல், தும்மல் முதலியவற்றால் வெளியேற்றப் பட்டுவிடும்.

நுரையீரலின் பணிகள்

காற்றில் உள்ள ஆக்ஸிஜனை (ஆக்ஸிஜன்= உயிர்வளி, பிராணவாயு) இரத்தத்தில் சேர்ப்பதும், இரத்ததில் உள்ள கார்பன்-டை ஆக்ஸைடை (கரியமில வாயு) பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.
இதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருந்து இதயத்தை அதிர்வுகளிலிருந்து காப்பாற்றுகிறது.
சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது, வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வது போன்ற உடலுக்கு உயிர்தரும் வேலைகளை நுரையீரல் செய்து வருகிறது.
நுரையீரல் பாதிப்புஉலகில் இலச்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு அதாவது சிலிகா, ஆஸ்பெட்டாஸ், கந்தகம், போன்றவற்றைப் பயன்படுத்தும் தொழிற் சாலைகளில் பணி புரிபவர்களின் நுரையீரல்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.
புகைபிடிப்பது

புகை பிடிக்கும்போது நிறைய கரித் துகள்கள் (Carbon particles) நுரையீரலுக்குள் சென்று அங்கேயே படிந்து விடுகின்றன. இதனால் ஆக்ஸிஜன்- கார்பன்டை ஆக்ஸைடு பரிமாற்றம் தடைபடுகிறது. மற்றும் சிகரெட், சுருட்டு, இவற்றிலுள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து கனிமப் பொருள்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, ரத்தக் குழாய்களின் அடைப்பை உண்டாக்குகிறது. புகைப் பழக்கத்தால் மூச்சுக்குழல் அலர்ஜி, காற்றறைகளின் சுவர்கள் சிதைந்துபோதல், எம்ஃபசிமா, நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உண்டாகின்றன. புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, பக்கத்தில் இருப்பவர்களுக்கும் (Passive smoking) இதே தீங்குகள் நேரிடும்.

நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்

இருமல்
மூச்சு வாங்குதல்
மூச்சு இழுப்பு
நெஞ்சுவலி
ஹீமாப்டிஸிஸ் (இருமும்போது ரத்தம் வெளியேறுதல்)
நுரையீரலைத் தாக்கும் சில முக்கிய நோய்கள்
மூச்சுக்குழாய் அலர்ஜி(Bronchitis), நுரையீரல் அலர்ஜி (Pneumonia), காற்றறைகள் சிதைந்து போதல்(Emphysema), மூச்சுக்குழல்கள் சுருங்கிக் கொள்ளுதல் (Asthma).

நுரையீரலை பாதுகாக்க சில எளிய வழிகள்

· தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது மூக்கில் துணியைக் கட்டிக்கொள்வது (Mask) நல்லது.
· பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைப்பிடிப்பது.
· புகைப் பிடிப்பதை தவிர்ப்பது
· உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிடுவது

இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த காற்று அதிகம் இருப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலும் அதிகம் இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் மினரல் வாட்டர் பாட்டிலைப் போல் ஆக்ஸிஜனை பாக்கெட்டுகளில் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்நிலை மாற சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் பசுமை நிறைந்த பகுதிகளாகவும் மாற்றினாலே போதும்.. ஆரோக்கிய வாழ்வைப் பெற்றிட முடியும்

மூச்சுப்பயிற்சியினால் என்ன பயன்? : யோகாசன பயிற்சி 7

கடந்த தொடரில் மூச்சு பயிற்சியின் பல்வேறு வடிவங்களை வரும் தொடரில் பார்க்கலாம் என்று
கூறி முடித்திருந்தோம். ஆனால் அதற்குள் போவதற்கு முன், நாம் உள்ளிழுத்து வெளிவிடும் மூச்சு உடலுக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை நிகழ்த்துகிறது என்று இந்த பகுதியில் விளக்கம் தெரிந்து கொள்ளலாம்.
யோகாசனப் பயிற்சிகளாலும், மூச்சு பயிற்சிகளாலும் உடலுக்கு என்ன பயன் விளையக்கூடும் என்பது பற்றி பலருக்கும் சந்தேகங்கள் இருப்பது இயல்பு. பொதுவாக அதுவொரு ஆரோக்கிய பயிற்சி என்பது மட்டும் தான் வெளிப்படையாக தெரிந்த செய்தி. ஆனால் யோகாசனப்பயிற்சிகளும், மூச்சு பயிற்சிகளும் உடலில் அரிதான பல மாற்றங்களை நிகழ்த்துகின்றன என்பதே உண்மை. இன்றைக்கு இயங்கும் கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் கண்ணுக்கு தெரியாத மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

நமது மூளையும் ஏறக்குறைய இதே அடிப்படையில் செயல்பட்டு தான் மனிதனை உலகத்தின் உயர்ந்த பரிணாம அதிசயமாக மாற்றியிருக்கிறது. இன்று வரை மனித மூளையின் முழு ஆற்றலின் வெளிப்பாட்டையும் அறிந்திருக்க முடியவில்லை. ஆனால் வியத்தகு செயல்பாட்டை கொண்ட சில விஞ்ஞானிகளால் மட்டும் உலகின் அரிதான கண்டுபிடிப்புகளை வெளியிட முடிந்திருக்கிறது. இதற்கு காரணம், அவர்களின் உடல் அதிகமான மின்காந்த செயற்பாடுகளை கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

இதை வேறுவகையில் பார்க்கலாம். இந்த பூமி ஒரு மிகப்பெரிய இயற்கை காந்தம் என்பது உண்மை. இதன் காந்த அலைகள் அதைச்சுற்றிலும் கிட்டத்தட்ட 66 ஆயிரம் மைல்கள் விட்டத்திற்கு ஒரு அடர்த்தியான பரப்பளவில் அலைகளாக விரிந்து கிடக்கிறது. அதன் வட துருவம் வடஅமெரிக்கா வரையிலும், தென்துருவம் தென்விக்டோரியா வரையிலும் படர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படியானால் இந்த காந்த எல்லைக்குள் வசிக்கிற அனைத்து உயிரினங்களும் மின்காந்த துணுக்குகள் தான் என்பதில் மாற்றமில்லை. மின்காந்த சக்தி விதிகளுக்கு உள்பட்டு தான் இந்த உலகமும், அதனுள் இருக்கும் நமது உடலும், உறுப்புகளும் இயங்குகின்றன.

மின்காந்த விதிகளின்படி நமது உடலும் வடதுருவம், தென்துருவமாக பிரிக்கப்பட்டுள்ளது.
காந்த சக்தியின் அடிப்படையில் உடலை ஆராயும் பொழுது மேலிருந்து கீழாக தலை, கைகள்,இடுப்பு வரை மேல்பகுதி வடதுருவமாகவும், இடுப்பிற்கு கீழ்புறம், கால்கள் முதலியவை தென்துருவமாகவும் அமைகின்றன. பக்கவாட்டில் பார்க்கும் போது வலது கை, முன் கை, வலது பாதி வடதுருவமாகவும், இடது கை, முன் கை என்று உடலின் இடப்புறம் முழுமையும் தென்துருவமாகவும் அமைகின்றன. உடலின் முன்புறம் அதாவது, நெற்றி, முகம், மார்பு, வயிறு இவைகள் வடதுருவமாகவும், உடலின் பின்புறமான பிடரி, கழுத்தின் பின்புறம், முதுகுத்தண்டு இவைகள் தென்துருவமாகவும் அமைகின்றன.

இந்த உடல் அமைப்பின் நடுநேர் கோட்டில் தான் மனித உடலை இயக்கும் 7 ஆதார சக்கரங்கள் (சுரப்பிகள்) அமைந்துள்ளன. இந்த சுரப்பிகள் முழுமையாக காந்த ஆற்றலின் விதிகளின் அடிப்படையில் சிறப்பாக இயங்கி மனித உடலையும், மூளையின் ஆற்றலையும் செம்மைப்படுத்துகின்றன. விஞ்ஞானிகளும், மருத்துவஉலகமும் மனித உடற்கூறு இயலையும், பிரபஞ்சத்தின் சக்தி ஆற்றல் அந்த உடலில் செயல்படும் விதத்தையும் கணிக்கும் முன்பே, யோக சக்தியில் வளர்ந்த யோகிகள் மனித உடலின் இந்த சக்கரங்களையும், அவற்றில் மின்காந்த ஆற்றல் செயல்படும் விதத்தையும் துல்லியமாக கணித்து அந்த ஆற்றலை செழுமைப்படுத்தும் விதத்தையும் உலகிற்கு அளித்தனர். அது தான் யோகாசனங்களும், மூச்சுப்பயிற்சியும்.

