அனைத்துப் புகழும் அகில உலகையும் படைத்தது பரி பக்குவப்படுத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக -

Monday, 23 September 2013

குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

இன்றைய நவீன உலகத்தில் பல பிரச்சினைகளை நாம் முன்னோக்கிக் கொண்டிருக்கிறோம்.அதிலும் குடும்ப வாழ்கை தொடர்;பாக பல பிரச்சினைகளை அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த குடும்பப் பிரச்சினைகளில் மிக முக்கியமானதுதான் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரச்சினை.
தமக்கு குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் தம்பதியினர் குழந்தையை பெற்றெடுக்காமல் இருப்பதற்காக மருத்துவத்தின் மூலம் குடும்பக்கட்டுப்பாட்டை செய்து கொள்கின்றனர்.
சீனா போன்ற நாடுகள் இரண்டு குழந்தைகளை ஒரு தம்பதியினர் பெற்றெடுத்தால் அதன் பின் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என சட்டமே உருவாக்கியுள்ளது.
இந்தியா போன்ற நாடுகள் இதனை மறைமுகமாக பிரச்சாரம் செய்கிறது.
பயணிகள் பஸ்களில் ஆட்டோக்களில் அரச அலுவலகங்களில் என்று பெரும்பாலான இடங்களில்  நாம் இருவர் நமக்கொருவர் போன்ற வாசகங்கள் விளம்பரப் படுத்தப் பட்டுள்ளது இதனை தெளிவாக விபரிக்கிறது.
எதிர்கால சந்ததியினரை இல்லாமல் செய்யும் முயற்சியாகத்தான் இந்த மருத்துவ சத்திர சிகிச்சை மூலம் செய்யப் படும் குடும்பக்கட்டுப்பாடு அமைந்துள்ளது.
குடும்பக்கட்டுப்பாடு என்ற பெயரில் பெரும்பாலும் பெண்ணின் கருப்பையை (குழந்தை உருவாகும் பகுதி)அகற்றிவிடுகிறார்கள்.
கருப்பை அகற்றப் பட்டால் பிற்;காலத்தில் அந்தப் பெண் எவ்வளவு ஆசைப்பட்டாலும் மீண்டும் குழந்தையை சுமக்க முடியாது.
கணவனிடம் குடும்ப சுகத்தை அனுபவிக்க முடியும் அதன் மூலம் எந்த பிரயோஜனத்தையும் எதிர்பார்க்க முடியாது.
இந்தப் பிரச்சினைக்கு இஸ்லாம் மிக அழகியதொரு தீர்வை சொல்லித் தருகிறது.
இஸ்லாம் காட்டித் தரும் முறையின் மூலம் குடும்பக்கட்டுப்பாடு செய்பவர்கள் விரும்பினால் குழந்தை பெறவும் முடியும் பெறாமல் இருக்கவும் முடியும்.
இஸ்லாமிய சட்டத்தில் சந்ததி நிருத்தம் என்பது கிடையாது.
கருவில் குழந்தை உருவாகுவதை தடுப்பதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளது.

நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் அஸ்ல்‘ (புணர்ச்சி இடை முறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),நூல் : புகாரி (5209)
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்… அவள் எங்களுக்கு பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகிவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) , நூல் : முஸ்லிம் (2606)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்துகொண்டிருந்தோம். இச்செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை. 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),நூல் : முஸ்லிம் (2610)
மேலுள்ள செய்திகளை கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளை கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம்.
நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியேத் தீரும் என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி (2542)
தற்காலிகமாக குழந்தை உருவாவதை தடுத்துக்கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வதை சிறந்தது கிடையாது என்று நபியவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாக குழந்தை உருவாகாதவாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும். தற்காலிக கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை காப்பர்டி போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்தி தற்காலிகமாக குடும்பகட்டுப்பாடு செய்வதற்கு மாத்திரம் அனுமதியுள்ளது.
குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளை பெற்றெடுத்தப் பின் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்த பின் பெற்றெடுத்தக் குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படி பெறமுடியும்?. இதை சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யமாட்டார்கள்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் நபிதானா?

உலகின் முதல் மனிதர் என்று திருக்குர்ஆன் குறிப்பிடும் ஆதம்(அலை)அவர்கள் தான் உலகிற்கு அனுப்பப் பட்ட முதல் நபி என்றும் நம்பப் படுகிறார்கள்.
உலகின் முதல் மனிதர் ஆதம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் ஆதம்(அலை)அவர்கள் தான் உலகின் முதல் நபி என்பதை சிலர் மறுக்கிறார்கள்.
இதற்கான காரணத்தையும் அவர்கள் தெளிவு படுத்தவில்லை. ஆனால் உலகின் முதல் மனிதர்தான் முதல் நபி என்பதற்கு திருமறைக் குர்ஆனில் தெளிவான ஆதாரம் இருக்கிறது.
