அனைத்துப் புகழும் அகில உலகையும் படைத்தது பரி பக்குவப்படுத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக -

Monday, 23 December 2013

இறந்தவர்களுக்காக!

முஸ்லிம்       எவராவது இறந்து விட்டால் அவரது உறவினர்கள் அவருக்காக” பாத்திஹா ஓதுதல்” என்ற       பெயரில் பெரிய சடங்கு செய்கின்றனர். இது திருமண வீடோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு மரணம் அடைந்தவர் வீட்டின் நிலை ருக்கும்.
    அடக்கம் செய்து வந்த பிறகு இறந்த நாளிலிருந்து 3ம் நாள்,10ம் நாள், 40ம் நாள், அரை வருட பாத்திஹாக்கள், ஒரு வருட பாத்திஹாக்கள் என்று விஷேசம் நடைபெரும். சில ஊர்களில் 10,20,30 என்று நாட்கணக்கிலும், ஏன் சில ஊர்களில் தினமும் இரவு மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு 40 நாட்களுக்கும்  பாத்திஹாக்கள் ஓதி வருவர்.      
    இது உண்மையில் இஸ்லாம் அறிமுகப்படுத்திய நடை முறையா? என்றால் இல்லை       ந்த பாத்திஹாக்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதிலிருந்து       து மார்க்கதில்      ல்லாத ஒன்றும் ,பித்அத் என்றும் அறியலாம்.      
    ரசூல்(ஸல்) அவர்கள் இறந்தவர்களுக்கு இது போன்ற பாத்திஹாக்களை ஓதும்படி கற்றுத்தரவில்லை. இறந்தவர்களுக்கு ஏதாவது நன்மை போய் சேரவேண்டுமென்று தான் மக்களில் பலர் பாத்திஹாக்களை  ஓதி வருகின்றனர். இறந்தவர்களுக்கு என்ன செய்யலாமென்று       னி ஹதீஸ் ஆதாரங்களைப்  பார்ப்போம்.      
துஆச் செய்தல்      
    மைய்யித்தை  அடக்கி விட்டு அங்கே நின்ற நபி(ஸல்) அவர்கள் உங்களின் சகோதரருக்காக பாவமன்னிப்பு கேளுங்கள். அவருக்கு  உறுதியைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.     (இப்னு உமர்(ரழி) அபூதாவூத்,ஹாகிம்)      
    குடும்பத்தாரோ இறந்தவருக்கு தான் துஆக் கேட்காமல் கபுருக்கு அருகில் இமாம்பாத்திஹா ஒத மற்றவர் ஆமின் கூறும் நடைமுறையையே காணுகிறோம்.      
அடுத்து இறந்தவருக்காக அவரது குழந்தைகள் துஆச் செய்யவேண்டும்.      
                        ஒரு மனிதன் இறந்துவிட்டால்  அனைத்தும் நின்றும் விடுகின்றன. நன்மையைத் தொடர்ந்து தரும்படியான இவன் செய்த தர்மம், பிறர் பயன்படும் கல்வி, இவனுக்காக துஆச் செய்யும் இவனது குழந்தை ஆகிய மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம், அஹ்மத்)      
    இந்த ஹதீஸில் பிள்ளைகள்       துஆச் செய்ய வேண்டுமென்பதை அறிகிறோம் ஆனால், நடைமுறையோ கூலிக்கு ஆள் பிடித்து பாத்திஹா என்ற பெயரில் பத்தி, சாம்பிராணி, கறி, சோறு என்று அமர்க்களப்படுத்துகிறார்கள்.             
தர்மம் செய்தல்             
                 எனது தாய் மரண வேளையில் இருந்தார்கள். அவர்கள் பேசியிருந்தால் தர்மம் செய்யும்படிச் சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்காக நான் தர்மம் செய்தால் அவர்களுக்கு பலன் தருமா? என்று ஒருவர் கேட்டார். ஆம் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தர்கள். (ஆயிஷா(ரழி) புகாரி, முஸ்லிம்)      
    எனது தந்தை சிறிது சொத்தை வஸிய்யத் எதுவும் செய்யாமல் விட்டு விட்டு இறந்துவிட்டர். அவருக்காக நான் அதை தர்மம் செய்தால்  அவருக்கு (அல்லாஹ்) பகரமாக்குவானா? என்று ஒருவர் கேட்டார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.அபூஹுரைரா (ரழி) முஸ்லிம், அஹ்மத்)             
நோன்பு வைத்தல்             
                 அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒருமாத நோன்பு வைப்பது  தம்மீது கடமையாயிருக்க இறந்துவிட்டனர். நான் அதை அவர்களுக்காக நிறைவேற்றலாமா? என்று ஒருவர் கேட்டார். உனது தயாருக்கு கடன்        ருந்தால் அதை அவர்களுக்காக நிறைவேற்றத் தானே செய்வாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானல் நிறைவேற்றப்பட அதிக தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடன்(நோன்பு) ஆகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புஹாரி, முஸ்லிம்)             
ஹஜ் செய்தல்             
                 என் தாய் ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார்கள், ஆனால் இறக்கும்வரை அதை நிறைவேற்றவில்லை. அவர்களுக்காக நான் ஹஜ் செய்யலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் ஜுஹைனா என்ற கிளையைச் சேர்ந்த  ஒரு பெண் கேட்டார் அதற்கு என்று நபி(ஸல்) அவர்கள், நீ அவர்களுக்காக ஹஜ்செய். எனவே        ந்த(ஹஜ்) கடனையும் நிறைவேற்று. அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகக் தகுதி வாய்ந்தது என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி)புஹாரி)             
    ஒரு மூமின் இறந்து விட்டால் அவரது  பிள்ளைகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருக்காக துஆச் செய்வது, அவருக்காக தர்மம் செய்வது, ஹஜ், நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றலாம் என்பதை  மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம். அல்லாஹ் நம் அனைவரையும் நபி வழியில் நடக்க துணைபுரிவானாக ஆமின்!

Saturday, 21 December 2013

சுவனத்தைப் பெற்றுத்தரும் முன் பின் சுன்னத்துக்கள்

அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கம் தன்னை வணங்க வேண்டும். தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே. மனிதனுடைய அனைத்து செயல்பாடுகளையும் இஸ்லாம் காட்டிய அடிப்படையில் அமைத்துக் கொள்ளாவிட்டால், அதற்குறிய தண்டனையையும் இறைவன் நாளை மறுமையில் குறைவில்லாமல் தருவான்.
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (51:56)
தன்னால் படைக்கப்பட்ட மனிதன் தன்னை வணங்க வேண்டும் என்று கட்டளையிட்ட இறைவன் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகள் என்றும் செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும், செய்யாவிட்டால் பாவமாக கருதப்படாத கடமைகள் என்றும் இறைவன் இரு வகையான கடமைகளை மனிதர்கள் மீது சுமத்தியிருக்கிறான்.
உதாரணமாக ஒரு நாளைக்கு ஐந்த நேரம் தொழுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதே நேரம் ஐந்து நேரத் தொழுகைகளுக்கு முன் சுன்னத்தான தொழுகைகள் என்று இறைவன் சில தொழுகைகளை ஏற்படுத்தியுள்ளான். இவை கட்டாயக் கடமையாக இல்லையென்றாலும், இவற்றை செய்யும் போது மிகச் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
பொதுவாக இறைவனுக்காக நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் சில சில தவறுகள் நடக்கும் இந்தத் தவறுகளை அவ்வப்போது நாம் செய்யும் சுன்னத்தான காரியங்கள் ஈடு செய்துவிடும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரைப் பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன்.  நான்  என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும்.
எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான்.  அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன்.  அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன்.  அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை.  (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி),  நூல் : புகாரி
உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான்.  அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும்.  அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர் : தமீமுத் தாரி (ரலி),  நூல் : தாரமீ (1321)
கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன என்பதை மேற்கண்ட செய்தி தெளிவுபடுத்துகின்றது.
யார் இரவிலும், பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி),  நூல் : முஸ்லிம் (1198)
கடமையான தொழுகையல்லாத உபரியான தொழுகைகளை நாம் தொழுவதினால் இவ்வளவு பாக்கியமிக்க நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆகவே நாம் உபரியான தொழுகைகளை சரியாகப் பேணிக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் ஐங்காலத் தொழுகைகளுக்கு முன்னாலும், பின்னாலும் தொழ வேண்டிய சுன்னத்தான தொழுகைகள் பற்றி இந்த ஆக்கத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஐந்து நேரத் தொழுகையில் சுப்ஹுக்கு முன் உள்ள சுன்னத்தான தொழுகைக்கு நபியவர்கள் முக்கியத்துவம் கொடுத்ததைப் போல் வேறு எந்தத் தொழுகைக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (1163), முஸ்லிம் (1191)
யாருக்காவது சுப்ஹுடைய முன் சுன்னத் தவறிவிட்டால் அவர் அதனை சுப்ஹுத் தொழுகைக்குப் பின் தொழுது கொள்ள முடியும். அந்த அளவுக்கு பஜ்ருடைய முன் சுன்னத்துக்கள் முக்கியத்துவமிக்கவையாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அறிவிப்பவர் : கைஸ் (ரலி), நூல் : இப்னுஹிப்பான் (2471)
ஆர்வமூட்டப்பட்ட முக்கியமான சுன்னத்.
லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (1182), நஸயீ (1736), அபூதாவூத் (1062), அஹ்மத் (23204)
சுப்ஹுத் தொழுகைக்குப் பின் சுன்னத் தொழுகைகள் எதுவும் இல்லை. சுப்ஹுத் தொழுது விட்டால் சூரியன் உதிக்கும் வரை எந்த உபரியான தொழுகைகளையும் தொழக் கூடாது.
சுபுஹ் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும் அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி (581), முஸ்லிம் (1367)
லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் சுன்னத்துத் தொழுகை தொழலாம். இது போல லுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் சுன்னத்துத் தொழுவதற்கு அனுமதியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)),நூல்கள் : புகாரீ (937), முஸ்லிம் (1200)
லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ (1182), நஸயீ (1736), அபூதாவூத் (1062), அஹ்மத் (23204)
சுப்ஹுடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்துக்கள் போலவே லுஹருடைய முன் சுன்னத்துக்கள் நான்கு ரக்அத்துக்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை மேலுள்ள செய்தி தெளிவுபடுத்துகின்றது.
அஸர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்துக்கள் சுன்னத் தொழுது கொள்ளலாம். நபியவர்கள் அவற்றைத் தொழும் போது இரண்டிரண்டாகப் பிரித்துத் தொழுவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமின்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் : திர்மிதீ (394)
மஃரிபுடைய முன் பின் சுன்னத்.
மஃரிபுக்கு முன் சுன்னத்துக்கள் இரண்டும், பின் சுன்னத்துக்கள் இரண்டும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மஃரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதற்கு இடமளிப்பதில்லை இது மார்க்கத்தை மறுக்கும் ஈனச் செயலாகும்.
மஃரிபிற்கு முன்னர் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை விரும்பியவர் தொழட்டும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி),
நூல்: புகாரீ (1183), அபூதாவூத் (1089),அஹ்மத் (19643)
அபூதாவுதின் (1089) அறிவிப்பில் மஃரிபிற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுங்கள் என்று இடம் பெற்றுள்ளது.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.” (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரீ (937)
இஷாத் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் அல்லது நான்கு ரக்அத்கள் ஆகும். இஷாவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.
ஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) விரும்பியவர்கள் தொழலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)
நூல்கள்: புகாரீ (624), முஸ்லிம் (1384)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று கூறியுள்ளார்கள். ஆனால் எத்தனை ரக்அத்கள் என்று தெளிவுபடுத்தவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தான தொழுகைகளைக் கவனித்தால் இரண்டும், நான்கும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதன் அடிப்படையில் நாம் இஷாவுடைய சுன்னத்தை இரண்டாக அல்லது நான்காகத் தொழுது கொள்ளலாம்.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள்.” (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரீ (937)
இவ்வளவு பாக்கியங்களைப் பெற்றுத் தரும் சுன்னத்தான தொழுகைகளை தவறாது தொழுது நாளை மறுமையில் சுவனத்தை அடைவோமாக!

Thursday, 21 November 2013

மன அழுத்தத்திற்கு மருந்து இறை நம்பிக்கைதான்.! அமெரிக்க ஆய்வில் தகவல்

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின்,  இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம், பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார்.
கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, மனஅழுத்த நோயின் தாக்கம், மிகவும் குறைவாக இருந்தது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளைப் பற்றிய சிந்தனையோ, பக்தியோ துளியும் இல்லாத நபர்களுக்கு, மனஅழுத்தம் நோயின் தாக்கம்,எந்த வகையிலும் குறையவில்லை. 
ரோஸ் மேரின் குறிப்பிடுகையில், “கடவுளிடம் நம்பிக்கை வைப்பதன் மூலம், மனநல சிகிச்சை பெறுவோருக்கு, தங்கள் பிரச்னையிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இதுதான் இந்த ஆய்வின் முக்கிய அம்சம். இந்த ஆய்வு, இனி வரும் மருத்துவ உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார். 
தற்காலத்தில் மனஅழுத்தம் தான் மனிதனை ஆட்கொள்ளும் பெரிய நோயாகக் கருதப்படுகின்றது. உலகில் 75 சதவீதத்தினர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 
உலகில் நடைபெறும் தற்கொலைகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை மனஅழுத்ததின் காரணமாக நடைபெறுபவை என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இவர்கள் தற்போது கண்டுபிடித்துச் சொல்லும் இந்தச் செய்தியை 1400ஆண்டுகளுக்கு முன்பாகவே வல்ல இறைவன் தனது திருமறையில் சொல்லிக்காட்டியுள்ளான். 
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர் ஆன் 13 : 28) 
உள்ளத்தில் அமைதியின்மை ஏற்படுவதுதான் மன அழுத்தத்திற்கு முழு முதற்காரணமாக அமைந்துள்ளது. இறைவனை நினைவு கூர்வதின் மூலம் உள்ளங்கள் அமைதியுறுகின்றன என்றும், இறைவனை நினைவு கூர்வதால்தான் உள்ளங்கள் அமைதியுறும் என்றும் இறைவன் மேற்கண்ட வசனத்தில் திட்டவட்டமாகச் சொல்லிக் காட்டுகின்றான். 
இறைவனை ஒருவர் நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அவருக்கு மனஅழுத்தம் கிஞ்சிற்றும் இருக்காது என்பது உறுதி. அந்த வகையில் இந்த ஆய்வு இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
நன்றி : ஆன்லைன் பி.ஜெ

விதியை நம் நற்செயல்கள் மாற்றுமா?

