அனைத்துப் புகழும் அகில உலகையும் படைத்தது பரி பக்குவப்படுத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக -

Tuesday, 30 July 2013

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா?


மூன்று நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் தடை விதித்து உள்ளார்கள்.

 மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள். 

1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை,

 2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும் வரை. 

3. சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதிலிருந்து நன்கு மறையும் வரை. 

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) நூல் : முஸ்லிம் (1371) 

இந்த நேரங்களில் எந்த தொழுகையும் தொழக்கூடாது. எனினும் இந்த நேரங்களில் துஆ செய்வதற்கு தடை  ஏதும் இல்லை. தொழுவதற்கு தடை செய்யப்பட்ட இந்த நேரங்கள் சொற்ப நேரத்தில் முடிந்துவிடும். தொழ விரும்புபவர் இந்த நேரங்களை கடந்த பிறகு தொழுது கொள்ள வேண்டும்.

குர்ஆன் வீடியோ



1
 

தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்?

சமீபகாலமாக பள்ளிவாசல்களில் புது நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் ஆண்கள் முதல் வரிசையில் இருந்து தொழுகையை ஆரம்பிக்கின்றனர். இது சரியான வழக்கமான நடைமுறைதான். ஆனால் பள்ளிவாசலுக்குப் பெண்கள் வந்து தொழும் போது ஆண்கள் வரிசை முடிந்தவுடன் அங்கிருந்து தங்கள் வரிசயைத் துவக்காமல் பள்ளிவாசலின் கடைசியில் நிற்கிறார்கள். கடைசி வரிசை தான் சிறந்த்து என்று ஹதீஸ் உள்ளதால் கடைசி வரிசையை முதலில் பூர்த்தி செய்து விட்டு அதற்கு முந்திய வரிசை என்ற அடிப்படையில் வரிசையை நிரப்ப வேண்டும் என்பது தான் அந்தப் புதிய நடைமுறை. இந்த நடைமுறைக்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸைக் 
காட்டுகிறார்கள். 

664حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا وَشَرُّهَا آخِرُهَا وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا وَشَرُّهَا أَوَّلُهَا حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ عَنْ سُهَيْلٍ بِهَذَا الْإِسْنَادِ  رواه مسلم 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1013 பெண்கள் பள்ளியின் கடைசி இடத்தில் முதல் வரிசையை அமைக்க வேண்டும். அடுத்து வரும் பெண்கள் அவர்களுக்கு முன்பாக இரண்டாவது வரிசையை அமைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அதாவது ஆண்கள் முன்னால் இருந்து வரிசையை துவக்குவார்கள். இதைப் போன்று பெண்கள் தங்களுடைய வரிசைகளை அமைக்காமல் இதற்கு நேர்மாறாக பின்னால் இருந்து வரிசையைத் துவக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு இவர்கள் மேற்கண்ட நபிமொழியை ஆதாரமாகக் கூறுகின்றனர். இந்த நபிமொழியின் சரியான பொருளை அறியாத காரணத்தால் இப்படிப்பட்ட தவறான சட்டத்தைக் கூறுகின்றனர்.

 எனவே இந்த நபிமொழி தொடர்பான சரியான விளக்கத்தை அறிந்து கொள்வோம். இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்களின் செயலுக்கு ஆதாரமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் கவனமாகச் சிந்தித்தால் இவர்களின் செயல் இந்த ஹ்தீஸுக்கு எதிரானது என்பதை நாம் அறியலாம். முதல் காரணம் பெண்கள் வரிசையில் கடைசி வரிசை கெட்டது என்று இதில் கூறப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் கடைசி என்று இதில் கூறப்படவில்லை. வரிசைகளில் கடைசி என்றுதான் கூறப்பட்டுள்ளது. 

