அனைத்துப் புகழும் அகில உலகையும் படைத்தது பரி பக்குவப்படுத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக -

Monday, 28 October 2013

நரேந்திர மோடியால் இந்தியாவை திறம்பட வழிநடத்திச் செல்ல இயலாது: நியூயார்க் டைம்ஸ்


பாஜகவின்  பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் இந்தியாவை திறம்பட வழிநடத்திச் செல்ல இயலும் என நம்ப முடியவில்லை என்று அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது.
ஏனெனில்,  ஏராளமான இந்தியர்களிடையே அச்சத்தையும் விரோதத்தையும் மோடி ஏற்படுத்தி உள்ளதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்  எதிர்க்கட்சிகளையும், அதிருப்தியாளர்களையும் சமாளித்து பணியாற்றும் திறன் மோடியிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுடனான 17 ஆண்டு கால உறவை  ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டதன் மூலம் ஏற்கெனவே மோடி தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். மோடி பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமற்றவர் என்பதாலேயே அக்கட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மதத்தினர்  உள்ளனர். இந்நிலையில் பெரும்பாலான மக்களிடையே அச்ச உணர்வையும், விரோத மனப்பான்மையையும் ஏற்படுத்தியுள்ள மோடியால் அந்த நாட்டை திறம்பட வழிநடத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்று அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்தும் அந்த பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது குஜராத்தின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக பாராட்டும் வகையில் இல்லை. குஜராத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விகிதம் பிற மாநிலங்களைவிட குறைவாகவே இருப்பினும், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம்களைவிட அந்த மாநில முஸ்லிம்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.
மோடி ஆட்சிக்கு வந்தால் பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறிப்பாக 13.8 கோடி முஸ்லிம்களுக்கும் மற்றும் பிற சிறுபான்மையினருக்கும் பிரச்னையே என்று அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, 27 October 2013

சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போர் அல்ல – கொள்கை சார்ந்த யுத்தம்

மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களை அழிக்கும் படலம் நடை பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது.
ஈராக், ஆப்கானிஸ்தான், செச்னியா, சோமாலியா, பர்மா (மியன்மார்), பாகிஸ்தான், பலஸ்தீன், எகிப்து என முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தம் நடக்கும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
அந்த வகையில் தற்போது சிரியாவிலும் முஸ்லிம்களை அழிக்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது.
 முஸ்லிம்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவது ஏன்?
தொடர்ந்தும் பல நாடுகளில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள். தற்போது சிரியாவிலும் அதன் தொடர்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இப்படி உலகம் முழுவதும் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதற்கான காரணம் என்னவென்பதை பற்றி நபியவர்கள் தெளிவாக நமக்கு உணர்த்திவிட்டு சென்றிருக்கின்றார்கள்.
“உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள். எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்! உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் “வஹ்னை‘ ஏற்படுத்தி விடுவான்” என்று பதிலளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். “உலகத்தை நேசிப்பது;மரணத்தை வெறுப்பது” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), நூல்: அஹ்மத் 21363
மேற்கு நாடுகள் முஸ்லீம்கள் வாழும் நாடுகளின் மீது காரணமே இல்லாமல் தாக்குதல்களை தொடுக்கின்ற போதும் முஸ்லீம் ஆட்சியாளர்களாக தங்களைக் கூறிக் கொள்பவர்கள் யாரும் அவற்றை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.
கேட்டால் அது உள்நாட்டுப் பிரச்சினை நாங்கள் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள். இதைத் தான் நபியவர்கள் மேற்கண்ட செய்தியின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.
“உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்”  என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நேரத்தில் முஸ்லீம்கள் குறைவாகவா இருப்பார்கள் என்று நபி்த் தோழர்கள் கேட்கும் போது இல்லை, நீங்கள் நிறையப் பேர் இருப்பீர்கள் என்கிறார்கள்.
இன்று உலகில் 135 கோடிக்கும் அதிகமாக வாழக்கூடிய பெரும் சமுதாயத்தினராக முஸ்லீம்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எந்தத் தலைவருமோ அல்லது எந்த சமுதாயமுமோ எதிரிகளுக்கு எதிராக தங்கள் பலத்தை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. காரணம் அவர்களின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள உலக மோகமே.
மரணத்தைப் பற்றிய பயம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. உலக வாழ்வைப் பற்றிய ஆசை அவர்களை மிகைத்திருக்கிறது. இப்படி வாழும் போது நம்மை எதிர்ப்பவர்களுக்கு நாம் அடிமைப் படுவதைத் தவிர வேறு வழி இல்லை.
இன்று எத்தனையோ முஸ்லிம் நாடுகள் அடிமைப்படுத்தப்பட்டும், முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் எதிரிகளினால் முடுக்கிவிடப்பட்டும் எந்த முஸ்லிம் தலைவர்களும் இவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க முன்வருவதில்லை. காரணம் உலக மோகமும், மரண பயமும் தான் என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் நாம் தெளிவாக உணர முடிகின்றது.
இப்போது சிரியாவின் பிரச்சினையின் உண்மைத் தன்மையைப் பற்றி அலசுவோம்.
சிரியா அமைவிடமும், அரசியல் சூழலும்.
சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும், தென்மேற்கில் இஸ்ரேலையும், ஜோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா பிரான்சிடமிருந்து 1936 இல்  விடுதலை பெற்றது. இதன் தலைநகரான டமஸ்கஸ்  உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.
வரலாற்றில் பல ஆட்சி மாற்றங்களை சந்தித்த சிரியாவை கடைசியாக ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்து ஹிஜ்ரி 12 ல் அபூபக்கர் (ரலி) தலைமையிலான இஸ்லாமிய கிலாபத் ஆட்சியில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தலைமையிலான இஸ்லாமியப் படை சிரியாவின் தென்மேற்கு பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அதன் பின் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் தலைமையிலான படை டமஸ்கஸ் உள்ளிட்ட முழு சிரியாவையும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
அன்றைய சிரியாவின் இஸ்லாமிய ஆளுனராக முஆவியா (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். உமையாக்களின் ஆட்சியில் சுமார் 90 வருடங்கள் சிரியாவின் தலை நகராக டமஸ்கள் இருந்தது.
முதலாம் உலகப் போரின் தாக்கத்தினால் துருக்கி வீழ்ச்சி அடைந்த காரணத்தினால் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் மேற்கு நாடுகளின் “கண்காணிப்பு நாடுகளாக” மாற்றப்பட்டன. இதனடிப்படையில் சிரியா பிரான்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழிருந்த சிரியா 1941 ல் சுதந்திரம் பெற்று, 1945 ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் மூலம் தேசிய அரசாங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டது. சுக்ரி குவைலித் என்பவர் தேசிய அரசாங்கத்தின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 1958 ம் ஆண்டு எகிப்துடன் இடம்பெற்ற ஓர் ஒப்பந்ததத்தின் மூலம் எகிப்து, சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஐக்கிய அரபு குடியரசு என்று தங்களை அறிமுகப்படுத்தின. தொடர்ந்து 1961 ல் இராணுவ சபை ஒன்று உருவாக்கப்பட்டு சிரியா எகிப்தில் இருந்து பிரிந்து தனி நாடாக மாறியது.
தனி நாடாக மாறிய சிரியாவின் ஜனாதிபதியாக நாசிம் அல் குத்ஸி தேர்வு செய்யப்பட்டார். 1963 மார்ச் மாதம் 08 ம் திகதி அன்று சிரியாவின் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் ஹாபிஸ் அல் அஸத் இராணுவப் புரட்சியின் மூலம் சிரியாவின் ஆட்சியாளராக மாறினார்.
1963 ல் ஆட்சியாளராக மாறிய ஹாபிஸ் அல் அஸத் 2000 ம் ஆண்டில் தான் மரணிக்கும் வரையில் சிரியாவின் ஆட்சியாளராக இருந்தார்.
சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 16% ஏனைய குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாத் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. கடந்த 1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தை சேந்தவராக காணப்படுகிறார்.
2000 ம் ஆண்டு ஹாபிஸ் அல் அஸத் மரணித்ததைத் தொடர்ந்து அவரின் புதல்வர் பஷர் அல் அஸத் ஆட்சியாளராக மாறினார்.
என்றைக்கும் அஸத் (Asad For Ever).
பஷர் அல் அஸாத்தின் தந்தை ஹாபிஸ் அல் அஸாத் மரணிக்கும் வரையில்  என்றைக்கும் அஸத் (Asad For Ever) என்ற ஒரு கொள்கையை கடைப்பிடித்தார். இதன் மூலம் சிரியாவை ஆளும் தகைமை அஸாத்தின் குடும்பத்தினருக்கு மாத்திரம் தான் உண்டு என்பதை அவர் அறிவித்தார்.
1963 ல் இருந்து இன்று வரைக்கும் அஸாத்தின் பாத் கட்சியே சிரியாவின் ஆளும் அரசாக இருந்து வருகின்றது.
என்றைக்கும் அஸத் (Asad For Ever) என்ற இந்தக் கொள்கையின் மூலம் உருவாக்கப்பட்ட சிரியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் படி 60 சதவீதமான பாராளுமன்ற ஆசனங்கள் பாத் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் பாத் கட்சியினர் அறுபது சதவீதமானவர்கள் பாராளுமன்ற அங்கத்தவர்களாக இருப்பார்கள்.
மீதமுள்ள 40 சதவீதமான பாராளுமன்ற ஆசனங்களுக்கு மாத்திரமே தேர்தல் நடத்தப்படும். இதன் மூலம் சிரியாவின் நிறந்தர ஆட்சியாளர்களாக ஆளும் பாத் கட்சியினர் அதாவது அஸாத்தின் குடும்பத்தினர் மாத்திரமே இருப்பார்கள் என்பதே என்றைக்கும் அஸத் (Asad For Ever) என்ற கொள்கையின் சாராம்சமாகும்.
பாத் கட்சி + அலவியாக்கள் = ஷீயாக்கள்.
சிரியாவை ஆளும் பாத் கட்சியினர் ஷீயாக்களின் நுஸைரிய்யா பிரிவைச் சார்ந்தவர்களாவர். நுஸைரிய்யாக்களில் அலவிய்யா தரீக்காவை சேர்ந்தவர்களே இந்த அஸத்தின் குடும்பத்தினராவர். இந்த நுஸைரிய்யாக்கள் சுன்னி முஸ்லிம்கள் தொகையில் வெரும் 5 சதவீதத்தினர் மாத்திரமே!
நுஸைரிய்காக்களைப் பொருத்தவரையில் இவர்களின் நம்பிக்கைகும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனலாம்.
நுஸைர் என்பவனின் பெயரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். அலி (ரலி) அவர்களை கடவுள் என்றும், பாத்திமா (ரலி) அவர்களை தெய்வீக தன்மை மிக்கவர் என்றும் வாதிடுகின்றார்கள். நபியவர்களின் அருமைத் தோழர்களை கடுமையாக விமர்சிக்கும் இவர்கள், அஹ்லுஸ் சுன்னாக்களின் வணக்க வழிபாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என மறுக்கின்றார். அதே போல் நபியின் மனைவிமார்களான முஃமீன்களின் அண்ணையர்களை விபச்சாரிகள் என்றும் தூற்றுகின்றார்கள்.
பெரும்பான்மை சுன்னி முஸ்லிம்களை கொண்ட ஒரு நாட்டில் சிறுபான்மைச் சமூகமாகவுள்ள ஷீயா அலவிய்யாக்கள் கடந்த ஐம்பது வருடங்களாக சிரியாவை ஆளும் ஆட்சியாளர்களாக இருக்கின்றார்கள்.
சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போர் அல்ல – கொள்கை சார்ந்த யுத்தம்.
இன்று உலகளவில் பல நாடுகளிலும் பலவிதங்களில் முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றார்கள். இதில் சில நாடுகளில் உள்நாட்டு யுத்தங்களும், இன்னும் சில நாடுகளில் அமெரிக்க போன்ற நாடுகளின் வல்லாதிக்கத்திற்கெதிரான யுத்தமும் நடை பெற்று வருகின்றது.
இந்த இரண்டு விதமான யுத்த முறைகளையும் தாண்டி சிரியாவில் நடக்கும் யுத்தத்தை நாம் நோக்க வேண்டியுள்ளது. அதாவது சிரியாவில் உள்நாட்டு யுத்தம் கடந்த 2 வருடங்களைத் தாண்டி நடைபெற்று வருகின்றது. அதிபர் அஸாத்தின் படைக்கும், கிளர்ச்சிப் படை என்று அறியப்படுபவர்களின் படைக்கும் இடையே நடக்கும் இந்த யுத்தத்தைத் பொருத்த வரையில் வெருமனெ உள்நாட்டு யுத்தம் என்று தட்டிக் கழித்து விட முடியாது ஒன்றாகும்.
காரணம் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் என்று பேசப்படும் இந்த யுதத்தத்தின் பின்னனி கொள்கை சார்ந்ததாகும். சிரியாவின் அரச படைக்கு எதிராக போராடும் கிளர்ச்சிக் குழுவினர் சுன்னி முஸ்லிம்களாக அறியப்படுகின்றார்கள். சிரிய அரச படை ஷீயாக்களுக்காக, அதிபர் அஸாத்துக்காக போராடுகின்றது. ஆக மொத்தத்தில் சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் என்பது வெருமெனே ஆட்சி கவிழ்ப்புக்கான யுத்தம் மாத்திரம் அல்ல. கொள்கை சார்ந்த யுத்தமும் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஷீயாக்களின் ஆதரவு பெற்ற சிரிய அதிபர்.
சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸாத்திற்கு எதிரான அல்லது ஷீயா அரசுக்கு எதிரான சிரியாவின் உள்நாட்டுப் போர் கடந்த இரண்டு வருட காலமாக முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
லிப்யா, டியுனிஷியா, எகிப்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தப் புரட்சிகள் முடிவுக்கு வந்து ஆட்சி மாற்றங்கள் வந்த பின்னும் சிரியாவின் உள்நாட்டு புரட்சி இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
சிரியாவின் ஆளும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டத்திற்கு எதிராக சிரியாவின் ஆட்சியாளர் பஷர் அல் அஸாதுக்கு ஆதரவாக அஸாதின் ஆட்சியை தக்க வைப்பதற்காக ஷீயாக்கள் பாரிய அளிவில் தங்கள் உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.