விதி பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? ஒரு ஹதீஸ் நான் கேள்விப்பட்டேன். நபி (ஸல்) அவர்கள் அந்த வழியே செல்லும் ஒரு மனிதரைப் பார்த்து இந்த மனிதர் திரும்பி வர மாட்டார். அதாவது மரணித்து விடுவார் என்று சொல்கிறார்கள்,  ஆனால் சில தினங்களுக்குப் பின் அந்த வழியாக மீண்டும் அந்த மனிதர் செல்கிறார். உடனே நபி அவர்கள் அவரை அழைத்து கேட்கிறார். நீங்கள் சில தினங்களுக்கு முன் எதாவது செய்தீர்களா என்று. அதற்கு அவர் சொல்கிறார். ஆம் சில ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தேன் என்று. அவர் சென்ற பின் நபிகள் (ஸல்) சொன்னார்கள், அவர் செய்த நற்செயல் காரணமாக அவர் வாழ்நாளை அல்லாஹ் அதிகரித்திருக்கிறான் என்று. இந்த ஹதீஸ் உண்மை தானா? உண்மை என்றால் நாம் செய்கின்ற செயலை ப்பொறுத்து நம் விதி மாறுமா? 

பதில்
நீங்கள் கூறியவாறு எந்தச் செய்தியையும் நாம் ஹதீஸ் நூற்களில் காணவில்லை. இந்தச் சம்பவத்தின் கருத்து குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கும் மாற்றமாக அமைந்துள்ளது.
ஒருவர் தன் முயற்சியின் மூலம் இறைவன் முடிவு செய்த விதியை மாற்றி விடலாம் என இச்சம்பவம் கூறுகிறது. இது இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாற்றமான கருத்தாகும். விதி ஒருக்காலும் மாற்றப்படாது. இறைவன் நாடியது நடந்தே தீரும் என்று இஸ்லாம் கூறுகின்றது.
6596حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا يَزِيدُ الرِّشْكُ قَالَ سَمِعْتُ مُطَرِّفَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ يُحَدِّثُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَيُعْرَفُ أَهْلُ الْجَنَّةِ مِنْ أَهْلِ النَّارِ قَالَ نَعَمْ قَالَ فَلِمَ يَعْمَلُ الْعَامِلُونَ قَالَ كُلٌّ يَعْمَلُ لِمَا خُلِقَ لَهُ أَوْ لِمَا يُسِّرَ لَهُ رواه البخاري
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)  அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம் (தெரியும்)” என்று சொன்னார்கள். அவர் “அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஒவ்வொருவரும் “எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ’ அல்லது “எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ’ அதற்காகச் செயல்படுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி (6596)
5144حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ كِلَاهُمَا عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ وَاللَّفْظُ لِقُتَيْبَةَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَيَّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ زَوَى لِي الْأَرْضَ فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا وَإِنَّ أُمَّتِي سَيَبْلُغُ مُلْكُهَا مَا زُوِيَ لِي مِنْهَا وَأُعْطِيتُ الْكَنْزَيْنِ الْأَحْمَرَ وَالْأَبْيَضَ وَإِنِّي سَأَلْتُ رَبِّي لِأُمَّتِي أَنْ لَا يُهْلِكَهَا بِسَنَةٍ عَامَّةٍ وَأَنْ لَا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ وَإِنَّ رَبِّي قَالَ يَا مُحَمَّدُ إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً فَإِنَّهُ لَا يُرَدُّ وَإِنِّي أَعْطَيْتُكَ لِأُمَّتِكَ أَنْ لَا أُهْلِكَهُمْ بِسَنَةٍ عَامَّةٍ وَأَنْ لَا أُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ يَسْتَبِيحُ بَيْضَتَهُمْ وَلَوْ اجْتَمَعَ عَلَيْهِمْ مَنْ بِأَقْطَارِهَا أَوْ قَالَ مَنْ بَيْنَ أَقْطَارِهَا حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يُهْلِكُ بَعْضًا وَيَسْبِي بَعْضُهُمْ بَعْضًا رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன. நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன்.
மேலும், “அவர்கள் மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்” என்றும் பிரார்த்தித்தேன்.
என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்க மாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்” என்று கூறினான்.
இதை ஸவ்பான் (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (5538)
விதி எக்காரணத்தாலும் மாற்றப்படாது என்பதை நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளார்கள்.
6694حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَأْتِي ابْنَ آدَمَ النَّذْرُ بِشَيْءٍ لَمْ يَكُنْ قُدِّرَ لَهُ وَلَكِنْ يُلْقِيهِ النَّذْرُ إِلَى الْقَدَرِ قَدْ قُدِّرَ لَهُ فَيَسْتَخْرِجُ اللَّهُ بِهِ مِنْ الْبَخِيلِ فَيُؤْتِي عَلَيْهِ مَا لَمْ يَكُنْ يُؤْتِي عَلَيْهِ مِنْ قَبْلُ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்த்திக்கடன் அவனைக் கொண்டு செல்கிறது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கிவிடுகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (6694)
குறிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலம் மாற்றப்படாது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குச் சிறிது நேரம் முன்போ பின்போ உயிர் வாங்கப்படாது. துல்லியமாக குறித்த நேரத்தில் வாங்கப்பட்டு விடும். இவ்வாறு திருக்குர்ஆன் கூறுகின்றது.
وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ(61)16
மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் 16 : 61)
وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ(34)7
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் (7 : 34)
مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَأْخِرُونَ(5)15
எந்தச் சமுதாயமும் தனது காலக் கெடுவை முந்தாது; பிந்தாது.
அல்குர்ஆன் (15 : 5)
وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ(11)63
எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (63 : 11)
وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَنْ يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَجْزِي الشَّاكِرِينَ(145)3
அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி.
அல்குர்ஆன் (3 : 145)
பிரார்த்தனை விதியை மாற்றிவிடும் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான செய்தி இல்லை.
87حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ وَلَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِخَطِيئَةٍ يَعْمَلُهَا رواه إبن ماجه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு (கிடைக்க வேண்டிய) அருள்வளம் கிடைக்காமல் போகின்றது.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
நூல் : இப்னு மாஜா (87)
இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் அபில் ஜஃது என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சான்று அளிக்கவில்லை. இமாம் இப்னுல் கத்தான் அவர்கள் இவருடைய நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
இமாம் இப்னு ஹிப்பான் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை நம்பகமானவர்களின் பட்டியில் குறிப்பிடும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவருடைய கூற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று முடிவு செய்ய முடியாது.
இவருடைய நம்பகத்தன்மைக்கு மற்ற அறிஞர்கள் யாரும் நற்சான்று அளிக்கவில்லை. எனவே இவர் பலவீனமானவானர். பலவீனமான இந்த செய்தியை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
மேலும் இவர் திரும்பி வரமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்று இச்சம்வம் கூறுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய தூதர். மறைவான விஷயங்கள் பற்றி இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தால் தான் அதை அவர்கள் மக்களிடம் கூறுவார்கள்.
இன்னார் திரும்பி வரமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினால் கண்டிப்பாக அது நடந்தே தீரும். ஏனென்றால் இது இறைத்தூதரின் முன்னறிவிப்பு.
அவ்வாறு நடக்கவில்லை என்றால் நபியவர்கள் முன்னறிவிப்பு பொய்யாகிவிடும். வஹீயின் அடிப்படையில் அமைந்த நபியின் பேச்சுக்களில் தவறோ முரண்பாடோ வராது. ஏனென்றால் இது இறைவன் புறத்திலிருந்து வரக்கூடியவை.
ஆனால் இந்த சம்பவமோ இவர் திரும்பிவர மாட்டார் என நபியவர்கள் கூறிய முன்னறிவிப்பு பொய்த்து விட்டது எனக் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களை பொய்யராகச் சித்தரிக்கும் இந்தச் சம்பவத்திற்கும் நபியவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆயினும் விதி மாறுமா என்பதில் சர்ச்சை செய்யாமல் பிரார்த்தனைகளை நாம் செய்து வரவேண்டும். நம்முடைய விதி மாறாது என்பதால் பிரார்த்தனை தேவையற்றது என்று கருதக் கூடாது. ஏனெனில் விதியை நம்பச் சொன்ன நபியவர்கள் பிரார்த்தனை செய்யுமாறும் நமக்கு வழி காட்டியுள்ளனர்.

Tuesday, 12 November 2013

பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?


மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஆண்களாகவே அனுப்பப்பட்டனர் என்பதை இவ்வசனங்கள் (12:109, 16:43, 21:7) கூறுகின்றன.

 "பெண்களில் இறைத்தூதர்கள் அனுப்பப்படாததற்கு பெண்களை மட்டம் தட்டுவது தான் காரணம்'' என்று சிலர் கூறுகின்றனர். ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பல்வேறு மதங்களில் வேற்றுமை காட்டப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை இத்தகைய வேற்றுமை ஏதும் இல்லை என்பதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது. நல்லறங்கள் மூலம் உயர் நிலையை அடைவதிலும், அதற்கான பரிசுகளை இறைவனிடம் பெறுவதிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இறைவன் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை என்பதைத் திருக்குர்ஆன் 40:40, 4:124, 16:97, 3:195, 33:35 வசனங்கள் கூறுகின்றன.

 குறைவான நல்லறம் செய்த ஆணை விட நிறைவான நல்லறம் செய்த பெண் இறைவனிடம் உயர்ந்தவளாவாள். ஆணா, பெண்ணா என்று கவனித்து மறுமையில் பரிசுகள் வழங்கப்படுவதில்லை. நடத்தைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகின்றன. எனவே ஆன்மிக நிலையில் பெண்கள் தகுதியற்றவர்கள் என்பதற்காக பெண்களில் நபிமார்கள் அனுப்பப்படுவது தவிர்க்கப்படவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம். 

ஒருவேளை இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுவதற்கும், இறைச்செய்தி கொண்டு வரும் ஜிப்ரீல் என்ற வானவரைச் சந்திப்பதற்கும் பெண்கள் தகுதியற்றவர்கள் என்பதால் இறைவன் பெண்களில் நபிமார்களை அனுப்பாமல் இருந்திருப்பானோ என்றால் அதுவும் இல்லை. 

மூஸா நபியின் தாயாருக்கு ஒரு செய்தியைத் தன் புறத்திலிருந்து இறைவன் அறிவித்துள்ளான் என்பதை 20:38, 28:7 ஆகிய வசனங்களில் காணலாம். மர்யம் (அலை) அவர்களிடம் ஜிப்ரீல் எனும் வானவர் வந்ததையும் இறைக் கட்டளையைத் தெரிவித்ததையும் 3:47, 19:17 வசனங்களில் காணலாம். 

ஒருவன் உண்மையான முஸ்லிமாக வாழ விரும்பினால் அவன் கடந்த காலத்தில் வாழ்ந்த இரண்டு நபர்களைப் போல் வாழ வேண்டும். அவ்விருவர் தான் முஸ்லிம்களுக்குரிய முன்மாதிரிகளாவர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அவ்விருவரும் பெண்களாவர். (திருக்குர்ஆன் 66:11-12) ஆன்மிகத்தில் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் முன்மாதிரிகளாக இரண்டு பெண்களையே இறைவன் குறிப்பிடுகிறான் என்றால் ஆன்மிகத்தில் ஆண்களுடன் போட்டியிட்டு அவர்களையும் பெண்கள் மிஞ்ச முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம். 

அப்படியானால் பெண்கள் நபிமார்களாக அனுப்பப்படாதது ஏன்? இக்கேள்விக்கு விடை மிக எளிதானது. இறைத்தூதுப் பணி மிகவும் கடினமான பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றுவது ஆண்களில் கூட அனைவராலும் சாத்தியமாகாததாகும். இறைத்தூதராக அனுப்பப்படுவோர் தமது சமூகத்தில் இருந்த அத்தனை கொள்கை கோட்பாடுகளையும் தனியொருவராக நின்று எதிர்க்க வேண்டும். * அவ்வாறு எதிர்க்கும் போது கொல்லப்படலாம்! * நாடு கடத்தப்படலாம்! * கல்லெறிந்து சித்திரவதை செய்யப்படலாம்! * ஆடையைக் கிழித்து நிர்வாணப்படுத்தப்படலாம்! இன்னும் சொல்லொண்ணாத் துன்பங்களை அவர்கள் அனுபவித்து ஆக வேண்டும். 