பொதுவாக நபிமார்களை இறைவன் குறிப்பிடும் போது நபி என்ற வாசகத்தை குறிப்பிட்டு சொல்வதைப் போல் அல்லாமல் ஆதம் நபியவர்களை நபிமார்களுக்கு பயன்படுத்தும் ஒரு வார்த்தையைக் கொண்டு இறைவன் பயண்படுத்துவதின் மூலம் அவர் நபிதான் என்பதை நமக்குத் தெளிவு படுத்துகிறான்.
ஆதம்,நூஹ்,இப்ராஹீமின் குடும்பத்தார் மற்றும் இம்ரானின் குடும்பத்தினரை அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.(3:33)
மேற்கண்ட வசனத்தில் அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான் என்று குறிப்பிடப் படுகிறது.இதில் அரபி வாசனத்தில் இஸ்தபா என்ற வாசகத்தை இறைவன் பயன்படுத்தியுள்ளான் இஸ்தபா என்பது திருமறைக் குர்ஆனில் இறை தூதர்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப் படும் வார்த்தையாகும்.
அந்த வார்தையை குறிப்பிட்டு இறைவன் ஆதம்(அலை)அவர்களையும் குறிப்பிடுவதில் இருந்து ஆதம் அவர்கள் தான் உலகின் முதல் நபி என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார். பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர் வழி காட்டினான். .(20:121-122)
மேற்கண்ட திருமறை வசனத்திலும் இறைவன் ஆதம் நபியவர்கள் செய்த தவரை மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்ததாக குறிப்பிடுகிறான்.இந்த வசனத்திலிருந்தும் ஆதம் அவர்கள் ஒரு நபியாகத்தான் இருந்தார்கள் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.
ஆதம்(அலை)அவர்கள் சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றப் பட்ட செய்தியை இறைவன் குறிப்பிடும் போது பயண் படுத்தும் வார்த்தையும் ஆதம் அவர்கள் நபியாகத் தான் இந்த உலகில் இருந்தார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளன” என்றும் நாம் கூறினோம். (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்அவன் மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன்.(2:36-37)
ஆதம் நபியவர்கள் தவறு செய்ததை குறிப்பிடும் இறைவன் தனது தவறிலிருந்து ஆதம் அவர்கள் மன்னிப்பை வேண்டுவதற்காக அவருக்கு சில வார்தைகளை கற்றுக் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறான்.
இறைவனிடம் இருந்து ஒருவருக்கு வஹி வருமாக இருந்தால் அவர் நபியாக இருந்தால் மாத்திரம் தான் அது சாத்தியமாகும்.ஆதம் அவர்கள் நபியாக இல்லாமல் இருந்திருந்தால் தன்னிடம் இருந்து சில வார்த்தைகளை ஆதம் பெற்றுக் கொண்டார் என்று இறைவன் கூற வேண்டிய அவசியம் இல்லை.
அதே போல் அதற்கு அடுத்த வசனத்தில் இறைவன் குறிப்பிடும் போது 
இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்” என்று கூறினோம்.(2:38)
இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும். அப்போது எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.(20:123)
தவறு செய்த ஆதம் அவர்கள் பூமிக்கு அனுப்பப் படும் நேரத்தில் என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை.என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
ஆதம் நபியவர்கள் பூமிக்கு அனுப்பப் படும் போதே அவர்களுக்கு நேர்வழியை இறைவன் அழிப்பதாக வாக்குறுதி தருகிறான்.
ஆதம் நபியவர்களுடைய சமுதாயத்தினருக்கு நேர் வழி காட்ட ஒரு தூதராக அவரையே இறைவன் தூதுத்துவத்தை கொடுத்து அனுப்பியுள்ளான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
நேர் வழி உங்களுக்கு வரும் என்று இறைவன் கூறினாலே வந்திருக்கிறது என்றுதான் நாம் புரிய வேண்டும்.ஏனெனில் இறைவன் தனது வாக்குக்கு மாறு செய்யமாட்டான்.
மேற்கண்ட வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது கண்டிப்பாக ஆதம்(அலை)அவர்கள் ஒரு நபியாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை தௌவாக நமக்கு அறிவித்துத் தருகிறது.

Saturday, 21 September 2013

உலகின் முதல் மனிதர் ஆதாமா ஏவாளா?

நாத்தீகத்தின் முரண்பாடும்  ஆத்தீகத்தின் நீரூபனமும்.
உலகத்தின் உருவாக்கம் ஒரு மிகப்பெரும் அற்புதம்.அது போல் மனிதனின் உருவாக்கம் அதைவிட அற்புதம்.இந்த இரண்டில் உலகின் தோற்றத்தைப் பற்றி இரண்டுவிதமான கருத்தோட்டங்கள் உண்டு.
முதலாவது உலகம் தானாக இயற்கையாக உருவாகியது என்பதாகும் இது நாத்தீகத்திற்கு கடவுல் இல்லை என்ற கொள்ளைக்கு வக்காலத்து வாங்குவதற்காக உருவாக்கப் பட்ட கருத்து நிலை பெறாமல் பெயருக்காக சொல்லிக் கொள்ளப் படுகிறதே தவிர இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இரண்டாவது உலகைப் படைத்தவன் இறைவன்.இறைவன் படைக்காவிடில் இந்த உலகம் உருவாகியிருக்க முடியாது அவனுடைய ஆற்றலினால் உருவாக்கப் பட்டதினால்தான் நேர்த்தியான ஒரு சீரமைப்பில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த இரண்டு கருத்துக்களில் இதுவரை நிரூபிக்க முடிந்தது இரண்டாவது கருத்தைத்தானே தவிர முதல் கருத்தை அல்ல.