சிரியாவின் நேச நாடான ஈரான் தனது முழுப் பங்களிப்பையும் வழங்குவதின் மூலம் அஸாத்தின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக உதவுகின்றது. அதே போல் லெபனானை தலைமையகமாக கொண்டு இயக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற இயக்கமான ஹிஸ்புல்லாஹ் ஷீயாக்கள் தொடர்ந்தும் அஸதின் படைக்கு தங்கள் உதவியை வழங்கி வருகின்றார்கள்.
“ஹுஸைன் (ரலி) அவர்கள் கொலை செய்தவர்களின் பரம்பரையையே அழிப்பதற்கான யுத்தம் ஆரம்பித்துவிட்டது” என்று (உண்மையில் ஹுஸைன் (ரலி) அவர்களை கொலை செய்த ஷீயாக்களின் இயக்கமான) ஹிஸ்புல்லாஹ்வின் தலைவரான ஹஸன் நஸ்ருல்லாஹ் அண்மையில் ஓர் அறிக்கையை விட்டிருந்ததையும் காண முடிந்தது. இதன் மூலம் சுன்னி முஸ்லிம்களை அழிக்கும் ஒரு யுத்தமாகவே ஷீயாக்கள் சிரியாவின் யுத்தத்தை முன்னெடுக்கின்றார்களே தவிர வெரும் உள்நாட்டுப் போராக இதனை அவர்கள் முன்னெடுக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர் கட்சிகளின் கூட்டமைப்பு.
சிரியாவின் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளார்கள். சிரிய புரட்சியாளர்களின் தேசிய கூட்டமைப்பு (National Coalition For Syrian Revolutionary and Opposition) என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இக் கூட்டமைப்பின் தலைவராக 52 வயதான முஆஸ் கதீப் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இக்கூட்டமைப்பில் சுமார் நான்கு எதிர் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
அரபு நாடுகளின் ஒன்றியமான “அரப் லீக்” இவ்வமைப்பையே சிரியாவின் தற்போதைய ஆட்சிக்குறிய அமைப்பாக அங்கீகரித்துள்ளது.
மனித நேயமற்ற மரணத் தாக்குதல்கள்.
2011 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இது வரை சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொள்ளபட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் சீனா, மற்றும் ரஷ்யா ஆகியவை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்துள்ளன. இதன் மூலம் அஸாத்தின் அடாவடியான மக்கள் படுகொலைக்கு சீனாவும், ரஷ்யாவும் தனது ஆதரவை தொடர்ந்த வழங்கி வருகின்றன.
இறுதியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக நடத்தப்பட்ட இரசாயனத் ஆயுதத் தாக்குதலில் சுமார் 1400 பேர்கள் வரை கொல்லப்பட்டார்கள்.
உலகின் அதிகமான அகதிகளை உருவாக்கிய யுத்தம்.
இன்றைய உலகின் அதிகமான அகதிகளை உருவாக்கிய ஒரு யுத்தமாக சிரியாவின் உள்நாட்டு யுத்தம் அவதானிக்கப்படுகின்றது. சுமார் இருபது இலட்சம் பேர் வரையில் இது வரைக்கும் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்கள் லெபனான், ஜோர்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் தஞ்சமடைகின்றார்கள்.
சிரியா மக்களுக்காக கண்ணீர் வடிக்கின்றதா அமெரிக்கா?
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் சிரியாவின் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக தொடர் மௌனம் காத்துவந்த அமெரிக்கா தற்போது சிரியாவின் விஷயத்தில் அதி கூடிய கவனம் எடுப்பதாக காட்டிக் கொள்ள முனைகின்றது.
சிரியாவின் அதிபர் அஸாத் உள்ளிட்ட ஆளும் பாத் கட்சியின் அரசு கவிழ்க்கப்பட்டு, புதிய நேர்மையான அரசாங்கம் ஒன்று சிரியாவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த வேலையில் அமெரிக்கா இறங்கக் கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.
அஸாத்தின் படையினால் நிகழ்த்தப்பட்ட இரசாயன ஆயுதத் தாக்குதல் தொடர்பில் அஸாத் விசாரிக்கப்பட வேண்டியவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால் அஸாத் எந்தளவுக் கொடூரமான காரியத்தில் ஈடுபட்டாரோ அதைவிட கொடூரமான படுகொலைகளை ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இன்றும் அமெரிக்கா செய்து வருகின்றது. என்பது தெளிவானதாகும்.
அஸாத் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பது எந்தளவுக்கு உண்மையானதோ அதே அளவுக்கு அஸாத்தைத் தண்டிப்பதற்கு அமெரிக்காவுக்கு எவ்வித தகுதியும் இல்லை என்பதும் உண்மையானதாகும்.
ஈராக்கில் இரசாயண ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி ஈராக் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா இன்று வரைக்கும் அங்குள்ள மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுதான் வருகின்றது. அதே போல் அல்காயிதாவை இல்லாமலாக்கப் போகின்றோம் என்று கூறி ஆப்கானுக்குள் நுழைந்த அமெரிக்காவினால் இன்று வரைக்கும் மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இப்படி உலகம் முழுவதும் சண்டித்தனம் செய்தவதினூடாக பொது மக்களை அழித்தொழிக்கும் காரியத்தில் ஈடுபடும் அமெரிக்கா சிரியாவை தண்டிப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் பொதுமக்கள் மீத அஸாத் இரசாயன தாக்குதல் நடத்தினார் என்பதினால் பொதுமக்களை காப்பதற்காக அமெரிக்கா சிரியாவை தாக்க முனைவதாக கூறப்படுவது சுத்தப் பொய்யான வார்த்தை ஜாலமாகும். எண்ணை வளத்தை அபகரிப்பதற்காக ஈராக்கினுல் நுழைந்ததைப் போல், கணிம வளத்தை அபகரிப்பதற்காக ஆப்கானுக்குள் நுழைந்ததைப் போல் சிரியாவின் குரூட் ஒயில், பெற்றொலியம் மற்றும் பருத்தி ஆகியவற்றை அபகரிப்பதற்காக தற்போது சிரியாவுக்குள்ளும் கால்பதிக்க நினைக்கின்றது அமெரிக்கா.
இஸ்ரேலை காப்பாற்றுவதற்கான இன்னொரு யுத்தம்.
அமெரிக்கா சிரியாவை தாக்குவதற்கான காரணத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக நாம் ஆய்வு செய்து பார்த்தால், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை உள்நுழைய விடாமல் இருப்பதும், சிரியாவில் கிடைக்கும் குரூட் ஒயில் போன்றவற்றை அபகரிக்க நினைப்பதும் ஒரு புறம் இருந்தாலும் இவற்றை விட முக்கியமான ஒரு விஷயம் அதில் அடங்கியுள்ளது.
அதுதான், இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்கான அமெரிக்காவின் திட்டமாகும். காரணம் என்னவென்றால் கடந்த இரண்டு வருடங்களாக சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்திற்கு எவ்விதத்திலும் அமெரிக்கா உதவவில்லை. லிப்யா, டியுனிஷியா போன்ற நாடுகளில் புரட்சி வெடித்த நேரத்தில் அங்கு புரட்சியில் ஈடுபட்ட புரட்சியாளர்களுக்கு உதவிய அமெரிக்கா சிரிய புரட்சியாளர்களுக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. மாறாக புரட்சியாளர்களுக்கு உதவுவது அல்காயிதாவுக்கு உதவுவதைப் போன்றாகிவிடும் என்று ஹிலாரி கிளின்டன் கதை அளந்தார்.
எந்தளவுக்கென்றால், லிப்யா, டியுனிஷியா விஷயத்தில் நவீன ஆயுதங்களைக் கொண்டு உதவிய அமெரிக்கா சிரியா விஷயத்தில் சிரிய ரக ஆயுதங்களைக் கொண்டு கூட உதவி செய்யவில்லை. காரணம் சிரியாவின் போராளிகளுக்கு வழங்கப்படும் ஆயுதம் அல்காயிதாவுக்கு உதவும் என்பதினால் அல்ல. குறித்த ஆயுதங்களின் மூலம் போராளிகள் வெற்றி அடைந்தால் அஸதிடம் இருக்கும் இரசாயன ஆயுதங்கள் அனைத்தும் இஸ்லாமியவாதிகளிடம் கிடைத்துவிடும் அதன்பின் நடக்கும் தேர்தலில் இஸ்லாமியவாதிகள் ஆட்சியைப் பிடிப்பார்கள். அவ்வாறு இஸ்லாமியவாதிகள் ஆட்சிக்கு வந்தால் அது இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். அதனால் தான் சிரியா விஷயத்தில் போராளிகளுக்கு அமெரிக்கா உதவவில்லை.
இதே நேரம் அஸதை தண்டிப்பதற்காக இப்போது அமெரிக்கா துடிப்பதும் இஸ்ரேலைப் பாதுகாக்க வேண்டும் என்பதினால் தான். தற்போதைய சிரியாவின் போராட்ட சூழலில் சிரியா நிலப்பரப்பில் சுமார் 60 வீதமானவை புரட்சிப் படை வசம் வீழ்ந்துவிட்டது. சிரியா முழுவதும் இருந்த சுமார் 20 விமானத் தளங்களில் 06 மாத்திரமே அஸாத் வசம் தற்போது எஞ்சியிருக்கின்றது. ஆக மொத்தத்தில் சிரிய புரட்சிப்படை வெற்றியை நோக்கி நகர்கின்றது என்பது அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேலிய ஆதரவு நாடுகளின் முடிவாகிவிட்டதினால் இப்போது சிரியா மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு அங்குள்ள இரசாயன ஆயுதங்களை கைப்பற்றுகின்றோம் என்ற பேரில் அமெரிக்காவுக்கு சாதகமான பொம்மை அரசு ஒன்றை அங்கு நிறுவிவிட்டால் இஸ்ரேலின் இருப்பு உறுதியாகிவிடும் என்பதினால் தான் இந்த தாக்குதல் முடிவுக்கு தற்போது அமெரிக்கா வந்துள்ளது.
இரசாயன ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டால் யுத்தம் நிறுத்தப்படும்.
சிரியாவில் இருக்கும் இரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைத்தால் தாக்குதல் நடத்தும் திட்டம் கைவிடப்படும் என்று அமெரிக்கா அறிவித்தவுடன், கடந்த 14.09.2013 அன்று அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைக்கும் என்ற முடிவு எட்டப்பட்டிருக்கின்றது. எது எப்படியானாலும் இஸ்ரேலைப் பாதுகாக்கும் அமெரிக்காவின் திட்டம் நிறைவேறுகின்றது என்பது தெளிவான ஒன்று.
ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சிரியாவை ஆதரிப்பது ஏன்?
சிரியாவுக்கு எதிரான யுத்தத்தைத் தடுப்பதற்காக ரஷ்யாவும், சீனாவும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. எந்தளவுக்கென்றால் சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதை எதிர்த்து ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்று ரஷ்ய பிரதமர் அறிக்கை விடுத்தார். ஐ.நா வில் சிரியாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பல தீர்மானங்களையும் இந்த இரு நாடுகளும் தம்முடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி பல தடவைகள் ரத்து செய்தன.
இப்படி சிரியாவின் மீது அளவ கடந்த பாசத்தை ரஷ்யாவும், சீனாவும் காட்டுவதின் மர்மம் என்னவென்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைப் பொருத்த வரையில் சிரியாவை இவை இரண்டு நாடுகளும் ஆதரிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சிரியாவிலிருந்து கிடைக்கும் குரூட் ஒயில், பெற்றொலியம் மற்றும் பருத்தி ஆகியவற்றின் ஏகபோக சொந்தக்காரர்களாக தாம் இருக்க வேண்டும் என்பது. இரண்டாவது சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் மத்திய கிழக்கில் தமது இருப்தை உறுதி செய்து கொள்வதற்கான ஒரே சந்தர்ப்பம் சிரியாவை ஆதரிப்பதுதான். அதாவது சிரியாவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதினூடாக மத்திய கிழக்கில் இவ்விரு நாடுகளும் தமது அதிகார பரவலாக்கத்தை மேற்கொள்ள முடியும்.
சிரியா அமெரிக்காவினால் தாக்கப்பட்டு பஷர் அல் அஸாத்தின் ஆட்சி கவிழ்க்கப்படுமானால் ரஷ்யாவினதும், சீனாவினதும் மத்திய கிழக்கு வல்லாதிக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிடும் என்பதினாலேயே சிரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலுக்கு தடைக் கல்லாக ரஷ்யாவும், சீனாவும் செயல்படுகின்றனவே தவிர சிரியாவின் பொதுமக்கள் மீது உள்ள பாசமோ அல்லது ஆட்சியாளர்கள் மீதுள்ள பாசமோ அல்ல என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
இறுதியாக….
எது எப்படியொ அரபுலக முஸ்லிம்களை அழிக்கும் தங்கள் திட்டத்தை எவ்வகையிலேனும் மேற்கு நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு பல வகைகளிலும் தமது முயற்சியை மேற்கொண்டு வருகின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடிகின்றது. முஸ்லிம் தலைவர்கள் இறைவனைப் பயந்து மறுமைக்காக தங்கள் வாழ்க்கையை மாற்றாத வரையில் இது போன்ற நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

