அனைத்துப் புகழும் அகில உலகையும் படைத்தது பரி பக்குவப்படுத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக -

Monday, 24 June 2013

ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா?


ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என அனைவராலும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன. முன்னோர்கள் சிலரால் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதைத் தவிர, குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள் கூட ஆராயவில்லை.

 இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் அமல்கள் ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் காட்டித்தந்த அமல்கள், வணக்க வழிபாடுகள் (இபாதத்) ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள் மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன. அமல்களை நிர்ணயிக்க வேண்டியது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தானே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித்தோன்றல்களோ அல்ல! துரதிஷ்டவசமாக இன்று இந்நிலை முஸ்லிம்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. மார்க்கத்தில் எல்லை மீறிச் செல்கின்ற போது தனி மனித வழிபாடும், வழிகேடுகளும், மூட நம்பிக்கைகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான். அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். 

அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. அல்குர்ஆன் 42:2 எனவே எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அதற்கு நபிவழியில் ஆதாரம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் அதைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதை விட்டும் ஒதுங்கி விட வேண்டும். இதுவே நபிவழியைக் கடைப்பிடிக்கும் அழகான வழிமுறையாகும். இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

 அந்த இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும், மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக்களை) கேட்டும், மூன்று யாஸீன் சூரா ஓதியும் விசேஷமான தொழுகைகளை நடத்தியும் இன்னும் இது போன்ற பல்வேறு செயல்களைச் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் விசேஷமான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். 

"பராஅத் இரவு' "ஷபே பராஅத்' என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்புமிக்க இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வருகின்றது. ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு பராஅத் இரவு என்று கூறப்படும். இப்பெயர் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. பராஅத் எனும் அரபிச் சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது. நன்றி: சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை, சென்னை மாவட்டம். "லைலத்துல் கத்ரு' "லைலத்துல் ஜும்ஆ' போன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. 

ஆனால் "லைலத்துல் பராஅத்' என்னும் சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ, இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை. பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா? ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதைச் செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும். (இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட  100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். 

இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும். (இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது)  பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் கடைவீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராயிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது. (நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273) மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக! ஏன் இந்தச் சிறப்பு? அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? ஷஅபான் பிறை 15 அன்று தான் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிவமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள். இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். 

சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி. மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனைத் தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும். அதில் குறிப்பாக நீடுரைச் சார்ந்த மவ்லவி. எ. முஹம்மது இஸ்மாயில் பாஜில் பாகவி என்பவர் ''அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா'' என்ற (மே-ஜூன் 2013) மாத இதழில் ''ஷஅபான் மாதத்தின் சாந்த நாள்'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஷஅபான் மாதம் 15-ம் நாள் நோன்பு வைக்க வேண்டும் என்பதற்கு இப்னுமாஜாவில் வரக்கூடிய ஒரு ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார். ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, "பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378 இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல

. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள். அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், அவர் அடுத்ததாக ஒரு வாதத்தை வைக்கிறார். அது என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில மாதங்களாக பைத்துல் முகத்திஸை நோக்கித் தொழுது வந்தார்கள். பிறகு அவர்கள் கஅபாவை நோக்கித் தொழுமாறு இறைவன் கட்டளையிட்டான். இந்தச் சம்பவம் ஷஅபான் 15-ல் தான் நடந்தது என்று ஒரு பொய்யைக் கட்டவிழ்த்து விடுகிறார். ஆனால் இதற்கான ஆதாரத்தை அவர் காட்டவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 

இதோ அவர் வைக்கும் ஆதாரம்: புனித ஷஃபான்  15ஆம் நாள் ஜெருசலத்திலுள்ள பைத்துல் மக்தஸிலிருந்து புனிதக் கஅபாவை நோக்கி கிப்லா மாற்றித் தொழும்படி உத்தரவு இறங்கியதாக அறிஞர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. அதா பின் பஸார் (ரஹ்) அவர்கள் இதை நினைவில் வைத்துத் தான் இவ்வாறு கூறுகிறார்கள். லைலத்துல் கத்ரு இரவுக்குப் பின் சிறந்த இரவு பராஅத் இரவு ஆகும். "கிப்லா மாற்று சம்பவம் ஷஃபான் 15 பராஅத் பெருநாளில் நிகழ்ந்ததாக பல வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு'' என்று இவரே கணித்துக் கூறியிருக்கிறார். இவர் இதனை தன்னுடைய சொந்தக் கூற்றாகச் சொல்லியிருந்தால் கூட இதனை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆனால் அப்படியில்லாமல் கஅபாவை நோக்கித் தொழ ஆரம்பித்தது ஷஅபான் 15-ல் தான் நடந்தது. எனவே அந்த நாளுக்கு சிறப்பு இருக்கிறது. என்று இமாம்கள் கூறியதாக வேறு இவர் இதனை இட்டுக்கட்டிச் சொல்கிறார். இமாம்கள் எந்த நூலில் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்ற ஆதாரத்தையும் தெளிவுபடுத்தவில்லை. அப்படியே அந்தச் சம்பவம் ஷஅபான் 15-ல் தான் நடந்தது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அந்த நாள் சிறப்புக்குரிய நாள் என்றும். அந்த நாளை மையமாக வைத்து நோன்பு நோற்க வேண்டும், 100 தடவை யாஸீன் ஓத வேண்டும், இரவு முழுவதும் நின்று தொழ வேண்டும் என்று நபியவர்கள் நமக்கு வழிகாட்டித் தந்துள்ளார்களா? அதற்கான ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸாவது இருக்கிறதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், இவர் இதற்கு இன்னொரு ஹதீஸையும் ஆதாரமாக வைக்கிறார். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபிகளார் என்னோடு தங்கும் நாளில் நடுநிசியில் நான் நன்கு தூங்கிக் கொண்டிருந்தேன். இடையில் விழிப்பு ஏற்பட்டது. என் அருமைக் கணவரை படுக்கையில் தேடினேன். அவர்கள் இல்லை. எழுந்துப் பார்த்தால் அவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். மிகச் சுருக்கமாக நின்று ருகூஉ செய்த அவர்கள் நெடுநேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள். இரண்டாம் ரக்அத்தையும் அவ்வாறே நிறைவேற்றினார்கள். பின்பு ஸஜ்தாவிலேயே பஜ்ரு வரை அசையாமல் கிடந்தார்கள். எங்கே அவர்கள் புனித ஆத்மா கைப்பற்றப்பட்டு விட்டதோ? என்ற கவலையுடன் அவர்களது பாதங்களை நான் தொட்டேன். அவர்களின் பொற்பாதங்கள் அசைந்தன. அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். அப்பொழுது அவர்கள் ஸஜ்தாவில் இந்த துஆவை ஓதினார்கள். ஸஜத லக அஸ்வதீ வஆமன பிக ஃபுவாதீ வ ஹாதிஹி யதீ யல்லதீ ஜனய்த்து பிஹா அலா நஃப்ஸீ ஃபக்ஃபிர்லீ அத்தன்பல் அலீம். ஃப இன்னஹூ லா யக்பிருத் தனூப இல்லர் ரப்புல் அளீம். அவூது பிரிளாக மின் சுக்திக, வபி முஆபாதிக மின் உகூபதிக. வபிக மின்க லா உஹ்ஸீ தனாஅன் அலைக. அன்த கமா அத்னய்த அலா நஃப்ஸிக இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பொழுது, "ஆயிஷாவே! இது என்ன இரவு என உனக்கு தெரியுமா?'' எனக் கேட்டுவிட்டுக் கூறினார்கள். இது ஷஃபான் பதினைந்தாம் இரவு. இவ்விரவில் அல்லாஹ் ஒரு சில பாவிகளை தவிர மற்ற முஃமின்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான். அந்த பாவிகள் மதுக்குடியை நிரந்தரமாக்கிக் கொண்டிருப்பவர்கள். விபச்சாரம், வட்டியில் மூழ்கியிருப்பவர்கள். தம் பெற்றோரை வேதனைப்படுத்துபவர்கள். உருவப்படம் வரைபவர்கள். பிறரைக் குழப்பத்தில் ஆழ்த்துபவர்கள். ஷஅபானின் பதினைந்தாம் இரவு மிகவும் புண்ணியம் வாய்ந்த இரவு என்பதற்கு இந்நிகழ்ச்சி போதுமான சான்றாகும் என்று அந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் செய்தி ஷுஅபுல் ஈமான் மற்றும் பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை. 

இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கு நிகரானதாகும். இந்தச் செய்தியில் இடம்பெறும் சுலைமான் இப்னு அபீ கரீமா என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். சுலைமான் பின் அபீ கரீமா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் விமர்சித்துள்ளார்கள் (நூல்: இப்னு அபீ ஹாதிம்) சுலைமான் பின் அபீ கரீமா என்பாரின் பெரும்பாலான ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை ஆகும். இத்தகைய நிராகரிக்கத்தக்க செய்திகளை இவரிடமிருந்து அம்ர் பின் ஹாஸிம் அல்பைரோத்தி என்பார் அறிவிக்கின்றார் என இமாம் இப்னு அதீ அவர்கள் தம்முடைய காமில் என்ற நூலில் குறிப்பிடுகிறார். மேற்கண்ட செய்தியை சுலைமான் பின் அபீ கரீமா என்பாரிடமிருந்து அம்ர் பின் ஹாஸிம் அல்பைரோத்தி என்பாரே அறிவிக்கின்றார். எனவே இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட வகைக்கு மிக நெருக்கமான மிகப் பலவீனமான செய்தி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும் இதே செய்தியை அன்நள்ர் பின் கசீர் என்பார் வழியாக ஃபளாயிலுல் அவ்காத் என்ற நூலில் பைஹகீ அவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் சில நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அந்நள்ர் பின் கஸீர் என்ற அறிவிப்பாளரும் மிகப் பலவீனமானவராவார். இமாம் புகாரி அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும் இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கத் தகுந்தவை என்றும் தம்முடைய தாரீகுல் கபீர் மற்றும் தாரீகுஸ் ஸகீர் என்ற நூற்களில் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் முன்திரி அவர்கள் தம்முடைய தஹ்தீபு சுனன் என்ற நூலில்  அந்நள்ர் பின் கஸீர் என்பார் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள். இமாம் அபூஹாதிம் அவர்களும் அந்நள்ர் என்ற அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள். மேலும் இவர் உறுதியான அறிவிப்பாளர்கள் வழியாக செய்திகளை இட்டுக்கட்டி அறிவிக்கக் கூடியவர்.

 இவரை ஆதாரமாக எடுத்துக்கொள்வது கூடாது என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். எனவே மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லாமல் உறுதியாகிறது. மேலும் இதே செய்தி உறுதியான அறிவிப்பாளர்கள் வழியாக முஸ்லிம் போன்ற பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஷஅபான் மாதத்தைப் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை. பொதுவான ஒரு இரவில் நடந்த சம்பவமாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. நரகமே கூலி பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல. எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697 நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். நூல்: முஸ்லிம் 3243 எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை. 

அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும். "செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப் பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1689 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில் நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் "இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்பேன். அதற்கு இறைவன், "உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்கு) திரும்பிச் சென்று விட்டார்கள்'' என்று சொல்வான். புகாரி  6575, 6585 இதன்படி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கையை மீறி அமல் செய்தால் நாளை மறுமையில் அது சாந்த நாளாகாது; சாப நாளாக ஆகிவிடும். மார்க்கத்தில் இல்லாத பராஅத் இரவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான லைலத்துல் கத்ரு அடங்கிய ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் செய்ய வேண்டிய அமல்களைச் செய்வதில்லை. 27ஆம் இரவில் மட்டும் சில பித்அத்தான காரியங்களைச் செய்து விட்டு முடித்துக் கொள்கின்றனர். 

மறுமையை நம்பியவர்களே! உங்களைப் பாவியாக்கும் பராஅத் இரவைத் தூக்கி எறிந்து விட்டு இறைவனாலும் இறைத்தூதராலும் காட்டித் தரப்பட்ட  தூய இஸ்லாத்தைப் பின்பற்ற எல்லாம் வல்ல இறைவன் நமக்குத் துணை புரிவானாக!

Wednesday, 5 June 2013

குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று ?


467. யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண்குழந்தையை அல்லாஹ் கொடுத்த செய்தியைச் சொல்கிறான். திருக்குர்ஆன் இறைவேதம் என்று நிரூபிக்க இந்த ஒரே ஒருவசனமே போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது.

ஸகரிய்யா நபிக்கு ஆண் குழந்தையைக் கொடுக்கும் போதே அதற்கு யஹ்யா என்ற பெயரைச் சூட்டி அல்லாஹ் வழங்குகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் ஒருவருக்கும் சூட்டியதில்லை எனவும் கூறுகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் சூட்டியதில்லை என்று அன்றைக்கு எந்த மனிதனாலும் பேச முடியாது. ஒரு மனிதன் இப்படிச் சொல்வதாக இருந்தால் அவனுக்கு உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அன்று வரை உலகில் பிறந்த, பிறந்து மரணித்த ஒவ்வொரு நபரின் பெயரும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். 