யோகிகளின் கூற்றுப்படி, மனித உடல் 7 சக்கரங்களில் இருந்து இருகூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சக்கரம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது முனைப்பு. இந்த குறிப்பிட்ட இடங்களில் உள்ள நரம்புகள் மூளையில் உள்ள முக்கியமான நாளமில்லா சுரப்பிகளோடு தொடர்புடையவை. இந்த குறிப்பிட்ட சக்கரங்கள் அல்லது முனைப்புகள் தூண்டப்படும் போது அந்த குறிப்பிட்ட நாளமில்லா சுரப்பிகள் செவ்வனே இயங்கி உடல் உறுப்புகளை சரியாக இயங்க செய்கின்றன. இந்த சக்கரங்களின் மூலமாகவே உடலின் ஜீவசக்தி பல பாகங்களுக்கும் அனுப்பபடுகிறது என்கிறார்கள். ஆக, இந்த சக்கரங்கள் இயங்க தேவையான சரியான மின்காந்த ஆற்றலை அவற்றுக்கு நாம் தொடர்ந்து அளித்திட வேண்டும். அதற்கு உதவுவது தான் யோகசனங்களும், மூச்சுப்பயிற்சியும்.

இப்போது இந்த சக்கரங்கள் என்று சொல்லப்படக்கூடிய 7 ஆதாரங்களையும் மருத்துவரீதியாக பார்க்கலாம்.


1. மூலாதார சக்கரம்
இந்த சக்கரம் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் இருக்கிறது. இதுவே குண்டலி சக்தியின் இருப்பிடம் என்பார்கள். இது பாலுணர்வு தொடர்பான உணர்வுகளுக்கு இருப்பிடம். இதன் மையம் மூளையிம் அடிப்புறமாகும். ஆண்களில் டெஸ்டிஸ் எனப்படும் உறுப்பும், பெண்களில் சினைப்பையும் இதன் பிரதிபலிப்பாகும்.

2. சுவாதிஷ்டான சக்கரம்
இந்த இடத்தில் சோலார் பிளக்ஸ் என்று சொல்லப்படும் நரம்பு மண்டலம் உள்ளது. இது அட்ரீனல் சுரப்பிகளுடனும், கழிவு மண்டலத்துடனும் தொடர்புள்ளது. சிறுநீரக மண்டலம் இருக்கும் இந்த இடம் ஆண்குறி அல்லது பெண்குறி. இது குதத்தையும், கால்களையும் கட்டுப்படுத்தக்கூடியது. கர்ப்பபையும், சினைப்பையும் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.

3. மணிபூரக சக்கரம்
இதன் இருப்பிடம் தொப்புள். இது அக்கினி சக்தியாக கருதப்படுகிறது. இது கணையத்துடன் தொடர்புடையது. வயிறு, குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்றவை இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

4. அனாகத சக்கரம்
இது இருக்கும் இடம் இதயம். இது தைமஸ் சுரப்பியுடன் தொடர்புடையது. இது இதயத்தையும், நுரையீரலையும் கட்டுப்படுத்துகிறது. வேகஸ் நரம்பு மண்டலம் என்னும் அதி முக்கிய நரம்பு மண்டலம் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.

5. விசுத்த சக்கரம்
இதன் இருப்பிடம் கழுத்து மற்றும் பின்புற எலும்புகள் அமைந்துள்ள இடம். காதுகள், மூக்கு, தொண்டை, கண்கள், உணவுக்குழல், பாரா தைராய்டு ஆகியவை இதன்கட்டுப்பாட்டில் உள்ளன. இது தைராய்டு சுரப்பியை குறிக்கிறது.

6. அஜ்ந சக்கரம்
இது முளையின் நடுமையத்தில் வெளிப்புறமாக இரண்டு புருவ மத்தியில் அமைந்துள்ளது. இது பீனியல் கிளாண்ட் எனப்படும் சுரப்பியைக் குறிக்கிறது. இந்த பீனியல் கிளாண்டுக்கு மூன்றாவது கண் என்ற பெயர் உண்டு. இது மூளையின் கீழ்புறத்தையும்,காதுகளையும், மூக்கையும் கட்டுப்படுத்துகிறது.

7. சகஸ்ரார சக்கரம்
இது பிட்யூட்டரி சுரப்பியை குறிக்கிறது. தலையின் உச்சியில் அமைந்துள்ளது. பிட்யூட்டரி நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்ற பெருமை கொண்டது. அதீதமான அறிவுத்திறனை ஒருவர் பெறுவதற்கு இந்த பிட்யூட்டரி சுரப்பியின் ஆற்றல் தான் காரணம்.

ஆக..இந்த 7 சக்கரங்களை தூண்டி நன்றாக செயல்படும் படி செய்யவும், உடலுக்கு வரும் நோய்களை தடுத்து நிறுத்தவும் வந்த நோய்களை குணப்படுத்தவும் உடலுக்கு இயங்கும் காந்தசக்தியை வலுப்படுத்தவும் மூச்சுப்பயிற்சியும், யோகப்பயிற்சியும் உதவுகின்றன. அதாவது நமது உடலுக்குள் வலுவான காந்தசக்தியை இந்த பயிற்சிகள் உருவாக்குகின்றன. ஒருவர் மிகவும் சராசரி அறிவுத்திறனுடன், எதிலும் பிடிப்பில்லாமல் இயங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இந்த பயிற்சிகளை செய்து வருகையில் மேற்கண்ட சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு மிகுந்த சுறுசுறுப்புடனும், நல்ல நினைவாற்றலுடனும், மிகுந்த திறனுடனும் விளங்கும் நபராக மாற்றத்தை காண முடியும்.

இந்த மின்காந்த சக்திகள் எப்படி நோய்களை குணப்படுத்துகின்றன என்பதற்கு வேறு ஒரு உதாரணத்தையும் கூறலாம். நமது அன்றாட வாழ்வில் காற்றில் கலந்திருக்கும் எத்தனையோ நுண்கிருமிகள் நமது மூச்சின் வழியாக உள்ளிழுக்கப்பட்டு உடலுக்குள் புகுந்து விடுகின்றன. ஆனால் இந்த நுண்கிருமிகளை எல்லாம் நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் கொன்று போட்டு உடலை பாதுகாக்கின்றன. அதாவது குறிப்பிடத்தக்க வெப்பம் உடலில் உருவாக்கப்பட்டு இந்த நோய்க்கிருமிகள் கொல்லப்படுகின்றன என்பதே உண்மை. இது போல் அதீதமான திறனுடைய வெப்பத்தை யோகாபயிற்சியும், மூச்சு பயிற்சியும் நமக்கு தருகிறது.

இந்த பயிற்சிகளால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படுத்தப்படுகிறது. இதனால் உடலுக்குள் நுழையும் கிருமிகள் தடுக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கிறது.

இதுதவிர பயிற்சிகளின் உச்சத்தில் ஒருவரால் கண்களால் கூட பொருள்களை நகர்த்தும் ஆற்றலை (சைக்கோகீனசிஸ்) என்ற ஆற்றலை பெறும் அளவுக்கு கூட முன்னேற முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். சிவனின் மூன்றாவது கண் என்பது கூட ஒரு வித ஆற்றலின் வெளிப்பாட்டு வடிவம் தான்.
இனி வரும் தொடரில் மூச்சுபயிற்சியின் பல்வேறு வடிவங்களையும், இந்த பயிற்சிகளால் உடலில் என்ன மாறுதல் நடக்கும் என்பதையும் பற்றி பார்க்கலாம்.