கடைசி வரிசை என்று ஒன்றக் கூறுவதாக இருந்தால் அதற்கு முன் சில வரிசைகள் – குறைந்தபட்சம் ஒரு வரிசையாவது இருக்க வேண்டும். அப்படில் இல்லாவிட்டால் அதை கடைசி என்று கூற முடியாது. இவர்கள் கடைசியாக நின்ற வரிசை அளவுக்கு மட்டும் பெண்கள் வந்தால் இவர்கள் கடைசி என்று நினத்த்து முதல் வரிசையாகி விடும். இப்போது கடைசி வரிசை சிறந்தது என்ற இவர்களின் ஆசை நிறைவேறாமல் போய்விடும். இரண்டாம் காரணம் எந்த ஒரு தொடரும் ஒன்றிலிருந்து இரண்டு மூன்று என்று தான் தொடங்கும். கடைசியில் இருந்து தொடங்காது. கடைசி இடத்தில் இருந்து துவக்கினால் இவர்கள் முதலில் வந்து அந்த இடத்தை நிரப்பியதால் இவர்கள் தான் முதல் வரிசையாக ஆகிவிடுவார்கள். எது முதலில் அமைந்த வரிசையோ அதுதான் முதல் வரிசையாகும். முதலில் அமைந்த்து கடைசி வரிசையாக ஆக முடியாது. எனவே இவர்கள் பள்ளியின் கடைசியில் போய் நின்றாலும் இவர்களின் வரிசை தான் முதலில் அமைவதால் இவர்கள் முதல் வரிசையில் நின்றவர்களாகத் தான் ஆவார்கள். இவர்கள் ஆசைப்பட்ட கடைசி வரிசையில் நின்றவர்களாக முடியாது. மூன்றாவது காரணம் எது சிறந்த்து என்பதை அறிவதற்கு முன்னர் எது முதல் வரிசை என்பதை நாம் அறியக் கடமைப்பட்டுள்ளோம். 

இந்தச் செய்தியில் பெண்களின் வரிசைகளில் எது முதலாவது? எது இறுதியானது? என்பதை நபியவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள். இதைக் கவனித்தால் பெண்கள் இறுதியிலிருந்து வரிசையைத் துவக்க வேண்டும் என்ற கருத்துக்கு இந்தச் செய்தி நேர்எதிராக இருப்பதை அறியலாம். ஆண்களின் இறுதி வரிசையை அடுத்துள்ள பெண்களின் வரிசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் வரிசை என்று இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். 

எனவே பெண்களுடைய வரிசையின் துவக்கம் ஆண்களை அடுத்துத் தான் இருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம். மேலும் பெண்களின் இறுதி வரிசையை கடைசி வரிசை என்றே நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். எதை நபியவர்கள் இறுதி என்று சொன்னார்களோ அங்கிருந்து வரிசையை துவங்கினால் அதை இறுதி வரிசை என்று சொல்ல முடியாது. மாறாக அது முதல் வரிசையாகிவிடும். முதலாவது என்று நபியவர்கள் கூறியது இறுதி வரிசையாகவும் ஆகிவிடும். இது நபியவர்களின் சொல்லுக்கு மாற்றமான முடிவாகும். எனவே பெண்கள் இறுதியிலிருந்து வரிசையைத் துவங்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பது தவறான வாதமாகும். 

இறுதியில் இருந்து எதையும் துவக்க முடியாது. சரியான விளக்கம் என்ன? பிறகு ஏன் நபி (ஸல்) அவர்கள் பெண்களின் வரிசைகளில் முதவாது தீயது என்றும் கடைசி வரிசை நல்லது என்றும் கூற வேண்டும் என்ற கேள்விக்கு வருவோம். 

முதல் வரிசை சிறந்தது என்றும் கடைசி வரிசை கெட்டது என்றும் சொல்லப்பட்டுள்ளதால் தொழுகை துவங்கும் போது பல வரிசையில் நிற்கும் அளவுக்கு ஆட்கள் இருந்தால் தான் இப்படி சொல்ல முடியும். இப்படி அதிகமான அளவுக்கு ஆண்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? 

ஆண்கள பொறுத்தவரை முதலாவது வரிசையில் நிற்பது அவர்களுக்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. எனவே ஆண்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு முதல் வரிசைக்குச் செல்ல ஆசைப்பட வேண்டும். முதல் வரிசையில் இடம் கிடைக்காவிட்டால் அடுத்த வரிசையில் நின்று கொள்ளலாம். இதை உணர்த்தும் விதமாகவே ஆண்களின் வரிசைகளில் முதலாவது சிறந்தது என்றும் இறுதி தீயது என்றும் கூறப்பட்டுள்ளது.