இஸ்ரேலிய சதிக்குள் சிக்கும் இலங்கை இனவாதிகள்

சமாதான விரும்பிகளான இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் இனவாதக் கருத்துக்களை ஒருங்கிணைத்து முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகும் நிலை உள்ளதென சந்தேகம் தெரிவித்த இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கருத்துக்களை ஆழ்ந்த அரசியல் கண்ணோட்டத்துடன் பத்திரிக்கையாளர் லதீப் பாருக் அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய முஸ்லிம்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இனவாத அடிப்படை தொடர்பிலும், இஸ்ரேலின் இலங்கை உள்நுழைவு மற்றும் இந்திய பெரும் கண்டத்தில் இஸ்ரேல் எதிர்காலத்தில் செலுத்தவுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் இவ்வாக்கத்தின் மூலம் சுருக்கமாகவும், தெளிவாகவும் விபரிக்கப்பட்டுள்ளது. – MISc
……………………
முஸ்லிம் கடும்போக்குவாதத்தின் உதயம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜ்பக்ஷ அவர்களின் அண்மைய அறிவிப்பு முஸ்லிம் சமூகத்தைத் திடுக்கிடச் செய்துள்ளது.
கலதாரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்புத் தொடர்பான கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குவதிகளையும், முஸ்லிம் கடும்போக்குவாதிகளையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய நிலையில் நாடு இருப்பதாக கோத்தபாய இதன் போது தெரிவித்தார். “சில வெளிநாட்டுக் குழுக்கள், இலங்கை முஸ்லிம் சமூகம் தன்னை உலகளாவிய முஸ்லிம் சமூகத்தோடு கூடுதலாகத் அடையாளப்படுத்துவதை ஊக்குவிக்க முயன்று வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. இதன் மூலம் ஏனைய சமூகங்களுடனான முஸ்லிம் சமூகத்தின் ஒருங்கிணைப்பை அவை குறைக்கின்றன. பிராந்தியத்திலும், உலகளவிலும் முஸ்லிம் கடும்போக்குவாதம் பரவி வருவது நன்கு அறியப்பட்டதொரு உண்மையாகும்”.
குழப்பங்களை தோற்றுவித்து வருகின்ற சிங்களக் கடும்போக்குவாதிகள் யார் என்பது அனைவரும் அறிந்த விடயம். முஸ்லிம் கடும்போக்குவாதிகள் யார்? சமூகத்தின் எந்த மட்டத்திலும் இத்தகைய கடும்போக்குவாதத்தை அவதானிக்க முடியவில்லை. இத்தகைய குற்றச்சாட்டுகள், சிங்களக் கடும்போக்குவாதிகளின் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சிங்கள சமூகத்தை மேலும் தூண்டுவதற்கே வழி வகுக்கும்.
முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பரந்து பட்ட நடவடிக்கைகளை இனவாதிகள் கட்டவிழ்த்து விட்டுள்ள ஒரு காலப் பகுதியிலேயே பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டதொரு சமூகமாக இருந்தாலும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா குறிப்பிட்டது போல், முஸ்லிம் சமூகம் ஒரு சமாதானத்தை நேசிக்கின்ற சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது. அது இன்று நேற்று வந்து குடியேறிய சமூகமும் அல்ல. ஆயிரம் ஆண்டும்களுக்கு முன்பே குறியேறி, நாட்டில் ஒருங்கிணைந்ததொரு சமூகமாக அது இருந்து வருகிறது.
யுத்தத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் யுத்தத்தின் முடிவோடு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. எனினும், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக, இன்று முஸ்லிம்கள் ஏச்சுப் பேச்சுக்களுக்கும், தாக்குதல்களுக்கும், ஓரங்கட்டல்களுக்கும் முகங்கொடுக்கிறார்கள்.
இன்று சிங்கள இனவாதிகள்தான் சமூகங்களின் ஒருங்கிணைப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்கள். பெரியளவில் இடம்பெற்று வருகின்ற சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகள் முஸ்லிம்களை அரச, தனியார், பொலிஸ், இராணுவத் துறைகளில் இருந்து ஓரங்கட்டியுள்ளன. ஜே.வீ.பீ தலைவர் சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டது போல், சிங்கள வியாபாரிகள் சிலர் முஸ்லிம் வியாபாரங்களை நசுக்குவதற்காகவும் இக்கும்பலைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இத்தனைக்குப் பிறகும் முஸ்லிம் சமூகம் அமைதியாக இருக்கின்றமை அவர்களது சமாதானத்தையும், அமைதியையும் விரும்புகின்ற தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். பல ஆண்டுகளாக கட்டிக் காத்துவந்த சமூக உறவை உடைத்து நொருக்கும் வகையில் செயல்படும் இவ்வினவாதக் கும்பலின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதே நாட்டின் இன்றைய உடனடித் தேவையாகும்.
சமூக, பொருளாதார, சமய மற்றும் கலாசாரத் தளங்களில் இயங்குகின்ற முஸ்லிம் நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் இயங்குகின்ற அதனோடு தொடர்புபட்ட நிறுவனங்களுடன் தொடர்புகள் இருப்பது உண்மையே. ஆனால், இவற்றில் எதுவுமே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை அல்ல.
முஸ்லிம் விரோத அந்நிய சக்திகளால் நிதியளிக்கப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்ற இவ்வினவாத சக்திகள்தான் அடிப்படையற்ற இக்குற்றச் சாட்டின் பின்னணியில் இருக்க வேண்டும் என முஸ்லிம்கள் சந்தேகிக்கிறார்கள். அதுதானே அவர்களது உள்நாட்டு, வெளிநாட்டு எஜமானர்களின் உலகளாவிய நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்யும்?
இஸ்ரேலிய சதி.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பவற்றின் கூட்டு ஆக்கிரமிப்பு முஸ்லிம் நிலங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில், முஸ்லிம்கள் சிலர் ஆயுதங்களை ஏந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 1989 இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சியோடு, உலகின் ஒரே சுப்பர் பவராக மாறிய ஐக்கிய அமெரிக்கா, உலகைக் கொலைக் களமாக்கியது. ஜனநாயகம், சுதந்திரம், நீதி, மனித உரிமை என்பவற்றின் காவலாகத் தன்னை சித்தறிக்கும் அமெரிக்காவின் அத்திவாரம் அழிவுகளின் மீதும், சுரண்டல்களின் மீதுமே நிறுவப்பட்டுள்ளது. மேற்கையும், அதனூடாக உலகையும் கட்டுப்படுத்துகின்ற ஆயுதக் கம்பனிகள், எண்ணெய்க் கம்பனிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஊடகங்கள், யூத லொபிகள் என்பன தமக்கே உரிய நிகழ்ச்சி நிரலோடு அங்கு இயங்கி வருகின்றன.
சர்வதேச அளவில் இஸ்ரேலும், அதன் அமெரிக்க, ஐரோப்பிய நேச சக்திகளும் மத்திய கிழக்கைக் குட்டிக் குட்டி இராச்சியங்களாக உடைத்து, இஸ்ரேலின் மேலாண்மையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. பலஸ்தீனியர்களின் இறந்த உடல்களின் மீதும், திருடப்பட்ட பலஸ்தீனிய நிலத்தின் மீதும்தான் இஸ்ரேல் அமைந்திருக்கிறது.
 செப்டம்பர் 11 தாக்குதல் கூட, இஸ்ரேலியப் புலனாய்வு அமைப்பான மொஸாட்டும், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI ஐயும், உலகளாவிய ரீதியில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் சேறு பூசுவதற்கும், முஸ்லிம் நாடுகள் மீதான அவற்றின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்குமாக இணைந்து நடாத்திய நாடகம் என்ற சந்தேகமும் பரவலாக இல்லாமல் இல்லை.
அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் நேட்டோ நாடுகள் முஸ்லிம் நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூக்கை நுழைத்தன. பொஸ்னியா, கொசோவோ, செச்னியா, அல்பானியா, ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஈராக், சோமாலியா, லிபியா, மாலி, தற்போது சிரியா என இந்த வரிசையில் பல நாடுகள். எதிர்காலத்தில் பாகிஸ்தானும், ஈரானும் இந்த வரிசையில் சேரலாம்.
நேட்டோ மற்றும் அமெரிக்க குண்டுகளுக்கும், ஆயுதங்களுக்கும் இரையாகின்றவர்கள் குறித்து இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அந்த மரணங்கள் பதிவு செய்யப்படுவது கூட இல்லை. அமெரிக்க இராணுவ ஜெனரல் டொம்மி பிராங்க்ஸ் ஒரு முறை குறிப்பிட்டார்: “நாம் உடல்களை எண்ணுவதில்லை”.
இவ்விதம் தமக்கெதிராக இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ஆயுதங்களை ஏந்தியவர்களை மேற்கு ஊடகங்கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றன. இஸ்லாம் குறித்த பீதி காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அடுத்த ஹொலகோஸ்ட் (கூட்டுப்படுகொலைகள்) முஸ்லிம்களுக்கு எதிரானதாக அமைந்து விடுமோ எனத் தான் அஞ்சுவதாக Dortmunt பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைப் பேராசிசிரியர் Wolfram Richter தெரிவித்துள்ளார். எனினும், முஸ்லிம் நாடுகளில் ஹொலகோஸ்ட் ஆரம்பித்து அவை ஏற்கனவே தரிசு நிலங்களாக மாற ஆரம்பித்து விட்டன என்பதே உண்மை. முஸ்லிம் இரத்தம் ஆராக மத்திய கிழக்கில் ஓடிக் கொண்டிருக்கும் போது, அதன் மூலம் மேற்குலக ஆயுதக் கம்பனிகள் பிழைப்பு நடாத்தி வருகின்றன.
ஆயுதக் கம்பனிகளால் பெருமளவில் உரிமை கொள்ளப்பட்டுள்ள, சுதந்திர ஊடகங்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் மேற்கு ஊடகங்கள், உலகத்தின் காதுகளில் பூ சுற்றி வருகின்றன. இலங்கை போன்ற நாடுகளின் ஊடகங்களும் தமது உலகச் செய்தித் தேவைகளுக்காக இச்சர்வதேச ஊடகங்களிலேயே தங்கியுள்ளன.
1950 முதல் இலங்கைக்குள் ஊடுறுவ முயன்று வந்த இஸ்ரேலுக்கு தற்போது ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இஸ்ரேலுடன் வளர்ந்து வரும் நாட்டின் நெருங்கிய உறவு, தமக்குப் பெரும் அழிவைக் கொண்டு வரலாம் என்ற அச்சத்தை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
நாஸிப் பாணியிலான இஸ்ரேலின் பின்னணி, அவர்களது இயலுமை போன்ற அம்சங்கள் குறித்து எதுவும் தெரியாத அரசியல்வாதிகள். ஊடவியலாளர்கள், வர்த்தகர்கள், புதிதாகக் கிடைத்துள்ள அதன் நட்பினால், குசலம் கொண்டாடி வருகிறார்கள். இஸ்ரேல் மூக்கை நுழைக்கும் இடங்களிலெல்லாம், முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதற்கு அங்குள்ள கடும்போக்கு சக்திகளைத் தேர்ந்தெடுத்து, இனங்கள் இடையிலான கசப்புணர்வைத் தூண்டி, அதில் குளிர் காய்கின்ற கைங்கர்யத்தைத்தான் அது செய்து வருகின்றது.
உதாரணமாக, டில்லியைத் தளமாகக் கொண்ட “மில்லி கஸட்” பத்திரிகை, முஸ்லிம் விரோதக் கலவரங்களைத் தூண்டுவதற்காக ஐரோப்பா ஊடாக இஸ்ரேலிடம் பெருந்தொகைப் பணத்தை இந்தியக் கடும் போக்கு அமைப்புக்கள் பெற்று வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது. (1-15, டிசம்பர், 2009).
2008 ஆம் ஆண்டில் மாத்திரம் இவ்விதம் 7877 கோடிகளை ஹிந்துத்துவ அமைப்புக்கள் பெற்றுக் கொண்டதாக இந்திய உள்துறை அமைச்சின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. “இந்தியாவின் சமூக அரசியல் சூழலை ஹிந்துத்துவப் பயங்கரவாதிகள் விஷாமாக்கி வருகிறார்கள் என்றும், அதற்கு நிதி வழங்குவதன் மூலமாக இஸ்ரேல் உதவி வருவதாகவும் இருந்து வருகின்ற நம்பிக்கையை வலுவூட்டுவதாக இந்த விசாரணை அமைந்துள்ளது” என அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சுதந்திரத்தின் காரண கர்த்தாக்களின் ஒருவரான பெஞ்சமின் பிராங்கிளின் தனது பிரபல்யமான தீர்க்கதரிசனத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
 “இவர்கள் (யூதர்கள்) ஐக்கிய அமெரிக்காவில் நுழைவதை தடைசெய்யவில்லையானால், இன்னும் இரு நூறு ஆண்டுகளுக்குள் பெரும் தொகையானவர்கள் இங்கு வந்து குவிந்து விடுவார்கள். எமது நிலத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள். அழிப்பார்கள். எந்த வகையான அரசாங்க முறைக்காக நாம், அமெரிக்கர்கள் இரத்தத்தையும், உயிர்களையும் இழந்தோமோ, காயங்களை சுமந்து கொண்டோமோ, அதனை மாற்றி அமைத்து விடுவார்கள். எமது சுதந்திரத்தை அபாயத்திற்குட்படுத்தி விடுவார்கள்………..”
அமெரிக்கர்களைக் குழப்பி விடாமல் கவனமாக இருக்குமாறு 2001 இல் முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷெரோன் ஒரு முறை தனது வெளிநாட்டமைச்சர் ஷிமோன் பெரஸ்ஸிடம் தெரிவித்த போது, “நாம், யூதர்கள்தான் அமெரிக்காவைக் கட்டுப்படுத்துகிறோம். அமெரிக்கர்களும் அதனை அறிவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
பிராங்கிலினின் எதிர்வு கூறலுக்கு ஏற்ப யூதர்கள் இன்று அமெரிக்காவின் உண்மையான ஆட்சியாளர்களாகத் திகழ்கிறார்கள். எந்த அரசாங்கம் பதவியில் அமர வேண்டும் என்பதையும், வெள்ளி மாளிகையில் வீற்றிருக்கப் போகின்றவர்கள் யார் என்பதையும் யூத லொபிகளே தீர்மானிக்கின்றன என்று கூறும் அளவுக்கு யூதர்கள் பலம் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் யூத ஆதிக்கம் குறித்து எவரும் பேசத் துணிகிறார்களில்லை.
இப்பின்னணியிலேயே இலங்கையில் இடம்பெற்று வருகின்ற முஸ்லிம் விரோதப் பிரசாரங்கள் நோக்கப்பட வேண்டும். பயங்கரமான குற்றச்  செயல்களை இழைத்து விட்டு, அதனால் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதுதான் இஸ்ரேலின் கைங்கர்யம்.
இதே வேளை கோதபாய ராஜபக்ஷவின் கருத்தை வரவேற்றுள்ள பொது பல சேனா, தனது அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளது:
“இஸ்லாமியக் கடும்போக்குவாதத்திற்கு எதிராகத் தொடுத்த கருத்தியல் ரீதியான யுத்தத்தின் ஒரு முக்கியமானதொரு வெற்றியாகவே பொது பல சேனா இதனைக் கருதுகிறது. பொது பல சேனாவை ஒரு பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து வந்த அரசியல்வாதிகளுக்கும், ஏனைய சக்திகளுக்கும் இவ்வறிக்கை போதுமான பதிலை வழங்கி இருப்பதாக பொது பல சேனா கருதுகிறது. எல்.லீ.டீ.ஈ பயங்கரவாதம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அடையாளம் காணப்பட்டிருந்தால், நாற்பதாண்டு கால யுத்தம் இடம்பெற்றிருக்காது. இதே போன்று, இஸ்லாமியப் பயங்கரவாதம் உரிய முறையில் அடையாளம் காணப்படா விட்டால், இன்னும் இருபது ஆண்டுகளில் அது வெளிச்சத்திற்கு வரும் என்றே பொது பல சேனா குறிப்பிடுகின்றது…. உண்மையைப் பேசுவது அரசியல் வாதிகளினதும், அரச அதிகாரிகளினதும் நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் இருக்கின்ற நிலையில், கோதபாய ராஜபக்ஷ அவர்களின் இத்தெளிவான பேச்சு வியந்து பாராட்டத்தக்கதாகும்….”
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவோ அல்லது அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவோ பிரதான அரசியல் கட்சிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட இனவாதக் கொள்கைகள் இத்தீவை ரத்தக் காடாக இறுதியில் மாற்றி விட்டது. சுதந்திரமாக பௌத்த கடும்போக்குவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராகத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதை நோக்கும் போது, கடந்த கால வரலாற்றில் இருந்து எதுவித பாடத்தையும் நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றே புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. தற்போதைய குழப்பமான அரசியல் சூழலில் சிங்கள கடும் போக்குவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படா விட்டால், சமாதானம், ஸ்திர நிலை, புனர் வாழ்வு என்பன தொடர்பாக கதைக்கப்படுகின்ற சகல அம்சங்களும் தொலை தூரக் கனவாகவே இருந்து விடப் போகின்றன.
                                                                                     Thanks : Rasmin