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

தோல் ; தெரிந்து  கொள்வோம் மனித உறுப்புகளை பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ‹ மேற்புறம் முழுவதும் போர்வையாக அமைந்துŸளது. இ›வமைப்பு உடல்š உŸளுறுப்புகளைப் பாதுகாக்கிறது.
உடšல் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது. உடல்š வெப்பத்தைப் பாதுகாக்கிறது. உடலுக்கு வைட்டமின்‹ D தயாரித்தளிக்கிறது. தொடு
உணர்ச்சி, வலியறிதšல், வெப்பமறிதல்š போன்ற உணர்வுகளை உடலுக்கு உணர்த்துகிறது. இ›விதம் பலதரப்பட்ட பணிகளைச் செŒவதாšல் தோலை 'பšலதொழிš விற்‰ப‹னர்' எனலாம்.

மேšல்தோலானது ஹைப்போடெர்மிஸ் (கீœடெர்மிஸ்) எனும் செல்š பரப்பின்‹ மீது அமைந்துŸளது. ஹைப்போடெர்மிஸ், தோலை அடியில்š உள்ள எலும்பு, தசைகளுடன்‹ இணைக்கும். மேலும் தோலின்‹ நரம்புகளையும் இரத்தக் குழšல்களையும் பெற்றிருக்கும்.

தோலிšல்š டெர்மிஸ் , எபிடெர்மிஸ் (மேšடெர்மிஸ்) என இருமுக்கிய திசுக்கள் Ÿ உண்டு. டெர்மிஸ் இணைப்புத் திசுவிலிருந்து தோšன்‹றும். இத்திசுவே தோலுக்கான அடிப்படை வலுவைத்தரும். இப்பகுதியிšல்š நரம்பு முடிவுகள் , ரோமங்களின் அடிப்பகுதிகள் Ÿ, மெšன்‹மைத் தசைகள் Ÿ ம‰ற்றும் சுரப்பிகள்Ÿ உள்ளன .š

டெர்மிஸ் பகுதி இரண்டு அடுக்குŸ கொண்டது. அவை மேற்šபுற பாப்பிšல்லரி அடுக்கு கீழ்ப்புற ரெட்டிகுலார் அடுக்கு ஆகும். ரெட்டிகுலார் அடுக்கு டெர்மிஸின்‹ முக்கிய பகுதியாகும். இப்பகுதி அடர்த்தியான த‹ன்மையுடன்‹ கீœழ்டெர்மிசுடன்‹ தொடர்பு கொண்டிருக்கும்

தோலானது தடித்தோ அல்லது மென்ம்மையனதகவோ இருக்கலாம். தடித்த தோலில் š மேற்‰குறிப்பிட்ட ஐந்து அடுக்குகளும் உண்டு. உடல்பரப்பு மெ‹ன்மையான தோல் š கொண்டது. தொடர்ந்து உராய்வு உள்ள இடங்களில் š தோšல்த் தடிப்பு ஏற்ப்படும் . இதில் š கார்னியம் அடுக்கு, பல அடுக்கு செšகளை கொண்டிருக்கும்.

நிறமிகள் Ÿ தோலின் ‹ நிறத்தை உண்டாக்குகின்‹றன. கார்னியம் அடுக்கின் ‹ அடர்த்தி, அடியில் š உள்ள இரத்த ஓட்டம் போன்றவைகளும் நிறமளிக்கலாம். நிறமானது மெலனின் ‹ நிறமிகளால் š தோன்றும் . இந்நிறமி தோல் š, ரோமம், கண்கள் போன்ற பகுதிகளுக்கு நிறமளிக்கும். சூரியன் ‹, UV கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.

புகை பழக்கம்

ஆண்டு தோறும் (மே-31) உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையை பயன்படுத்துவது நாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலானோரை அது ஆட்கொண்டுள்ளது. நவநாகரீக பெண்களையும் இப்பழக்கம் சுற்றி வளைத்துள்ளது. இந்த புகையிலை நாகரீக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர் கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்து வருகிறது.ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக சிகரெட்டாக, பான்பராக்காக, குட்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும்.
புகை பிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டு தோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது.அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர். மேலும் இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்று நோயினாலும் ஆண்டு தோறும் மடிகின்றனர். புகையிலை பொருட்களில் சிகரெட் முதலிடத்தை வகிக்கிறது.* சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 வேதிப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
* உலக அளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகைப்பிடிப்பதால் மரணத்தை தழுவுகிறார்.
* ஆண்டிற்கு 60 லட்சம் பேர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளால் உயிரை துறக்கின்றனர்.
* 2030-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* வளரும் நாடுகளை சார்ந்தோர் 70 சதவீதம் பேர் இதில் அடங்குவர்.
* 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு பொருளை உட் கொண்டு வெளியிடுகிறார். இவரால் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
* பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உள்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுபவை.
* புகை பழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகை பிடிப் போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம்.
* இது இருதய துடிப்பை யும், ரத்த கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும், சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக் குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
* சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக்குழாய், சிறுநீரக பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்று நோயை ஏற்படுத்தும்.
* நுரையீரல் நோய், புற்று நோய் ஏற்பட காரணம் புகை பிடிப்பதே.
* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி. என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.
* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
* புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்ற வற்றை வாங்க தினமும் குறைந்தது 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.
இத்தகைய தீங்களிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக ஆகமாட்டார்.
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்.[நூல்;புஹாரி]

மேலும் ஒரு முஸ்லிம் எல்லாவகையிலும் நன்மையான விஷயங்களில் பிறருக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். தீமையான விஷயத்தில் முன்னுதாரணமாக திகழக்கூடாது. புகைபிடிப்பவர்கள் தன்னுடைய வீட்டில் சர்வ சாதாரணமாக புகைப்பதால், இவரை பார்த்து இவரது பிள்ளைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக்கொள்கிறது. அதுபோல் இவரது நண்பர்கள் உறவினர்கள் சிலரும் புகைப்பதற்கு இவர் காரணியாக அமைந்துவிடுவார். ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். தீமைக்கு வழிகாட்டினால் உலகம் அழியும்வரை இவர் காட்டிய தீமையை யாரெல்லாம் செய்கிறார்களோ அதிலிருந்து ஒரு பங்கு இவருக்கு கிடைக்கும்.
பொருளாதார வீண் விரயங்கள்;
புகைப்பிடிக்கும் ஒருவர் தான் இந்த பாழாய்ப்போன புகைக்கு செலவிட்டதை ஒரு ஆண்டு சேமித்து வைத்து பார்ப்பாரானால், அவரே பிரமிக்கும் அளவுக்கு ஒரு தொகை விரயமானதை உணர்வார். இத்தகைய வீண் விரயங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்; [மறுமையில்] அடியானின் பாதம் நகராது நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை;
அதில் ஒன்றுதான் , எந்தவழியில் சம்பாதித்தாய்; எந்தவழியில் செலவழித்தாய்..? [திர்மிதி]நாளை மறுமையில் அல்லாஹ் மேற்கண்ட கேள்வியை கேட்கும்போது, நாம் செலவு செய்த பட்டியலில் சிகரெட் மற்றும் புகையிலைக்காக அளித்த காசும் வருமே! அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? சிகரட் பிடிப்பது மார்க்கத்தில் ஆகுமானது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? அல்லது சிகரெட் பிடிப்பது உடம்புக்கு நல்லது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? இந்த வீண் விரையத்திற்காக இறைவன் தரும் தண்டனையை தாங்க முடியுமா?

சிந்திக்க வேண்டும்.புகை பிடிப்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)சிகரெட்டுக்காக செலவழிக்கும் பணத்தை ஒரு ஆண்டு நீங்கள் சேமித்தால் எத்துனை ஆயிரங்களை விரயமாக்கியிருக்கிறோம் என்று கணக்கிடமுடியும். ஒரு பாக்கெட் சிகரெட்டுக்காக செலவிடும் காசை ஒரு ஏழைக்கு தர்மம் செய்தால் உங்கள் செல்வமும் பெருகும். மறுமையில் நன்மையும் கிடைக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவன் நமக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். காசையும் கொடுத்து கெடுதியை வாங்குவதுதான் பகுத்தறிவா என்று சிந்திக்க வேண்டும்.