 இப்படி அதிகமான அளவுக்கு பெண்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆண்களுடன் தொழும் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு முதல் வரிசையில் நிற்க போட்டி போடக் கூடாது. முதலாவது வரிசையில் இடம் கிடைத்தால் நின்று தொழுது கொள்ளலாம். கிடைக்காவிட்டால் முதலாவது வரிசையில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை. மாறாக பின்னால் நிற்பது தான் சிறந்தது என்று எண்ணி இதை நல்லதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பெண்களின் வரிசைகளில் முதலாவது தீயது என்றால் முதலாவது வரிசையில் நிற்கக்கூடாது என்பது இதன் பொருள் அல்ல. முதலாவது வரிசை நிற்பது தவறில்லை என்றாலும் இதில் போட்டிபோட்டு விரும்பி தேர்வு செய்யும் அளவுக்கு இது சிறந்தது அல்ல என்பது இதன் கருத்தாகும். 

எனவே பெண்கள் இறுதியிலிருந்து வரிசையைத் துவக்க வேண்டும் என்று கூறுவதற்கு இந்த நபிமொழியில் எந்த ஆதாரமும் இல்லை. இறுதியில் இருந்து துவக்க முடியாது என்பதால் இதற்கு அர்த்தமும் இல்லை.

onlinepj

ரமலான் கடைசி பத்தில் செய்ய வேண்டிய அமல்கள்

அல் ஹம்து­ல்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா அஷ்ரபில் அன்பியாயி அல் முர்ஸலீன வ அலா ஆ­ஹி வ ஸஹ்பிஹி அஜ்மயீன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே இந்த தலைப்பில் கடைசி பத்து இரவில் செய்ய வேண்டிய அமல்களை சிறிது பார்ப்போம். ரமலானில் கடைசி பத்து இரவுகளுக்கு என்று நபிகள் நாயகம் ஸல் அவர்களிடத்திலும் அவர்களது தோழர்களிடத்திலும் அதிகம் முக்கியத்துவம் இருந்ததை ஹதீஸ்களில் வழியாக அறியமுடிகிறது.

அவர்கள் அதிகமாக அல்லாஹ்விற்கு வணக்க வழிபாடுகள் செய்வது தொழுவுதல் திக்ரு செய்தல் குர்ஆன் ஓதுதல் ஆகியவை அவர்கள் ரமலானில் கடைசி பத்தில் செய்த வணக்கங்களாகும்.
கடைசி பத்தின் இரவு முழுவதுமாக வணக்கங்களை செய்தல்.
ஆயிஷா ர­ அவர்கள் கூறுகையில் குர்ஆனின் பெரும் பகுதியை ஒரு இரவு முழுவதும் ஓதுவதையும் தொழுகையை ஒரு இரவு முழுவதும் தொழுததையும் மாதம் முழுவதும் நோன்பு நோற்றதையும் ரமலானைத்தவிர மற்ற மாதங்களில் நபி ஸல் அவர்கள் செய்ததாக நான் அறியவில்லை. நூல் : நஸயீ 1623.
தன்னுடைய குடுத்பத்தாரை தொழுகைக்காக எழுப்பி விடுதல்.
ஆயிஷா (ரரி) அவர்கள் கூறியதாவது: (ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்! நூல் : புகாரி 2024.
இஃதிகாப் இருக்குதல்.
ஆயிஷா (ரரி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்தனர். நூல் : புகாரி 2026.
குர்ஆன் ஓதுதல்.
இப்னு அப்பாஸ் (ரரி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். நூல் : புகாரி 6

Sunday, 28 July 2013

குர்ஆனில் அதிகமாக மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கும் சில வார்த்தைகளின் பொருள்கள்

குர்ஆனில் அதிகமாக மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கும் சில வார்த்தைகளின் 

பொருள்கள்,  சிறிது கவனம் செலுத்தி அவற்றின் பொருள்களை மனதில் பதியவைத்துக் 

கொள்ளுங்கள்.