பெண்களாக இருந்தால் இவை அனைத்துக்கும் மேலாக அவர்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து மேலும் துன்புறுத்துவார்கள். ஒட்டுமொத்த சமுதாயத்தையே தன்னந்தனியாக களத்தில் நின்று எதிர்ப்பதால் ஏற்படும் சிரமங்களை எந்தப் பெண்ணாலும் நிச்சயம் தாங்கிக் கொள்ளவே முடியாது. இன்றைக்குக் கூட உடலுக்கு அதிக வேதனை தராத பணிகளில்தான் பெண்கள் நாட்டம் கொள்கிறார்களே தவிர பாரம் இழுக்கவோ, மூட்டை தூக்கி இறக்கவோ பெண்கள் போட்டியிடுவதில்லை. விரும்புவதுமில்லை. 

இறைத்தூதர்கள் என்ற பணி இதைவிடப் பல மடங்கு கடினமான பணியாகும். பெண்களை இழிவு செய்வதற்காக இப்பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறு என்பதை மேலே நாம் எடுத்துக் காட்டிய சான்றுகள் சந்தேகமற நிரூபிக்கும்.


                                                                                                                                                   onlinepj

Thursday, 7 November 2013

இலங்கையை இலக்கு வைக்கும் ஷீயா மதத்தினர்

இலங்கையில் ஈரானின் தலையீடு, ஷீஆ மதத்தைப் பரப்பும் திட்டத்தின் முதற் படி.
இஸ்லாமிய வரலாற்றில் சிகப்புப் பக்கங்களை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் தான் ஷீஆ மதத்தைப் பின்பற்றும் வழிகேடர்கள். நபிகள் நாயகம் முதல் நபியின் தோழர்களை குறை கூறி,இகழ்ந்து பேசி,அவதூறுகளை அள்ளி வீசி அவர்களின் வாழ்க்கையின் புனிதத்தை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்க நினைத்த கயவர்கள் தான் இவர்கள்.
தற் காலத்தில் ஈரானை தலைமையகமாக கொண்டு இயங்கும் இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தினை கூறு போட நினைத்தார்கள் அல்லாஹ்வின் கருணையின் காரணமாக இவர்கள் யார் இவர்களின் உள் நோக்கம் என்ன என்பவை எல்லாம் மக்கள் மத்தியில் வெளிச்சமாகியது.
இவர்கள் இஸ்லாமியர்களை குறி வைத்து தங்கள் மதப் பிரச்சாரத்தை ஆரம்பித்தவர்கள் தற்போது மிகப் பெரிய அளவில் அதனை நடை முறைப் படுத்திக் கொண்டிருப்பவர்கள்.
அதன் ஒரு பகுதியாக தற்போது இலங்கைத் திரு நாட்டையும் அவர்களின் கழுகுப் பார்வை எட்டியுள்ளது.
புல வருடங்களாக மந்த நிலையில் நடந்த இந்தப் பிரச்சாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இலங்கை முஸ்லீம்களின் அரசியல்,ஆன்மீக விஷயங்களில் பல துறைகளிலும் இவர்கள் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள்.இலங்கைக்கு ஷீயாக்கள் ஏன் ஊடுருவியுள்ளார்கள்,அவர்கள் எந்த முறைகளில் இஸ்லாத்தில் இல்லாத காரியங்களை புகுத்துகிறார்கள்,அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதைப் பற்றியெல்லாம் நாம் விளக்கமாக ஆராய கடமைப் பட்டுள்ளோம் அதன் ஆரம்பமாக முதலாவது ஷீஆக்கள் பற்றிய ஒரு தெளிவை நாம் பார்ப்போம்.
பிரிவினைவாதிகளின் பெயர் விளக்கம் :
ஷீஆ என்பது அணி ,கோஷ்டி,குழு என்ற பொருள்களை கொண்ட ஒரு வார்த்தையாகும்.அரசியல் ரீதியாக பிளவு பட்டு இரண்டு அணிகளாக பிரிந்தவர்களை குறிப்பதற்காகத் தான் இந்த வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டது.
ஆனால் இதுவே கால ஓட்டத்தில் ஒரு வழி கெட்ட பிரிவை இனம் காணும் வார்தையாக மாறிவிட்டது.
ஈரான்,ஈராக் போன்ற நாடுகளில் அதிகமாகவும் இலங்கை,இந்தியா போன்ற நாடுகளில் குறைவாகவும் தற்காலத்தில் காணப் படும் இவர்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் வழி தவறிய கூட்டத்தில் முதலிடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள்.
வழிகேடர்களின் தோற்றத்தின் பின்னனி :
ஷீஆ என்ற இந்த வழி கெட்ட கூட்டத்தினர் தோன்றியதன் பின்னனியை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
நபியவர்களின் மரணத்திற்குப் பின் ஆட்சிப் பொருப்பை ஏற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக இருப்பவர்கள் அபூபக்கர்,உமர்,உஸ்மான்,அலி,ஹஸன்,முஆவியா(ரலி)ஆகியோர்களாகும்.
அபூபக்கர்(ரலி)அவர்களைத் தொடர்ந்து உமர்(ரலி)அவர்களும்,உமர்(ரலி)அவர்களைத் தொடர்ந்து உஸ்மான்(ரலி)அவர்களும் ஆட்சிப் பொருப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
உஸ்மான் (ரலி)அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த சில அசம்பாவித நிகழ்ச்சியினால் உஸ்மான்(ரலி)அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பொருப்பை ஏற்றுக் கொண்ட அலி(ரலி)அவர்கள் உஸ்மான்(ரலி)அவர்களை கொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
இந் நேரத்தில் சிரியாவின் ஆளுனராக முஆவியா(ரலி)அவர்கள் இருந்தார்கள்.
சிரியாவின் ஆளுனராக இருக்கும் முஆவியா(ரலி)அவர்களிடத்தில் பைஅத் வாங்கிக் கொண்டு அவரையே மீண்டும் சிரியாவின் ஆளுனராக நியமிக்குமாறு இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் அலி(ரலி)அவர்களை கேட்டுக் கொண்டார்கள்.
அலி(ரலி)அவர்கள் ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலி (ரலி)அவர்களை சிரியாவுக்கு அனுப்பி முஆவியா(ரலி)அவர்களிடம் பைஅத் வேண்டினார்கள்.
ஆனால் முஆவியா(ரலி)அவர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவேயில்லை.
தனது தந்தையின் சகோதரரின் மகன் உஸ்மான்(ரலி)அவர்களை கொலை செய்தவர்களை தண்டிக்காத வரை தான் பைஅத் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
 அதன் பின்னர் அபூ முஸ்லிம் அல் குராஸானி என்பவரையும் அனுப்பி முஆவியா(ரலி)அவர்கள் தன்னிடம் பைஅத் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார் ஆனால் முஆவியா(ரலி)அவர்கள் அதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை.
ஆட்சியில் கலகக் காரர்களின் கை ஓங்கியுள்ளதையும் ஆட்சியாளரின் கரம் கட்டப் பட்டிருப்பதையும் காரணம் காட்டி உஸ்மான்(ரலி)அவர்களை கொலை செய்தவர்களை தற்போதைக்கு தண்டிக்க முடியாது என அலி(ரலி)அவர்கள் அந்த விஷயத்தைத் தள்ளி வைத்தார்கள்.
இந்தக் கருத்து வேறுபாடுதான் முஸ்லீம்கள் மத்தியில் இரு குழுக்களை உண்டு பண்ணியது.
அதாவது அலி(ரலி)அவர்களை ஆதரித்து ஒரு பகுதியினரும்,உஸ்மான்(ரலி)அவர்களை ஆதரித்து இன்னொரு பகுதியினருமாக முஸ்லீம்கள் பிளவு பட்டனர்.
இவர்கள் தான் ஷீஅத்து அலி (அலியின் கட்சியினர்),ஷீஅத்து முஆவியா(முஆவியாவின் கட்சியினர்)என வரலாற்றில் அறியப்படுகிறார்கள்.
இந்தப் பிரிவினையின் விளைவு ஹிஜ்ரி 36ல் முஹர்ரம் முதல் பத்தில் அலி(ரலி)அவர்களின் தரப்பினருக்கும்,முஆவியா(ரலி)அவர்களின் படையினருக்கும் இடையில் பெரும் யுத்தம் ஒன்று வெடித்தது.
முஆவியா(ரலி)அவர்கள் தரப்பால் கலந்து கொண்ட அம்ரு பின் ஆஸ்(ரலி)அவர்கள் இந்த சண்டையை நிருத்தும் விதமாக குர்ஆனைத் தூக்கிக் காட்டுமாறு முஆவியா(ரலி)அவர்களை கேட்டுக் கொள்ள அவ்வாரே முஆவியா(ரலி)தரப்பினரால் குர்ஆன் தூக்கிக் காண்பிக்கப் பட்டது.
இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப் பட்ட அந்த யுத்தம் முடிவுக்கு வந்து,இரண்டு அணியைச் சேர்ந்தவர்களும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள். (பத்ஹ{ல் பாரி)
ஷீஅத்து அலி,ஷீஅத்து முஆவியா என்ற இரு அணிகளுக்குமான பெயர் ஒரு அடையாளத்திற்காகத்தான் வைக்கப் பட்டதே தவிர இப்போது இருப்பதைப் போல் மார்க்க ரீதியிலான பிரிவினைக்கு வைக்கப் படவில்லை.
நபியவர்கள் எந்த ஏகத்துவக் கொள்கையை சொல்லி அவர்களை வளர்த்தெடுத்தார்களோ அந்த ஏகத்துவக் கொள்கையில் அவர்கள் நிலையாக நின்றார்கள் அரசியல் ரீதியாக இரு அணிகளாக மாறினார்கள் அவ்வளவுதான்.
ஆனால் இன்று ஷீஆக்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் அடிப்படையில் இஸ்லாத்தின் மூலாதாரங்களையே மாற்றி ஒரு தனி மதமாக மாறி இஸ்லாத்திற்கு வெளியில் சென்று விட்டார்கள்.
அலி(ரலி)அவர்களின் மரணமும்,சமுதாயத்தின் ஒன்றினைவும்.
நான்காம் கலீபா அலி(ரலி)அவர்கள் ஹிஜ்ரி 39களின் நடுப்பகுதியில் இப்னுல் முல்ஜிம் என்பவன் மூலம் கொலை செய்யப் பட்டார்கள்.அலி(ரலி)அவர்களின் மரணத்தின் பின்னர் அவர்களின் மூத்த புதல்வர் ஹஸன்(ரலி)அவர்கள் இஸ்லாமிய அரசின் ஆட்சிப் பொருப்பை கையில் எடுக்கிறார்கள்.
ஹிஜ்ரி 39இன் நடுப்பகுதியில் இருந்து ஹிஜ்ரி 40 வரை ஆட்சி செய்த ஹஸன்(ரலி)அவர்கள்,அலியின் அணி,முஆவியாவின் அணி என்று இரு கூறுகளாக பிரிந்திருந்து மக்களை ஒன்று சேர்க்க நினைத்து தனது ஆட்சிப் பதவியை முஆவியா(ரலி)அவர்களிடம் விட்டுக் கொடுத்து இரண்டு ஆட்சியை ஒரு ஆட்சியாக மாற்றினார்கள்.
ஹஸன் (ரலி)அவர்கள் செய்த இந்த மிகப் பெரும் தியாகத்தை தான் வரலாற்றாசிரியர்கள் ஆமுல் ஜமாஆ – ஒற்றுமையின் ஆண்டு என்று வர்ணிக்கின்றனர்.இந்தச் சந்தோஷமான நிகழ்வை விரும்பாத ஷீஆக்களின் ஒரு பிரிவினர் ஹஸன் (ரலி)அவர்களை மிகப் பெரும் துரோகியாக சித்தரிக்கின்றனர்.
ஷீஆ சிந்தனையின் சொந்தக்காரன்.
தற்கால ஷீஆ சிந்தனையின் சொந்தக் காரணாக இருந்து அதற்கு வித்திட்டவன் இப்னு ஸபா என்பவனாவான்.அலி(ரலி)அவர்களின் காலத்தில் அவர்களுக்குத் தெரியாமலேயே இந்த சிந்தனைகளுக்கு இவன் வித்திட்டான்.
இவன் உருவாக்கிய கொள்கையில் மிக முக்கியமானவைகள்.
அலி(ரலி)அவர்கள் மரணிக்கவில்லை அவர்கள் குதிரையில் வானத்திற்கு உயர்த்தப் பட்டார்கள்.
இப்னுல் முல்ஜிமால் அலி(ரலி)அவர்கள் கொல்லப் பட்டும்,அவர்கள் மரணிக்கவில்லை.மாறாக வானுலகுக்கு உயர்த்தப் பட்டுள்ளார்கள்.மீண்டும் உலகுக்கு வருவார்கள் போன்ற வழி கெட்ட மறுபிறவிக் கோட்பாட்டையும் இவன் உருவாக்கினான்.
நபியவர்களின் மரணத்திற்குப் பின் ஆட்சிக்கு பொருப்புச் சாட்டப் பட்ட வஸிய்யாக பொருப்பாளராக அலி(ரலி)அவர்கள் தான் இருக்கிறார்கள்.
அலி(ரலி)அவர்களை ஆட்சியாளராக தெரிவு செய்யாமல் ஸஹாபாக்கள் அனைவரும் அலி(ரலி)அவர்களுக்கு அநீதி இழைத்தார்கள்.
அஹ்லுல் பைத் என்பவர்கள் அலி,பாத்திமா(ரலி)குடும்பத்தினர் மாத்திரம் தான்.
அலி(ரலி)அவர்களுக்கும்,முஆவியா(ரலி)அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை சீர்குலைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப் படுவதற்கும் இவனே காரணமாக இருந்தான்.
இந்த இப்னு ஸபா என்ற வழிகேடன் உருவாக்கிய கேடு கெட்ட சித்தாந்தகங்கள்தான் இன்றுள்ள ஷீஆக்கள் மத்தியில் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
ஷீஆ சிந்தனையின் இமாம்களாக(?)வர்ணிக்கப் படுபவர்கள்.
ஷீஆக்களின் வழிகெட்ட கொள்கையின் படி இஸ்லாத்தின் கலீஃபாக்களாக வந்தவர்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அந்த நல்லவர்களை துரோகிகளாகத் தான் அவர்கள் சித்தரிக்கிறார்கள்.