முதலாவது கருத்து கடவுல் இல்லை என்று சொல்லப் பட்ட செய்தியை மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்வதற்காக சொல்லப்பட்டதாகும்.
மனிதனின் உருவாக்கம்.
மனிதனின் தோற்றத்தைப் பொருத்தவரை மனிதன் கடவுளினால் படைக்கப் பட்டான் என்று மதங்களும் அறிவியலாளர்களின் ஒரு பகுதியினரும் கூறுகின்றனர்.
இன்னொரு பகுதியினர் இல்லை மனிதன் தானாக உருவாகிய உலகத்தில் இயற்கையின் பருவ நிலை மாற்றத்தினால் குரங்கிலிருந்து பரினாம வளர்ச்சி பெற்று உருவாகியவன் என வாதிடுகின்றனர்.
இந்த வாதாட்டத்தின் உண்மை நிலையை முதலில் நாம் அறிய வேண்டும்.
அதாவது மனிதன் படைக்கப் பட்டானா? அல்லது பரிணாம வளர்ச்சி மூலம் உருவானானா? இதுதான் நாம் முதலில் ஆராய வேண்டிய கேள்வி.
இந்தக் கேள்விக்குறிய பதிலைப் பார்த்துவிட்டு முதல் மனிதன் யார் ஆதாமா? அல்லது ஏவாளா? என்பதை ஆராய்வோம்.
மனிதன் படைக்கப் பட்டானாஅல்லது பரிணாம வளர்ச்சி மூலம் உருவானானா
(இது தொடர்பாக அறிஞர் பி.ஜெ அவர்கள் தனது திருக்குர்ஆன் விளக்கத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரையை பதிவு செய்துள்ளார்.அதையே இந்தத் தலைப்பின் விளக்கமாக தருகிறோம்.)
மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்ற தத்துவம் கடவுளை மறுப்பதற்கு உதவுவதால் அதைச் சிலர் ஏற்றிப் போற்றுகிறார்களே தவிர அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.
சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!
எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.
குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந் தது எனலாம்.
அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது ஆச்சர்யமாக இருக்கிறது.
உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். 
குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை. பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போனது. அனேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாக வுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும்.
ஆடு மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் வேறுபட்டுள்ளது.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட இது அறிவியல் பூர்வமானது.
இன்றைக்கும் கூட தந்தையின் தோற்றத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை என்று முடிவு செய்கிறோம். தோற்றத்தைக் கணக்கில் கொள்வதில்லை.
டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?
இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.
வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.
ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர்.
ஆச்சரியமாகப் பன்றியின் இதயம் தான் மனிதனின் இதயத்துடன் பெரு மளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித் துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும் அது சாத்தியமற்றது என அறிவிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மனிதன் எந்தப் பிராணியில் இருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும். டார்வின் கூறும் உடலமைப்பை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கம் உடையதாகும்.
இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.
குரங்கின் மரபணுக்களையும் மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தால் அல்லது வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தால் டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.
இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.
குறிப்பிட்ட கால கட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.
மனிதன் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம் இனம் நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும்.
டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.
என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.
இதையெல்லாம் விட மனிதன் உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையைப் பெறவில்லை. பகுத்தறிவால் தான் பெறுகிறான்.
உடல் வளர்ச்சிக்கும் உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.
ஒட்டகச்சிவிங்கி சிறிய கழுத்தைப் பெற்றிருந்ததாம். அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி நீட்டி வந்ததால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டது என்று டார்வினிஸ்டுகள் கூறுகின்றனர்.
உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம். இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது. ஆனால் உயிர் வாழ்வதற்குப் பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் ஏதும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை.
பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை.
உயிர் வாழ்வதற்குப் பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் உடல் மாறலாமே தவிர பகுத்தறிவு என்பது வரவே முடியாது 
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது. யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது? கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது? யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?
பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?
தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும் அல்லது தினந்தோறும் சில தாய் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்.
ஏன் அது தொடரவில்லை? இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.
மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் பதில் இல்லை.
மனிதனின் இரத்தம் இதயம் ஈரல் சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும் மரபணுக்களும் மனிதன் தனி இனம் எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:30 3:59 4:1 6:2 6:98 7:189 15:26 15:28 22:5 23:12 30:20 32:7 35:11 37:11 38:71 39:6 40:67 49:13 55:14)
உலகின் முதல் மனிதர் யார் என்பதை சொல்வதற்கு முன் மனிதன் படைக்கப் பட்டானா பரிணாமம் பெற்றானா என்ற கேள்விக்குறிய பதிலை பார்த்தோம்.