                                                                                                -முகவை அப்பாஸ்

பழி சுமத்தும் இழி செயல்

மனித சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு விரைவாக எவர் மீதாவது பழி சுமத்திவிடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது. சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கம் பலனளிக்காமல் போனால் இதுவே பழி சுமத்துவதற்கு காரணமாகி விடுகின்றது.
ஆதிக்கம் செலுத்துபவர்கள் அன்பு காட்டி பார்க்கின்றனர். அதற்கு அடிபணிய வில்லையானால் ஆசை காட்டி பார்க்கின்றனர். அதற்கும் மசியவில்லையானால் குற்றம் குறை ஏதும் இருக்கின்றதா? என்று பார்க்கின்றனர். இருந்து விட்டால் அதற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அரட்டி மிரட்டி அடி பணிய வைக்கின்றர். இதிலும் தோல்வி அடைந்துவிட்டால் பழி சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டு அடக்க முயல்கின்றனர்.
இது குறித்து அல்லாஹ் தன் திருமறையில் மூஃமினான ஆண்களையும், மூஃமினான பெண்களையும் செய்யாததை (செய்ததாக) கூறி எவர்கள் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 33:58)
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஏழை மனிதர்கள் யார் என வினவினார்கள் (அதற்கு தோழர்கள்) எங்களில் பொருள் வசதி இல்லாதவர்தான் ஏழை மனிதர் என பதிலளித்தார்கள்; அது சமயம் நபி (ஸல்) அவர்கள் கியாமத் என்னும் இறுதி நாளில் (நீங்கள் கூறிய நபர் அல்ல) அந்நாளில் ஏழை மனிதர் உலகிலிருந்து தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற எல்லா வகையான வணக்க வழிபாடுகளையும் கொண்டு வருவார். அத்துடன் அவர் எவரையாவது திட்டியிருப்பார். எவர் மீதாவது பழி சுமத்தியிருப்பார். எவருடைய பொருளையாவது சாப்பிட்டிருப்பார். எவரையாவது அநியாயமாக கொன்றிருப்பார். எவரையாவது அநியாயமாக அடித்திருப்பார்.
ஆக இத்தகு குற்றங்களையும் கொண்டு வருவார். பின்பு இவருடைய நன்மைகளிலிருந்து (இவரால்) அநீதம் இழைக்கப்பட்டவருக்கு (நன்மை) வழங்கப்படும்; (இவரால்) மற்றொரு அநீதம் இழைக்கப்பட்டவருக்கும் இவருடைய நன்மைகளிலிருந்து வழங்கப்படும். (இப்படியே) இவருடைய நன்மைகள் எல்லாம் முடிந்துவிடும். (ஆனால்) மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் மீதமிருக்கும்; (ஆகவே) அம்மக்களின் குற்றங்களை அவர் மீது சுமத்தப்படும்; பின்பு அவரை நரகில் போடப்படும். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
தப்பெண்ணம் கொண்டு பழி சுமத்தும் இழி செயல் தான் நபித்தோழர்களையும், நபி உறவினர்களையும் ஷஹீதாக்கப்பட தூண்டுகோலாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. எவனாவது எவனுடைய குறையையேனும் தோண்டித் துருவி அலசி ஆராய்ந்து தக்க ஆதராமின்றி அவதூறு கூறுவானோ, வீண் பழி சுமத்துவானோ அவனது அந்தரங்க குறைகளை அல்லாஹ் அவனுடைய வீட்டிலேயே வைத்தே வெளிப்படுத்தி விடுவான்.
அவரவர் தத்தமது குறைகளைத் தேடித் திருத்தி கொள்பவரே அறிவாளி; அடுத்தவர் குறை தேடி பழி சுமத்துபவர் அறிவிளி.  பிறர் மீது பழி சுமத்தும் இழி செயலை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக!

அவ்லியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா?

சிலர், வலிமார்கள் மரணத்திற்குப் பிறகும் உயிருடன் உள்ளனர் என்றும், வேறு சிலர் இறந்து விட்டனர் என்றும் இரு வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். இதில் எது சரியானது என்பதைத் தெளிவாக ஆராய்ந்தாலே இதன் உண்மையை விளங்க முடியும்.