இதே நேரம் கலீஃபாக்கள் எப்படி இடம் பெற வேண்டும் என்று அவர்கள் ஒரு வரையறை வைத்துள்ளார்கள் அந்த வரையறையின் படி கிட்டத் தட்ட 12 பேர் இமாம்களாக ஷீஆக்களின் கலீஃபாக்களாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளார்கள் அவர்களில் இஸ்லாத்தின் நான்காம் கலீஃபா அலி(ரலி)அவர்கள்,அவர்களின் இரு புதல்வர்கள் ஹஸன்,ஹ{ஸைன்(ரலி)ஆகிய நபித்தோழர்களும்.
அதைத் தொடர்ந்து அவர்களின் பட்டியலில் இடம் பெரும் மூன்று பேர் ஹதீஸ் அறிவிப்பாளர்களில் நம்பகமானவர்களாகவும்,அறிஞர்களாகவும் போற்றப் படுபவர்களாவர்.
இது தவிர மற்ற சிலரும் இவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்கள்.அவர்களில் யாருடைய பேச்சிலும்,நடத்தையிலும்,தீர்ப்பிலும் எவ்வித தவறுகளும் நடக்காது என்றும் இவர்கள் அனைவரும் மலக்குகள் நபிமார்களைவிட சிறப்பான தகுதி படைத்தவர்கள் என்றும் இந்த வழி கெட்ட ஷீஆக்கள் நம்புகிறார்கள்.
இதனை ஷீஆக்களின் முக்கியமானவர்களில் ஒருவரான கொமைனியின் இஸ்லாமிய அரசு என்ற புத்தகத்தில் காண முடியும்.
ஷீஆக்களின் இமாம்களின் பட்டியல்.
1.அலீ பின் அபீதாலிப்
2.ஹசன் பின் அலீ 
3.{ஸைன் பின் அலீ 
4.அலீ பின் ஹ{ஸைன்.
5.முஹம்மத் அலி.
6.ஜஃபர் பின் முஹம்மத்.
7.மூஸா பின் ஜஃபர்.
8.அபுல் ஹஸன் அலீ பின் மூஸா.
9.அபூ ஜஃபர் முஹம்மத் பின் அலீ.
10.அபூ ஹஸன் அலீ பின் முஹம்மத்.
11.அபூ முஹம்மத் அல் ஹஸன் பின் அலீ.
12.அபுல் காஸிம் முஹம்மத் பின் அல்ஹஸன்.(அல் மஹ்தி)
மேற்கண்டவர்களே ஷீஆ மதத்தினரின் கொள்கைப் படி அமைய வேண்டிய கலீபாக்கள் இவர்கள் அல்லாத கலீபாக்கள் அனைவரும் அவர்களின் கருத்துப் படி வழி தவறியவர்கள்.
மேற்கண்ட 12 பேரில இறுதியாக வருபவராக நம்பப்படும் அபுல் காஸிம் முஹம்மத் பின் அல் ஹஸன் என்பவர் ஹிஜ்ரி 256இல் சிறுவனாக இருக்கும் போது மரணமடைந்ததாக வாதிடும் ஷீஆ மதத்தினர்,இவர் தற்போது வரை மறைந்து வாழ்வதாக நம்புகிறார்கள்.இவர்தான் மஹ்தி என்று ஷீஆக்களால் அழைக்கப் படுகிறார்.
காஃபிரான அபூதாலிபை முஸ்லிமாக்கிய ஷீஆ மதத்தினர்.
நபியவர்களின் ஆரம்பகால இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவிய மனிதர்களில் ஒருவர் தான் அபூதாலிப் அவர்கள்.
இவர் நபியவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் போது அவர்களை தடுத்து,அவர்களுக்கு துன்பம் கொடுக்க நினைப்பவர்களுக்கு எதிராக கடும் போக்கை மேற்கொண்டு நபியவர்களுக்கு சாதமாக நடந்து கொண்டார்கள்.
இவருடைய இறுதிக் கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத காபிராகவே அபூதாலிப் அவர்கள் மரணித்தார்கள்.
ஷீஆக்களின் கேடு கெட்ட சிந்தனையின் ஒரு பகுதிதான் உண்மை முஸ்லீம்களான நபித் தோழர்களை காபிர்களாக சித்தரித்ததும்,உண்மையில் காபிராக மரணித்த அபூதாலிபை முஸ்லிமாக வர்ணிப்பதுமாகும்
ஷீஆ மத நூல்களில் அபூதாலிப் அவர்களின் பெயரை இம்ரான் எனக் குறிப்பிடுகிறார்கள்.இது தவறான கருத்து என அஹ்லுஸ் ஸ{ன்னா இமாம்கள் மறுத்தும் உள்ளார்கள்.
சுன்னத் ஜமாத் என்று நமக்கு மத்தியில் இன்றிருப்பவர்களும் இந்த ஷீஆக்களின் வழித்தோன்றல்களே !
அப்துல்லாஹ் ஜமாலி போன்ற நவீன ஷீஆக்களின் கொள்கையும் இதுவேதான்.
அபூதாலிப் அவர்கள் காபிரே !
உங்களுக்காக உதவி செய்தாரே! எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாகத்தாரே! உங்களுக்காக அடுத்தவர்களை கோபிப்பாரே ! அப்படிப்பட்ட உங்களின் பெரிய தந்தை அபூதாலிபுக்காக நீங்கள் நீங்கள் ஏதாவது நன்மை செய்தீர்களாஎன்று அப்பாஸ்(ரலி)அவர்கள் நபியவர்களிடம் கேட்டார்கள்.அதற்கு நபியவர்கள் அவர்(அபூதாலிப்)நரகத்தின் கரையில் இருக்கிறார்.நான் இல்லையென்றால் அதன் அடித்தளத்திலேயே இருந்திருப்பார் எனக் கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)
மேற்கண்ட செய்தியில் அபூதாலிப் அவர்கள் நரகத்தில் இருப்பதாக நபியவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.
நரகவாசிகளில் மிகக் குறைந்த வேதனையை அனுபவிப்பவர் அபூதாலிப் அவர்கள் தான்.அவர் (நெருப்பாலான)இரண்டு பாதணிகளை அணிந்திருப்பார்.அதன் தாக்கத்தினால் அவருடைய மூளை உருகி வடியும்.(முஸ்லிம்) 
இந்த இரண்டு செய்திகளும் அபூதாலிப் அவர்கள் காபிராகத் தான் மரணித்தார்கள் என்பதை மிகத் தெளிவாக சொல்லும் போது இந்த ஷீஆக்கள் மாத்திரம் அவரை முஸ்லிம் என்றும் உண்மை முஸ்லிம்களான நபித் தோழர்களை காபிர்கள் என்றும் குறிப்பிடுவதற்குக் காரணம் அவர்களின் வழிகேட்டின் உச்சகட்டம் தான்.
அபூதாலிபின் மார்பில் நபியவர்கள் பாலருந்தினார்களா?
நபியவர்கள் பிறந்ததிலிருந்து பல நாட்கள் பால் இல்லாமல் இருந்ததாகவும்,அப்போது அபூதாலிப் அவர்கள் அவருடைய மார்பில் நபியவர்களை அணைத்துக் கொண்டதாகவும் உடனே அல்லாஹ் அபூதாலிபுக்கு பால் சுறக்க வைத்து அதன் மூலம் நபியவர்களின் பசியைப் போக்கினான் என்றும் ஷீஆ மதத்தினர் தங்களின் மிக முக்கிய கிரந்தமான அல்காபியில் குறிப்பிட்டுள்ளனர்.
அபூதாலிப் அவர்கள் பெண்ணாக அல்லது பசுவாக இருந்தால் இவர்கள் கூறும் செய்தி உண்மையாக இருக்க முடியும் ஆனால் அவர் ஒரு ஆணாகவல்லவா இருந்தார் இனி எப்படி அவருக்கு பால் சுரக்க முடியும்?
கற்பனையை மார்க்கமாக்க முயன்றதினால் ஏற்பட்ட விளைவுதான் இது. சிந்தனை மங்கிப் போனதினால் சீர் கேடு உச்சியைத் தொட்டு விட்டது.
 ஷீஆ மதத்தினரின் மிக முக்கிய கொள்கைகள்.
நபி(ஸல்)அவர்களின் மரணத்தின் பின்னால் அலி(ரலி)அவர்களும்,மேலே நாம் சுட்டிக் காட்டிய ஷீஆக்களின் 12 இமாம்களுமே ஆட்சிக்குத் தகுதியானவர்கள்.மேற்கண்ட 12 பேர் அல்லாத யாரும் ஆட்சிக்கு தகுதியே இல்லாதவர்கள்.
நபியின் மரணத்திற்குப் பின் அலி(ரலி)அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆட்சிப் பொருப்பை அபூ பக்கர்,உமர்(ரலி)போன்றவர்கள் தந்திரமாக தமதாக்கினார்கள்.
அலி(ரலி)அவர்களின் ஆட்சியை தொடர்பு படுத்தி திருக்குர்ஆனில் இரங்கிய அல்விலாயா,அந்நூரைன் போன்ற இரண்டு அத்தியாயங்களையும்,நபித்தோழர்கள் திருக்குர்ஆனை ஒன்று சேர்க்கும் போது வேண்டுமென்றே குர்ஆனில் சேர்க்கவில்லை என்று கூறி குர்ஆனுக்கு பங்கம் விளைவிப்பது.
குர்ஆனில் பதினேலாயிரம் வசனங்கள் இருப்பதாக வாதிடுதல்.
தாம் வைத்துக் கொண்டிருக்கும் குர்ஆன் (முஸ்ஹபு பாத்திமா)தான் உண்மையானது என்றும் உண்மையான முஸ்லீம்கள் உலகம் பூராகவும் பயண்படுத்தும் குர்ஆன் மூன்றில் ஒரு பகுதிதான் என்றும் கூறி குர்ஆனையே சந்தேகப்பட வைத்தல்.
இவையனைத்தும் ஷீஆக்களின் அல்காபி,பஸ்லுல் கிதாப் போன்ற புத்தகங்களில் பதியப் பட்டுள்ளது.
நபியவர்களின் மனைவியர்கள் நபியின் குடும்பத்தில் இடம் பெறமாட்டார்கள் என்ற பிரச்சாரம்.
அலி(ரலி)அவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது.அவர்களிடம் மிகப் பெரும் அறிவுப் பொக்கிஷங்கள் எல்லாம் இருந்தன அவைகள் பற்றி எந்த நபித் தோழருக்கும் தெரியாது.
அலி,ஹஸன்,ஹ{ஸைன்,மிக்தாத்,அம்மார்,சல்மானுல்பார்சி,சுகைப்,பாத்திமா(ரலி)அவர்கள் உட்பட இன்னும் சில நபித் தோழர்களைத் தவிர மற்ற அனைவரும் மதம் மாறிவிட்டார்கள் என்று போதனை செய்தல்.
அலி(ரலி)அவர்கள்,அபூபக்கர்(ரலி)அவர்களுக்கு பைஅத் செய்ய மறுத்ததாக பிரச்சாரம் செய்வது.
முஃமின்களின் அன்னை ஆயிஷா(ரலி)அவர்களை நடத்தை கெட்டவர்களாக இன்றைக்கும் சித்தரித்தல்.
நபித் தோழர்கள் காபிர்கள்,அசுத்தமானவர்கள் என்று தீர்ப்பு சொல்வது.
உண்மை சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்களையும் காபிர்கள் என்று கூறுதல்.
ஷீஆ மதத் தலைவனான அலி சிஸ்தானி என்பவனின் கருத்துப்படி கஃபாவை தவாப் செய்யும் போது சன்னி முஸ்லிம் ஒருவர் ஷீஆ மதத்தை சேர்ந்தவர்களின் மேல் பட்டுவிட்டால் அந்த ஷீஆ உலூ செய்ய வேண்டும்.
ஷீஆக்களின் இமாமான அல் அஷ்கரீ என்பவர் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்வதாகவும் அவர் என்றோ ஒரு நாள் இந்த உலகுக்கு வெளிப்படுவார் என்று நம்புவது.இதற்கு அல் கைபா என்று சொல்லப் படுகிறது.
தக்கி(ய்)யா என்ற நயவஞ்சகக் கொள்கை.வெளிப்படையில் முஸ்லீம்களாகவும் உண்மையில் ஷீயாக்களாகவும் இருப்பது தக்கியா என்று சொல்லப் படும்.
கர்பலாவை தருசிப்பது மக்கா சென்று கஃபாவை தருசிப்பதை விட சிறந்தது என்று போதித்தல்.
முத்ஆ என்ற தற்காலிகத் திருமணம். ஒரு பெண்ணை ஆறு மாதம்,ஒரு வருடம் என்று ஒப்பந்தம் போட்டு திருமணம் முடித்தல்.
அல்பதாஆ என்ற அல்லாஹ்வின் அறிவில் குறை உள்ளதாக நம்பும் தீய நம்பிக்கை.ஒரு செயல் நடந்து முடிந்த பின்தான் அல்லாஹ்வுக்குத் தெரியும் அதற்கு முன் இறைவனுக்குத் தெரியாது என்று நம்புதல்.
குர்ஆனில் மாற்றப் பட்ட வசனங்கள் தொடர்பாக அது பற்றிய ஆரம்ப அறிவு இறைவனுக்கு கிடையாது என்று நம்புதல்
முஹர்ரம் முதல் பத்து நாட்கள் துக்கம் அனுஷ்டித்தல்.
ஆஷ{ரா நோன்பை நோட்காமல் தாமும் தமது சிறு குழந்தைகளின் மேனிகளிலும்,முகங்களிலும் இரும்புக் கம்பிகளால் தாக்கி இரத்தக் காயங்களை ஏற்படுத்துதல்.
முஹர்ரம் மாதத்தில் கர்பலாவில் ஹ{ஸைன்(ரலி)அவர்களின் பெயரால் மண்ணரை போன்ற உருவத்தை தயாரித்து,அலங்காரப் படுத்தி துக்கம் அனுஷ்டித்தல்.
கர்பலா நிகழ்ச்சி நடக்கும் காலங்களில் பெண்கள் தமது ஆபரணங்கள் எதையும் அணியமாட்டார்கள்.அது போல் தங்களை அலங்காரப் படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
ஷீயாக் கொள்கையும்,அதன் உட்பிரிவுகளும்.
ஷீயாக்களில் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருப்பதாக வரலாற்று ஆய்வாரள்கள் குறிப்பிடுகிறார்கள்.அதில் 4 பிரிவுகள் மிக முக்கியமான பிரிவுகளாக பிரித்து நோக்கப் படுகிறார்கள்.
1.அஸ்ஸபபிய்யா.
2.அஸ்ஸைதிய்யா.
3.அல்கைஸானிய்யா.
4.அர்ராபிழா.
அஸ் ஸபபிய்யா : 
இவர்கள் அப்துல்லாஹ் பின் சபா எனும் யூதனைப் பின்பற்றுவோர். இவர்கள் அலி (ரழி) மரணிக்கவில்லை என்றும் அவர்கள் மேகத்தில் இருப்பதாகவும் இடி அவரின் ஓசை மின்னல் அவரின் பார்வை என்றும் இறுதிகாலத்தில் மீண்டும் வந்து நீதத்தால் பூமியை நிரப்புவார் என்றும் நம்புகின்றனர். இது ‘அர்ரஜ்இய்யா’ வாகும்.
(அல் மிலல் வன்னிஹல் பாகம் 1 பக்கம் 146)
உட்பிரிவுகள்.
அல்குராபிய்யா (காகம்): الغرابية
அலி (ரழி) முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் உருவ அமைப்பில் ஒன்று என்றும்இ ஜிப்ரீல் (அலை) வஹியை மாற்றிவிட்டார் என்று ஜிப்ரீல் (அலை) அவர்களை திட்டும் – சபிக்கும் கூட்டம்
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 250)
அன்னமிரிய்யா:
முஹம்மத், அலி, பாதிமா, ஹஸன், ஹ{ஸைன் ஆகிய ஐவரில் அல்லாஹ் குடிகொண்டிருப்பதாக நம்புகின்றனர். இக்குழுவின் தலைவன் தன்மீதும் அல்லாஹ் இறங்கியுள்ளதாகவும் கூறினான்.
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 252)