பல்லாயிரம் கோடி மக்களின் பெயர்களுக்குள் யஹ்யா என்ற பெயரில் ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் தான் இப்படிக் கூற முடியும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கூட இப்படி ஒரு மனிதனால் சொல்ல முடியாது. இந்த விஷயம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஜகரியா நபியிடம் இறைவன் சொன்னதாகக் கூறப்படுகிறது. யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இல்லை என்று சொன்ன பிறகு உலகில் ஏதாவது ஒரு காலத்தில் பழங்கால ஏடுகளில் யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் இறைவசனம் பொய்யாகி விடும். ஸக்கரியா நபியிடம் அல்லாஹ் இப்படிச் சொன்னதாக முஹம்மது நபி சுயமாகக் கற்பனை செய்து சொல்லியிருக்க முடியாது. அப்படிச் சுயமாகச் சொல்ல நினைத்தால் எங்காவது யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் என்னாவது என்ற தயக்கமே இது போல் பேசுவதை விட்டும் அவரைத் தடுத்து இருக்கும். இப்படி ஒரு பெயரில் இதற்கு முன் ஒருவர் கூட இல்லை என்று இறைவனால் தான் சொல்லி இருக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் ஸகரிய்யா நபியிடம் இறைவன் இப்படிச் சொன்னதாக யூத கிறித்தவ வேதங்களில் சொல்லப்படாமல் இருந்தும் திருக்குர்ஆன் இப்படிச் சொல்கிறது என்றால் இது இறைவனின் வார்த்தை என்பதில் சந்தேகம் இல்லை. பொதுவாக குழந்தைக்குப் பெயர் சூட்டுவது இறைவன் செய்ய வேண்டிய அளவுக்கு முக்கியமானது அல்ல. அது மனிதனுக்குச் சிரமமானதும் அல்ல. அல்லாஹ் குழந்தையைக் கொடுத்து விட்டால் ஸகரிய்யா நபி பெயர் சூட்டிக் கொள்ள மாட்டார்களா? அனைத்தையும் அறிந்த இறைவனாக நான் இருக்கிறேன் என்று நிரூபிக்கவே அல்லாஹ் இப்படிச் செய்திருக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும் எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். 

இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டவரை இதற்கு முன் நீங்கள் காண முடியாது என்று அறைகூவல் விடுவது போல் இப்படி இறைவன் பேசியுள்ளான். முழு உலகிலும் எந்தக் காலத்திலும் இது இருந்ததில்லை; அது இருந்ததில்லை என்று சொல்வது மிகவும் கடினமான விஷயமாகும். ஏனெனில் நமக்குத் தெரியாமல் எங்காவது அது இருந்து தொலைத்து விட்டால் நம்முடைய மானம் கப்பலேறி விடும். கடவுளால் மட்டும் தான் இதுபோல் அடித்துச் சொல்லி இருக்க முடியும். 

இவ்வசனத்தைப் பொய்யாக்க யஹ்யா என்ற பெயரில் யாராவது இருந்தால் அதை வைத்தே இஸ்லாத்தைப் பொய்யாக்கி விடலாம் என்று கங்கணம் கட்டி கிறித்தவ சபைகள் தேடிப்பார்த்தும் அவர்களால் யஹ்யாவைக் கண்டுபிடிக்கவில்லை.

விவாகரத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்?


மூன்று தடவை தலாக் சொல்லித்தான் விவாகரத்து செய்ய வேண்உம் அல்லாஹ் கூறும் போது பெண்கள் மட்டும் குலா அடிப்படையில் ஒரே தடவையில் பிரிவது சரியா


இச்செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரிலும் கருத்திலும் குறை ஏதுமில்லை. 

5273حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ثَابِتُ بْنُ قَيْسٍ مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلَا دِينٍ وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ قَالَتْ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْبَلْ الْحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً قَالَ أَبُو عَبْد اللَّهِ لَا يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ رواه البخاري 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்கüன் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அüத்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அவர், "ஆம் (தந்து விடுகிறேன்)'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), "தோட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லிவிடுங்கள்!'' என்று கூறினார்கள். நூல் : புகாரி (5273)

 ஆண் ஒரு பெண்ணை விவாகரத்துச் செய்வதற்கு மூன்று தடவை தலாக் கூற வேண்டும். ஆனால் ஒரு பெண் விவாகரத்துக் கோரும் போது ஒரு தடவை மட்டும் தலாக் கூறினால் போதுமானது என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. இது பாரபட்சமாக உள்ளது என்று நீங்கள் கேள்வி கேட்டுள்ளீர்கள்.

 ஆண் மூன்று முறை தலாக் கூறினால் தான் மனைவியை விவாகரத்துச் செய்ய முடியும் என்பது தவறான கருத்தாகும். இந்த தவறான விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட கேள்வியை நீங்கள் எழுப்பியுள்ளீர்கள். ஒரு ஆண் மனைவியை விட்டுப் பிரிவதற்கு மூன்று முறை தலாக் கூற வேண்டிய அவசியமில்லை. ஒரு தடவை தலாக் கூறினாலே மனைவியின் இத்தா காலம் முடிந்துவிட்டால் இருவரும் பிரிந்துவிடுவார்கள். இவ்வாறு ஒரு தலாக் கூறியும் மனைவியை ஆண் விவாகரத்துச் செய்யலாம். பின்வரும் வசனங்களைக் கவனித்தால் கணவன் ஒரு முறை தலாக் கூறியும் பிரிந்துகொள்ளலாம் என்பதை அறியலாம்.

 فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَى عَدْلٍ مِنْكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ذَلِكُمْ يُوعَظُ بِهِ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا(2)65 

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! அல்குர்ஆன் (65 : 2)

 وَإِذَا طَلَّقْتُمْ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ وَلَا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنزَلَ عَلَيْكُمْ مِنْ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(231)2

 பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அல்குர்ஆன் (2 : 231)

 وَإِذَا طَلَّقْتُمْ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَنْ يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ(232)2 

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மை யானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்குர்ஆன் (2 : 232)
 وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ(228)2 

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். அல்குர்ஆன் (2 : 228)   

மூன்று தலாக் என்பது கணவன் மனைவியை திரும்ப அழைத்துக் கொள்வதற்கு கடைசி கட்டமாக கூறப்பட்டுள்ளது. ஒரு ஆண் மூன்று தடவை தலாக் கூறி விட்டால் அவன் அவளை திரும்ப மனைவியாக ஆக்கிக்கொள்ள முடியாது. பின்வரும் வசனம் இதைத் தெளிவுபடுத்துகின்றது.

   الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ وَلَا يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ (229) فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا إِنْ ظَنَّا أَنْ يُقِيمَا حُدُودَ اللَّهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ  (230)2

 (இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாக ரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். 

(இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாக ரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான். அல்குர்ஆன் (2 : 230) அவசரப்பட்டு தலாக் கூறுவதும் பிறகு மனைவியை திரும்ப அழைத்துக்கொள்வதும் தொடர்ந்து நீடிக்கக் கூடாது.

 தலாக் கூறுபவர்கள் மிகவும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இறைவன் மூன்று தலாக்கை இறுதி கட்டமாக ஆக்கியுள்ளனர். எனவே பிரிகின்ற விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாரபட்சம் எதுவும் இல்லை.

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளலாமா ?


மார்க்கத்தில் இதற்கு எந்த்த் தடையும் இல்லை. ஆனால் உடல் ரீதியாக இதில் பிரச்சனை இருப்பவர்கள் அதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம். சில பெண்களின் கர்ப்ப்ப்பை பலவீனம் காரணமாக சின்ன அசைவுகளும் கருவைக் கலைத்து விடக்கூடும் இவ்வாறு குறைந்த சதவிகிதம் பெண்கள் இருக்கிறார்கள். கரு உறுதிப்பட சில மாதங்கள் ஆகலாம்.