முதலில் (மரணித்த பின்னும்) ‘உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்துக் கொண்டோரின் வாதங்களைப் பார்ப்போம்.
“அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டோரை இறந்தவர்களென்று எண்ண வேண்டாம்; அவர்கள் உயிருடன் உள்ளனர். இறைவனிடமிருந்து உணவும் அளிக்கப்படுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அளித்த பேருபகாரங்களை எண்ணி மகிழ்ச்சியில் நினைத்தவர்களாக உள்ளனர்”. அல்குர்ஆன் 3:169,170
அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களென கூறாதீர்கள்! அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் அதனை நீங்கள் உணர இயலாது”. அல்குர்ஆன் 2:154
மேற்கூறிய இரண்டு ஆயத்துகளும் (திருகுர்ஆன் வாக்கியங்களும்) அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை மிகத்தெளிவாக பறைசாற்றுகின்றன. திருகுர்ஆனே இவ்வளவு தெளிவாகக் கூறும்போது நாம் எப்படி மறுக்க இயலும்? என்பது முதல் சாராரின் வாதம். மேலும் கப்ருகளை (மரித்தவர்களின் அடக்க ஸ்தலங்களை) நாம் காணும் போது, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூற வேண்டும். என்று ஹதீஸில் வருகின்றது. ‘ஸலாம்’ உயிருள்ளவர்களுக்குத்தானே சொல்ல முடியும் அதனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது என்று கூறுகின்றனர்.
இந்த ஆதாரங்கள் சரியானது தானா? என்பதை நாம் ஆராய்வோம். மேற்கூறிய ஆயத்துகள் எப்பொழுது, எதற்காக இறங்கியது என்பதைக் கவனித்தால் தான் அதன் முழுப்பொருளைப் புரிந்து கொள்ள முடியும். பத்ரு போர்க்களத்தில் சில சஹாபாக்கள் (நபிதோழர்கள்) ஷஹீதாக்கப்பட்ட (வீரமரணம் அடைந்த) நேரத்தில் காபிஃர்கள் ‘இந்த முஹம்மது அப்பாவி மக்களை தேவை இல்லாமல் பலி கொடுக்கிறாரே’ எந்தவித பயனுமில்லாமல் அவர்களின் வாழ்வு வீணடிக்கப்படுகின்றதே’ என்று குறை கூறிய போது அவர்களுக்கு பதில் தரும் விதத்தில் இந்த வசனங்களை அல்லாஹ் இறக்கினான். ‘நீங்கள் நினைப்பது போல் அவர்கள் வாழ்வு பயனற்றுப் போய்விடவில்லை. உங்களால் உணரமுடியாத வேறொரு விதமான வாழ்க்கை வாழ்கிறார்கள்’ என்ற பொருள்பட கூறுகிறான். அதனால்தான் முதல் ஆயத்தில் ‘நீங்கள் உணர முடியாது’ என்ற சொல்லையும் இறைவன் அதனுடன் சேர்த்திருக்கின்றான். இரண்டாம் ஆயத்தில் أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ ‘அஹ்யாவுன் இன்த ரப்பிஹிம்’ என்ற சொல்லை இணைத்திருக்கிறான். அதாவது இறைவனின் கண்ணோட்டத்தில் அவர்கள் உயிருடன் உள்ளனர் (உங்கள் கண்ணோட்டத்தில் அல்ல என்ற பொருள்பட)
“காஃபிர்களே! நீங்கள் நினைப்பது போல் அவர்கள் வாழ்வு பயனற்றுப் போய்விடவில்ல மாறாக! அவர்களுக்கு வேறு விதமான உணவுகள் வழங்கப்படுகின்றன. அந்த மகிழ்ச்சியில் அவர்கள் நினைத்துள்ளனர் என்ற பொருள்பட அல்லாஹ் அவர்களுக்கு பதில் கூறுகிறான்” திருக்குர்ஆனுக்குப் பொருள் கொள்ளும் போது எதற்காக, எப்போது அந்த வசனம் இறங்கியது என்பதையும் கருத்தில் கொண்டு தான் விளக்கம் தர வேண்டும்.
எனவே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நம்மில் சிலர் நினைப்பது போல் “நாம் பேசுவதை கேட்பார்கள், நமக்கு பதில் தருவார்கள். நாம் அங்கே செல்வதை உணர்ந்து கொள்வார்கள்” என்பது அதன் பொருள் அல்ல.
அந்த காஃபிர்கள் நினைத்தது போல் “மறு உலக வாழ்க்கை கிடையாது. அவர்கள் மரணித்தவுடன் எல்லாமே முடிந்து விட்டது. மறு உலக சுகங்கள் கிடையாது” என்பதுவும் அதன் பொருள் அன்று.
மாறாக, மனிதர்கள் கண்ணோட்டத்தில் உலகத்துடன் உள்ள தொடர்பைப் பொறுத்தவரையில் அவர்கள் மரணித்து விட்டார்கள். அல்லாஹ்விடம் வேறொரு விதமான வாழ்க்கை அவர்களுக்கு உண்டு என்பதுதான் இந்த ஆயத்துகளின் உண்மைப் பொருள்.
அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் ‘அந்த நல்லவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவை ரூபத்தில் சுவர்க்கத்தில் சுற்றித்திரிகின்றன’ (முஸ்லிம்) என்று விளக்கம் தந்தனர். நம்மில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்ற பொருளில் அல்ல என்பதை இந்த ஹதீஸ் மூலம் தெரியலாம்.
கப்ருகளைக் காணும்போது சலாம் சொல்லுவது அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற பொருளில் அல்ல; ஏனென்றால் இந்த சலாம் அவ்லியாக்களுக்கு மட்டும் உரியது அல்ல. எந்த முஸ்லிமின் கப்ரை கடக்க நேரிட்டாலும் சலாம் சொல்லவேண்டும். அதுவும் ‘கப்ருவாசிகளே! உங்கள்மீது சலாம் உண்டாகட்டும்! நீங்கள் முந்தி விட்டீர்கள்; நாங்களும் உங்களுடன் வந்து சேரக்கூடியவர்கள் தான்” என்று இந்த வசனத்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். நாம் நம் மரணத்தை நினைவுபடுத்திக் கொள்வதற்காக இதனைச் சொல்ல வேண்டும். நம்முடைய ஸலாம் அவர்கள் செவியில் கேட்கும் என்பது அதன் பொருள் அல்ல. ‘தென்றல் காற்றே! கொஞ்சம் நில்லு’ என்று இலக்கியமாக நாம் அழைக்கின்றோம் என்றால், தென்றல் காற்றுக்கு இந்த அழைப்பு புரியும் என்பது அதன் பொருள் அல்ல. தென்றல் காற்றை அழைப்பது போல் பாவனை செய்கின்றோம்; அது போன்ற இலக்கியம்தான் இதுவும்.
அதனால் முதல் கூட்டத்தினரின் வாதம் மிகவும் பலவீனமானது என்பது நமக்கு நன்கு புலனாகின்றது. இரண்டாவது சாரார் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் முற்றிலும் அந்த வாதத்தை முறியடித்து விடுகின்றன. அவர்களின் ஆதாரங்களைப் பார்ப்போம்.
“ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைக் கட்டாயம் சுவைத்தே தீரவேண்டும்”. அல்குர்ஆன் 3:185, 21:35, 29:57
‘ஒவ்வொரு’ என்ற பதம் எந்த மனிதரையும் இந்த முடிவிலிருந்து நீக்க முடியாத, விதிவிலக்குப் பெற முடியாத விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது; எனவே எல்லோரும் இறந்து விட்டவர்கள் என்பது தெளிவாகின்றது.
ஒரு வாதத்திற்காக, சிலரை இந்த விதியிலிருந்து நீக்கலாம் என்றால், அந்தஸ்தில், வலிமார்கள் எட்டமுடியாத உன்னதமான உயர்வு பெற்ற நபிமார்களுக்கு அந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருகுர்ஆனே மிகத்தெளிவாக நபிமார்களும் மரணித்தவர்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவாக்குகின்றது. அந்த வசனங்களை நாம் பார்ப்போம். நபி சுலைமான்(அலை) அவர்கள் ‘பைத்துல் முகத்தல்’ கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் போது மரணித்து விடுகிறார்கள். அவர்கள் மரணித்தது தெரியாமல் ஜின்கள் அந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியைச் செய்து கொண்டிருக்கின்றன. பல நாட்கள் கைத்தடியை ஊன்றியவராகிய அவர்கள் மரணித்த நிலையில் நிற்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் கைத்தடியை கரையான்கள் அரித்துக்கொண்டு வந்தபோது, திடீரென அவர்கள் கீழே விழுகிறார்கள். அப்போதுதான் ஜீன்களுக்கு சுலைமான் நபி இறந்து விட்டார்கள் என்ற உண்மை தெரிகிறது. இதனை குர்ஆன்
சுலைமான் மீது நாம் ‘மவ்த்தை’ விதித்தபோது, அவர் இறந்து விட்டார் என்பதை கரையான்களைத் தவித வேறெவரும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அல்குர்ஆன் 34:14
இந்த வசனம் சுலைமான் நபிக்கு மரணம் சம்பவித்தது என்பதை ‘மவ்த்து’ என்ற வார்த்தையின் மூலம் தெளிவாக்குகின்றது.
‘யாஃகூபிற்கு மரணம் வந்தபோது’ (அல்குர்ஆன் 2:133) என்ற வசனத்திலும் ‘மவ்த்து’ என்ற பதத்தை அல்லாஹ் பிரயோகம் செய்திருக்கிறான். மிகப்பெரும் இரண்டு நபிமார்களே இறந்து விட்டனர். மவ்தாகி விட்டனர் என்றால், வலிமார்கள் எம்மாத்திரம்?
மேலும் நபிமார்களின் தலைவராகிய நபி(ஸல்) அவர்களை நோக்கி ‘நபியே நீரும் மரணிக்கக் கூடியவர், உமக்கு முன் வந்த நபிமார்களும் மரணித்து விட்டவர்கள்’. அல்குர்ஆன்: 29:30
நபி(ஸல்) அவர்களே மரணித்து விட்டவர்கள் என்றால் வேறு யார்தான் (நம்மவர்களின் சிலர் நினைக்கின்ற பொருளில்) உயிருடன் இருக்க முடியும்?
நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்டபோது, பலரும் அவர்கள் இறக்கவில்லை’ என்று எண்ணியபோது அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் “முஹம்மதை வணங்குபவர்கள் யாரேனுமிருந்தால் (அவர்கள் புரிந்து கொள்ளட்டும்!) முஹம்மது நிச்சயம் இறந்து விட்டார்கள்” என்று சொன்னதும் இங்கே நாம் நினைவு கூறத்தக்கது.

உடல் உறுப்பு

Sunday, 9 December 2012

இதயம் செயல்படும் முறை

  நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர்.

இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும்.

இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையீரலுக்குச் செல்கின்றன. அங்கு, உள் இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றில் உள்ள ஆக்ஸிஜன் வாயுவால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. வெளி விடும் மூச்சுக் காற்றின் மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ரத்தம், இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், பெருந்தமனி மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது இப்படி இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல் முழுவதும் ரத்தம் பரவுகிறது.

இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது ?

நமது உடலில் உறுப்புகளில் பெரும்பா லானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதவாது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கி னால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும்.

ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த ரத்தம் தூய்மையாகாது. உடல் திசுக்களுக்கு, சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போது மான சத்து கிடைக்காமல் திசுக்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த     மனித உடலே இறந்துகோகும்.

இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டி ருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்த இயங்குகிறது.



இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஏன்?இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரி-ரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்து கின்றன.

இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

ஹார்மோன் செயல்பாடுகள் :
அட்ரீனலின் - இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, ரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

தைராக்ஸின் - இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்சிதை மாற்றங்களை இது கட்டுப் படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

பிற காரணங்கள் :சிரைக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் ரத்தத்தின் அளவைப் பொறுத்தும், ரத்தஅழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்க வோ, குறைக்கவோ செய்யும்.