Tuesday, 22 October 2013

ஜமாஅத் தொழுகையில் பயணி இரண்டு ரக்அத்துடன் முறிக்கலாமா?


நான்கு ரக்அத்களாக லுஹர் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்படும் போது லுஹரை இரண்டு ரக்அத்களாகவும் அஸரை இரண்டு ரக்அத்களாகவும் சேர்த்து தொழ நினைக்கும் பயணி இந்த ஜமாஅத்தில் இணைந்து கொள்ளலாமா?


பயணிகள் தனியாகத் தொழும் போது அல்லது பயணியை இமாமாக்கி தொழும் போது நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்தாக தொழும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. நான்கு ரக்அத்துகளாகத் தொழவும் அவருக்கு அனுமதி உண்டு.

ஆனால் உள்ளூர் இமாம் தொழுகை நடத்தும் போது அவர் நான்கு ரக்அத்கள் முடிந்து தான் சலாம் கொடுப்பார். பயணிகள் இரண்டு ரக்அத்துடன் முடிக்க நினைத்தால் இமாமை விட்டு அவர் விலகினால் தான் சாத்தியமாகும். அவ்வாறு விலகுவதற்கு அனுமதி உண்டா? என்பதற்கு விடை கண்டால் இதற்கான விடையும் அதனுள் அடங்கிவிடும். 

தக்க காரணம் இருந்தால் இமாமைப் பின்பற்றி தொழுபவர் இமாமை விட்டும் இடையில் பிரிந்து தொழுவதற்கு அனுமதி உள்ளது. 701 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது : முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். (ஒருமுறை அவர்களுக்கு) முஆத் (ரலி) அவர்கள் இஷாத் தொழுகை தொழுவித்த போது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். 

அப்போது (அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகிச் சென்று விட்டார். எனவே முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரை கடுமையாக ஏசினார். போலும். (இந்தச் செய்தி) நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (முஆத் –ரலி-அவர்களிடம்) (நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? என்று மூன்று முறை கேட்டார்கள். நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களிலிருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:  (நபி-ஸல்- அவர்கள் ஓதுமாறு பணித்த) அவ்விரு அத்தியாயங்கள் (எதுவென) என் நினைவிலில்லை. 

புஹாரி 701 705 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 ஒரு மனிதர் இரு நீரிறைக்கும் ஒட்டகங்களுடன் இரவின் இருள் படர்ந்த நேரத்தில் வந்த போது முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு இஷாத் தொழுகை) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். உடனே தமது ஒட்டகத்தை விட்டுவிட்டு முஆத் (ரலி) அவர்களை நோக்கி வந்(து கூட்டுத் தொழுகையில் சேர்ந்)தார். அப்போது முஆத் (ரலி) அவர்கள் (நீண்ட அத்தியாயங்களான) அல்பகரா (2ஆவது) அத்தியாயத்தை அல்லது அந்நிஸா (4ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை விட்டுவிட்டுச்) சென்று விட்டார். 