அஸ்ஸபயிய்யா என்ற பெயரில் அழைக்கப்படும் இக்குழு யூதன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் பித்தர்களே. இவன் தன்னை முஸ்லிமாகக் காட்டிக்கொள்ள நடித்தான்.
இவன் மூலமாகவே ஷீஆக் கொள்கை உருவானது என்பதை தாரீகுத் தபரி, அல்பிதாயா வன்னிஹாயா, மீஸானுல் இஃதிதால், லிஸானுல் மீஸான், தாரீகு இப்னு கல்தூன் போன்ற நூல்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றமான ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ‘ஷீஆ’ இயக்கம்
உருவாவதற்கு பாரசீகப் பகுதியில் காணப்பட்ட சிந்தனைகளே காரணம் என பல ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாரசீக மக்கள் மன்னர் ஆட்சி முறைக்கு பழக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களுக்கு வாரிசுரிமை ரீதியிலான தலைமைத்துவமே பரிச்சியமாக இருந்தது. தகுதியான ஒரு தலைமையைத் தேர்வு செய்யும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே வாரிசுரிமை அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியலும் அவர்கள் நோக்கினர். ஆகவே தான் ‘ஷீஆ’ இயக்கம் பாரசீக சிந்தனைத் தாக்கத்தினால் வளர்ச்சியுற்றது என Pழணல போன்ற ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அஸ்ஸைதிய்யா: الزيدية
அலி → {ஹஸைன் → ஸைனுல் ஆப்தீன் → ஸெய்த். இதில் ஸெய்த் அவர்களை பின்பற்றுபவர்களே ஸைதிய்யாக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸைத் அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்தார். ஹிஜ்ரி 122 ல் கொல்லப்பட்டார். இவரிடம் மிதவாத சிந்தனைப் போக்குக் காணப்பட்டது. அதனால் மக்களால் நேசிக்கப்பட்டார். அறிவு ஆற்றல் ஆளுமை நற்பண்புகள் என்பனவுடையவராகத் திகழ்ந்தார்.
இமாம் ஹஸனுல் பஸரியின் மாணவனான இவர் முஃதஸிலா இயக்க ஸ்தாபக முன்னோடியான வாஸில் பின் அதா அபூ ஹனீபா போன்றோரிடமும் கல்வி கற்றுள்ளார். இதனால் இக்குழுவினர் அடிப்படை விஷயங்களில் முஃதஸிலாக் கொள்கையுடையோராகவும் மற்ற விஷயங்களில் ஹனபிய்யாக்களாகவும் கருதப்படுகின்றனர்.
ஸெய்த் அவர்கள் உமைய்யா ஆட்சியை எதிர்த்து மேற்கொண்ட போரில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை கர்பலாவில் ஹ{ஸைன் (ரழி) அவர்களது கொலை ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்ற மிகப் பெரும் அனுதாப உணர்வலைகளை ஏற்படுத்தி இக்கொள்கையை வளர்ச்சியுரச் செய்தது.
உட்பிரிவுகள்:
ஸெய்திய்யாக் குழு உருப்பினரான அபூ ஸஹ்ரா என்பவர் இக்குழுவை கொள்கை அடிப்படையில் இரண்டாக வகுத்து நோக்குகின்றார்.
மூத்தோர்கள்: 
இமாமத் தகுதி அடிப்படையில் வரலாம். எனவே அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரின் ஆட்சியை இவர்கள் அங்கீகரிக்கின்றனர். இவர்கள் தற்போது யெமன் நாட்டில் வாழ்கிறார்கள்.
இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளினால் ஸ{லைமானிய்யா, ஜாரூதிய்யா, ஸாலிஹிய்யா என்ற பெயர்களில் மூன்று பிரிவினராக பிரிந்து வாழ்கிறார்கள்.
(அல்மிலல் வந்நிஹல் பாகம் 1இ பக்கம் 155)
பின் வந்தோர்கள் :
இவர்கள் முன்னைய மூன்று நல்லாட்சி நடாத்திய கலீபாக்களையும் அவர்களது ஆட்சியை ஆதரிப்போரையும் ‘காபிர்’கள் என்கின்றனர்.
கொள்கைகள்.
இமாம்கள் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள்.
பாவம் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாகத் தங்கிவிடுவர்.
அல்லாஹ்வின் அறிவு: ஒவ்வொரு விடயமும் அது நடக்கும் போதுதான் அவனுக்குத் தெரியும். அதற்கு முன் தெரியாது. நிகழ்வுகள் அவனது அறிவில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. இது ஷீஆப் பிரிவில் மிகவும் வழிகெட்ட ராபிழாக்களினதும் கைஸானியாக்களினதும் கருத்திலிருந்து உருவானதாகும்;.
(ஸெய்தின் கொள்கை இதற்கு மாற்றமானதாகும்.)
அல் கைஸானிய்யா:
முஆவியா (ரழி) அவர்களின் மகன் யசீதின் ஆட்சிக் காலத்தில் ஹ{ஸைன் (ரழி) அவர்கள் ஈராக்கிலுள்ள கர்பலா எனுமிடத்தில் கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு பலி தீர்க்க வேண்டும் என ஒரு குழு உருவானது. இவர்கள் முக்தார் இப்னு அபீ உபைத் என்பவனின் தலைமையில் ‘தவ்வாபீன்’ என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். இவன் ஒரு மிகப் பெரிய பொய்யன் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
கர்பலாவில் ஹ{ஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டபோது ஆத்திரமடைந்த இப்பிரிவினர் அவர்களுக்கு உதவி செய்யத் தவறியதனால் அவரை இழந்தோம். எனவே நாம் பாவிகள் என்று கருதி ‘தவ்பா’ செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்க ஆரம்பித்தனர். உமையாக்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து பல தளபதிகளைக் கொலை செய்யதவர்களும் இவர்களே.
இவர்கள் ‘தனாஸ{க்’ என்ற மறுபிறவிக்; கொள்கையைக் ஆதரிக்கின்றனர். இவ்வாறு வழி கெட்ட கொள்கைகள் பல இவர்களிடம் குடிகொண்டுள்ளது. மார்க்கம் என்பது ஒரு மனிதனுக்குக் கட்டுப்படல் என்றும் அம்மனிதர் அலிதான் என்றும் முக்தார் என்பவன் பிரசாரம் செய்தான்;. இவனது புனைப் பெயர் ‘கைஸானிய்யா’ என்று அழைக்கப்படுகிறது. ஷீஆக்களின் அனைத்து வழிகெட்ட கொள்கைகளும் இப்பிரிவினரிடமும் காணப்படுகின்றன.
ராபிழாக்கள்.
இவர்கள் முன்னைய மூன்று ஆட்சியாளர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆட்சி அலி (ரழி) அவர்களுக்கும் அவரது பரம்பரைக்கும் மட்டுமே உரித்தானது. ஏனைய அனைவரது ஆட்சி முறையும் தவறானது என்று கருதுகின்றனர்.
ஹிஜ்ரி 121 மற்றும் 122ம் காலப் பகுதிகளில் ஷீயாக்களின் தலைவர்களில் ஒருவரான ஸைத் பின் அலி(ரஹ்) அவர்களுக்கும் ஷீயாக்களின் இன்னொரு சாராருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு பிளவினால் அவரைப் விட்டும் பிரிந்து போனவர்களுக்கு இந்தப் பெயர் சொல்லப் படுகிறது.அவரை விட்டும் அவர்கள் பிரிந்து,அவரைப் புறக்கணித்து சென்றதால் புறக்கணித்தவர்கள் என்ற பெயர் கொண்டு இவர்கள் அழைக்கப் படுகிறார்கள்.இந்த நிகழ்ச்சியை காரணமாக வைத்துத் தான் ஷீயா மதத்தினர் ராபிழாக்கள்,ஸைதிய்யாக்கள் என்று பிரிந்தார்கள்.
இஸ்மாயீலிய்யா:
இமாமிய்யாவின் உட்பிரிவுகளில் ஒன்றான இவர்களின் குழு பன்னிரெண்டு இமாம்களில் முதல் ஆறு நபர்களையும்; நம்புகின்றனர். ஏழாவது இமாம் யார் என்பதில் ஏற்பட்ட கருத்து மோதல் இப்பிரிவுக்கு வழிகோலியது. ஜஃபர் அஸ்ஸாதிக் என்பவர் இவர்களின் ஆறாவது இமாம். இவருக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.
1. இஸ்மாயீல்.
2. மூஸா அல் காழிம்.
இஸ்மாயீலைத் தலைவராக ஏற்றவர்கள் இஸ்மாயீலிய்யாப் பிரிவினர் எனப்படுகின்றனர். மார்க்க விஷயங்களில் வரம்பு மீறிச் சென்ற இக்குழு ஈராக்கில் தோன்றி வளர்ந்தது. இன்று ஈரான், குராஸான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர். எகிப்தில் தோன்றிய பாதிமியர் ஆட்சியும் இவர்களின் வழிமுறைகளுடையதே. இவர்கள் தமது 14வது இமாமாக ‘ஆகாகானை’ நம்புகின்றனர்.
நுஸைரிய்யா அல்லது அலவிய்யா :
இஸ்மாயீலிய்யாப் பிரிவின் உட்பிரிவாக உள்ள இக்குழுவினர் அலி (ரழி) அவர்களை அல்லாஹ்வின் அவதாரம் என நம்புகின்றனர். இவர்களை அலவிய்யாக்கள் எனவும் அழைப்பதுண்டு. இவர்கள் கிறிஸ்தவ மதத் தாக்கத்திற்குட்பட்டு அவர்களின் முக்கிய விழாக்களையும் பெருநாள் தினங்களையும் கொண்டாடுவதோடு கிறிஸ்தவப் பெயர்களைச் சூட்டிக் கொண்டுள்ளனர். இன்று இப்பிரிவினர் சிரியாவிலேயே அதிகமாக வாழ்கின்றனர். அங்கு நுஸைரிய்யா ஆட்சியே உள்ளது.
துரூஸிகள்:
இறைவன் இமாமின் வடிவில் வந்துள்ளான் என்ற கொள்கையை கொண்டவர்கள் தான் இந்த துரூஸிகள். பாதிமிய்யா ஆட்சியாளனான அல்ஹாகிம் பீ அமிரில்லாஹ் என்பவன் தன்னில் இறைவன் அவதரித்துள்ளதால் தன்னை வணங்குமாறு மக்களைப் பணித்தான்.
இதன் காரணமாக பொதுமக்கள் இவன் மேல் கோபப்பட்டதை அறிந்த அவனுடைய உறவினர்கள் அவனைக் கொலை செய்துவிட்டனர்.
அல் ஹாகிம் பீ அம்ரில்லாஹ் கொலை செய்யப்பட்ட பின்னர் ‘இவன் சாகவில்லை; மறைந்திருக்கின்றான்’ என்று பாரசீகப் பிரதேசத்தில் வாழ்ந்த ஹாமாஸ் அத்துரூஸி என்பவன் பிரசாரம் செய்தான்.அவனை மையமாக வைத்து உருவெடுத்ததே இந்த துரூஸிகள் பிரிவு.
அல் – இஸ்னா அஷரிய்யா, இமாமிய்யா :
இவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் ஆட்சி உரிமை அலி (ரழி) அவர்களுக்கே வந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள். முன்னைய ஆட்சியாளர்களைத் துரோகிகளாகக் கருதுகின்றனர். அரசாட்சி இமாம் என்ற தகுதி முறைப்படியே இயங்க வேண்டும் என்பதோடு வரம்பு மீறிய பல வழிகெட்ட கொள்கைகளுடன் உள்ளனர். இக்குழுவினர் ஈரான், ஈராக், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் கனிசமாக வாழ்கின்றனர்.
‘அஹ்லுல்பைத்’ திலிருந்தே 12 இமாம்களும் தெரிவு செய்யப்படுவர் என நம்பும்; இவர்கள், ஒவ்வொருவரும் தனக்குப் பின்னால் வரும் இமாமை ‘வஸிய்யத்’ மூலம் நியமித்து பதவியில் அமர்த்த வேண்டும்  எனக் கூறுகின்றனர்.
இந்த இமாமத் பதவிக்கு வரும் 12 பேரும் ‘மஃஸ{ம்கள்’ பாவங்கள் செய்யாதவர்கள். எனவே அவர்களை ஏற்பது ஈமானின் ஓர் அங்கம்; மறுப்பவர்கள் காபிர்கள் என்றும் வாதாடுகின்றனர். இவ்வாறு இவர்கள் நம்பும் இமாம்களில் முதன்மையானவர் அலி (ரழி) அவர்களும் இறுதியானவர் முஹம்மத் இப்னு ஹஸன் அல் அஸ்கரீ அவர்களும் உள்ளனர்.
இமாம்களில் இறுதியான முஹம்மத் என்பவர்; தனது தந்தையின் வீட்டில் திடிரென்று மறைந்துவிட்டதாகவும் அவர் மீண்டும் உலகுக்கு – பூமியில் குழப்ப நிலைகள் அதிகரிக்கும் காலப்பிரிவில் நீதியை நிலைநாட்ட – திரும்பி வருவார் என்றும் நம்புகின்றனர். இவரின் வருகையினால் மனிதர்கள் அனைவரும் பயன் பெறுவர் என்றும் கூறுகின்றனர். எதிர்பார்க்கப்படும் மஹ்தி (அலை) இவர்தான் எனவும் கருதுகின்றனர். ஷீஆக்களிடையே உள்ள பல பிரிவுகளிடையே மஹ்தி பற்றி மாறுபட்ட கருத்துக்களும் சிந்தனைகளும் உள்ளன. (மஹ்தி பற்றி ஆரம்பத்தில் நாம் கூறியதைப் பார்க்கவும்.)
முஹம்மதிய்யா:
ஆலி, ஹ{ஸைன், அப்துல்லாஹ்,முஹம்மத். இவர்கள் தங்களது இமாமாகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹ்தியாகவும் முஹம்மத் என்பவரைக் கருதுகின்றனர்.
முஹம்மத் என்பவர் ஹி 93ல் பிறந்தார். ராபிழாக்கள் இவரை ‘அந்நப்ஸ் அஸ்ஸகிய்யா’ பரிசுத்த ஆத்மா என்ற புனை பெயரிட்டு அழைத்தனர். இவர் ஹிஜ்ரி 145ம் ஆண்டுகளில் அப்பாஸிய ஆட்சியாளர் அபூ ஜஃபர் அல் மன்சூர் என்பவருக்கு எதிராக மதீனா எல்லைப் புறங்களில் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தபோது அபூ ஜஃபர் அல் மன்சூர் ஒரு படையை அனுப்பினார். சண்டை உக்கிரமாக நடைப்பெற்றது. எனினும் தளபதியின் தந்திரோபாயத்தால் முஹம்மத் களத்தில் கொலை செய்யப்பட்டார். தளபதி அவரது தலையைத் துண்டித்து அபூ ஜஃபர் அல் மன்சூருக்கு அனுப்பிவைத்தார்.