இதயத் துடிப்பு எவ்வாறு ஏற்படுகிறது ?இதயத்தின் இயக்கத்தைப் போலவே, இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதில் நரம்பு மண்டலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மூளை மற்றும் தண்டுவடத்தில் இருந்து வரும்
நரம்புகள் இதயத்தில் வியாபித்திருக்கும். இவை, இதயத்தின் வலது பக்க மேல் அறையில் ந.அ. மின் குமிழில் (ந.அ. சர்க்ங்-நண்ய்ர்-அற்ழ்ண்ஹப் சர்க்ங்) குவிந் திருக்கும். இதில் இருந்து தொடர்ந்து மின் னோட்டம் ஏற்படும். இந்த மின்னோட்டம், அருகில் இருக்கும் (மின் குமிழ்) மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் மையமாக அமைந்துள்ள மின் குமிழிக்குப் பரவும். அங்கிருந்து பிரியும் நரம்பிழைகள் மூலமாக வலது மற்றும் இடது கீழ் அறைக்கு மின்னோட்டம் பரவும். இதனால் இதயத் துடிப்பு ஏற்படுகிறது.

அதாவது, இதயத் தசைகள் சுருங்கி விரிகின்றன. அதில் உள்ள வால்வுகள் மூடித் திறக்கின்றன. இவ்வாறு மின்னோட்டத்தை ஏற்ப டுத்தக்கூடிய மின் குமிழ் மற்றும் மின்னோட்ட இழைகளில் கோளாறுகள் ஏற்பட்டால், இதயத் துடிப்பு குறையும் அல்லது அதிகரிக்கும் அல்லது சீரில்லாமல் துடிக்கும்.

சாதாரணமாக, ந.அ மின் குமிழ் எத்தனை முறை இதயத்தில் மின்னோட்டத்தைப் பாய்ச்சுகிறதோ அத்தனை முறை இதயத்துடிப்பு இருக்கும். இது சராசரியாக நிமிடத்துக்கு 72 முறையாக இருக்கும். அதாவது, இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

இதயத் துடிப்புக்கும், நாடித் துடிப்புக்கும் என்ன தொடர்பு ?
இதயத் துடிப்பு என்பது இதய இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருந்தமனியின் ரத்த ஒட்டம் ஏற்பட்டு ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்ப டுவதே நாடித் துடிப்பு.. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.

இதயத் துடிப்பு எப்போது அதிகமாகும் ?இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்
களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.

உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும்இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைக்கக் விடும்.

இதயத் துடிப்பு எப்போது குறையும் ?தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும்.

ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு என்றும் சொல்வார்கள்.

உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத் துடிப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் கோப்பை ஐந்து முறை வென்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜான் போர்க்குக்கு சாதாரண மாகவே இதயம் நிமிடத்துக்கு 38 முறைதான் துடிக்குமாம்.

மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். அதுவே, கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.

இதயத்தின் அமைப்புஇதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுரை, வெளிப் புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் நீர் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத்
திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள் ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு வென்ட்ரிகிள் அறைகளை, கீழ்ப்புற இதயத் துடிப்புச் சுவரும் பிரிக்கின்றன.

இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலே இரண்டு, கீழே இரண்டு. மேலே இருக்கும்
அறைகள் ‘இடது ஆரிக்கிள்’, ‘வலது ஆரிக்கிள் ‘என்றும் கீழே இருக்கும் அறைகள் ‘இடது வென்ட்ரிகிள்’, ‘வலது வென்ட்ரிகிள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

இதய வால்வுகள் :இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும்.
அப்படி தள்ளப்படும் ரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பு வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் ரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன. வலது
ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு மூவிதழ் வால்வு என்றும், இடது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு ஈரிதழ் வால்வு என்றும் பெயர்.

வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘மூவிதழ் வால்வு’ தடுக்கிறது. அதேபோல், இடது ஆரிக்கிள் அறையில் இருந்து இடது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘ஈரிதழ் வால்வு’ தடுக்கிறது.

வலது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, அதிக அறையில் இருந்த ரத்தம் நுரையீரல் தமனியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் பிறைச்சந்திர வால்வு என்று பெயர். அதேபோல், இடது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, பெருந்தமனியில் செல்லும் ரத்தம் திரும்பிவரமால் தடுக்கும் வால்வுக்கு ‘பெருந்தமனி பிறைச்சந்திர வால்வு’ என்று பெயர்.

இதயத்துக்கும் ரத்தம் தேவை :உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஆக்ஸிஜன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே ரத்தத்தைத் தரும் ரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை மூலம், இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த ரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.

இதயம் சுருங்கும்போது, உடலின் பல்வேறு பகுதி களுக்கும் ரத்தம் செல்கிறது. ஆனால், இதயம் விரிவடையும்போது தான் இதயத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்கிறது.இதய ஒலிகள் :
இதயம் சுருங்கி விரியும்போது, அதில் உள்ள வால்வுகள் மூடித் திறப்பதன் மூலம், முறையாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நுரையீர லுக்கும் ரத்தம் செல்கிறது. இந்த நிகழ்வு நடை பெறும்போது உருவாவதுதான் இதய ஒலிகள் இத்தகைய ஒலிகளை நம் காதுகளால் சாதாரண மாகக் கேட்க முடியாது. அதற்குத்தான்
மருத்து வர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டெதாஸ்கோப்’ என்ற கருவி உள்ளது.

இதயத்தில் ஏற்படும் இதய ஒலிகள் மொத்தம் நான்கு. அவை, முதலாவது ஒலி, இரண்டாவது ஒலி, மூன்றாவது ஒலி, நான்காவது ஒலி என்று அழைக்கப்படுகின்றன. ஸ்டெதாஸ் கோப் கருவியைப் பயன்படுத்தி னாலும்கூட, மருத்துவர் களால் இந்த நான்கு ஒலிகளையும் ஒரே நேரத்தில் கேட்க முடியாது. அவர்களால், முதலாவது மற்றும் இரண்டாவது ஒலிகளைத் தான் கேட்க முடியும்

முதலாவது ஒலி :இதய மேல் அறைகளில் இருந்து கீழ் அறைகளுக்கு ரத்தம் வந்த பிறகு, கீழ் அறை களான இரண்டு வென்ட்ரிக்கிள் அறைகளும் சுருங்கத் தொடங்கும். அப்போது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்ளும்.

இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படுவதுதான் முதல் ஒலி.
மூவிதழ் வால்வும், ஈரிதழ் வால்வும் மிகக் குறைந்த கால இடைவேளையில் மூடிக் கொள்ளும். இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படு வதுதான் முதல் ஒலி.

முதல் ஒலியின் அளவு பல்வேறு காரணங்களி னால் மாறுபடக்கூடியது. அதாவது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகளின் அமைப்பு, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பின் தன்மை ஆகிய வற்றைப் பொறுத்து முதல் ஒலியின் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.

இரண்டாவது ஒலி :கீழ் அறைகள் இரண்டும் சுருங்கிய பிறகு, பருந் தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வழியாக ரத்தம் வெளியேறிய பிறகு, இதயத்துக்குள் மீண்டும் வந்த ரத்தம் கீழ் அறைகளுக்கு வராமல் தடுக்க பெருந்தமனி வால்வும், நுரையீரல் பெருந்தமனி வால்வும் மூடிக்கொள்ளும். அப் போது ஏற்படுவதுதான் இரண்டாவது ஒலி. இதயத்தின் அடிப்பகுதியில் இந்த ஒலி நன்றாகக் கேட்கும்.

ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது,இந்த இரண்டாவது ஒலியின் அளவு அதிகமாக இருக்கும். பெருந்தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வால்வுகளில் கால்சியம் படிந்து இறுகி, அவை சரியாகச் செயல்படாமல் போகும் போது ஒலியின் அளவு குறைவாக இருக்கும்

மூன்றாவது ஒலி :இதய கீழ் அறைகள் விரிவடைந்திருக்கும்
போது, மேல் அறையில் இருந்து ரத்தம் பாயும்போது ஏற்படுவதுதான் மூன்றாவது ஒலி. இது, மிகவும் மெல்லிய ஒலியாகும். இரண்டாவது ஒலியைத் தொடர்ந்து 0.15 விநாடிக்குப் பிறகு இது ஏற்படும். சிறுவர், சிறுமியர், இளம் வயதினர், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு இந்த மூன்றவது ஒலி ஏற்படும். இதயம் செயலிழப்பு, இதயத் தசை நோய் போன்றவை இருந்தாலும் இந்த ஒலி கேட்கும்.