இது பற்றி முஆத் (ரலி) அவர்கள் தம்மைக் கடிந்து பேசியதாக அந்த மனிதருக்குத் தெரிய வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் வந்து முஆத் (ரலி) அவர்களைப் பற்றி அவர் நபியவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (முஆத் – ரலி- அவர்களை வரவழைத்து) முஆதே! குழப்பம் விளைவிப்பவரா, நீர்? என்று (மூன்று முறை) கேட்டார்கள். சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (86), வஷ்ஷம்ஸ வளுஹாஹா (91), வல்லைலி இஃதா யஃக்ஷா (92) ஆகிய (ஓரளவு சிறிய) அத்தியாயங்களை ஓதி நீர் தொழுவித்திருக்கக் கூடாதா? 

ஏனெனில் உமக்குப் பின்னால் முதியவர்களும், பலவீனர்களும், அலுவல் உடையவர்களும் தொழுகின்றனர் என்றும் சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (ஏனெனில் உமக்குப் பின்னால்...எனத் தொடங்கும்) கடைசி வாக்கியம் நபி (ஸல்) அவர்களின் சொல் (அறிவிப்பாளரின் உரை அல்ல)' என்றே நான் கருதுகிறேன் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றோர் அறிவிப்பில், முஆத் (ரலி) அவர்கள் அந்த இஷாத் தொழுகையில் அல்பகரா (2ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்' என்று (மட்டும்) இடம் பெற்றுள்ளது. 

 புஹாரி 705 6106 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியாதாவது: 

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ சலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு - நபி (ஸல்) அவர்களுடன் தொழுத- அதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும் போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) அல்பகரா' எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒரு மனிதர் (தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது(விட்டுத் தமது பணியைக் கவனிக்கச் சென்று) விட்டார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்) என்று சொன்னார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்த போது (நீண்ட அத்தியாயமான) அல்பகரா'வை ஓதினார்கள். ஆகவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம், முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா? என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், (நீர் இமாமாக நிற்கும் போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சற்று சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக! என்றும் சொன்னார்கள்.

121 புஹாரி 6106 இமாம் தொழுகைய நீட்டும் போது அதில் தொடர்வதற்கு இயலாத நிலையில் உள்ள ஒருவர் இமாமை விட்டு விட்டு தனியாக தொழுததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக நீட்டித் தொழுத இமாமைத் தான் கண்டித்தார்கள். தக்க காரணம் இருந்தால் இமாமை விட்டுப் பிரிந்து தனியாகத் தொழலாம் என்பதை இதில் இருந்து அறியலாம். பயணிக்கு இறைவன் கடமையாக்கியது இரண்டு ரக்அத்கள் தான். அதை அவர் முடித்த பிறகு அவர் இமாமிடமிருந்து விலகி ஸலாம் கொடுத்து விட்டு அதே இமாமுடன் சேர்ந்து அஸரையும் முடிப்பது குற்றமாகாது. ஏனெனில் அவர் தனக்கு இறைவன் கடமையாக்கியதை நிறைவு செய்து விட்டார். கடமையில் எதுவும் அவருக்கு மீதம் இருக்கவில்லை. இமாம் மூன்றாவது ரக்அத் தொழும் போது ஜமாஅத்தில் சேரும் பயணி அவருடன் சேர்ந்து இரண்டு ரக்அத்களை முடித்து விட்டு இமாம் ஸலாம் கொடுக்கும் போது அவரும் ஸலாம் கொடுத்து விட்டால் அவரது கடமையில் எதுவும் மீதமில்லை என்பதால் அதுவும் அனுமதிக்கப்பட்டது தான்.

 அல்லது அந்தப் பயணி விரும்பினால் இமாமுடன் சேர்ந்து நான்கு ரக்அத்களை தொழுதால் அதுவும் குற்றமில்லை.

                                                                                                                                                                               Thanks : onlinepj

Friday, 18 October 2013

தொழுகை ஆண்களுக்கும், பெண்களும் வேறுபாடு உண்டா?

தொழுகை : ஆண்களுக்கும், பெண்களும் வேறுபாடு உண்டா?
எந்த வணக்கத்தில் பெண்களுக்கென்று தனியாக சொல்லப்பட்டுள்ளதோ அதை தவிர
தொழுகை உட்பட இஸ்லாத்தின் எந்த வணக்கத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசங்கள் வேறுபாடு இல்லை.
ஆனால் நடைமுறையில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லாத பல வித்தியாசங்களை வேறுபாடுகளை பெண்கள் செய்து வருகின்றனர். அவைகளில் சிலது மூட நம்பிக்கையால் செயய்யக்கூடியதாகும்.  சில வித்தியாசங்கள் பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்ததாகும்.

தொழுகையை எடுத்துக் கொள்வோம்.
நபி ஸல் அவர்கள் கூறுகையில்…
ஆண்கள் ஸஜ்தாவில் (தொடைகளை) விரித்து வைத்துக் கொள்ளட்டும். பெண்கள் தாழ்த்தி (சேர்த்து) வைத்துக் கொள்ளட்டும். மேலும் அமர்வில் ஆண்கள் இடது அமர்ந்து வலது காலை நட்டி வைத்துக் கொள்ளட்டும். பெண்கள் பித்தட்டை தரையில் வைத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
நூல்: பைஹகி
இந்த செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகி அவர்கள் இந்த செய்தி நிராகரிக்கப்பட்டது என்று இந்த செய்தியின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்கள்.
இதே செய்தி பைஹகி குப்ரா பாகம் 2 பக்கம் 222 ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அபீ மதீ பல்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.
நூல்: ­ஸானுல் மீஸான் பாகம் 2 பக்கம் 334.
நூல்: காமில் பீ லுபாயிர் ரிஜால் பாகம் 2 பக்கம் 214.
இதே செய்தி பைஹகி என்ற நூ­ல் பாகம் 2 பக்கம் 223 ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில்  நபித்தோழர் விடுபட்டுள்ளார் எனவே முர்ஸல் வûயைச்சார்ந்த  அறிவிப்பாகும்.
எனவே இந்த செய்தியை வைத்து தொழுகை ஆண்களுக்கும் வேறு பெண்களுக்கு வேறு என்று சொல்ல முடியாது.
ஆனால் தொழுகையில் சில இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.
நூல் : புகாரி 1203.
இந்த செய்தியில் தொழுகையில் இமாமிற்கு தவறு ஏற்படும் போது ஆண்கள் சுப்ஹானல்லாவும் பெண்கள் கையும் தட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர பெரிய வித்தியாசங்கள் வேறுபாடுகள் இல்லை.
அதே போன்று ஆண்கள் பெண்களுக்கு இமாத் தொழுகை நடத்த முடியும். ஆனால் பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியாது. இது பற்றி இன்ஷா அல்லாஹ் தனிக்கட்டுரை ஒன்று வெளியிடப்படும்.
ஆண்கள் கட்டாயமாக பர்ளான தொழுகைகளை பள்ளியில்தான் தொழவேண்டும். பெண்கள் பள்ளியிலும் வீட்டிலும் தொழுது கொள்ளலாம்.
பெண்களுக்கு பாங்கும் இகாமத்தும் கட்டாயம் இல்லை. ஆனால் ஆண்களுக்கு கடமையாகும்.
இது தவிர வேறு வித்தியாசங்கள் நமக்கு இருப்பதாக தெரியவில்லை.
                                                                                                              -எஸ்.யூசுப் பைஜி.

Wednesday, 16 October 2013

செருப்புடன் உளூச் செய்யலாமா?


செருப்பு அணிந்து உளூஉ செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இது மார்க்கச் சட்டமாக இருந்தால் இதைத் தடை செய்யும் விதமாக குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ கூறப்பட்டிருக்கும். ஆனால் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ செருப்பணிந்து உளூ செய்யக்கூடாது என்று கூறப்படவில்லை.

உளூவை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழுகைக்கே இப்படி தடை ஏதும் இல்லை. செருப்பில் அசுத்தம் ஒட்டியிருப்பது கண்ணுக்குத் தெரியும் போது அதைக் கழற்றிவிட்டு தொழ வேண்டும். 

அசுத்தம் தெரியாவிட்டால் செருப்பணிந்து கொண்டே தொழலாம் என்று மார்க்கம் கூறுகின்றது. இதைப் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது காலணிகளைக் கழற்றி தமக்கு இடப்பக்கத்தில் வைத்தார்கள். இதை (பின்னால் தொழுது கொண்டிருந்த) மக்கள் கண்டபோது அவர்களும் தங்களது காலணிகளைக் கழற்றிப் போட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன் ஏன் உங்களுடைய காலணிகளைக் கழற்றிப் போட்டீர்கள்? என்று வினவினார்கள். 