 அதன் பின்னர் உடலுறவு கொண்டால் கருவுக்கு பாதிப்பு ஏற்படாது. இது போன்ற நிலையில் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இருந்தால் உடலுறவை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

அது போல் சில உடலுறவு முறைகளால் கருவுக்கு பாதிப்பு ஏற்படலாம். அது குறித்து சரியாக அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். கருவுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் நட்ந்து கொள்ள வேண்டும். 

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்பது அல்லாஹ்வின் கட்டளை. பார்க்க திருக்குர்ஆன்,, 2:195

விந்து பட்ட ஆடையுடன் தொழலாமா?


ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது.

ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த அசுத்தம் காய்ந்து விட்டால் அந்தப் பகுதியைச் சுரண்டி விட்டு பின்னர் அந்தப் பகுதியை மட்டும் கழுவினால் போதுமானது. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன. நான் நபி (ஸல்) அவர்களுடைய ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வார்கள். ஆடையில் ஈரம் தெளிவாகத் தெரியும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 229 

ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் (அது காய்ந்து விட்டிருந்தால்) அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்துவிடட்டும். 

பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) நூல் : புகாரீ (307) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வோம். என்னிடமிருந்து (இரத்தம்)ஏதேனும் அவர்களின் மீது பட்டுவிடுமானால் அவ்விடத்தைக் கழுவிக் கொள்வார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்ய மாட்டார்கள். அதே ஆடையுடனே தொழவும் செய்வார்கள். மீண்டும் வந்து படுத்துக் கொள்வார்கள். என்னிடமிருந்து ஏதேனும் அவர்கள் மீது பட்டுவிடுமானால் அவ்வாறே செய்துவிட்டு அந்த ஆடையுடனே தொழுது கொள்வார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : தாரமீ (995)

தாலி அல்லது கருகமணி ?


திருமணத்தின் போது பெண்களுக்குத் தாலி அல்லது கருகமணி போடுகின்றார்கள். இது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா? திருமணத்தில் பெண்கள் கழுத்தில் என்ன அணிய வேண்டும். திருமணத்தின் போது பெண்கள் என்ன ஓத வேண்டும்? திருமணத்தின் போது தாலி அணிவதும், கருகமணி கட்டுவதும் முழுக்க முழுக்க பிற மதக் கலாச்சாரமாகும்.

 حدثنا عثمان بن أبي شيبة حدثنا أبو النضر حدثنا عبد الرحمن بن ثابت حدثنا حسان بن عطية عن أبي منيب الجرشي عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512) இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு மதத்தின் கலாச்சாரத்தை, சடங்குகளைப் பின்பற்றுபவர் அந்த மதத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார். 

எனவே எக்காரணம் கொண்டும் இந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது. திருமணத்தின் போதும், திருமணத்திற்குப் பிறகும் பெண் கழுத்தில் ஏதாவது அணிந்து தான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. இதுவும் பிற மதத்தினரின் நம்பிக்கை தான். மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் தடுக்கப்பட்ட செயல் தான். இஸ்லாத்தைப் பொறுத்த வரை திருமணம் என்பது ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே ஆகும். இதற்கென எந்தவித அடையாளத்தையும் மார்க்கம் ஏற்படுத்தவில்லை. 

திருமணத்தில் பெண்கள் ஓதுவதெற்கென நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட எந்த துஆவையும் கற்றுத் தரவில்லை. திருமண ஒப்பந்தம் முடிந்தவுடன் மணமக்களை வாழ்த்துவதற்காக ஒரு பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். ஒருவன் திருமணம் முடித்தால் அவனுக்கு

 حدثنا قتيبة حدثنا عبد العزيز بن محمد عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم كان إذا رفأ الإنسان إذا تزوج قال بارك الله لك وبارك عليك وجمع بينكما في الخير قال وفي الباب عن عقيل بن أبي طالب قال أبو عيسى حديث أبي هريرة حديث حسن صحيح

 பார(க்)கல்லாஹு ல(க்)க வபார(க்)க அலை(க்)க வ ஜமஅ பைன(க்)குமா ஃபில் கைரி (பொருள்: அல்லாஹ் உனக்கு அகத்திலும் புறத்திலும் அபிவிருத்தி செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!) என்று நபியவர்கள் வாழ்த்து சொல்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி 1011

 حدثنا سليمان بن حرب حدثنا حماد هو ابن زيد عن ثابت عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى على عبد الرحمن بن عوف أثر صفرة قال ما هذا قال إني تزوجت امرأة على وزن نواة من ذهب قال بارك الله لك أولم ولو بشاة 

அல்லது பாரகல்லாஹு லக்க என்று மட்டும் கூறலாம். அறிவிப்பவர் :அனஸ் (ரலி) நூல் : புகாரி 5155

தேனீக்களின் வழி அறியும் திறன்


தேனீக்கள் மூலம் கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற செய்தி தமிழில் எல்லா ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு வெளிவந்தது.

அச்சு அசலாக ஒரு வார்த்தை கூட மாறாமல் அனைத்து ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு தான் இச்செய்தி வெளியானது. ஏதோ ஒரு ஊடகத்தில் வந்ததை அப்படியே காப்பி அடித்து எல்லோரும் பயன்படுத்தியுள்ளனர். ஜாக்ரப், மே 23- வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அய்ரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை காடுகளும், பெரிய ஏரிகளும் உடையது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாட்டில், 1990இல் பால்கன் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. சுமார் 750 சதுர கி.மீ. பரப்பளவுக்கு கண்ணி வெடிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொத்தம் 90,000 வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தாலும், பலனளிக்கவில்லை. கண்ணிவெடியில் சிக்கி இதுவரை 2500 பேர் உயிரிழந்துள்ளனர்.

 இந்நிலையில், இந்நாட்டில் உள்ள ஜாக்ரப் பல்கலைக்கழக வேளாண்மை துறை பேராசிரியர் நிகோலா கேசிக், தேனீக்களை பற்றி ஆய்வு செய்தார். அவற்றை தொடர்ந்து கண்காணித்ததில் அவை டிஎன்டி (டிரை நைட்ரோ டோலுவின்) என்ற வெடிபொருள் வாசனை மூலம் இரைதேடுவதைக் கண்டறிந்தார். வெடிகுண்டுகளின் வெடிப் பொருளை அழிவு சக்தியை அளக்க ஒரு கிராம் டிஎன்டி அடிப்படை அலகாக குறிப்பிடப்படுகிறது. இத்தகைய டிஎன் டியை நுகரும் திறனுடைய தேனீக்களை, வெடிகுண்டு கண்டுபிடிக்க பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. உடனடியாக, தனது மாணவர்களுடன் இணைந்து தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். 