இப்போது முதல் மனிதன் ஆதாமா? ஏவாளா என்ற சர்ச்சைக்கு தீர்வு காண முயல்வோம்.
நாத்தீகத்திற்கு வக்காலத்து வாங்கும் சில எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் ஆத்தீகத்தை எதிர்பார்ப்பதற்கான மிக முக்கிய வாதங்களில் ஒன்றாக முதல் மனிதர் ஆதாம் அல்ல முதல் மனிதர் ஏவால்தான் என்று சொல்கிறார்கள் அப்படி சொல்வதற்குறிய காரணத்தையும் வாதத்தினையும் ஒன்றன் பின் ஒன்றாக ஆராய்வோம்.
நாத்தீகத்தின் வாதம் :
சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணின் காலடித்தடத்தை இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அந்தக் காலடித்தடங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இவள் ஒரு பெண் இவள்தான் உலகின் முதல் மனிதர் என்று கூறுகிறார்கள்.
ஆத்தீகத்தின் பதில் :
அதாவது மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் காலடித்தடம் ஆய்வு செய்யப்படுகிறது அந்த ஆய்வில் இது ஒரு பெண்ணின் காலடித்தடம் என்றும் அவள்தான் உலகின் முதல் மனிதர் என்றும்  விஞ்ஞானிகள் முடிவு செய்கிறார்கள்.
இதுதான் அவர்கள் வைக்கும் முதல் வாதம்.
அதாவது மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் காலடியை ஆய்வு செய்தால் அவர் பெண்ணா அல்லது ஆணா என்ற முடிவை சொன்னால் எந்த அறிவாளியும் அதனை மறுக்க மாட்டான் ஆனால் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார் என்பதுதான் அவர் முதல் மனிதர் என்பதற்கான ஆதாரம் என்று யாராவது சொன்னால் அதை எந்த அறிவாளியாவது ஏற்றுக்கொள்வானா?
குறிப்பிட்ட காலடித்தடத்திற்கு சொந்தக்காரர் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார் என்பதால் அவருக்கு முன்பு யாரும் இல்லை அல்லது பிறக்கவில்லை என்று நிருவுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
அத்துடன் உலகில் பிறந்த எந்த மனிதனானாலும் அவர்களால் அவர்களின் பலத்தை கொண்டு கற்களில் அடையாளங்களை சிற்பங்களை உண்டு பண்ண முடியுமே தவிர நடக்கும் போதே கால் வைக்கும் இடமெல்லாம் அடையாளம் விழுந்து அதை மூன்று லட்சம் ஆண்டுகள் வரை தாக்குப்பிடித்திருக்கும் என்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நாத்தீகம் சொல்வதைப் போல் குறிப்பிட்ட காலடித்தடம் எது என்பது விஞ்ஞானத்தினால் நிரூபிக்கப்படவோ அல்லது காண்பிக்கப்படவோ இல்லை.வாய் வழியாக வரும் ஒரு கதைதான் இதே தவிர ஆய்வு அல்ல.
நாத்தீகத்தின் வாதம் :
முதல் மனிதர் ஆதாமாக இருந்தால் எப்படி குழந்தை பிறக்கும் அவர்தான் ஆனாயிற்றே?
ஆத்தீகத்தின் பதில் :
முதல் மனிதர் ஏவாள் என்று வைத்துக் கொண்டாலும் இந்தக் கேள்வி எழவே செய்யும்.
முதல் மனிதர் ஏவாள் என்றால் அவர் யாருடன் குடும்பவாழ்வில் ஈடுபட்டார்?
ஒரு பெண்ணுக்கு கண்டிப்பாக ஆண் துணை வேண்டும் ஆண் துணையுடன் அவள் குடும்ப உறவில் ஈடுபடாமல் எப்படி குழந்தையைப் பெற்றெடுப்பாள்.
(குளோனிங் மூலம் குழந்தை பெருவது என்பது தற்கால விஞ்ஞானம் அதனை திருமறைக் குர்ஆனும் ஏற்றுக் கொள்கிறது.இதைப் பற்றிய செய்திகள் பின்னர் விளக்கப் படும்.)
நாத்தீகத்தின் வாதம் :
ஆண் வர்க்கத்தின் துணையின்றி தாங்களாகவே இனவிருத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் உலகில் உள்ளது.உதாரணத்திற்கு அஃபிட்ஸ் என்கிற ஈ வகை ஆண் துணை இன்றி தானே வம்ச விருத்தி செய்து கொள்கிறது.
அது போல் ஏவாளும் வம்ச விருத்தி செய்திருப்பாள். 
ஆத்தீகத்தின் பதில் :
ஆண்களின் துணை இல்லாமல் அஃபிட்ஸ் என்கிற ஈ வர்க்கம் இனவிருத்தி செய்து கொள்கிறது.
அது ஆண்களில் துணையைப் பெருவதே இல்லை என்பதுதான் அதற்குறிய பதில் மனிதன் அப்படியல்ல பெண் என்றால் ஆனின் துனையுடன் தான் இனவிருத்தி செய்கிறாள்.