பாத்திமிய்யாக்கள் : 
ஷீயாக் கொள்கையை பரப்புவதற்கு பாத்திமா(ரலி)அவர்களின் பெயரைப் பயன்படுத்துவதுடன் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதாகவும் சொல்லிக் கொள்பவர்கள்.
உபைதிய்யாக்கள் : 
ஷீயா மதத்தைப் பரப்பக் காரணமாக இருந்து அதற்கு உதவி செய்த உபைதுல்லாஹ் என்ற ஆட்சியாளரின் பெயரைக் கொண்டு இவர்கள் உபைதிய்யாக்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.
ஹஷபிய்யாக்கள் : 
மஹ்தி வந்த பின்னர் தான் புனிதப் போர் ஆரம்பிக்கும் என்றும்,அது வரை மட்டைகளாலும்,பலகைகளாலும் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டவர்கள்.
பாதினிய்யாக்கள் : 
மார்க்கத்தை அகம்,புறம் என பிரித்து குர்ஆன்,சுன்னாவிற்கு மாற்றமாக மார்க்கத்திளை விளங்க முற்பட்டதினால் இவர்களுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.ஷீயா பிரிவுகளில் மிகவும் ஆபத்தான் பிரிவாக இதனைக் குறிப்பிட முடியும்.
 குர்ஆனில் விளையாடும் ஷீயாக்கள்.
ஷீயாக்களின் சீர்கேடுகளில் மிகவும் கொடூரமானது,கொடுமையானது மார்க்கத்தில் இல்லாதவைகளை நுழைத்து தூய இஸ்லாமியக் கொள்கையை நாசமாக்க முயன்றதே! அதிலும் குறிப்பாக திருக்குர்ஆனை திரிவுபடுத்த முயன்றமையே மிகவும் பாரதூரமான செயலாகும்.
திருக்குர்ஆனில் இல்லாத வாசகங்களை,வசனங்களை சேர்க்க முயன்றதின் மூலம் திருமறையையே சந்தேகத்திற்குள்ளாக்கப் பார்த்தார்கள் இறைவனின் மிகப் பெரும் கருணையினால் ஷீயாக்களின் இந்தக் கபட முயற்சி முறையடிக்கப்பட்டு திருமறைக் குர்ஆன் இன்று வரை அல்லாஹ்வினால் சரியான முறையில் பாதுகாக்கப்படுகிறது,மறுமை நாள் வரை பாதுகாக்கப்படும்.
திருமறைக் குர்ஆன் ஷீயாக்களின் கேடு கெட்ட கொள்கைக்கு எதிரான கருத்தை கொண்டிருப்பதினாலும் தங்கள் கருத்துக்கு திருமறையில் ஆதாரம் காட்ட முடியாமையினாலும் இந்த வழி கேடர்கள் புதிதாக சில வசனங்களை குர்ஆனில் நுழைவிக்க முயன்றார்கள்.
கவலைக்குறிய விஷயம் என்னவெனில் இலங்கையிலுள்ள சில போலி மார்க்க அறிஞர்கள் இன்றைக்கும் இந்த வழிகெட்ட ஷீயா மதத்தினரை முஸ்லீம்கள் என்று பேசியும்,எழுதியும் திரிகிறார்கள்.
ஆனால் உண்மையில் இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றமானவர்கள் என்பதை பொதுமக்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
இனி குர்ஆன் பற்றிய ஷீயாக்களின் நிலைபாட்டையும், திரிவுபடுத்துதலையும் பார்ப்போம்.
முஸ்லீம்களாகிய நாம் ஸஹீஹ{ல் புகாரியை எப்படி மதிக்கிறோமோ அதற்கு சமனாக ஷீயா மதத்தினார் மதிக்கும் ஒரு புத்தகம் தான் உசூலுல் காபி என்ற நூலாகும். அபூ ஜஃபர் யஃகூப் அல் குலைனி அர்ராஷீ என்பவர் எழுதிய இந்தப் புத்தத்தைத் தான் மிகச் சிறந்த முதன்மை நூலாக ஷீயாக்கள் மதிக்கிறார்கள்.இது மொத்தமாக எட்டு பாகங்களைக் கொண்ட புத்தகத் தொகுதியாகும்.ஷீயாக்கள் ஹதீஸ்கள் என்று நம்பும் சுமார் 17000க்கும் மேற்பட்ட கட்டுக்கதைகள் இதில் உள்ளடங்கியுள்ளது.
ஷீயாக்களினால் வெளியிடப்படும் நூல்களிலும்,சஞ்சிகைகளிலும்,சொற்பொழிவுகளிலும் இந்த நூலை அவர்கள் ஆதாரம் காட்டுவதை நாம் அவதானிக்க முடியும்.
உதாரணத்திற்கு இமாம் என்று ஷீயா மதத்தினர் போற்றிப் புகழும் கொமைனியினால் எழுதப்பட்ட நாற்பது ஹதீஸ்களின் தெளிவுரை – ஒளியை நோக்கி என்ற புத்தகத்தில் பல இடங்களில் காபியை ஆதாரமாக எடுத்தெழுதுவதை பார்க்க முடியும்.
அந்த புனித(?) காபி குர்ஆன் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள். ஷீயாக்கள் அலி(ரலி)அவர்களை நபியவர்களுக்குப் பின் வரவேண்டிய கலீபாக்களில் முதன்மையானவர்களாக கருதுகிறார்கள்.அலி(ரலி)அவர்கள் தான் நபிக்கு அடுத்து கலிபாவாக வரவேண்டும் என்று அல்லாஹ் குர்ஆனில் அருளியிருந்ததாகவும்.ஆனால் அபூபக்கர்,உமர்,உஸ்மான்(ரலி) ஆகிய மூன்று கலீபாக்களும் குர்ஆனில் இருந்த அந்தத் தகவலை மறைத்து குர்ஆனில் இருட்டடிப்பு செய்துவிட்டதாக இந்த ஷீயா மதத்தினர் நம்புகிறார்கள்.
ஷீயாக்களின் இந்த கொள்கையை அவர்களுடைய புத்தகங்களிலேயே நாம் காணலாம்.
காபி என்ற அவர்களின் புனித(?) நூலில் இடம்பெற்றிருக்கும் பல கட்டுக்கதைகளில் 5ஐ மாத்திரம் நாம் இங்கே குறிப்பிடுகிறோம். இந்த கட்டுக் கதைகள் எல்லாம் காபி என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டதாகும்.
பொய் இலக்கம் 01 
திருமறைக் குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 90 வசனத்தை இறைவன் இப்படி இறக்கியிருக்கிறான்.
بِئْسَمَا اشْتَرَوْا بِهِ أَنْفُسَهُمْ أَنْ يَكْفُرُوا بِمَا أَنْزَلَ اللَّهُ بَغْيًا [البقرة : 90
அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது (2:90)
ஆனால் ஷீயா மதத்தைச் சேந்தவர்கள் புனிதமாக நினைக்கும் காபி நூலிலே இந்த வசனத்தை மாற்றியிருக்கிறார்கள்.
بِئْسَمَا اشْتَرَوْا بِهِ أَنْفُسَهُمْ أَنْ يَكْفُرُوا بِمَا أَنْزَلَ اللَّهُ في علي بَغْيًا 
அலி விஷயத்தில் அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது.
ஆதாரம் : ஷீயா மத நூல் காபி , கதை இலக்கம் : 25 பக்கம் 417
பொய் இலக்கம் 02
திருமறைக் குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 23வது வசனத்தை இறைவன் இப்படி இறக்கியிருக்கிறான்.
وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ [البقرة : 23
நமது அடியாருக்கு(முஹம்மதுக்கு)நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு (அதில்)நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டுவாருங்கள்.(2:23)
ஆனால் ஷீயா மதத்தைச் சேர்ந்தவர்களின் காபி நூலிலே இந்த வசனத்தை மனோ இச்சைப்படி இப்படி திரித்து எழுதியுள்ளார்கள்.
وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا في علي  فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ 
நமது அடியார் அலி விஷயத்தில் நாம் இறக்கியதில் நீங்கள் சந்தேகம் கொண்டால்…………
ஆதாரம் : ஷீயா மத நூல் காபி , கதை இலக்கம் : 26 பக்கம் 417
குறிப்பிட்ட வசனத்தில் பீ அலிய்யின் என்ற வாசகத்தை ஸஹாபாக்கள் நீக்கிவிட்டு குர்ஆனைத் தொகுத்ததாக ஷீயா மதத்தினர் நம்புகிறார்கள்.
பொய் இலக்கம் 03
திருமறைக் குர்ஆனின் நான்காவது அத்தியாயத்தில் 66வது வசனத்தில் இறைவன் இப்படி இறக்கியிருக்கிறான்.
وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا مَا يُوعَظُونَ بِهِ لَكَانَ خَيْرًا لهم [النساء : 66
 தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்கு சிறந்ததாக இருந்திருக்கும்.(4:66)
ஆனால் ஷீயா மதத்தைச் சேர்ந்தவ்களின் காபி நூலிலே இதை இப்படி திரிவு படுத்தியுள்ளார்கள்.
وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا مَا يُوعَظُونَ بِهِ في علي  لَكَانَ خَيْرًا لهم 
அலி விஷயத்தில் தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்கு சிறந்ததாக இருந்திருக்கும்.
ஆதாரம் : ஷீயா மத நூல் காபி, கதை இலக்கம் : 28 பக்கம் : 417
பொய் இலக்கம் 04
திருமறையின் 70வது அத்தியாயத்தின் முதல் இரண்டு வசனங்களையும் இறைவன் இப்படி இறக்கியிருக்கிறான்.
سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ  لِلْكَافِرِينَ لَيْسَ لَهُ دَافِعٌ [المعارج : 1 ،2
இறைவனை மறுப்போருக்கு நிகழக்கூடிய வேதனை குறித்து கேள்வி கேட்பவன் கேட்கிறான். அதை (வேதனையை) தடுப்பவன் யாருமில்லை.(70:1,2)
ஷீயா மதத்தைச் சேர்ந்தவர்களின் காபி நூலி இந்த வசனத்திற்கு விளக்கம் சொல்லும் அபூ அப்துல்லாஹ் என்பவர் இந்த வசனத்தை இப்படித் திரிக்கிறார்.
سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ  لِلْكَافِرِينَ بولاية علي لَيْسَ لَهُ دَافِعٌ
இடையில் பி விலாயத்தி அலிய்யின் என்ற வார்த்தையை கலீபாக்கள் விட்டுவிட்டதாக அவர் வாதிடுகிறார்.
ஆதாரம் : ஷீயா மத நூல் காபி, கதை இலக்கம் : 48 , பக்கம் : 422
பொய் இலக்கம் 05
இரண்டாவது அத்தியாயம் 59வது வசனத்தை இறைவன் இப்படி இறக்கியிருக்கிறான்.
فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنْزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ [البقرة : 59
ஆனால் ஷீயா மதத்தை சேர்ந்தவர்கள் அந்த வசனத்திற்கு இடையில் இரண்டு வார்த்தைகளை அதிகப்படுத்தியுள்ளார்கள்.
فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا ال محمد حقهم  قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنْزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا ال محمد حقهم   رِجْزًا مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ 
கோடு போட்ட இடங்களை கவணிக்கவும்.
ஆதாரம் : ஷீயா மத நூல் காபி, கதை இலக்கம் : 48 , பக்கம் : 423,424
ஷீயாக்களின் கேடு கெட்ட பத்வாக்களில் சில………………….
சகோதரர் பி.ஜெ அவா்கள் அல் ஜன்னத் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த 1980 காலப் பகுதியில் ஷீயாக்களின் மறுபிரவேசம் என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரையை இலங்கை அமைப்பு புத்தகமாக வெளியிட்டது. அதிலே சகோதரர் பி.ஜெ எழுதிய தகவலையே நாமும் வெளியிடுகிறோம்.
தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள்.
(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸுல் (ஸல்), அலி (ரழி), பாதிமா (ரழி),ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது, அலி (ரழி) ஆவார். இதில், நபியை விட அலியை உயர்த்துகின்றனர்.
(அய்யாஷி தப்ஸீர் பாகம்- 1 பக்கம்:128 நூருஸ்ஸகலைன் பாகம் - 1 பக்கம்:238)
ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில் நபி (ஸல்) அவர்கள், ருகூவு, ஸஜ்தாச் செய்ய நான் பார்த்திருக்கின்றேன். அப்போது, அவர்கள் இறைவா! உன் அடியார் அலியின் பொருட்டால், அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக என்று துஆச் செய்தார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள் என்று இட்டுக்கட்டியுள்ளனர்.
(அல்புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன் பக்கம் - 1 பக்கம்: 226)
அலியின் பொருட்டால், நபி (ஸல்) அவர்களே துஆச் செய்தார்கள் என்று இட்டுக்கட்டி வம்பளக்கும் இவர்களின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா?இன்னுமுள்ளது இது போன்ற குப்பைகள்.
நான் முஸா (அலை), ஹிழ்று (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால், அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன் என்று அலி (ரலி) கூறினார்களாம். ஷீயாக்களில், புகாரி இமாமைப் போல் மதிக்கப்படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.