இந்த ஆராய்ச்சிக்கு இனிப்புடன் டிஎன் டியை கலந்து ஆங்காங்கு வைத்துவிட்டு, தேனீக்களின் நடவடிக்கையை உற்று கவனித்தனர். அப்போது, டிஎன்டி கலந்து வைத்த இனிப்பின் மையப்பகுதியை மட்டும் தேனீக்கள் மிகச்சரியாக நுகர்ந்தன. இதுகுறித்து பேராசிரியர் நிகோலா கேசிக் கூறுகையில், இந்த ஆராய்ச்சி, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது விஞ்ஞான பூர்வமாக வெற்றி பெற்றால், கண்ணி வெடி இருப்பதாக கருதப்படும் பகுதிகளில் தேனீக் களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து அகற்றி விடலாம். நாய், எலி மூலம் கண்ணிவெடியை கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேனீக்களை பொறுத்தவரை அந்த பிரச்சினையே இல்லை. தேனீக்கள் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது என்றார். தினகரன், விடுதலை, யஹூ உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் இதே வாசகங்கள் ஒரு புள்ளிமாறாமல் வெளியிடப்பட்டுள்ளன். 

இதைப் படிப்பவர்களுக்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சி என்ன என்பது விளங்காது. மேலும் தேனீக்கள் வெடிமருந்து வாசனையைக் கொண்டுதான் இரை தேடுவதாக தவறான தகவலும் தரப்பட்டுள்ளது. இது உண்மையும் பொய்யும் கலந்த கலவையாக உள்ளது. உண்மையில் தேனீக்கள் வெடிமருந்தின் வாசனையைக் கொண்டு இரை தேடுவதில்லை. நாய்களுக்கும் எலிகளுக்கும் பயிற்சி அளிப்பது போல் பயிற்சி அளிக்கப்பட்டால் அந்த தேனீக்கள் மட்டும் தான் வெடிமருந்துகளைக் கண்டுபிடிக்கும். எல்லா தேனீக்களும் அதைக் கண்டுபிடிக்காது. இந்த உண்மைக்கு மாற்றமாக இச்செய்தியைத் திரித்து எழுதியுள்ளனர். 

இது குறித்து விரைவில் விரிவுபடுத்தி வெளிவரவுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கம் 12 ஆம் பதிப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம். 16:68,69 வசனங்களுக்கான விளக்கம் 68, 69. "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!''474 என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.259 அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது.

 சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.26 474 தேனீக்களின் வழி அறியும் திறன் இவ்வசனத்தில் (16:68) தேனீக்களை நோக்கி உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தேனீக்கள் பாதைகளை அறிவதில் தனித்து விளங்குகின்றன என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது: தேனைத் தேடி, தேனீக்கள் அதிகப் பயணம் மேற்கொள்கின்றன. 

ஆனால், அவை அதிகமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகின்றன. இதற்காக, கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கைப் பூக்களைக் கொண்டு, தேனீக்களின் பயண வழியைக் கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக் குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்குச் செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தோம். அந்த வழிகள், விற்பனைப் பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கிக் கொடுத்த வழிகளை விட, அதிக வழிகளாகும். இதன் மூலம், கம்ப்யூட்டரின் அறிவை, மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். வழிகளை எளிதாகக் கண்டு கொள்ளும் திறன் தேனீக்களுக்கு உள்ளது என்ற இந்த உண்மையை திருக்குர்ஆன் சொல்லி இருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது உறுதியாகிறது. எளிதாக வழிகளைக் கண்டுபிடிப்பது என்பது குறுக்கு வழிகளை மட்டும் குறிக்காது. சரியான வழியையும் கண்டுபிடித்தால் தான் எளிதாக இருக்கும். ஒரு மலரில் அல்லது கனியில் தனக்கு உரிய உணவு உள்ளதா என்பதை மோப்ப சக்தி மூலம் சரியாகக் கண்டுபிடித்தால் தான் வழிகள் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பூவாகச் சென்று ஏமாந்தால் வழிகள் எளிதாக இருக்காது. அலைச்சல் தான் மிச்சமாகும். தேனீக்களின் மோப்ப சக்தி மிகத் துல்லியமாக அமைந்துள்ளதயும் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டுக்கும் செர்பியாவுக்கும் நடந்த போரின் போது ஏராளமான கன்னிவெடிகளை செர்பியா புதைத்து வைத்தது. போர் முடிந்த பின்னும் கன்னிவெடி புதைக்கப்பட்ட இடத்தில் கால் வைப்பவர்கள் செத்துமடிந்து வருகின்றனர். 

எனவே கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்க  தேனீக்களின் மோப்ப சக்தியைப் பயன்படுத்த முடியுமா என்று ஜாக்ரப் பல்கலைக் கழக வேளாண்மைத் துறை பேராசிரியர் நிகோலா கேசிக் ஆராய்ச்சி மேற்கொண்டார். தேனீக்களின் உணவு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தேனீக்கள் அதைச் சரியாகக் கண்டு பிடிக்கும் திறன் வாய்ந்தவை என்பதை முதலில் இவர் கண்டுபிடித்தார். வெடிமருந்துகளில் உள்ள டி.என்.டி எனும் வாசனையை இனிப்புடன் கலந்து தேன் கூடுகளுக்கு அருகில் வைக்கப்பட்டது. இனிப்பைத் தேடிவரும் தேனீக்கள் டி.என்.டி வாசனையைப் பழகிக் கொண்டன.

 இப்படியே பழக்கப்பட்ட தேனீக்கள் டி.என்.டி வாசனை எங்கு இருந்தாலும் அது தன்னுடய உணவின் வாசனை என்று நினைக்கும் அளவுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு தேனீக்கள் பழக்கப்பட்ட பின்னர் டி.என்.டி கலந்த இனிப்பையும் டி.என்.டி கலக்காத இனிப்பையும் கூடுகளுக்கு அருகில் வைக்கும் போது டி.என்.டி கலந்த இனிப்பை மட்டும் அது சரியாகக் கண்டு பிடித்து அதில் அமர்ந்தது. இதன் பின்னர் ஒரு இடத்தில் வைக்கப்படும் இனிப்பின் நடுப்பகுதியில் டி.என்.டி கலந்தும் ஓரங்களில் டி.என்.டி கலக்காமலும் வைக்கப்பட்ட்து. அப்போது டி.என்.டி கலந்த மையப்பகுதியில் போய் தேனீக்கள் அமர்ந்தன. இயல்பாக வெடிமருந்தின் வாசனையை தேனீக்கள் தேடிச் செல்லாது. அது தான் தன்னுடைய உணவு என்று பயிற்சியளிக்கப்படும் போது அந்த வாசனையைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விடும். இப்படி பழக்கப்பட்ட தேனீக்களுக்கு அருகில் மண்ணுக்குள் வெடி பொருளைப் புதைத்து வைத்தால் அந்த இடத்தின் மேலே அமர்ந்து மொய்க்க ஆரம்பித்தன. 