அஃபிட்ஸ்ஸின் வாழ்நாள் பூராகவும் அதன் தன்மை அதுவாகத்தான் இருக்கிறது.
மனிதனுக்கு அப்படி ஏன் ஏற்படவில்லை.
ஏவாளுடன் மாத்திரம் அது ஏன் நின்று விட்டது?
குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றான் என்றால் அது ஏன் தொடரவில்லை என்பதைப் போல் ஏவாள் தானாக இனவிருத்தி செய்து கொண்டால் அது ஏன் தொடரவில்லை?
ஏவாளுடன் மாத்திரம் ஏன் நின்றது?
ஏவாளுடைய எந்தக் குழந்தைக்காவது இந்த நியதி இருப்பதாக நிரூபிக்க முடியுமா?
ஏவாளுக்கே நிரூபிக்க முடியாத போது அவளுடைய பிள்ளைகளுக்கு எப்படி?
குளோனிங் மூலம் குழந்தையை உருவாக்கினால் கூட ஒரு ஆணுடைய விந்தின் உதவி வேண்டும் அதைக் கொண்டு தான் உருவாக்க முடியும் விஞ்ஞானிகளே இப்படித்தான் கூறுகிறார்கள்.பெண்களுக்காக தனியாக குழந்தையை உருவாக்கும் தன்மையை இறைவன் (நாத்தீகத்தின் பார்வையில் இயற்கை)கொடுக்கவில்லை.
நாத்தீகத்தின் வாதம் :
மனிதர்களில் இரண்டு வகையினர் உள்ளார்கள் ஒன்று இப்போது வாழும் நாம் அதாவது க்ரோமேக்ணன்.
இரண்டு நியாண்டதால் அதாவது நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் நாகரீகம் அற்ற கற்களைக் கொண்டு தங்களை தற்காத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள்.
ஏவாளும் நியாண்டதால் வகையைச் சார்ந்தவரே அவர்களுக்கு இப்படி ஆண் துணை இல்லாமல் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு தன்மை இருந்திருக்களாம்.
ஆத்தீகத்தின் பதில் :
மனிதர்களை தரம் பிரிக்கும் இந்த அளவு கோள் எங்கிருந்து பெறப்பட்டது.
நியாண்டதால் க்ரோமேக்ணன் என்ற பெயர்கள் நாம் சூட்டிக் கொண்டவைதாம்.
முதலில் நியாண்டதால் என்று ஒரு இனம் வாழ்ந்ததாக யாராலும் நிரூபிக்க முடியாது முதல் மனிதர் ஏவாள் என்பதை எப்படி நிரூபிக்க முடியாதோ அதுபோல் தான் நியாண்டதால் மனிதர்கள் வாழ்ந்ததாக குறிப்பிடும் கதையையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பதை நிரூபிக்க முடியாதலால் அதனை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்பதற்காக கற்பனையாக உருவாக்கப் பட்டதுதான் நியாண்டதால் கதாபாத்திரமே தவிர விஞ்ஞான ரீதியாகவோ அறிவியலின் படியோ நியாண்டதாலுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
அத்துடன் கற்களை மாத்திரம் வைத்து தங்களை தற்காத்துக் கொண்டார்கள் என்ற வாதத்தை வைத்து அவர்களை நியாண்டதால் என்று பிரிப்பதாக இருந்தாலும் அதுவும் எடுபடாத வாதமாக மாறிவிடும்.
அதாவது கற்களை வைத்து தங்களை தற்காத்துக் கொண்டது ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்கக் கூடியதாக இருந்தாலும் அவர்கள் ஒரு வகையில் நம்மை விட அறிவியலில் முன்னேற்றம் கண்டவர்கள் தான்.
போலி விஞ்ஞானத்தினதும் நாத்தீகத்தினதும் கருத்துப் படி நியாண்டதால் மனிதர்கள் அறிவியலில் முன்னேற்றம் காணாதவர்கள்.
அப்படியெனில் எகிப்திய சமுதாயமும் இந்த நியாண்டதால் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள்தாம்.
அறிவியலுக்கு தொடர்பில்லாத சமுதாயத்தினர் இன்றைய விஞ்ஞானமே ஆச்சரியப்படும் வகையில் அமைந்த பிரமிட்டுக்களை எப்படி உருவாக்கினார்கள்?
நாத்தீகத்தின் வாதம் :
க்ரோமேக்னன் மனிதர்களான நாம் ஹோமோ ஸேபியன் (புத்திசாலித்தனமான மனிதன்)கள் நாமது இனத்தை சேர்ந்தவர்தான் நமது தாய் ஏவாள் நமக்கே இவ்வளவு அறிவு வளர்ச்சி என்றால் ஏவாளுக்கு எவ்வளவு இருந்திருக்கும்?
அந்த ஏவாள் தனக்குத் தானே குழந்தையை பெற்றெடுக்கும் அறிவியலைப் பெற்றிருப்பாள்.
ஆத்தீகத்தின் பதில் :
க்ரோமேக்னன் மனிதர்களான நாம் ஹோமோ ஸேபியன் :- அதாவது புத்திசாலி மனிதர்கள் என்றால் நமது தாய் ஏவாளும் புத்திசாலிதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் இந்த ஏவாளினால் உருவாகிய நியாண்டதால் எப்படி இந்த அறிவை இழந்தார்கள்?