لِ - "க்கு"  بِ -"கொண்டு"  عَلى - "மீது,   مِنْ - "இருந்து" , عَنْ - "விட்டும்" ,

 فِي - " ல் ", ك - " போல ", اِلى - " பக்கம்பால் " ,  وَ - "இன்னும்-மேலும்"

என்று பொருள்கள் கொண்ட இவைகள் இடைச்சொற்களாகும்இவைகளுக்கு இந்தப் பொருள்தான் அதிகமாகவரும்ஆனாலும் இடத்தைக்கவனித்துப் பொருத்தமான பொருள்கொள்ளலாம்சில சமயங்களில் பொருளே இல்லாமலும் வரும்.

------------------------------------***********************************-------------------------------

هُوِ அவன்-அது ,

 أُولَـٰئِكَ, هُمْ அவர்கள்,

  اِنّ – اَنَّ اِنَّمَا - اَنَّمَا நிச்சயமாக,

 إِنِّي நிச்சயமாக நான்,

إِنَّا நிச்சயமாக நாங்கள்,

  مَا,لَا இல்லை,

  الَّذِي அப்படிப்பட்ட ஒன்று , الَّذِينَ அப்படிப்பட்ட சிலர்-சில.

إِذْ என்ற இந்த வார்த்தைக்கு நேரம் என்ற பொருளுக்காக பயன்படுத்தப்படும் 

வார்த்தையாகும்,  இதை எதனுடன் இணைக்கிறோமோ அந்த பொருளுடன் போது என்று 

இணைத்துக்கொள்ள வேண்டும்உதாரணமாக قَالَ என்றால் கூறினான் என்றும்

إِذْ قَالَ கூறிய போது,

 قُلْنَا என்றால் நாம் கூறினோம் என்றும் إِذْ قُلْنَا நாம் கூறியபோது,

 نَجَّيْنَا என்றால் நாம் பாதுகாத்தோம் என்றும்إِذْ نَجَّيْنَا – பாதுகாத்தபோது,

 فَرَقْنَا என்றால் நாம் பிரித்தோம் என்றும்إِذْ فَرَقْنَا பிரித்தபோது என்று பொருள் 

கொள்ளவேண்டும்.

--------------------------------------*********************************-------------------------------

مَا க்கு பல பொருள்கள் உள்ளனஆயத்தில் ஒன்று

وَمَا كَفَرَ , وَمَا يُعَلِّمَانِ,وَمَا هُم بِضَارِّينَ,مَا لَهُ, ­  இதில் مَا வுக்கு இல்லை என்று பொருள்,

இரண்டாவது  -  வினைச்சொற்களை பெயர் சொல்லாக ஆக்குவதற்குரியதாகும்,

உதாரணமாக ஓதும் என்ற பொருளுள்ள تَتْلُو என்பதில் مَا வைச்சேர்த்து

 مَا تَتْلُو என்று கூறினால் ஓதியவை என்றும்,

இறக்கப்பட்டது என்ற பொருளுள்ள أُنزِلَ என்பதில் مَا வைச்சேர்த்து

مَا أُنزِلَ என்று கூறினால் இறக்கப்பட்டவை என்றும்,

பிரிப்பார்கள் என்ற பொருளுள்ள يُفَرِّقُونَ என்பதில்مَا  வைச்சேர்த்து

مَا يُفَرِّقُونَஎன்று கூறினால் பிரிவை உண்டாக்குவதை என்றும்,  தீங்கிழைப்பான் என்ற 

பொருளுள்ள يَضُرُّ என்பதில்مَا  வைச்சேர்த்து

مَا يَضُرُّ என்று கூறினால் தீங்கிழைப்பதை என்றும் ,

வாங்கிக் கொண்டார்கள் என்ற பொருளுள்ள شَرَوْا என்பதில்مَا  வைச்சேர்த்துمَا شَرَوْا என்று 

கூறினால் வாங்கிக்கொண்டது என்று பொருள் கொள்ளவேண்டும்.