அல்உஸுல் காபீ கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம் 1, பக்கம் 261
உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங் கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியை சோதித்தான் என்று அலி (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸி (ரலி) கூறினார்களாம்.
அல்புர்ஹான் முன்னுரை, பக்கம் 27
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது முஹம்மதே படைப்பினங்களில் நீர் யாரை விரும்புகின்றீர்? என்று இறைவன் கேட்டானாம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அலி என்றார்களாம்.முஹம்மதே திரும்பிப் பாரும் என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலி (ரலி) நிற்கிறார்களாம்.
தஃப்ஸீருல் புர்ஹான், பாகம் 2, பக்கம் 404
ஷீயாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.
அல் உஸுலுமினல் காபி, பக்கம் 258
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம். 
அல் உஸுலுமினல் காபி, பக்கம் 393
இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம். அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.
மேற்படி நூல் பக்கம் 402
எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பன்னிரெண்டு இமாம்களும் அறிவர்.
குர்புல் இஸ்னாத், பக்கம் 146
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்கு தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்களாம்.
அல் உஸுலுமினல் காபி, பாகம் 19, பக்கம் 197
பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர் ) வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன்.நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன் என்றார்களாம்.
அல் உஸுலுமினல் காபி, பாகம் 1, பக்கம் 261
இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா?என்று அபூ ஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்களாம்.
கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470
அல்லாஹ் அலி (ரழி) அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினானாம்:
யார் அலியை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே. எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலியை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன். அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷீயாக்கள்.
பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
ஷீயாக்களாகிய உங்களில் இருவர் கூட ஏன் ஒருவர் கூட நரகிற்குச் செல்ல மாட்டார்கள் என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 78
ஷீயாவைச் சேர்ந்தவர் எந்த அமலும் செய்யாமல் தன் நன்மையை நிரப்பிக் கொள்வார். என்றும் ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 315
ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும், கற்கள், மணல்கள், மரங்கள், முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாலும் அவை பதியப்படுவதில்லை என்று ஷீயாக்களின் எட்டாவது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டாராம்.
உயூனு அக்பாரிர் ரிளா, பாகம் 2, பக்கம் 236
எல்லா நபிமார்களும் முஹம்மத் (ஸல்) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல்எல்லா மலக்குகளும் ஜிப்ரீலும் ஏற்றது போல்என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர் என்று அலி (ரழி) கூறினார்களாம்.
அல்உஸுலுல் காபி, பாகம் 1, பக்கம் 197, 198.
ஷீயாக்களின் அடிப்படை எத்தகையது என்பதற்கு இவை தெளிவான சான்றுகள். புரட்சித் தலைவர் குமைனியின் கொள்கை இதுவே! இதோ குமைனியே வாக்குமூலம் தருகிறார்:
பன்னிரெண்டு இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும், நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது நமது கொள்கையாகும். ஏனெனில், பன்னிரெண்டு இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும், பன்னிரெண்டு இமாம்களும், மலக்குகளும், நபிமார்களும் அடைய முடியாத விஷேச நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர்.இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
விலாயதே பகீஹ் தர் குஸுஸே ஹுகூமதே. இஸ்லாமி, தஹ்ரான் வெளியீடு பக்கம் 58
குமைனியே தனது கொள்கையை இவ்வளவு தெளிவாக அறிவித்த பிறகு அடிப்படையிலேயே இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர் செய்த புரட்சி எப்படி இஸ்லாமிய புரட்சியாகும்?
 அலி (ரழி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.
காஷானியின் கிதாபுஸ்ஸாபி, பாகம் 1, பக்கம் 347
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித் தோழர்களும் மதம் மாறிவிட்டனர் என்று ஷீயாக்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஸலீம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.
மிக்தார் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகிவிட்டனர்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 245
அபூபக்கரும், உமரும், அலி (ரழி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 2, பக்கம் 246
(அபூபக்கருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸாரிகள் மட்டும் அபூபக்கருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றொரு அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.
கிதாபுர்ரவ்லா மினல் காபி, பக்கம் 296
எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலி என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.
கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு
இப்படி நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் சங்கதிகள் ஏராளம். திருக்குர்ஆனில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்டிக்கப்படும் வசனங்கள் யாவும் நபித் தோழர்கள் குறித்தே இறங்கியதாக இவர்களின் தப்ஸீர்கள் கூறுகின்றன. விரிவஞ்சி தவிர்க்கின்றோம்.
இஸ்லாத்துடன் சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வழிகேடுகளின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி எனச் சாதிப்போர் சிந்திக்க வேண்டும்.
ஷீயாக்களிடம் முத்ஆ என்றொரு கொள்கை உண்டு. அதாவது, சட்டபூர்வ விபச்சாரம். இதன் மூலம் ஒழுக்க வாழ்க்கையை சீரழித்தவர்கள், சீரழித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஷீயாக்கள்.
ஒரு பெண்ணை சில நாட்களுக்கு மட்டும் வாடகைக்கு பேசிக் கொண்டு அவளுடன் கூடுவதற்குத் தான் முத்ஆ என்பர். இதுபற்றி ஷீயாக்கள் தரும் விளக்கத்தைக் காண்போம்.
ஒரு தடவை மட்டும் உறவு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு முத்ஆ செய்யலாமா? என்று ஷீயாக்களின் பத்தாவது இமாமிடம் கேட்கப்பட்டபோது செய்யலாம் என்றாராம்.
அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 460
இந்த முத்ஆவுக்கு நான்கு என்ற வரம்பு உண்டா? என்று அலி (ரழி) அவர்களிடம் கேட்ட போது ஆயிரம் பெண்களை வேண்டுமானாலும் இவ்வாறு செய்து கொள்! ஏனெனில், இவர்கள் கூலிக்காரர்கள் என்றார்களாம்.
தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 259
ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். பிறகு அவளுக்குக் கணவன் இருப்பதாக எனக்கு எண்ணம் தோன்றியது. விசாரித்துப் பார்த்த போது அவளுக்கு கணவன் இருப்பது தெரிய வந்தது என்று நான் ஜஃபர் சாதிக் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் நீ ஏன் இதுபற்றி அலட்டிக் கொள்கிறாய் அவள் கூறுவதை நீ நம்ப வேண்டியதுதான் என்று பதிலளித்தார்களாம்.
அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 462
மஜுஸி எனும் மதத்தவளுடன் இவ்வாறு முத்ஆ செய்யலாம் என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 256
யூத, கிறிஸ்தவப் பெண்களுடன் இப்படி முத்ஆ செய்யலாம் என்று அபுல் ஹஸன் (8வது இமாம் கூறினாராம்!
அதே நூல் அதே பக்கம்)
விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவளுடனும் இவ்வாறு வாடகை மனைவியை அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவளை விபச்சாரத்திலிருந்து தடுக்குமாம்.
(அதே நூல் அதே பக்கம்)
இந்த மூடர்கள் விபச்சாரத்திற்கு என்னதான் அளவுகோள் வைத்துள்ளார்களோ? இதெல்லாம் குமைனியின் இஸ்லாமிய அரசில் உண்டா? என்று கேட்கக் கூடும். நிச்சியம் உண்டு. அங்கே விபச்சாரத்திற்கு சட்டபூர்வ அனுமதி உண்டு. ஆனால், முத்ஆ என்பதாகப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். சாட்சாத் புரட்சித்தலைவர் குமைனி கூறுவதைக் கேளுங்கள்!
விபச்சாரிகள் உட்பட எந்தப் பெண்ணையும் இவ்வாறு வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
(குமைனியின் தஹ்ரீருல் வஸீலா பக்கம் 292)
விபச்சாரத்துக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் ஓர் ஆட்சிதான் இஸ்லாமிய ஆட்சியா? இஸ்லாமிய ஆட்சிக்குப் பாடுபடும் இயக்கங்கள் இதைத்தான் செய்யப் போகின்றனவா? என்பதைச் சிந்திக்கட்டும்!
சமாதி வழிபாட்டுக்கு வழிகாட்டியவர்களும் இந்த ஷீயாக்களே!
ஹுஸைன் (ரழி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ்ஜுகளுக்கும், ஏற்றுக் கொள்ளப்;பட்ட நூறு உம்றாவுக்கும் சமமானதாகும்.
அல்இர்ஷாத் (முபீத் என்பவர் எழுதியது) பக்கம் 252
யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு என்று நபி (ஸல்) கூறினார்களாம்.
அல் இர்ஷாத் பக்கம் 252
அல்லாஹ்வின் தூதர் பெயரால் இதுபோல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் வர வேண்டியவர் என்றோரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அல் – காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம். அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?
காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.
தப்ஸீர் சாபி, பாகம் 1, பக்கம் 172
காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாதிமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.
தப்ஸீர் சாபி, பாகம் 2, பக்கம் 108
இத்தகைய கேடுகெட்ட கொள்கைகாரர்களே ஷீயாக்கள். பொய்களையும்,கற்பனைகளையுமே மார்க்கமாகக் கொண்டிருப்பவர்கள் செய்தது இஸ்லாமியப் புரட்சி என்றால் இதை விட வெட்கக் கேடு எதுவுமில்லை. இவர்களின் கற்பனைகள் சிலவற்றையும் காண்போம்.
விபச்சாரம் செய்த ஒரு மன்னன் யானையாக உருமாற்றப்பட்டான்.
கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணொருத்தி முயலாக மாற்றப்பட்டாள்.
பேரீத்தம் பழங்களைத் திருடிக் கொண்டிருந்தவன் வாத்தாக மாற்றப்பட்டான். யெமன் நாட்டில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவன் நட்சத்திரமாக மாற்றப்பட்டு விட்டான். கோள் சொல்லித் திரிந்தவன் தேளாக மாற்றப்பட்டு விட்டான். இப்படியெல்லாம் ஏராளமான மௌடீகங்களை நபியின் பெயரால் இவர்கள் அரங்கேற்றினார்கள். ஷீயாக்களின் இலலுஷ்ஷராயிஃ எனும் நூலில்485ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.
இது போன்ற மூடத்தனங்களுடன் ஆயத்துல்லாஹ் எனும் ஷீயாத் தலைவருக்கு இவர்கள் அளித்து வரும் மரியாதை இருக்கிறதே: சாயி பாபாவுக்கு அவர் பக்தர்கள் செய்யும் மரியாதையும் மிஞ்சி விடும். இவர்கள் தான் இஸ்லாமிய புரட்சியாளர்களா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்!
மஹ்தி பற்றிய உண்மை நிலை என்ன?
ஷீஆக்களிடையே மஹ்தி பற்றி பல வகையான நம்பிக்கைகள் உள்ளன.
முஹம்மத் இப்னு அல்ஹனபிய்யா என்பவர்தான் மஹ்தி என்று கைஸானிய்யாக்களும், முஹம்மத் இப்னு அல் ஹஸன் அல் அஸ்கரி தான் மஹ்தி என்று இமாமிய்யாக்களும், இன்னும் பலர் உண்டு என்று மற்ற பிரிவினர்களும்; நம்புகிறார்கள்.
உண்மையில் மஹ்தியைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
மஹ்தியைப் பற்றி நபி(ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.மஹ்தி பற்றிய உண்மைச் செய்திகளை விட அதிகமாக பொய்யும், புரட்டும், கட்டுக்கதைகளும்தான் உள்ளன.
இந்தக் கட்டுக்கதைகள் மூலமாகத்தான் போலிகள் பன்னெடுங் காலமாக முஸ்லீம் சமுதாயத்தை ஏமாற்றி வருகிறார்கள்.இந்த ஏமாற்றுப் பேர்வழிகளில் மிக முக்கிய இடம் வகிப்பவர்கள் ஷீயாக்கள் தான்.
மஹ்தீ என்பவர் யார் 
எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.
மஹ்தீ குறித்து ஆதாரப்ப+ர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சில போலிகள் முஸ்லிம் சமுதாயத்தை ஒவ்வொரு காலத்திலும் வழி கெடுத்து வருகின்றனர்.
முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் மஹ்தீ என்பவருக்கு மார்க்க அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர் ஆன்மீக குருவாகவோ மார்க்கச் சட்ட நிபுணராகவோ திகழ்வார் என்றோ ஆதாரப்ப+ர்வமான எந்த முன்னறிவிப்பும் இல்லை. அவர் வலிமை மிக்க மன்னராக இருப்பார் என்பது தான் முன்னறிவிப்பின் முக்கிய சாரம். அவரது ஆட்சி பரந்து விரிந்து இருக்கும். அவரது ஆட்சியில் செல்வம் செழித்து ஓடும். நீதியும் நேர்மையும் கோலோச்சும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாகும்.
மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்
(நூல் அபூதாவுத் – 4284)
பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
(நூல் அபூதாவுத் – 4282)
அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.      (நூல் திர்மிதி – 2230)
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மஹ்தீ என்ற பெயரில் ஒரு மன்னர் வருவார் என்று முன்னறிவிப்புச் செய்கின்றன. இந்த முன்னறிவிப்பில் நாம் செயல்படுத்துவதற்கு ஒரு விஷயமும் இல்லை. நமது காலத்தில் அப்படி ஒருவர் வந்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முன்னறிவிபு நிறைவேறி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அப்படி வராவிட்டால் எதிர்காலத்தில் அவர் வருவார் என்று கருதிக் கொள்ள வேண்டும். இதைத் தவிர மார்கக் ரீதியாக மஹ்திக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
ஷியாக்கள் முஹம்மத் பின் அல்ஹசன் அலஸ்கரீ என்பவர் தான் மஹ்தீ என்று கூறுகின்றனர். இவர் அல்காயின் எனவும் குறிப்பிடப்படுவார். இவரது பெயர் நபிகள் நாயகத்தின் பெயராக இருந்தாலும் இவரது தந்தை பெயர் ஹசன் என்பதாகும். அப்துல்லாஹ் அல்ல. எனவே இவர் மஹ்தீ அல்ல என்பது உறுதி. மேலும் அவர் பூமியை ஆளவுமில்லை நீதியால் நிரப்பவுமில்லை.
மஹ்தீ என்பவர் ஆட்சி அதிகாரம் செய்யும் ஒரு மன்னரே தவிர முரீது கொடுத்து மக்களை வழி கெடுப்பவர் அல்ல. இந்த உண்மை விளங்காத மக்களிடம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் தான் மஹ்தீ என்று வாதிட்டு மக்களை வழிகெடுத்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
ஆக மஹ்தியின் பெயரால் இந்த ஷியாக்கள் மக்களை வழிகெடுக்கிறார்கள் என்பதே உண்மை.
இலங்கையில் ஷீஆ பிரச்சாரம்.
ஷீயா மதத்தைச் சேர்ந்தவர்கள் ஈரானைத் தலைமையாகக் கொண்டு இலங்கையில் இருக்கும் இஸ்லாமிய பெயர்தாங்கி இயக்கங்களுடன் கைகோர்த்து சமகச்சிதமாக தனது மதப்பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
இலங்கையை இலக்கு வைத்துச் செயல்படும் வழிகெட்ட ஷீயா மதத்தினர் பல விதமான சேவைகளின் போர்வையில் தான் மதப்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.
ஈரான் அரசாங்கத்தின் இலங்கைத் தூதரகம் தான் இதற்கான அனைத்து செலவினங்களையும் பொருப்பெடுத்து செய்து கொண்டிருக்கிறது.
இலங்கைக்கான ஈரானின் தூதரகத்தின் செயல்பாடுகளில் மிக முக்கியமானது தனது பிரச்சாரத்திற்கான அச்சாணியாக, பிரச்சாரத்திற்கு சாதகமாக அரசாங்கத்தின் துணையைப் பெற்றிருப்பது.இலங்கை ஜனாதிபதிக்கும், ஈரானிய ஜனாதிபதிக்கும் மத்தியில் உள்ள நற்புறவின் காரணமாக ஷீயாப்பிரச்சாரத்தை முன்னெடுப்பது மிகவும் இலேசான காரியமாக மாறியுள்ளது.
கிருத்தவ மிஷனரிகளின் செயல்பாட்டைப் போல் ஷீயாக்களும் வீடு கட்டிக் கொடுத்தல், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்ற காரியங்களின் மூலம் மதமாற்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இலங்கையில் மீடியாக்கள் மூலமாக மதப்பிரச்சாரம் செய்யும் ஷியாக்கள்.
இலங்கையில் இயங்கும் மீடியாக்களை தன் வசப்படுத்துவதின் மூலமும் இந்த ஷீயாப்பிரச்சாரம் அதிகமாக முன்னெடுக்கப்படுகிறது.
தனியார் தொலைக்காட்சிகளில் ஈரானிய கலாச்சாரம் தொடர்பான நிகழ்சிகளை ஒளி,ஒலி பரப்புதல்.
தனியார் வானொலிகளில் தூய இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரனான மூட நம்பிக்கைகள் நிறைந்த கருத்துக்களை பரப்புதல்.ஆஷ{ரா தினக் கொண்டாட்டம், மீலாதுன் நபி விழாக் கொண்டாட்டம் என்ற மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களையெல்லாம் உருவாக்கி அவற்றை மார்க்கத்தில் உள்ளதைப் போல் மக்கள் மத்தியில் காட்ட முனைவது.
இலங்கைத் தென்மாகானத்தில் இருந்து இயங்கும் மில்லேனியம் என்ற நிறுவனம் ஷியாக்களின் நேரடிக் கண்காணிப்பில் இயக்கப்படுவதும், அந்நிறுவனத்தின் மூலம் ஷீயாக்களுக்கு ஆதரவான, இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்கள் கொண்ட புத்தகங்களை வெளியிடுவது.
இலங்கைக்கான ஈரானிய தூதரகத்தின் மூலம் தூது என்ற ஒரு பத்திரிக்கை வெளியிடப்படுகிறது. இந்தப் பத்திரிக்கையில் ஷியாக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றமை.
தூது என்ற ஷியாக்களின் இந்தப் பத்திரிக்கையில் அதிகமான கட்டுரைகள் அஸ்ஹரீக்களினாலும், நளீமிக்களினாலும் தான் எழுதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஷாஅத் அஹ்லுஸ் ஸ{ன்னா(?) என்ற ஷியா அமைப்பின் மூலம் மார்க்க விரோ கருத்துக்களை புத்தகங்கள் மற்றும் வானொலி வாயிலாக பரப்புவது.
இந்த அமைப்பு வெற்றி என்ற பெயரில் ஒரு சஞ்சிகையையும் வெளியிடுகிறது.
முஆவியா மற்றும் யஸீத்(ரலி) ஆகியோரை இழிவுபடுத்தும் புத்தகங்கள், துண்டுப்பிசுரங்கள் ஆகியவற்றை விநியோகிப்பதுடன், சாதாரண மற்றும் உயர் தர பாடத்திட்டத்தில் இஸ்லாமிய நாகரீகம் என்ற பெயரில் நபித்தோழர்களை இழிவுபடுத்துவது.
அஹ்லு பைத்கள் பற்றிய தவறான செய்திகள் அடங்கிய வெளியீடுகள்.
ஹஸன் ஹ{ஸைன், ஸைனப், மஹ்தி என்ற பெயர்களில் இந்தியாவின் பெங்களுரிலிருந்து வெளியாகும் புத்தகங்களை இங்கு விநியோகம் செய்வது.
அரபிக் கல்லூரிகளில் மூலம் ஷீயாப் பிரச்சாரம்.
கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடி மீராவோடையில் மன்பஉல் ஹ{தா என்ற பெயரில் ஆண்களுக்கான மத்ரஸா நடத்தப்பட்டுவருகிறது.
இந்த மத்ரஸாவில் இருந்து இது வரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வெளியாகியுள்ளார்கள். இவர்கள் ஷீயா மதத்தைப் பரப்பும் தொழிலில் மும்முரமான ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த மத்ரஸாவில் பட்டம் பெருபவர்கள் ஈரான் தலை நகரில் உள்ள கும் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு ஷீயா சிந்தனையில் பட்டம் பெற்று இலங்கை அனுப்பப்படுகிறார்கள்.
பொலன்னறுவை, மாணிக்கம் பிட்டியவில் பெண்களுக்காக ஸகிய்யா அரபிக் கல்லூரி என்ற பெயரில் ஷியா பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
இதில் பட்டம் பெற்று வெளியாகும் மாணவிகள் ஷீயாக் கொள்கையை பரப்பும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
ஷீயா பிரச்சாரத்திற்கு  துணை போகும் ஜமாத்கள்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் வெளியிடப்படும் அழைப்பு என்ற பத்திரிக்கையில் இலங்கையை இலக்கு வைக்கும் ஷீயா மதத்தினர் என்ற கட்டுரைக்கு இலங்கை மாவனல்லை என்ற ஊரிலிருந்து ஒரு சகோதரர் விமர்சனக் கேள்வி ஒன்றை முன்வைத்திருந்தார்.
அவர் கேட்ட கேள்விக்கு அழைப்புப் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட பதிலையே இங்கே தருகிறோம். இங்கு க்லிக் செய்யவும்.
அரசாங்க ரீதியிலான முன்னெடுப்புகள்.
மீலாத் விழாக்கள் நடத்துதல், வீடுகள் கட்டிக் கொடுத்தல், மீலாத் கிராமங்களை உருவாக்குதல், வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துல், பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு உதவி செய்தல், கட்டிடங்களை கட்டிக் கொடுத்தல்.
காத்தான்குடி, மட்டக்கெலப்பு,பகுதியில் வீடு கட்டிக் கொடுக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.
முக்கியமாக வடகிழக்குப் பகுதியில் இந்தக் காரியங்களை முன்னெடுத்துச் செய்வது.
போட்டி நிகழ்சிகள்.
குர்ஆன் மனனம், ஹதீஸ் விளக்கம் போன்றவற்றில் போட்டிகளை நடத்தி அதற்குறிய பரிசாக ஈரானை 3 மாதம், 6 மாதம் என்று சுற்றுப்பயணம் அனுப்புதல்.
இலங்கையில் ஷீயா பிர்சாரத்தின் மிக முக்கிய பகுதிகள்.
ஈரானிலிருந்து அடிக்கடி தூதுவர்கள் அரசாங்க ரீதியாக வருவது. இங்குள்ள முஸ்லீம் தலைவர்களை சந்திப்பது.(ரவூப் ஹகீம், ரிஷாத் பதியுத்தீன் போன்றவர்களுடன் ஈரான் தூதுவர்களின் சந்திப்பு)
ஈரான் ஜனாதிபதி அஹ்மத் நஜாதியின் இலங்கை விஜயம்.
                                                                                                                           -     Rasmin Misc