முதல் இரண்டு ஒலிகளோடு இந்த மூன்றா வது ஒலியும் சேர்ந்து கேட்கும்போது, குதிரை ஓடும் போது ஏற்படும் சத்தத்தைப்போல் இருக்கும்.

நான்காவது ஒலி :மூன்றாவது ஒலியைப்போல் இதுவும் மூன்றாவது மெல்லியதாகும். வென்ட்ரிகிள்
அறை விறைத்த நிலையில், மேல் அறைகள் அதிகமாகச் சுருங்கி கீழ் அறைகளுக்கு ரத்தத்தைத் தள்ளும்போது (அற்ழ்ண்ஹப் இர்ய்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய்) இந்த ஒலி ஏற்படும். இதைச் சாதாரண நிலையில் கேட்க முடியாது.

இதயத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் மட்டுமே கேட்கும். இதயம் செயலிழப்பு, இதயச் செல்கள் அழிதல், இதய கீழ் அறைகள் வீங்கி, விறைத்துப்போதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் இந்த ஒலி கேட்கும்.

பிற இதய ஒலிகள் :மேலே சொன்ன நான்கு இதய ஒலிகள் தவிர, இதயத்தில் ஏதாவது நோய்கள் இருந்தால் அவற்றின் காரணமாகவும் பல்வேறு ஒலிகள் கேட்கும்.

இதய வால்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டி ருந்தால், அவற்றை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்கி விட்டு, உலோகத்தால் ஆன செயற் கை வால்வுகளைப் பொருத்துவார்கள். இந்த உலோக வால்வுகளாலும் ஒலி ஏற்படும். இதை, ஸ்டெதாஸ்கோப் உதவி இல்லாமலேயே, இதயத் துக்கு அருகே காது வைத்துக் கேட்க முடியும்.

நன்றி : சு. முத்துசெல்வக்குமார்.

Saturday, 8 December 2012

கண் எவ்வாறு இயங்குகிறது? (படம் இணைப்பு)

வண்ணங்களைக் காண்பது எப்படி

Cutaway of eye (details shown in image below)
. Picture showing details of how we see color

வண்ணக் குறைபாடு

Picture showing details of how we see color

கண் காயங்களும் அதன் அறிகுறிகளும்

பெரும்பான்மையான விளையாட்டு சம்பந்தப்பட்ட காயங்கள், மன அதிர்ச்சி விளைவிக்கின்றன. காயம் ஏற்படுத்தும் பொருளின் அளவு, வேகம், கனம் ஆகியவற்றைப் பொறுத்து, கண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு அளவிடப்படுகிறது. இவற்றுள் சில - கண்குழி முறிவு, கண்குழி மற்றும் கண் இமை நசிவு, கருவிழியில் காயம், கருவிழி அதிர்வு, ரெடினாவில் ரத்தப்போக்கு, ரெடினாவில் பிரிவு, கண்ணீர், கண் நரம்பு பாதிப்பு ஆகியவை. கண்குழி முறிவின் அறிகுறிகள் - வீக்கம், ஊமைக்காயம், கண்களை அசைக்கும் போது ஏற்படும் வலி, சாதாரணமாக இரு உருவங்களாகத் தோன்றும் உருவம் - ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்க்கும் போது சரியாகத் தோன்றுவது, மூக்கு சிந்தும் போது கண் இமை வீங்குவது ஆகியவை. கருவிழியில் ஏற்படும் காயத்தின் அறிகுறிகள் - பெருத்த வலி, கட்டுக்கடங்காத கண்ணீர் மற்றும் வெளிச்சத்தில் கண் கூசுதல் ஆகியவை. கண் நரம்பு பாதிக்கப்பட்டால், உடனடியாக கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. ரெடினாவில் ஏற்படும் பிரிவின் அறிகுறிகள் - கண் பார்வையில் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ சிறிய புள்ளிகள் அல்லது வலைகள் தோன்றுவது, கண்களில் திடீரெனத் மின்னல் தோன்றுவது போன்ற பிரமை, மற்றும் கண்பார்வையை மறைக்கும் திரை.


.

Eye with Hyphaema (blood clot in anterior chamber)Right iridodialysis from blunt trauma
Eye with Hyphaema (blood clot in anterior chamber) Right iridodialysis from blunt trauma
hemorrhage from blunt trauma
Blunt trauma from a paintball
Normal (pre-shooting) conditionCondition at time of shooting
Normal (pre-shooting) condition Condition at time of shooting
Subsequent condition with post-traumatic cataractCondition following lens replacement
Subsequent condition with post-traumatic cataract Condition following lens replacement
Post accident condition
Post accident condition

இறைவன் பூமியை படைத்தது ஆறு நாட்களிலா? (குர்ஆன் 7:54, 10:3, 11:7, 25:59) அல்லது எட்டு நாட்களிலா? (41:9-12)

தங்களது ஐயங்களை சத்தியமார்க்கம்.காம் தளத்திற்கு அனுப்பி வைத்தமைக்கும் நன்றி. உங்கள் நண்பரோ அல்லது அவருக்கு இந்த ஐயங்களை எழுதித் தந்த பிற மத சகோதரர்களோ, தீர்க்கமான முன்முடிவுகள் ஏதுமின்றி விசாலமான மனதுடன் வாசித்து புரிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இறைவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.

''நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்...''

அல்குர்ஆன் 7:54, 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்கள், வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாகக் கூறுகின்றன.

இறைவன் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.

''அவன்தான் வானங்கள், பூமி மற்றும் அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்...''

அல்குர்ஆன் 25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்கள், வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்ததாகவும், வானங்களும் பூமியும் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்பதில் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் சேர்த்தே ஆறு நாட்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. அதாவது,

1) வானங்கள்.
2) பூமி.
3) பூமிக்கு மேல் உள்ளவை. (இடைப்பட்டவை)

என 25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்களில் மூன்று பிரிவுகளாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை அறிய,
  • ''பின்னர் இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான்...'' (அல்குர்ஆன் 41:12)
  • ''இரண்டு நாட்களில் பூமியைப் படைத்தவனை...'' (அல்குர்ஆன் 41:9)
  • ''அதன் மேற்பகுதில் மலைகளை அமைத்தான். இன்னும் அதில் அவன் பாக்கியம் பொழிந்தான். மேலும், அதில் அதன் உணவுகளைச் சரியாக நான்கு நாட்களில் நிர்ணயித்தான். கேள்வி கேட்போருக்கு (இதுவே விடையாகும்) (அல்குர்ஆன் 41:10)
41:10 வது வசனத்தில் நான்கு நாட்கள் என்று பூமியைப் படைத்த இரண்டு நாட்களும் சேர்த்தே கூறப்பட்டுள்ளது.

பூமியைப் படைக்கவும், பூமியில் உயிரினங்களுக்குத் தேவையான உணவுகளை அமைக்கவும் நான்கு நாட்கள் என 41:9,10 ஆகிய வசனங்களில் சேர்த்துக் கூறப்படுகின்றன.

வானங்களைப் படைக்க இரண்டு நாட்கள். பூமியைப் படைக்க இரண்டு நாட்கள் இவற்றுக்குச் சமமாக, வானங்களுக்கும் பூமிக்குமிடையே உள்ளவற்றை அமைக்க இரண்டு நாட்கள் என மூன்று பிரிவுகளாக சொல்லப் பட்டுள்ளவற்றை 3 x 2 = 6  அதாவது ''இறைவன் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்தான்'' என்று முரண்பாடின்றி ஒற்றைக் கருத்தையே இறைமறை வசனங்கள் கூறுகின்றன.

மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து?

மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து?
- ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2)
- நீரிலிருந்து (21:30)
- சுட்டக் களிமண்ணிலிருந்து (15:26)
- புழுதியிலிருந்து (3:59)
- வெறுமை (19:67)
- பூமியிலிருந்து (11:61)
- கெட்டியான ஒரு துளியிலிருந்து (16:4, 75:37)



நான் மரணித்து விட்டால் உயிருடன் வெளியாக்கப்படுவேனா? என மனிதன் கேட்கிறான்.
அவன் எப்பொருளாகவும் இல்லாத நிலையில் நிச்சயமாக நாமே இதற்கு முன்னர் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 19:66, 67)

19:67வது வசனத்தைச் சுட்டிக்காட்டி ''மனிதன் வெறுமையிலிருந்து படைக்கப் பட்டானா?'' என்று கேள்வியில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. வசனத்தின் பொருள், மனித இனம் படைக்கப்படுவதற்கு முன் மனிதன் ஓர் உயிர் அணுவாகவோ, துரும்பாகவோ, தூசியாகவோ எப்பொருளாகவும் இல்லை. எதுவாகவும் இல்லாமலிருந்த மனிதனை  ''நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப் போகிறேன்'' (2:30. 15:28) என்று பூமியிலிருந்து மண்ணெடுத்து, முதல் மனிதரை நேரடியாக மண்ணிலிருந்து படைத்து மனித இனத்தைத் துவக்கினான் இறைவன்.

...அவரை (ஆதமை) மண்ணிலிருந்து அவன் படைத்தான். (அல்குர்ஆன் 3:59)

அதே போன்று 3:59வது வசனத்தைச் சுட்டிக்காட்டி, ''மனிதன் புழுதியிலிருந்து படைக்கப்பட்டானா?'' என்று கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3:59, 18:37, 22:5, 30:20, 35:11, 40:67 ஆகிய வசனங்களில் ''துராப்'' என்ற சொல் இடம்பெற்றுள்ளது. மண்ணைக் குறிப்பிடுவதற்கே துராப் எனப்படும். மண்ணிலிருந்து பொடி (powder) போன்ற புழுதிகள் காற்றில் பறந்தாலும் அதுவும் மண்ணிலிருந்தே கிளம்புவதால் புழுதியையும் மண் என்று குறிப்பிடலாம். (இதற்கான ஹதீஸ் விளக்கம் புகாரி 441.) களிமண்ணை உதிர்த்தால் முழுக்க பொடி (powder) புழுதி போன்றதாகும்.

...அவன்தான் பூமியிலிருந்து உங்களை உருவாக்கி, அதில் உங்களை வசிக்கவும் செய்தான்... (அல்குர்ஆன் 11:61)

தொடர்ந்து 11:61வது வசனத்தைச் சுட்டிக்காட்டி, ''மனிதன் பூமியிலிருந்து படைக்கப் பட்டானா?'' என்று கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து உங்களைப் படைத்தான் என்பது பூமியிலிருந்து மண்ணெடுத்து மனிதனைப் படைத்தான் என்று பொருளாகும். (இதற்கு வரும் நபிமொழிகளில் விளக்கம் உள்ளன)

குர்ஆன் வசனங்களில் முரண்பாடு உள்ளன எனக் கேள்வியில் எழுதியுள்ள 3:59, 11,61 இருவசனங்களில் விளங்கிய புழுதி என்றாலும், பூமி என்றாலும் மனிதன் மண்ணிலிருந்து படைப்பட்டான் என்கிற கருத்தையே கூறுவதால் அதற்கென தனி விளக்கம் தேவை இல்லை! கேள்வியில் எழுதியுள்ள 19:67வது வசனம், மனிதன் படைக்கப்படுவதற்கு முன் எப்பொருளாகவும் இல்லாமலிருந்தான் எனக் கூறி, மனிதன் ஒன்றுமாக இல்லாமலிருந்து பின்னர் உருவாக்கப்பட்டான் என்பதால் 19:67வது வசனத்திற்கும் தனி விளக்கம் தேவை இல்லை!

மனிதன் களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டான்

(தட்டினால்) ஓசை வரக் கூடிய காய்ந்த கருப்புக் களிமண்ணால் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அல்குர்ஆன் 15:26, 28, 55:14)

நிச்சயமாக நாம் (முதல்) மனிதரைக் களிமண் எனும் மூலத்திலிருந்து படைத்தோம் (அல்குர்ஆன் 23:12)

...நான் அவரை (ஆதமை) விடச் சிறந்தவன். நீ என்னை நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணிலிருந்து படைத்தாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:12 மேலும் பார்க்க, 15:33, 38:76 வசனங்கள்)

முதல் மனிதர், முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்களை, இறைவன் மண்பாண்டம் செய்யும் களிமண்ணினால்  வடிவமைத்தான் என்பதை 7:12, 15:26, 33, 23:12, 38:76, 55:14 ஆகிய வசனங்களிலிருந்து விளங்கலாம். மனித வடிவத்தின் மூலப் பொருள் களிமண். (23:12)

நபிமொழி
அல்லாஹ், ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து படைத்தான். பூமியின் எல்லாப் பகுதியிலிருந்தும் அதை எடுத்தான். பூமியின் தரத்திற்கேற்ப ஆதமுடைய மக்கள் உருவானார்கள். இதனால் தான் சிகப்பு நிறமுடையோர், வெண்மை நிறமுடையோர், கருப்பு நிறமுடையோர், இவற்றுக்கு இடைப்பட்ட நிறமுடையோர் எனவும், நளினமானவர், திடமானவர், தீயவர் மற்றும் நல்லவர் உருவாயினர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா அல்அஷ்அரி (ரலி) (நூல்கள் - திர்மிதி 2879, அபூதாவூத், அஹ்மத்)

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்'கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 5722, அஹ்மத்)

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மண்ணினால் வடிவமைத்துப் படைக்கப்பட்டார். மனித இனத்தில் தோன்றிய முதல் மனிதரின் படைப்பிற்கு எது மூலப் பொருளாக இருந்ததோ அதுவே அவரது வம்சாவழிக்கும் மூலப் பொருளாக இருக்கும். இதேக் கருத்தையே வரும் வசனங்களும் கூறுகின்றன.

அவனே உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான்... (அல்குர்ஆன் 6:2)

...அவன்தான் பூமியிலிருந்து உங்களை உருவாக்கி, அதில் உங்களை வசிக்கவும் செய்தான்... (அல்குர்ஆன் 11:61)

மண்ணில் இருந்து உங்களை அவன் படைத்திருப்பதும் பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவியிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (அல்குர்அன் 30:20)

மனிதர்களே! (மரணித்த பின்) எழுப்பப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்) நிச்சயமாக நாம்தான் மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் கூடியதிலிருந்தும், பின்னர் சதைப்பிண்டத்திலிருந்தும் உங்களைப் படைத்தோம்... (அல்குர்ஆன் 22:5, மேலும் படிக்க, 40:67)

(நம்பிக்கையாளரான) அவரது தோழர் இவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, ''உன்னை மண்ணாலும், பின்னர் இந்திரியத் துளியாலும் படைத்து, பின்னர் உன்னை ஒழுங்குற அமைத்தவனையா நீ நிராகரிக்கின்றாய்'' என்று இவரிடம் கேட்டார். (அல்குர்ஆன் 18:37)

மனித இனத்தின் முதல் மனிதர் மண்ணால் வடிவமைக்கப்பட்டுப் படைக்கப்பட்டார். ஆனால், முதல் மனிதரைத் தவிர மற்ற மனிதர்கள் எவரும் நேரடியாக மண்ணால் படைக்கப்படவில்லை. அப்படியிருக்க மேற்கண்ட 6:2, 11:61, 30:20, 22:5,  40:67 ஆகிய வசனங்கள் ''உங்களை மண்ணில் இருந்து படைத்தோம்'' என்று பன்மையிலும், 18:37வது வசனம் ''உன்னை மண்ணில் இருந்து படைத்தான்'' என்று ஒருமையிலும் கூறுவது சரியா? என்ற சந்தேகம் எழலாம். கீழ்காணும் வசனங்களில் இதற்கான விளக்கம் பெறலாம்.

மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்... (அல்குர்ஆன் 4:1 மேலும் படிக்க, 7:89, 49:13 வசனங்கள்)

முதல் மனிதரிலிருந்தே மனித இனப் பெருக்கம் துவங்குவதால் முதல் மனிதரின் வழித் தோன்றல்களில் ஒவ்வொரு மனுஷன் மனுஷியிடமும் ஆதி தந்தையின் மூலச்சத்து இருக்கும் என்பதே இதன் பொருளாகும்.