--------------------*********************-------------------------------
يَا அழைப்பதற்கு பயன்படுத்தும் வார்த்தையாகும், يَا வுடன் أَيُّهَا வைச் சேர்க்கும் போது 

வார்த்தையில் ஒரு அழுத்தத்தைக்கொடுக்கும்குர்ஆனில்يَا أَيُّهَا الَّذِينَ என்றே 

பயன்படுத்தப்பட்டுள்ளதுஈமான்கொண்டவர்களேஎன்பதற்குيَا أَيُّهَا الْمُؤْمِنُوْنَ  என்றும் 

கூறலாம்குர்ஆனில்يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا என்றே பயன்படுத்தப்பட்டுள்ளதுஇப்படி எங்கு 

வந்தாலும் இதே பொருள்தான்.

Thursday, 25 July 2013

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா


 ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா?


இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் ஏற்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது. 

இரவு பத்து மணிக்கு தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது. நண்பகலில் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதையும் ஏற்க முடியாது. ஏனெனில் நண்பகலில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது. மாலை நேரத்தில் கூட கிழக்கில் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனெனில் கண்ணால் பார்க்கும் வகையில் தலைப்பிறை தோன்றுவது மேற்குப் பகுதியில்தான். பிறை 25ல் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அது தலைப் பிறை பார்ப்பதற்குரிய நாள் அல்ல. 

இது போன்று தான், சாதாரணக் கண்களுக்குப் பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் உறுதியாகக் கூறும் ஒரு நாளில் பிறை பார்த்ததாக நம்பத் தகுந்த சாட்சியங்கள் கூறினாலும் அதை ஏற்க வேண்டியதில்லை. வேண்டுமென்று பொய் கூறாத சாட்சிகளாக இருந்தாலும் கண்கள் தவறு செய்வதுண்டு. சிறிய மேகத் துண்டு கூட பிறையாகத் தோற்றமளிக்க வாய்ப்பு உள்ளது. நாம் வானத்தில் ஓரிடத்தை உற்று நோக்கும் போது அந்த இடத்தில் ஒரு நட்சத்திரம் இருப்பது போல் தெரியும் உடனே மறைந்து விடும். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் நட்சத்திரம் எதுவும் இருக்காது. 

இந்தத் தவறு பிறை விஷயத்திலும் நடக்க வாய்ப்புள்ளது. ஒருவரை விஷம் வைத்துக் கொடுத்துக் கொன்றதாக நம்பகமானவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையில் விஷம் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சாட்சிகள் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள். இது போல் பிறை பார்க்கச் சாத்தியமற்ற நாளில் பிறை பார்த்ததாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. காரணம், பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் கூறுவது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருப்பதால் அதை மறுக்க முடியாது. இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம். பிறை தோன்றி விட்டது என்று அறிவியல் உலகம் கூறினாலும் புறக் கண்ணால் பார்க்காமல் நோன்பைத் தீர்மானிக்கக் கூடாது என்று சொல்லும் நாம், பிறை தோன்றாது என்று அறிவியல் கூறுவதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

 என்பதே அந்தச் சந்தேகம். இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வானியல் கணிப்பை ஏற்று, முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது. 

பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம். இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும். அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாகக் கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். 

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்குக் கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர். வானியல் கணிப்பின் படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக்கலாமே தவிர பார்க்காமல் தலைப் பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது. அதே சமயம், குறிப்பிட்ட நாளில் பிறை தென்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவியல் உலகம் கூறும் போது அதை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன. அல்குர்ஆன் 55:5 

இந்த வசனத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட இடத்தில் சந்திரன் தோன்றாது என்ற கணக்கிற்கு மாற்றமாக நம்பத் தகுந்த சாட்சிகள் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

onlinepj

நோன்பை தாமதமாக திறத்தல்


நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத் திறக்கலாமா?

சூரியன் உதயம், சூரியன் மறைவு போன்ற நேரங்கள் தொடர்பாக‌ விஞ்ஞானக் கணிப்பில் எந்த முரண்பாடும் இல்லை. 

அக்டோபர் 2ம் தேதி காந்தி மண்டபத்தில் இந்த இடத்தில் சூரிய ஒளி வரும் என்று கணித்துள்ளார்கள் என்றால் அந்த இடத்தில் குறிப்பிட்ட நாளில் சூரிய ஒளி வருகின்றது. அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஊருக்கு ஊர் வேறுபடுமே தவிர ஒரே ஊருக்கு இரண்டு விதமான நேரத்தை யாரும் கணிப்பதில்லை.

 حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن أبي حازم عن سهل بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر 

நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புகாரி 1957

 சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே பேணுதலுக்காக சில நிமிடங்கள் தாமதமாகத் திறப்பது நபிவழிக்கு மாற்றமானதாகும்.

onlinepj

உபரியான நோன்புக்கு சஹர் உணவு அவசியமா


சிலர் சஹர் உணவு உட்கொள்ள வேண்டியதில்லை என்பதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றார். 

  1951 و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَقَالَ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ فَقُلْنَا لَا قَالَ فَإِنِّي إِذَنْ صَائِمٌ ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أُهْدِيَ لَنَا حَيْسٌ فَقَالَ أَرِينِيهِ فَلَقَدْ أَصْبَحْتُ صَائِمًا فَأَكَلَ رواه مسلم    

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "இல்லை' என்றோம். "அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்'' என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! நமக்கு "ஹைஸ்' எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது'' என்றோம். அதற்கு அவர்கள், "எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்'' என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.      அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)   நூல் : முஸ்லிம் (2125)  

    உணவு உண்ணாமலும் எதையும் பருகாமலும் இருந்தால் விடிந்த பிறகும் கூட அன்றைய நாளில் உபரியான நோன்பு நோற்பதாக முடிவு செய்ய அனுமதியுள்ளது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபரியான நோன்பு நோற்பதாக பகலில் தான் முடிவு செய்கிறார்கள். சூரியன் உதித்த பிறகு சஹர் செய்ய முடியாது என்பதால் நபியவர்கள் சஹர் செய்யாமல் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பது இதில் இருந்து தெளிவாகிறது.      சஹர் செய்ய வாய்ப்பு இல்லாதவர் சஹர் செய்யாமல் நோன்பு நோற்றால் அதில் தவறில்லை என்றே இச்செய்தி கூறுகின்றது. சஹர் செய்ய வாய்ப்பு உள்ளவர் சஹர் செய்து நோன்பு நோற்பதே நபிவழி. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.      

  1923حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً رواه البخاري     

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :      நீங்கள் சஹர் செய்யுங்கள்;  நிச்சயமாக சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) இருக்கிறது.    அறிவிப்பவர் : அனல் பின் மாலிக் (ரலி)      நூல் : புகாரி (1923)      

  1836حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ مُوسَى بْنِ عُلَيٍّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ رواه مسلم      

 அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள் :      நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் உபவாசத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பது தான்.      இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.     நூல் : முஸ்லிம் (2001)

.onlinepj

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா


சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல், பருகாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பு என்பதாகும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) "எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலிலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறுகிறான்) அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :புகாரி 1894 

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பயன்படுத்துகின்ற மருந்து நிரப்பப்பட்ட குப்பிகள் அவர்களின் மூச்சிறைப்பை சமநிலை செய்வதற்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு உணவாகவோ, பானமாகவோ அமைவதில்லை. நோன்பு நோற்ற நிலையில் நாம் மூச்சு விட்டு இழுக்கும்போது காற்றில் கலந்துள்ள பல பொருட்களையும் சேர்த்து உள்ளிழுக்கிறோம். மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது அதில் உள்ள நச்சுப்பொருள்களயும் சேர்த்தே நாம் உள்ளிழுக்கிறோம்.

 இதனால் நமது நோன்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இது போன்று தான் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு வாயு வடிவிலான மருந்தை உள்ளே செலுத்துவதற்காக மருந்துக் குப்பிகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே அவர்கள் அதனைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது உண்ணுவதிலோ பருகுவதிலோ சேராது. ஆனால் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

நோன்பு நோற்பதினால் உயிருக்கு ஆபத்து, அல்லது உடல்நிலை மோசமாகும் நிலை ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விட்டு நோய் தீர்ந்த பின் வசதியான நாட்களில் விடுபட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம். தீராத நோய் உடையவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

மனித உடலுறுப்புக்களின் படங்கள்