ஏவாளுடைய சிறப்பான அறிவு நம்மையே வந்தடையும் போது நமக்கு முற்பட்ட நியாண்டதால்(நாத்தீகம் வைத்த பெயர்)இனத்திற்கு எவ்வளவு அறிவு வளர்ச்சி இருந்திருக்க வேண்டும்?
ஏவாளுக்கிருந்த அறிவின் மூலம் தனே குழந்தையைப் பெற்றெடுத்திருந்தால் அவருடைய எந்தக் குழந்தைக்கும் அந்த அறிவு இல்லையே நாம் உற்பட ஏவாளுடைய எந்தக் குழந்தையும் நாத்தீகம் சொல்வதைப் போல் தனக்குத் தானே குழந்தையை உண்டாக்கவும் இல்லை.

ஆண்கள் மருதானி இடுவது மார்க்கதில் ஆகுமானதா?

ஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கைகளிலும் கால்களிலும் மருதாணி பூசிய ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் பெண்களுக்கு ஒப்ப நடந்ததால் அவரை நாடுகடத்துமாறு நபியவர்கள் உத்தரவிட்டதாகவும் இந்தச் செய்தி கூறுகின்றது.
இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள அபூஹாஷிம் மற்றும் அபூ யசார் ஆகிய இரண்டு அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையும் அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை. இதன் காரணத்தால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
ஆண்கள் மருதாணி பூசலாம் என்றோ பூசக் கூடாது என்றோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் நேரடியாக்க் கூறப்படவில்லை. ஆனால் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வை பின்வரும் பொதுவான செய்தியிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள் .
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (5885)
ஆண்கள் பெண்களைப் போன்று நடந்து கொள்ளக் கூடாது என்று இந்தச் செய்தி கூறுகின்றது. பெண்கள் மட்டுமே பயன்படுத்துகின்ற பொருட்களை ஆண்கள் பயன்படுத்துவதை இச்செய்தி தடைசெய்கின்றது. பெண்கள் மட்டுமே பயன்படுத்துகின்ற பொருட்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒரு பகுதியில் பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்ற பொருள் மற்றொரு பகுதியில் ஆண் பெண் இருபாலருக்கும் உரிய பொருளாக இருக்கும்.  
எனவே தான் மார்க்கம் இவ்விஷயத்தில் வரையறை செய்யாமல் அந்ததந்தப் பகுதி மக்களின் கலாச்சாரத்தைப் பொறுத்து முடிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. உதாரணமாக தலையில் பூ வைப்பது நமது நாட்டில் பெண்கள் மட்டும் செய்யும் காரியம். ஆண்கள் யாரும் இவ்வாறு செய்வதில்லை. இந்நிலையில் ஒரு ஆண் தலையில் பூ வைத்தால் மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் இது தவறான செயலாகிறது.
இதே போன்று நடைமுறையில் உள்ள மக்கள் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து ஆண்கள் மருதாணி  பூசுவது குறித்தும் நாம் முடிவு செய்ய வேண்டும். மருதாணியைப் பொறுத்தவரை அது பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் அலங்காரப் பொருளாக இருந்து வருகின்றது. இப்பொருளை அதிகம் பயன்படுத்தக்கூடியவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் பெண்களே இதைக் கை கால்களில் பூசி பயன்படுத்தினர்.
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய்’ குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். -சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்- விடைபெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது சுபைஆ’ கர்ப்பமுற்றிருந்தார். சஅத் அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ  பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமான போது,  பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக்’ (ரலி) அவர்கள் சுபைஆ அவர்களிடம் வந்து, “திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய இத்தா’ காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது” என்று கூறினார்கள். சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகி விட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள். (புகாரி (3991)
இந்தச் செய்தியில் சுபைஆ (ரலி) அவர்கள் அலங்காரம் செய்திருந்தார் என்று பொதுவாக்க் கூறப்பட்டுள்ளது. அவர்கள் எந்த அலங்காரம் செய்திருந்தார்கள் என்பதை அஹ்மதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. 26166, 26167 ஆகிய எண்களில் அஹ்மதில் பதிவாகியுள்ள அறிவிப்புகளில் சுபைஆ (ரலி) அவர்கள் கையில் மருதாணி பூசியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. எனவே பெண்களின் அலங்காரப் பொருளாக உள்ள மருதாணியை ஆண்கள் பூசக்கூடாது.
அதே நேரத்தில் பித்த வெடிப்பு போன்ற காரணங்களுக்காக மருந்தாக அதைப் பூசிக் கொள்வதையும் நரை முடியின் நிறத்தை மாற்றிக் கொள்வதற்காக அதைப் பூசிக் கொள்வதையும் இது கட்டுப்படுத்தாது. ஏனெனில் இதில் பெண்களுக்கு ஒப்பாக நடக்கும் தன்மை ஏதும் இல்லை.