இதன் மூலம் அந்த இடத்தில் கன்னி வெடி உள்ளதைக் கண்டுபிடித்து பக்குவமாக அகற்றலாம் என்பது தான் ஆராய்ச்சியின் முடிவாகும். இது குறித்து பேராசிரியர் நிகோலா கேசிக் கூறுகையில், ‘‘இந்த ஆராய்ச்சி, கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது விஞ்ஞானபூர்வமாக வெற்றிபெற்றால், கண்ணிவெடி இருப்பதாகக் கருதப்படும் பகுதிகளில் தேனீக்களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து அகற்றி விடலாம். நாய், எலி மூலம் கண்ணிவெடியைக் கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேனீக்களைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சனையே இல்லை. 

தேனீக்கள் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது’ என்றார். இன்று பல்வேறு ஆய்வுகள் மூலம் இதைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் தேனீக்களிடம் இந்தத் தன்மை உள்ளது என்ற விஷயம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். எனவே குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

காதல் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன? விரும்பிய வேற்று மதப் பெண்ணை இஸ்லத்திற்கு மாற்றி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யலாமா?


கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.

காதலிக்கலாமா என்பது முதல் விஷயம். 

காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திரும்ணமே செய்ய வேண்டும். இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.   

  காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! திருக்குர்ஆன் 2:235 கணவனை இழந்த பெண்கள் மற்ற பெண்களை விட அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அலங்காரம் செய்யக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. கனவனை இழந்து இத்தாவில் இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களிடம் ஆண்கள் வாக்களிக்கக் கூடாது; 

ஆனாலும் சாடைமாடையாக் பேசலாம் என்று அல்லாஹ் கூறுகிறான். இத்தாவில் இல்லாத மற்ற பெண்களிடம் ஆண்கள் பேசலாம் என்பதும் தந்து விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதும், திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கலாம் என்பது இந்த வசனத்தில் அடங்கியுள்ளது. 

இது தான் அனுமதிக்கப்பட்ட காதல் என்பது. இதைக் கடந்து திரும்ணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.    ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 3006,    

திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரின் முன்னிலையில் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்பதும் நபி மொழி புஹாரி 5233 இந்த நபிமொழி காதலுக்கு உரிய சரியான் எல்லைக் கோடாக அமைந்துள்ளது. தொலைபேசியில் இருவரும் தனியாகப் பேசுவதும் இதில் அடங்கும். ஏனெனில் நேரில் த்னியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணாம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான். இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனைமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வ்தற்கு அனுமதி இல்லை. இதனால் பாரதூரமான் விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். திரும்ணத்துக்கு முன்பே எல்லை மீறிவிட்டால் ஆண்களுக்கு இயல்பாகவே ஈடுபாடு குறைந்து விடும். இதனால் திரும்ணம் நின்று போய்விடும். அப்போது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் உடலால் நெருங்காமல் தனியாக் இருந்து பின்னர் திருமணம் தடை பட்டாலும் அதுவும் பெண்களைப் பாதிக்கும். 

ஏனெனில் எல்லாம் நடந்திருக்கும் என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள். அல்லது மனதார விரும்பிய பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிய வரும் போது அவன் அப்பெண்ணை மறுக்கலாம். ஆனால் தனிமையில் இருவரும் இருந்ததைப் பயன்படுத்தி அப்பெண் மிரட்டலாம். இதனால் அவளை வலுக்கட்டாயமாக திரும்ணம் செய்யும் நிலை ஏற்படும். ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் தவிர எந்தச் சந்திப்பும் நடக்கவில்லை என்றால இது போன்ற ஆபத்துகள் ஆண்களுக்கு ஏற்படாது. பாலியல் பலாதகாரம் என்று கூறப்படும் பெரும்பாலானவை இந்த வகையைச் சேர்ந்தது தான். விரும்பி ஒருவனுடன் ஊர் சுற்றி விட்டு அவன் மணமுடிக்க மறுத்தால் இந்தப் புகாரை ஒரு ஆயுதமாக்ப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.

 எனவே வரம்பு மீறிய காதல் என்பது மறுமையில் மட்டுமின்றி இவுலகிலும் கேடாகவே முடியும். பிற மதத்துப் பெண்ணை விரும்பலாமா என்பது உங்கள் கேள்வியில் உள்ள 

இரண்டாவது விஷ்யம்.

 கணவனை இழந்திருந்த அனஸ் ரலி அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் அவர்களை அபூதல்ஹா விரும்பினார். ஆனால் அவர் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. ஆனால் உம்மு ஸுலைம் அவர்கள் இஸ்லாத்தை நீர் ஏற்றுக் கொண்டால் அதையே மஹராகக் கருதி உம்மைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உம்மு ஸுலைம் ரலி கூறினார்கள். அபூதல்ஹா (ரலி) அதை ஏற்று திரும்ணம் செய்து கொண்டார்கள். 

 أخبرنا محمد بن النضر بن مساور قال أنبأنا جعفر بن سليمان عن ثابت عن أنس قال خطب أبو طلحة أم سليم فقالت والله ما مثلك يا أبا طلحة يرد ولكنك رجل كافر وأنا امرأة مسلمة ولا يحل لي أن أتزوجك فإن تسلم فذاك مهري وما أسألك غيره فأسلم فكان ذلك مهرها قال ثابت فما سمعت بامرأة قط كانت أكرم مهرا من أم سليم الإسلام فدخل بها فولدت له 

    அபூதல்ஹா அவர்கள் தன்னை மணந்து கொள்ளுமாறு உம்மு ஸுலைம் அவர்களைக் கேட்டார். அதற்கு உம்மு ஸுலம் ரலி அவர்கள் உம்மைப் போன்ற ஒருவரை மணந்து கொள்ள மறுக்க முடியாது. ஆனால் நீர் காஃபிராக இருக்கிறீர். நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். எனவே உம்மை மணந்து கொள்வது எனக்கு ஹலால் இல்லை. நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே எனது மஹராகும். வேறு ஒன்றும் உம்மிடம் நான் கேட்க மாட்டேன் என்று கூறினார். உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அதுவே அவரது மஹராக ஆனது நஸயீ 4389 இது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உம்மு ஸுலைம் அவர்கள் வீட்டில் ஒருவர் என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக் உம்மு ஸுலைம் மீது இரக்கம் காட்டினார்கள். அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் சென்று வருவார்கள். அவர்கள் காலத்தில் இது நடந்துள்ளதால் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு இது தெரியாமல் நடந்திருக்க முடியாது. 2844அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:  

  நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற் கும் (அதிகமாகச்) செல்வதில்லை.27அவர்களிடம் அது குறித்துக் கேட்கப் பட்ட போது, நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவருடைய சகோதரர் (ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்கள்) என்னோடு (என் பிரசாரப் படை யினரோடு) இருந்த போது (பிஃரு மஊனா என்னுமிடத்தில்) கொல்லப் பட்டார் என்று சொன்னார்கள். புஹாரி 2844 எனவே இதற்கு நபிகள் நாயகம் ஸல் அவ்ர்களின் அங்கீகாரம் உள்ளது என அறியலாம். முஸ்லிமல்லாத ஒருவரை விரும்பினால –இஸ்லாத்தை எற்றுக் கொள்ள அவர்கள் முன்வந்தால் –அவர்களுக்கு திரும்ணம் செய்து வைக்க தக்க காரணம் இல்லாமல் மறுக்கலாகாது. பெற்றோரைப் பகைத்துக் கொண்டு திரும்ணம் செய்யலாமா? என்பது உங்கள் கேள்வியில் உள்ள 

மூன்றாவது விஷயம். 