அதற்கு மக்கள் நீங்கள் காலணிகளைக் கழற்றுவதைக் கண்டதால் நாங்களும் எங்கள் காலணிகளைக் கழற்றினோம் என்று பதிலளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் “ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து என் காலணிகளில் அசுத்தம் அல்லது (பிறருக்கு) நோவினை தரும் பொருள் இருப்பதாகத் தெரிவித்தார்கள். (அதனால் தான் நான் கழற்றினேன்.) உங்களில் ஒருவர் பள்ளிக்கு வந்தால் (தமது காலணிகளை) அவர் பார்க்கட்டும். தனது காலணிகளில் அசுத்தத்தையோ அல்லது நோவினை தரும் பொருளையோ கண்டால் அதைத் துடைத்துவிட்டு அதனுடனே தொழுது கொள்ளலாம். நூல் : அபூதாவூத் 555 

எனவே செருப்பணிந்து தொழலாம் எனில் தொழுகையின் ஒரு அங்கமாக இருக்கின்ற உளூவையும் செருப்பணிந்து கொண்டு செய்யலாம். அதில் தவறில்லை. ஆனால் உளூவின் இறுதியில் காலைக் கழுவும் போது செருப்பைக் கழற்றி காலை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். கால்களை நன்கு கழுவ வேண்டும் சரியாக கழுவவில்லை எனில் தொழுகையே செல்லாது எனுமளவு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நாசம்தான்'' என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லா பின் அம்ர்  (ரலி) நூல் : புகாரி 60 

ஒரு மனிதர் அங்கத் உளூ செய்தார். அப்போது அவர்  தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்) விட்டுவிட்டார். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார். அறிவிப்பவர் : உமர் பின் அல் கத்தாப் (ரலி) நூல் : முஸ்லிம் 411 

செருப்பு அணிந்த நிலையில் கால்களைக் கழுவும் போது சரியாக முழுமையாக்க் கழுவ முடியாமல் போகும் என்றால் அப்போது செருப்பைக் கழற்றிவிட்டு உளூ கால்களைக் கழுவவேண்டும்.

thanks  onlinepj

Thursday, 3 October 2013

செல்போன்களால் ஏற்படும் சமூகப்பிரச்சனைகள்…

அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவை பயன்படுத்தி மனிதன் பல வியத்தகு சாதனைகளை புரிகின்றான். கற்பனைக்கு எட்டாத புதிய புதிய கண்டுபிடிப்புகளை கணக்கின்றி தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். வெறும் நூறு வருட கால இடைவெளியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களை எண்ணிப்பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. உலக வாழ்வில் பல இன்னல்களை அகற்றி நேரத்தையும் வேலையையும் இவனது கண்டுபிடிப்புகள் மிச்சப்படுத்தித் தருவதால் உலக மக்கள் அனைவரும் இக்கருவிகளை பெரிதும் விரும்புகிறார்கள். 
மக்களுக்கு பலனுள்ளதை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் படைப்புகளை வெளியிட்டாலும் நன்மையான காரியங்களுக்கு இவைகள் பயன்படுவதைப் போல் தீமையான காரியங்களுக்கும் பயன்படுகின்றன. இயற்கையாக மனிதன் தீமைகளை செய்யவே அதிக நாட்டம் கொள்பவனாக இருப்பதால் இச்சாதனைங்களையும் தீமையான காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறான். இதனால் உலகில் ஒரு புறம் இக்கருவிகள் மூலம் பல நன்மைகள் குவிந்துகொண்டிருந்தாலும் இதேக் கருவிகள் மூலம் ஏற்படுகின்ற தீமைகள் மாபெரும் குவியலாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
இக்கருவிகளால் பலனடைந்து கொண்டிருந்த மக்கள் இதேக் கருவிகளால் பலத்த சங்கடத்திற்கும் ஆளாக வேண்டிய நிலை வருகிறது. கண்டுபிடிப்பு சாதனங்களால் ஏற்படும் விபரீதங்கள் படுபயங்கரமானதாக இருப்பதால் தங்களையும் தங்கள் குடும்பத்தார்களையும் காத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் இக்கருவிகளால் நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தீமைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்று கருதி இச்சாதனங்களை முற்றிலும் புறக்கணித்துவிடுகிறார்கள்.
தீமைசெய்பவர்களுக்கு இக்கருவிகள் வலுமையான கூட்டாளியாகவும் உதவும் நண்பனாகவும் இருப்பதால் இச்சாதனங்களை தீயவர்கள் விரும்பி நேசிக்கிறார்கள்.
நல்லவர்களாக வாழ நினைப்பவர்களும் சில தருணங்களில் தடம்புரண்டு செல்வதற்கு இச்சாதனங்கள் காரணமாகிவிடுகின்றது. இவற்றின் மூலம் ஏற்படுகின்ற தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருப்பதாலும் தீமைகள் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாகரீகம் என்று போற்றக்கூடிய படுமோசமான நிலை ஏற்படுகிறது.
பிஞ்சில் பழுத்த பழம்
மனிதனால் உருவாக்கப்பட்ட இத்தகைய கருவிகளில் ஒன்று தான் செல்போன் என்பது. பழம் சுவையானதாகவும் உண்ணுவதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டுமானால் நன்கு காய்த்தப் பின்பு தானாக கனியும் நிலையை அப்பழம் அடைய வேண்டும். அவ்வாறில்லாமல் காய்க்கும் பருவத்தை அடைவதற்கு முன்பு பிஞ்சாக இருக்கும் நிலையில் பழுத்துவிட்டால் அதில் எந்தப் பயனும் இல்லை. குப்பைத் தொட்டி தான் அது சேர வேண்டிய இடம். செல்போன்களால் சீரழிந்துகொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு இந்த உதாரணம் மிகவும் பொருந்தக்கூடிய வகையில் உள்ளது.
படிப்பிலும் அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவ மாணவிகள் இன்றைக்கு திருமணமான தம்பதிகள் கூட அறிந்திராத அளவிற்கு ஆபாசங்களை அறிந்துவைத்திருக்கிறார்கள். புத்தகங்களை சுமந்து செல்லும் இளம் வயது சிறுமிகள் கருவை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. தாய் தந்தையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்பதற்காக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் தந்தையாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
இளம் வயதிலேயே தங்களது வா­பத்தை வீணடித்து பருவ வயதை அடையும் போது எதற்கும் சக்தியற்ற கிளவர்களாக இவர்கள் மாறுகிறார்கள். செழித்து வளர வேண்டிய இந்தக் கதிர்கள் சீக்கிரமே சீரழிந்து போவதற்கு செல்போன்கள் முக்கிய காரணியாக இருக்கிறது.
பூக்கடை சாக்கடையாகலாமா?
சிறுவர் சிறுமிகள் மட்டுமின்றி பெரும் பெரும் கல்லூரிகளில் படிக்கும் வா­பர்களின் நிலையும் இதைப் போன்று தான் உள்ளது. அல்லது இதை விடவும் மோசமாக உள்ளது. படங்களை பார்ப்பதற்கான வசனதி செல்போன்களில் செய்யப்பட்டு இருப்பதால் ஆபாசக் காட்சிகள் மற்றும் சினிமாப் பாடல்களை அதில் பதிவு செய்துகொண்டு பார்த்து இரசிக்கிறார்கள். ஆபாசத்தின் இன்னொரு பெயர் தான் சினிமா என்பது. பாடல்களிலும் காட்சிகளிலும் ஆபாசத்தைக் கலக்காவிட்டால் அந்த படம் நீண்ட நாள் திரையரங்குகளில் ஓடாது என்கின்ற அளவிற்கு சினிமாவில் ஆபாசம் பெருகியிருக்கிறது.
இந்த சினிமாக்காட்சிகளும் பாடல் வரிகளும் இசையும் பூக்கடையாக இருந்த மனிதனுடைய மூளையை மழுங்கச் செய்து நாற்றமெடுக்கும் சாக்கடையாக மாற்றிவிடுகிறது. இந்தப் பருவத்தில் இரத்தம் அதிக துடிப்புடன் இருப்பதால் இவர்களின் கவனம் வழிகேட்டின் பக்கம் செலுத்தப்படும் போது தடம்புரண்ட குதிரையின் வேகத்திற்கு இவர்கள் வழிகேட்டை நோக்கி ஓடுகிறார்கள். திரையரங்குகளுக்குச் செல்வது பள்ளிக்கூடம் போகாமல் கட்டடிப்பது போன்ற பல தீமையான காரியங்களுக்கு பலரை கூட்டு சேர்த்து கொள்வதற்கு இக்கருவி அவர்களுக்கு மிகவும் பயன்படுகிறது.
இளமையில் கல். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் போன்ற உபதேசங்களை கூட கற்க வழியில்லாமல் பொன்னான காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். விலைமதிக்க முடியாத கல்வி காலம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மாணவன் இழப்பதற்கு செல்ஃபோன்கள் தான் மிக முக்கியமான காரணம். தற்போது காதல் என்ற உயிர்கொல்­ நோய் நாகரீகம் தெய்வீகம் என்ற போர்வையில் தற்போது படிக்கும் மாணவ மாணவியர்களுக்கிடையே காட்டுத் தீ போல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த காதல் பைத்தியம் தலைவிரித்து ஆடுவதற்கும் இந்த செல்போன்களின் பங்கு இணையற்றது.
நல்ல நல்ல செய்திகளை பரிமாறிக்கொள்ள வேண்டிய மாணவ மாணவிகள் ஆபாச எஸ்எம்எஸ்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் தமிழகத்தில் சில கல்லூரிகளில் மாணவ மாணவியர்கள் செல்போன்களை கல்லூரி நேரத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. பிறருக்கு ஆபாச செய்திகளையும் படங்களையும் அனுப்பி குறும்பு செய்வதால் அனுப்பிய மாணவன் பள்ளி படிப்பைத் தொடர முடியாமல் சிறைக்குச் சென்றுவிடுகிறான். பயத்துடன் கல்லூரிக்கு சென்று வந்த மாணவிகள் வீட்டுக்கு வந்தப் பின்பும் நிம்மதியாக இருக்கமுடிவதில்லை.
அத்துமீறி நுழையும் அக்கிரமம்.
செல்போன்களில் காமிர வசதியுள்ளவைகளும் உள்ளன, பெண்கள் அஜாக்ரதையாக இருக்கும் போது வக்கிரபுத்தி கொண்ட ஆண்கள் பெண்களின் மறைவிடங்களை செல்போன்களின் மூலம் படம் எடுத்துவிடுகிறார்கள். இப்படி எடுக்கப்பட்டக் காட்சி ஊர் உலகத்தையெல்லாம் சுற்றிக்கொண்டு கடைசியில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வருகிறது. இதற்குப் பிறகு அப்பெண்ணால் எப்படி தலை நிமிந்து நடக்க முடியும்?. இந்த அவமானம் தாங்க முடியாமல் மணமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்பவர்களும் உண்டு. செல்போன்களில் ப்ளூடூத் என்ற ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் செய்திகளையோ பாடல்களையோ படங்களையோ பலருடை செல்களுக்கு அனுப்ப முடியும். இவ்வசதியை தவறாக பயன்படுத்திக் கொண்டு பலருடைய செல்போன்களுக்கு தப்பான விஷயங்களை பரப்புகிறார்கள். இதனால் ஆபாசத்தை எட்டிப்பார்க்காதவர்கள் கூட அவசியம் பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏனென்றால் வந்த செய்தியை திறந்தால் தான் அது நல்லதா கெட்டதா என்பது தெரியவரும்.
ஒழுக்கமாக வாழ நினைப்பவனை இக்கருவிகள் வாழவிடுவதில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அவனும் அசிங்கமான விஷயங்களை அங்கீகரிக்கத் தொடங்கிவிடுகின்றான். இப்படி நம்முடைய அனுமதி இல்லாமலேயே நம்முடைய பொருளில் அன்னியர்கள் விளையாடிவிடுகிறார்கள்.
வீடு தேடி வரும் அழைப்பு
கெட்ட எண்ணம் கொண்டவன் விபச்சாரத்திற்கு துணையை தேடும் நோக்கில் பலருக்கு போன் செய்து பேசுபவர் ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொண்டு பெண்ணாக இருந்தால் அவளை வலையில் சிக்கவைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் செய்கிறான். விபச்சாரம் செய்வதற்கு அழைப்பு ஊர்கடந்து நாடுகடந்து வீடு தேடி வருகின்றது.
ஆண்களை தவறானப் பாதைக்கு அழைக்கும் பெண்களும் இத்தகயை யுக்தியை கையாளுகிறார்கள். எனவே தான் விபச்சாரிகள் கைது செய்யப்பட்டதை குறிப்பிடும் போôது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தியையும் சேர்த்தே சொல்லுவார்கள்.
கணவன் ஊரில் இல்லாத போது தனிமையில் வாடும் எத்தனையோ பெண்கள் தங்கள் கற்புக்களை காத்துக்கொண்டாலும் சில பெண்கள் அயோக்கியர்கள் வீசும் இந்த மாயவலையில் சிக்கிவிடுகிறார்கள். கணவனை நினைத்து வாடும் பெண்களிடம் எந்த ஆணாவது வேறு நோக்கத்தில் பேசினாலும் இப்பெண்களே அந்த ஆண்களை தவற்றுக்கு அழைக்கிறார்கள். தெரிந்த ஆண்களுக்கு போன் செய்து பலமணி நேரம் அவர்களிடம் உறையாடுகிறார்கள்.
எந்தவிதமான சிரமுமின்றி யாருக்கும் தெரியாமலும் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலும் வீட்டுக்குள் இருந்துகொண்டே விபச்சாரத்திற்கு ஆள் தேடுவது என்பது இக்கருவியால் எளிதாகிவிடுகின்றது. கள்ளத்தொடர்பு எங்கேயோ யாருடனோ முடிந்துவிடாமல் காலம் முழுக்க நீடிக்கும் பந்தமாக தொடர்வதற்கு இந்த செல்போன்கள் உறுதுணைபுரிகிறது.
பொன்னான காலம் வீணாய் போகிறதே !
சிலர் விளையாட்டாக முக்கிய பிரமுகர்களுக்கு செல்போன்களின் மூலம் கொலை மிரட்டல் விடுகிறார்கள். விஷயம் பெரிதாகி செய்தியை அனுப்பியவர் சிறையில் அடைக்கப்படுகிறார். நாம் அனுப்பாவிட்டாலும் நமக்குத் தெரியாமல் எவனாவது நமது செல்போனை பயன்படுத்தி இத்தகைய செய்திகளை பிறருக்கு அனுப்பிவிடுகிறான். இதனால் பாதிப்பு நமக்குத் தான் வருகிறது.
ஏப்ரல் 1 ம் தேதியை பிறரை ஏமாற்றுவதற்குரிய நாள் என்று பலர் நினைக்கிறார்கள். இந்நாளில் பிறரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை பிறருடைய செல்போன்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதனாலும் பல விபரீதங்கள் ஏற்படுகின்றது.
பேசுவதற்கு விஷயமே இல்லாவிட்டாலும் சிலர் எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். இல்லையென்றால் அவர்களுக்குத் தலை வெடித்துவிடும். எத்தனையோ வேலைகள் பல இருந்தும் கூட அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு பிரயோஜனம் இல்லாத பேச்சுக்களை மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள். செல்போன்களில் பேசுவதையே பலர் பொழுதுபோக்காக ஆக்கிக்கொள்கிறார்கள்.
வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றாலும் சரி பேசுவதை நிறுத்தமாட்டார்கள். செல்போன்களின் மீது இவர்களுக்கிருந்த எல்லை கடந்த பாசம் விபத்திற்குக்காரணமாகி உயிரையே பறித்துவிடுகிறது. பிறரை தொல்லை செய்வதற்காக ஒன்றும் எழுதப்படாத வெற்று மெஸ்úஸஜ்களை 50 100 என்ற கணக்கில் அனுப்பி தங்கள் காலத்தை விரையம் செய்துகொள்கிறார்கள். பிறரையும் துன்புறுத்துகிறார்கள். சென்றால் திரும்ப வராத நம் காலத்தையும் உயிரைûயும் அழித்துக்கொள்வதற்கு செல்போன் கருவிகள் உதவிபுரிகின்றன. நேரம் வீணாகுவதுடன் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகை செல்போன்களுக்காக வீண்விரயம் செய்யப்படுகின்றது.
அவதூறுக் கருவி
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்த பாவங்களை பாதிக்கப்பட்டவன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். இந்த பாவங்களில் ஒன்று தான் பிறரைப் பற்றி அவதூறு பேசுவது. இன்றைக்கு செல்போன்கள் இந்த மாபெரும் பாவத்தை நமக்கு சம்பாரித்து தந்துகொண்டிருக்கின்றன. ஒரு தனிநபரைப் பற்றி அல்லது ஒரு இயக்கத்தைப் பற்றி தவறான பொய்யான விஷயங்கள் இந்தக் கருவிகளின் மூலம் பரப்பப்படுகின்றது. தனக்கு வந்த தகவல் உண்மையானதா? பொய்யானதா? என்றெல்லாம் பார்க்காமல் வந்த மாத்திரத்திலேயே தன்னுடைய பங்கிற்கு ஒவ்வொருவரும் அவதூறுகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
பண்டையக் காலங்களில் ஒரு அவதூறு பலருக்குப் பரவ பலமணி நேரமானது. பல நாட்களானது. ஆனால் இன்றைக்கு செல்போன் கருவியின் மூலம் பல நூறு பேருக்கு ஒரு நிமிடத்தில் பல பொய்யான செய்திகளை பரப்பிவிடமுடியும். நாம் அனுப்பிய ஆதாரமற்ற தகவலை நம்பி யார் யாரெல்லாம் பரப்பினார்களோ அவர்களுடைய பாவத்தில் நமக்கும் கட்டாயம் பங்குண்டு. நாம் பாவியானதோடில்லாமல் பிறரையும் பாவியாக்கிக்கொண்டிருக்கிறோம்.
எனவே ஒருவன் பாவச்சுமையை சுமந்து நரகத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் அவன் இதற்காக பெரும் சிரமத்தை எடுக்க வேண்டியதில்லை. ஒரு இயக்கத்தைப் பற்றி அல்லது ஒரு தனிநபரைப் பற்றி ஒரு பொய்யை போன்கள் மூலம் அனுப்பினாலே போதும்.. இங்கு சொல்லப்பட்ட விஷயங்கள் மட்டுமில்லாமல் நமக்குத் தெரியாத இன்னும் பல தீமைகளும் செல்போன்களால் ஏற்படலாம்.
விஞ்ஞான வளர்ச்சியின் விளைவால் நாமும் இதை வாங்குவதற்கு நிர்பந்திக்கப்படுகிறோம். எனவே முடிந்த அளவு இக்கருவிகளை நமது பிள்ளைகளுக்கும் வீட்டுப் பெண்களுக்கும் வாங்கிக்கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. இக்கருவியின் பயன்பாடு நமக்கு அவசியப்பட்டால் இஸ்லாமிய வரம்பை மீறாத வகையில் பல கட்டுப்பாடுகளை நமக்குள் நாமே இட்டுக்கொண்டு முறையான அடிப்படையில் கையாளுவது அவசியம். மறுமை நாளில் செவியும் கண்ணும் நாம் செய்த குற்றங்களை ஆவணங்களாக தயாரித்து அல்லாஹ்வின் முன் நிறுத்தும். நமக்கு கொடுக்கப்பட்ட காலம் குறித்தும் செல்வம் குறித்தும் அல்லாஹ் விசாரணை செய்வான். இந்த நம்பிக்கையை மனதில் ஆழமாக பதித்து அல்லாஹ்விற்கு பயப்படுவதை நாம் மறந்து விடக்கூடாது.
எல்லாம் வல்ல இறைவன் நம்மை தீமைகளி­ருந்து காத்து நன்மைகளில் செலுத்துவானாக.