Thengs : Onlinepj

தூக்கத்தில் ஏற்படும் கனவுகள். – ஓர் அறிவியல் ஆய்வு.

கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலைவை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி)    நூல்: முஸ்லிம் 4200
மேலுள்ள நபிமொழியிலிருந்து இந்த உலகில் பிறந்து வாழ்ந்து மடிந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வாழப்போகின்ற அனைவருக்கும் கனவு எனும் உணர்வு பொதுவானது. தூக்கத்தின்போது கனவு ஏற்படாத மனிதன் யாருமே இல்லை என்று உறுதியாகக் கூறும் அளவிற்கு கனவு எல்லா மனித வாழ்க்கையிலும் ஒரு பொதுவான அம்சமாக விளங்குகின்றது. 
விஞ்ஞானம் கனவுகள் பற்றி என்ன சொல்கின்றது?
மனோதத்துவயியலின் படி கனவின் வரைவிலக்கனமானது தூக்கத்தின் போது மனித மூளையில் ஏற்படும் ஒரு இரசாயன மாற்றமாகும். பௌதீக மனோதத்துவவியலில் பதிவு செய்யப்படும்; மூளையின் மின் அலைகள் (EEG)இ கண் அசைவுகள் (EEG), தசைகளின் இயக்கம் (EEG) ஆகியவற்றின் ஆதாரத்துடன் தூக்கத்தின் நிலைகள் நான்காகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது.
தூக்கத்தின் நிலைகள்.
தூக்கம் பற்றிய ஆய்வுலகில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. 
1.விழிப்பு நிலை (wakefulness)
2.அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை{non- REM(rapid eye movement)}
3.அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM slee) - இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை.
4.ஆழ்ந்த தூக்க நிலை (deep sleep)
1.விழிப்பு நிலை (wakefulness)
இரண்டாவது நிலையை அடைவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னுள்ள நிலை. இந்த நிலையை விஞ்ஞான அறிவியலில் உலக இயல்பை மீறிய மாய சக்தியுள்ள நிலை என்று வர்ணிக்கின்றனர். அதிகளவான அல்லது குறைந்த தூக்கத்தை தூண்டக்கூடிய பிரதிமையாகவுள்ள ‘hypnogogic imagery’ எனும் தூக்க நிலையாகும்.
2.அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை {non- REM (rapid eye movement)}
ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச் செல்லும் நிலை. இந்த நிலையிலே இலேசான தூக்கத்திலுள்ளவர்களுக்கு கனவுகள் வருவதற்குரிய சாத்தியங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் குறைவான கண் அசைவும் (EOG)இ தசை இயக்கங்கள் குறைவாகவும் (EMG)இ மூளையின் மின் அலைகள் {non- REM(rapid eye movement)}
3.அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM sleep)
இந்நிலையில் மூளையின் மின் அலைகள் 1-2Hz “delta” அலைகளாக மாறும். நான்காவது நிலையான ஆழ்ந்த உறக்க நிலை இதிலிருந்து ஆரம்பமாகும். விழி அசைவுகளற்றதாகவும், குறைந்த தசை இயக்கங்களும் காணப்படும். தூங்குபவர் திடீரென எழுந்தால் அவர் கனவு கண்டுகொண்டிருப்பாரேயானால் கனவு இந்நிலையில் ரத்து செய்யப்படும்.
4.ஆழ்ந்த தூக்க நிலை (deep sleep)
ஆழ்ந்த உறக்கம் நிலவும் நிலை. இந்நிலைகளைத் தாண்டி கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்குப் பின் இந்நிலைகள் பின்னோக்கியதாக நடைபெறும். அதாவது கடைசியிலிருந்து முதல் நிலை வரை. இந்த வகையில் முதல் நிலையில் தசை இயக்கம் குறைவாகவும், விழி அசைவற்றதாகவும் இருக்கும். deep sleep என்ற விஞ்ஞானியின் கருத்துப்படி இந்த நிலை கனவு தெரிபடுவதற்கான உச்ச கட்ட நேரமாகும். இந்த நிலை 5-15 நிமிடங்கள் நீடிப்பதோடு அதி வேக விழி அசைவு தூக்க நிலை ஒரு மணித்தியால அளவிற்கு கூடுவதற்கு ஏதுவாக அமையும். அதி வேக விழி அசைவு தூக்க நிலையின் கால எல்லை கூடுதலாகவும், குறைவாகவும் அமையலாம். காலை நேரங்களிலே இந்த நிலையில் கூடுதலாக கனவுகள் தென்படும்.   
இஸ்லாம் கனவுகள் பற்றி என்ன சொல்கின்றது?
வஹீயின் மூலமோதிரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்ஞானமிக்கவன்.  (அல்குர்ஆன் 42:51)
இறைவனுடைய தூதர்களான நபிமார்களுக்கு நான்கு வழிகளில் இறைச் செய்திகள் கிடைத்தன. 
1.நேரடியாக இறைவன் தனது தூதர்களிடம் பேசுதல்.
2.வானவரை அனுப்பி அவர் வழியாக தனது செய்திகளைக் கூறி அனுப்புதல்.