பெற்றோர்களுக்கு முடிந்த வரை புரிய வையுங்கள். நீங்கள் விரும்பக் கூடியவர் மார்க்க அடிப்படையில் தகுதி இல்லாதவர் என்று அவர்கள் மறுத்தால் அதை மீறுவது குற்றமாகி விடும். அவ்வாறு இல்லாமல் இன வெறி குல வெறி போன்ற காரணத்துக்காக தகுதியுள்ள துணையை அவர்கள் மறுத்தால் அவர்களை மீறுவது குற்றமாகாது.     இறைவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் மனிதனுக்கு கட்டுப்படுதல் இல்லை என்பது நபி மொழி. 7144நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். (இறைவனுக்கு) மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

எவை எல்லாம் வரதச்சணையாகக் கருதப்படும்?


வரதட்சணைன் என்று நேரடியாகச் சொல்லித் தந்தால தான் வரதட்சணை என்று பலரும் நினைக்கின்றனர். சீர்வரிசைகளைக் கேட்காவிட்டாலும் அதைக் கொடுக்காவிட்டால் நம் மகளைச் சரியாக நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே கொடுக்கப்படுகின்றன.

 திருமணம் நடப்பதற்கு முன் அல்லது திருமணத்தின் போது கேட்காமல் கொடுத்தாலும் அதுவும் கேட்டது போல் தான்.  

பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!

 6979அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்த போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்எ ன்று கூறினார்கள். பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். 

அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது' என்று சொல்கிறார். அவர் தம் தகப்பன் வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்து சேருமா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்து கொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். 

இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக் கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்என்று கூறினார்கள். பிறகு, தமது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்.33 அந்த நபருக்கு அன்பளிப்பாகத் தான் அது வழங்கப்பட்டது. ஆனாலும் ஜகாத் வசூலிக்கச் சென்றதால் தான் அவருக்கு வழங்கப்பட்டது என்பதால் அதை அன்பளிப்பாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இதைச் சிந்தித்தால் வரதட்சணையில் எவை சேரும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

Tuesday, 4 June 2013

திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா?


ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

 5141حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا قَالَ مَا عِنْدَكَ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ فَمَا عِنْدَكَ مِنْ الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ رواه البخاري 

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். புகாரி (5141) எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

 مِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ(21)30

 நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் (30 : 21) எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற் பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) முஸ்லிம் 2611 தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான்.   தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும் தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 

6612 حَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنْ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ أَوْ يُكَذِّبُهُ رواه البخاري

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (6612    நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. 

இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம். அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.   

எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா?  என்று பார்க்க வேண்டும்.   நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். 

இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள்.  சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். 

வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம்.

 பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது. இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.

மணமுடிக்க உரிய சக்தி எது?


1.இஸ்லாதில் திருமணம் அவசியம் செய்ய வேண்டுமா? ஏனெனில் திருமணம் செய்தால்தான் முழு முஸ்லிமாக ஆக முடியும் என்று கூறுகிறார்கள்.
 2.நபி(ஸல்) அவர்கள் யாருக்கு திருமணம் செய்ய சக்தி உள்ளதோ அவர் திருமணம் செய்யட்டும் என்று சொன்ன ஹதீஸின் விளக்கத்தை விரிவாக விளக்கவும். 
3.நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள் அனைவரும் திருமணம் புரிந்தார்களா? 
4. திண்ணைத்தோழர்கள் அனைவரும் சிறப்பிற்குரியவர்கள். அவர்கள் திருமணம் புரிந்தார்களா? என்பதனை விளக்கவும்.
 5. நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்ய யாருக்கு சக்தி உள்ளதோ அவர் திருமணம் செய்யட்டும் என்று கூறியது பொருளால் உள்ளடக்கிய சக்தியா? (பணம், செல்வம்) அல்லது மனதிற்கு பிடித்தால் திருமணம் செய்யலாம்! என்ற பொருள் கொண்டதா?    

திருமணம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அல்லாஹ் கூறுகின்றான்:   

   وَأَنكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمْ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ(32)32 

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். அல்குர்ஆன் (24 : 32)

 5066 حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِي عُمَارَةُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ وَالْأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ فَقَالَ عَبْدُ اللَّهِ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَابًا لَا نَجِدُ شَيْئًا فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ رواه البخاري 

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள். புகாரி (5066) மேலும் திருணம் செய்துகொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். தனக்கு திருமணம் செய்துகொள்ள சக்தியிருந்தும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 5063 حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ أَبِي حُمَيْدٍ الطَّوِيلُ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ جَاءَ ثَلَاثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا وَأَيْنَ نَحْنُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ قَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ الدَّهْرَ وَلَا أُفْطِرُ وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلَا أَتَزَوَّجُ أَبَدًا فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ فَقَالَ أَنْتُمْ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي رواه البخاري 

அனஸ்  பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள். திருமணம் செய்வது நபி (ஸல்) அவர்களின் வழி மட்டுமல்ல. அனைத்து நபிமார்களின் வழிமுறையாகும். 

  وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ(38)13 

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். அல்குர்ஆன் (13 : 38) திருமணம் செய்ய சக்தி இருந்தும் அதை செய்து கொள்ளாதவன் துறவறத்தை மேற்கொள்பவனாவான். இவனால் ஒழுக்கமாக வாழ முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த துறவறத்தை நபி (ஸல்) அவர்களும் தடைசெய்தார்கள்.

 ثُمَّ قَفَّيْنَا عَلَى آثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيسَى ابْنِ مَرْيَمَ وَآتَيْنَاهُ الْإِنجِيلَ وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَامَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا فَآتَيْنَا الَّذِينَ آمَنُوا مِنْهُمْ أَجْرَهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ(27)57 

தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள். அல்குர்ஆன் (57 : 27)

   5076حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يَقُولُ رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لَاخْتَصَيْنَا رواه البخاري

 சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்ட போது) நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். புகாரி (5073) எனவே திருமணம் என்பது நாம் ஒவ்வொருவரும் செய்துகொள்ள வேண்டிய கடமையாகும். அடுத்து திருமணம் செய்ய சக்தி உள்ளோர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாம் முன்பு சுட்டிக்காட்டிய ஹதீஸின் விளக்கத்தை தெளிவாக விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். நஸாயீ கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பில் உங்களில் வசதி படைத்தவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறப்பட்டுள்ளது

. 2211أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ قَالَ أَنْبَأَنَا إِسْمَعِيلُ قَالَ حَدَّثَنَا يُونُسُ عَنْ أَبِي مَعْشَرٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ قَالَ كُنْتُ مَعَ ابْنِ مَسْعُودٍ وَهُوَ عِنْدَ عُثْمَانَ فَقَالَ عُثْمَانُ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فِتْيَةٍ فَقَالَ مَنْ كَانَ مِنْكُمْ ذَا طَوْلٍ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَا فَالصَّوْمُ لَهُ وِجَاءٌ رواه النسائي 

அத்துடன் திருமணம் முடிக்க இயலாதவர்கள் நோன்பு நோற்கட்டும், ஏனென்றால் அது அவருடைய ஆசையை கட்டுப்படுத்தும் என்று ஹதீஸில் கூறப்படுகிறது. அதாவது திருமணம் முடிக்க இயலாத போது பாலுணர்வை அடக்க நோன்பு வைக்க வேண்டும்.  ஹதீஸில் சொல்லப்படும் திருமணத்துக்கான சக்தி என்பதற்கு ”பொருளாதாரம் மற்றும் உடல்ரீதியான தகுதி ஆகிய இரண்டும் அடங்கும்”. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ”அவ்வாறு நோன்பு நோற்பது உங்களது இச்சையை கட்டுப்படுத்தும்” என்று கூறிக் காட்டியுள்ளார்கள். ”இச்சையைக் கட்டுப்படுத்தும்” என்கின்ற வார்த்தைp பிரயோகத்திலிருந்தே, உடலுறவு கொள்ள சக்தி பெற்றவர்கள் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்ற கட்டளையும் மறைமுகமாக அதில் அடங்கிவிடுகின்றது. மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:

 நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  (அல்குர்-ஆன் 30:21) மேற்கண்ட வசனத்திலும் அமைதி பெற துணைகளை ஏற்படுத்தியிருப்பதாக இறைவன் கூறிக்காட்டுகின்றான். உடல்ரீதியான இன்பத்தை கணவன் மனைவி இருவரும் பரிமாரிக்கொள்ளவில்லை என்றால் அமைதியில்லாத வாழ்க்கையாக அது மாறிவிடும். இதனால் திருமணத்தின் நோக்கமே சிதைந்து விடுகின்றது. 

இந்தவசனத்தின் அடிப்படையிலும் உடல்ரீதியான தகுதி இன்றியமையாததாக ஆகிவிடுகின்றது. திருமணம் என்பதே ஒரு கடுமையான உடன்படிக்கை என்று இஸ்லாம் சொல்லிக்காட்டுகின்றது. உடல்ரீதியான இன்பத்தை கணவன் மனைவி இருவரும் இருவருக்கும் வழங்கிக்கொள்வோம் என்பதும் இந்த உடன்படிக்கையில் பிரதானமாகும். அப்படி இருக்கையில், உடல்ரீதியான தகுதி தனக்கு இல்லை என்று ஒரு ஆண் தனக்கு தெரிந்த நிலையிலும், அதை மறைத்து ஒரு பெண்ணை மணம் முடிப்பானேயானால்  அது மிகப்பெரிய நம்பிக்கை மோசடியாக கருதப்படும். மேற்கண்ட காரணங்களாலும் திருமணத்திற்குரிய சக்தி என்பதில் அதற்கு தேவையான பொருளாதாரம் மற்றும் உடற்கூறு ரீதியான இரண்டு தகுதிகளையும் தான் நபி(ஸல்) அவர்கள் கூறிக்காட்டியுள்ளார்கள் என்பதை சந்தேகமற விளங்கிக்கொள்ளலம்.   அடுத்து நபித்தோழர்கள் அனைவரும் திருமணம் செய்தார்களா? என்று கேட்டுள்ளீர்கள்.

 திருமணம் செய்துகொள்ள ஆற்றல் இருந்தும் திருமணத்தை புறக்கணித்த எந்த ஒரு நபித்தோழரையும் நம்மால் காணமுடியவில்லை. நபித்தோழர்கள் திருமணம் செய்தார்களா? இல்லையா? மிகவும் சிறந்தவர்களான திண்ணைத்தோழர்கள் திருமணம் முடித்தார்களா? இல்லையா? என்ற ஆய்வுகள் எல்லாம் நமக்கு தேவையற்ற விஷயம். இந்த ஆய்வில் நாம் மூழ்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நமக்கு முன்மாதிரியும் இல்லை.

 திருமணம் செய்தால் தான் முழு முஸ்லிமாக முடியும் என்று சிலர் கூறுவது சரியா என்று கேட்டுள்ளீர்கள். திருமணம் செய்தால் தான் இறைநம்பிக்கை முழுமையாகும். அப்போது தான் ஒரு மனிதனின் மார்க்கம் மழுமையடைகிறது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் பலவீனமாக உள்ளன. இந்த செய்திகள் பலவீனமாக இருந்தாலும் இதன் கருத்து சரிதான்.

 ஏனென்றால் திருமணத்தை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. திருமணம் செய்தால் தான் ஒரு மனிதன் இறையச்சத்தை பேணி ஒழுக்கத்துடன் வாழ முடியும்.  இல்லையென்றால் சாமியார்களையும், பாதிரிமார்களையும் போன்று விபச்சாரத்தில் விழ வேண்டிய சூழல் ஏற்படும். நாம் நம்முடைய வழிகாட்டியான நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு திருமணம் செய்வதே ஒரு முஸ்லிமுடைய பண்பாகும்.

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன் ?


ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا رواه البخاري       

  நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (5133) நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது. எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்த சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின் படியே நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்தக் கூடியவர்களாக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வருவது வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாய்கம் ஸல் அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.

 அது போல் தான் சிறுவயதுப் பெண்ணை திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது. இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம். 

திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. திருமண வாழ்வில் பெண்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் பல உள்ளன. கணவனுக்குக் கட்டுப்படுவதும், வீட்டைக் கவனிப்பதும், குழந்தைகளைப் பேணுவதும் மனைவியின் கடமையாகும். விவரமற்ற சிறுமிகளால் இந்தக் கடமைகளைப் பேண இயலாது. பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. 

(அல்குர்ஆன் 2:228) தன் கணவனைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. விபரமுள்ள பெண்களே இந்த உரிமையைச் சரியாக பயன்படுத்த முடியும். சிறு வயது பெண்கள் சுயமாக தனது கணவனைத் தேர்வு செய்யும் நிலையில் இல்லை. நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.  (அல்குர்ஆன் 4:19) கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?''என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  நூல்: புகாரி 6971, 6964, 5137 என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி),  நூல்: புகாரி 5139, 6945, 6969 அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்.  (அல்குர்ஆன்4:21) இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. 

அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும். மண வாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? தனக்கு கணவனாக வருபவர் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதை இந்த வசனங்களும் ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன. 

திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும். எனவே இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு இப்போது அனுமதி இல்லை. இந்தச் சட்டம் நடைமுறையில் இலலாத காலத்தில் நடந்த திருமணம் குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.