3.தான் சொல்ல நினைக்கும் செய்தியைத் தனது தூதரின் உள்ளத்தில் உதிக்கச் செய்தல்.
4.கூற வேண்டிய செய்திகளைக் கனவின் வழியாகக் காட்டுதல்.
இந்த நான்கு வழிகளில் முதலிரண்டு வழிகள் இறைத்தூதர்களுக்கு மட்டும் உரியது. மூன்றாவது வகையான உள்ளுணர்வை ஏற்படுத்துதல் அவ்வப்போது இறைத் தூதர்கள் அல்லாத மனிதர்களிடமும் ஏற்படலாம்.
மூஸா நபியின் தாயாருக்கு இத்தகைய வஹீயை அனுப்பியதாக 20:38 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! (அல்குர்ஆன் 20:38)
தான் அறிவித்த செய்தியைப் பற்றி இவ்வசனங்களில் குறிப்பிடும் போது வஹீ என்ற சொல்லையே இறைவன் பயன்படுத்தியுள்ளான். இத்தகைய முன்னறிவுப்புக்களில் மார்க்கம் தொடர்பான முன்னறிவிப்புக்கள் நபிமார்களுக்கு மட்டும் உரியது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடைசி நபியாக இருந்த காரணத்தினால், நபியவர்களின் மறைவிற்குப் பின் மார்க்கம் தொடர்பான முன்னறிவிப்புக்களின் வருகையும் நிறுத்தப்பட்டு விட்டது. மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்ற வசனமே இதற்குப் போதிய ஆதாரமாகும்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை நான் முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக நான் பொருந்திக் கொண்டேன்’  (அல்குர்ஆன் 5:3) 
எனவே, கனவின் மூலமோ, உள்ளுணர்வை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லாஹ் தான் நாடியதை (மார்க்கம் தவிர்ந்த) மனிதர்களுக்கு அறிவிப்பான்.
நபித்துவமும்தூதுத்துவமும் முற்றுப் பெற்று விட்டன. எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. எந்த ரஸ_லும் (தூதரும்) இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இது மக்களுக்குக் கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனினும் நற்செய்தி கூறுபவை உள்ளன’ என்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்னஎன்று நபித்தோழர்கள் கேட்டபோது முஸ்லிம் காணும் கனவாகும். இது நபித்துவத்தின் ஒரு பகுதியாகும்’ என்று விடையளித்தனர். 
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)    நூல்: அஹ்மத் 13322
எனவே, இந்த நபி மொழியில் இருந்து கனவின் மூலமாகவும் மனிதர்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவான் என்பது புலனாகின்றது. அத்தோடு மனிதனுக்குத் தென்படும் கெட்ட கனவு பற்றியும் நபியவர்கள் தெளிவுபடுத்தவும் தவறவில்லை.
நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும். கேட்ட கனவு ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். தனக்கு அச்சத்தை ஏற்படுத்தும் கெட்ட கனவை ஒருவர் கண்டால் தனது இடது புறத்தில் துப்பி விட்டு அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். இவ்வாறு செய்தால் அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)   நூல்: புகாரி 3292
கனவுகள் பற்றிய விஞ்ஞானஇஸ்லாமிய கருத்துக்களை ஒப்பிடுதல்.
இஸ்லாத்தைப் பொருத்த வரை தூக்கமும் ஒரு வித மரணமேயாகும். அதாவது அல்லாஹ் நாம் தூங்கும்போது நம் உயிரைக் கைப்பற்றுகிறான்.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும்மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  (அல்குர்ஆன் 39:42)
அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:60)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூங்கும் போதும், தூங்க முன்னரும், தூங்கி எழுந்ததும் ஓதுவதற்குக் காட்டித் தந்த துஆக்கள் பின்வருமாறு:
தூங்கும் போது,
இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன் (தூங்குகிறேன்), உன் பெயரால் உயிர் பெறுகிறேன் (விழிக்கிறேன்). (புஹாரி 7395, முஸ்லிம் 4886)
தூங்கும் முன்,
இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறiவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.  (முஸ்லிம் 4887)
படுக்கையை உதறி விட்டு,
என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன் (படுக்கிறேன்). உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன் (எழுகிறேன்). என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! (புஹாரி 5845)
தூங்கி எழுந்ததும்,
எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.  (புஹாரி 6312, 6314, 6324, 6325, 7395)
மேலுள்ள ஹதீஸ்களின் படி நாம் தூங்கும் போது இறைவன் நம் உயிரைக் கைப்பற்றி தூக்கத்திலிருந்து எழும்போது நம் உயிரை மீள அளிக்கிறான். விஞ்ஞானமும் இதை ஊர்ஜிதம் செய்கின்றது. அதாவது தூக்கத்தை வர்ணிக்கும் விஞ்ஞான அறிவியல் தூக்கத்தின் போது மனித மூளையில் இரசாயன மாற்றம் ஏற்படுவதாகவும், தூக்கமானது உலக இயல்பை மீறிய நிலை எனவும் கூறுகின்றது. 
எனவேஇந்த இடத்திலும் விஞ்ஞானம் இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது.