அனைத்துப் புகழும் அகில உலகையும் படைத்தது பரி பக்குவப்படுத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக -

Friday, 30 November 2012

குர்ஆன் மீது அவதூறு சொன்ன நபி

காதியானி மதத்தினர் பின்பற்றும் குலாம் அஹ்மத் காதியானி என்பவன் குர்ஆன் மீது பல அவதூறுகளை அல்­ வீசியிருக்கிறான் என்று ஏற்கனவே சொல்­யிருக்கிறோம். அவைகளுக்கு சில உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
அவைகளில் மற்றொன்றையும் நாம் இங்கு பார்க்கயிருக்கிறோம்.
குர்ஆனிலும், தவ்றாத்திலும் மஸீஹ் வரும் போது பிளேக் நோய் ஏற்படும் என்று எழுதப்பட்டிருக்கிறது.

இதோ அந்தப்பக்கத்தை பாருங்கள்.


காதியானிகளே மீண்டும் உங்களுக்கு ஒரு சவாலாகவே வைக்கிறோம். குர்ஆனில் உங்கள் நபி குறிப்பிட்ட இந்த வசனம் எங்கே இருக்கிறது.? எடுத்துக்காட்ட முடியுமா?

பிளேக் நோயும் போ­ நபியின் முன்னறிவிப்பும்
1902 வது வருடம் இந்தியாவில் பிளேக் பரவியது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அல்லாஹ் இருபது வருடத்திற்கு முன்பே இந்நோயை பற்றி அறிவித்துவிட்டான் என்று சொன்னான்.
அதே 1902 வது வருடம் இந்த பிளேக் நோய் 70 வருடம் இந்தப்பூமியிலேயே தங்கியிருக்கும். அது என்னை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு தண்டனையாக இருக்கிறது என்று சொன்னான். (கடைசியில் இவனும் பிளேக்கில் செத்தான் என்பது தனி விஷயம்)
அதே 1902 ல் மிர்ஸா காதியானியில் பிளேக் நுழையாது காரணம் ஸபீனத்து நஜாத் என்று அறிவித்தான்.
1904 வருடம் பிளேக்கின் காரணமாக காதியானியில் உள்ள மதரஸா மூடப்பட்டது.
காதியானிகளே இந்த அறிவிப்புகளையும் உங்கள் நபியின் இறுதி வாழ்க்கையும் எடுத்துப்பாருங்கள். உங்கள் நபி யார்? என்று விளங்கும்.

                                                                                                        -யூசுப்பைஜி

காதியானியும் கிருஷ்ணரும்

காதியானியும் கிருஷ்ணரும் கோகுலத்தில் நெய்யக்களவாடி தின்ற கிருஷ்ணரைப்பற்றி கேள்வி படாதவர் யாரும் இருக்கமாட்டார்.


ஆனால் காதியானி மதத்தின் நபி என்று சொல்லப்படும் குலாம் அஹ்மத் காதியானி என்பவன் சீனியைக்களவாடி தின்றதை பெரும்பாலோர் அறிற்திருக்கமாட்டார்கள். ஏன் காதியானி மதத்தினர் கூட அறிந்திருக்கமாட்டார்கள்.
காதியானி மதத்தினர் அவர்களின் மத குரு செய்த காமக்களியாட்டங்களை பிராடு பித்தலாட்டங்களையும் அவன் செய்த காதல் லீலைகளையும் பட்டியல் இட்டால் எங்கள் நபியின் முன்னால் வாழ்க்கையை பாருங்கள் என்று திரும்ப திரும்ப கூறுவார்கள். இப்படி திரும்ப திரும்ப கூறியதால் முஸ்­ம்கள் கூட அவரின் முன்னால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கலாம்.
ஆனால் குலாமின் முன்னால் வாழ்க்கை மிகவும் கேடு கெட்டதாக அமைந்திருந்தது என்பதை ஸீரதுல் மஹ்தி என்ற புத்தகம் பட்டியல் இடுகிறது.
இப்புத்தகத்தை குலாம் அஹ்மத் காதியானி என்பவரின் மகன் கமருல் அன்பியா என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டவன் தன்னுடைய தற்தை மிர்ஸா குலாம் அஹ்மதுவின் வரலாறை ஸீரத்துல் மஹ்தி என்ற புத்தகத்தை கோர்வை செய்துள்ளான்.


ஒரு முறை ஒரு நண்பனின் வீட்டிற்குள் நுழைந்து சாப்பிட ஏதேனும் பலகாரம் வேண்டுமேன்று கேட்டேன். அவன் உள்ளே சென்றதும் யாருக்கும் தெரியாமல் அங்குள்ள சர்க்கரையை ஒரு பிடி அள்ளி எனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். பிறகு வெளியே வந்து கொஞ்சம் வாயில் போட்ட போது மூச்சுத்திணறி மிகவும் சிரமப்பட்டேன் காரணம் சர்க்கரை என்று நினைத்து வாயில் போட்டது பொடி உப்பு.

ஸீரதுல் மஹ்தி பாகம் 1 பக்கம் 226.
தொட்டதெற்கெல்லாம் எங்கள் நபியின் முன்னால் வாழக்கையை பாருங்கள் என்று சொல்வீர்களே. இப்போது உங்களது நபியின் முன்னால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது? சொல்லுங்கள் பதில்களை.
குறிப்பு : இந்து சகோதரர்கள் கிருஷ்ணரை கடவுளாக வழிபட்டு வருகிறார்கள். இந்துக்களும் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னை இவன் ஒரு கிருஷ்ணராக அறிமுகம் செய்தான். இதை உறுதி செய்ய ஜ்ஜ்ஜ்.ஹஹண்ண்ப்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் கிருஷ்ண அவதார் என்ற உருது புத்தகம் உள்ளது. அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதனால்தான் காதியானியையும் குலாமையும் இணைத்து தலைப்பிட்டோம்.

போதையில் தள்ளாடிய போலி­ நபி.


காதல் கிருக்கன் குலாம் அஹ்மத் காதியானியின் காதல் லீலைகளையும் காமக்களியாட்டங்களையும் மோசடி பொய் இவைகளை வெளியிட்டு வருகிறோம்.


இவனது மது பழக்கம்தான் காதல் லீலைகள் காமக்களியாட்டங்கள் உளறல்கள் இவை அனைத்திற்கும் செய்வதற்கு காரணமாக இருந்தது.
இதோ அதற்கான சான்றுகளை அடுக்கடுக்காக வைக்கிறோம்.

போட்டோ ஆதாரங்களுடன்

 இந்தக்காதல் கிருக்கனுக்கு நம்முடைய ஜமாத் முக்கியதர்ஸ்களை வைத்து குருப் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மிகப் பெரிய ஆசை வந்துவிட்டது. இதனால் போட்டக்காரனை அழைத்து தன்னையும் தன்னுடைய ஜமாத்தையும் குருப் போட்டோ எடுக்கும் படி சொன்னான்.
சூட்டிங் தயாரான போது போதையில் இருந்த காதியானி வக்ஷ்க்கமாக தன்னுடைய பாதியளவு திறந்து வைத்துள்ளான் (மடா குடிகாரர்கள் குடித்தவுடன் தன்னுடைய கண்களை திறக்கமுடியாது) போட்டோ எóப்பவர் உங்களுடைய கண்களை நன்றாக திறந்து வையுங்கள் இல்லைளென்றால் உங்களுடைய தரமாக இருக்காது என்று சொல்­யுள்ளார். என்றாலும் மிகவும் சிறமத்திற்கிடையில் போட்டோக்கப்பட்டது. ஆனால் (நாய் வாளைப் போல்) மீண்டும் கண்கள் முடிக் கொண்டது.

இவன் எடுத்துக் கொண்ட போட்டோவில் இவனுடைய கண்களை பாருங்கள்.
போட்டோ
இந்த போட்டாவை வைத்து இவனை எப்படி குடிகாரன் என்று எப்படி நிருபிப்பது என்று நீங்கள் கேட்கலாம். இதோ காதியானிகள் அதற்கான ஆதாரங்களை அள்ளி தருகிறார்கள்.
நான் மியான் யார் முஹம்மதை அனுப்பிவைக்கிறேன். மற்ற பொருட்களோடு சேர்த்து பிளேமர் கடையில் ஒரு பாட்டில் டானிக் ஒயின் வாங்கி அனுப்பி வைக்கவும்.

ஆதாரம் ஹகீம் முஹம்மத் ஹீசைன் தொகுத்த காதியானி நபியின் கடிதங்கள் என்ற புத்தகத்தில்.
போட்டோ
ஒரு ஆதாரத்தை மட்டும் நகலுடன் இங்கு இணைத்திருக்கிறோம். இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன அவைகளை தமிழில் மட்டும் தருகிறோம்.
பல்வேறு மúந்துகளில் எம்பது சதவிகிதம் அபீன்பயன்படுத்தப்படுகிறது. மúந்துக்காக அபீன் சாப்பிடுவது குற்றமாகாது.
ஹக்கீம் நூருத்தின் சாஹிப் என்பவன் ஈஸா மஸீஹின் உத்தரவுப்படி ஆறுமாதம் காலம் வரை அபீன் சாப்பிட்டு வந்திருக்கிறார். மஸீஹ் (குலாம் அஹ்மத் காதியானி) கூட தமது நோய்க்காக அபீன் சாப்பிட்டதுண்டு.
அல் பஸல் மாத இதழ் 19 7 1929.
தொடர்ந்து ஆறு மாத காலம் அபீன் உட் கொண்டு வந்தேன் பிறகு ஒரு நாள் வேண்டாம் என்று நிறுத்தப்பட்டது. அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போது மஸீஹ் அல்லாஹ் சுகமளித்துவிட்டான் இனி கொடுக்க வேண்டியதில்லை. என்றார்.
மின்ஹாஜீத் தா­பீன் பக்கம் 74.
                                                                                                               - யூசுப்பைஜி

மாநபியை சந்தித்த? மகா பொய்யன்


காதியானி மதத்தினர் பின்பற்றும் குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தன்னை நபி என்றும் மஹதி என்றும் மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அவ்வப்போது கோமாளியாக ஆகுவதுண்டு.
இவன் சொல்கிறான் பாருங்கள்.


நான் ஒரு நாள் மாலை வேளை கடமையான தொழுகையையும். அதன் சுன்னத்தையும் முடித்திருந்த போது நான் விழித்திருந்தேன். எனக்கு சிரிய பெரிய தூக்கமோ ஏற்படவில்லை. இந்நிலையில் கதவை தட்டுகின்ற சப்தத்தை கேட்டேன். பார்க்கும் போது என்னிடத்தில் சிலர் விரைந்து வந்தனர். அவர்கள் அலீ, பாத்திமா, ஹஸன் ஹீசைன், மற்றும் நபி அவர்கள் ஆகியோர் என்று அறிந்து கொண்டேன்.

மேலும் பாத்திமா ர­ அவர்கள் என்னுடைய தலையை அவர்களுடைய மடியில் வைத்தார்கள். மேலும் ஆசையோடு என்னை பார்த்தார்கள். அப்போது நான் எனக்கும் ஹீசைனுக்கும் (வம்சா வழி) தொடர்பு இருக்கிறது என்று நான் அறிந்து கொண்டேன்.


இந்த வார்த்தைகளை படிப்பவர்கள் இது எவ்வளவு பெரிய அபத்தம் என்று விளங்கி கொள்வார்கள்.

இவன் நேரடியாக பார்த்த நபி ஸல் அவர்கள் உட்பட ஜந்து நபர்களும் இறந்து விட்டார்கள். இறந்து விட்டவர்களில் யாரும் இந்த உலகத்திற்கு வர முடியாது. இது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படை. இந்த அடிப்படையைக்கூட ஒரு போ­ நபி விளங்காமல் இருக்கிறான் என்றால் அவனையா அல்லாஹ் நபியாக அனுப்புவான்.

சிலர் நான் நபி ஸல் அவர்களை கணவில் பார்த்தேன் என்று சொல்­ மக்களை ஏமாற்றிப்பிழைப்பார்கள். ஆனால் இவன் அனைவரையும் விட பெரிய ஏமாற்றுக்காரணாக இருந்திருக்கிறான். ஏமாற்றுபவனை அல்லாஹ் நபியாக அனுப்புவானா?

அடுத்து தனக்கும் ஹீசைனுக்கும் வம்ச ரீதியாக தொடர்பு இருக்கிறது என்று சொல்­யிருப்பதின் மூலம் தன்னை  ஒரு மஹதியாக காட்ட முட்டாள் தளத்தை முலமாக பூசி முயற்சி செய்திருக்கிறான். ஏனென்றால் நபி ஸல் அவர்கள் பாத்திமா ர­ அவர்களின் சந்ததியில் மஹதி வருவார் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இவனுக்கு வமிசம் பாத்திமாவின் வமிசம் கிடையாது என்பதை இவன் கைப்பட எழுதிய நூல்களிலும் காணலாம்.

இதோ அதற்கான ஆதாரத்தை தருகிறேன் பாருங்கள். (படம்)

இப்படி இவனை தன்னுடைய வமிசத்தைப் பற்றி சொல்­யிருக்க அதை மறைத்து விட்டு தன்னை மஹதியாக காட்ட வேண்டுமென்றால் இவன் என்ன போக்கிரித்தனத்தையும் செய்வான். போக்கிரி தனத்தில் உள்ளவனை நபியாக அனுப்புவானா?

காதியானிகளே நீங்கள் உங்கள் மூளையை இப்படி பட்ட போக்கிரித்தனத்தை செய்யக்கூடிய பொய்யை மூலதனமாக கொண்டு செயல்பட்ட ஒருவனிடத்தில் அடகு வைத்து விட்டீர்களே. அடகு வைத்ததை என்று திருப்ப இருக்கிறீர்கள்.?                                                                                 

                                                                                                                                  - யூசுப்பைஜி

Thursday, 29 November 2012

ஒரு ஹதீஸ் ளயீஃபானது தான் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றதா?

ஒரு ஹதீஸ் ளயீஃபானது தான் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றதா? மேலும் ளயீஃபான ஹதீஸின் அடிப்படையில் ஒருவர் அமல் செய்தால் அவை இறைவனால் நிராகரிக்கப்படுமா?
ஒரு ஹதீஸ் பலவீனமானது என்பதை அதன் அறிவிப்பாளர் தொடர் மற்றும் அவர்களின் தரத்தை வைத்தே முடிவு செய்கிறோம். எனவே ஓர் அறிவிப்பாளர் பலவீனமானவர் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை உள்ளதா? என்று கேட்பதே சரியானதாகும்.
அறிவிப்பாளர்களைப் பொறுத்த வரை பொய்யர் என்று எல்லா அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் சிலரைப் பற்றி கூறியிருப்பார்கள். அல்லது பலீவனமானவர் என்று கூறியிருப்பார்கள்.
ஆனால் அதே சமயம் எல்லா அறிவிப்பாளர்களைப் பற்றியும் எல்லா அறிஞர்களிடமும் ஒருமித்த கருத்து இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அறிவிப்பாளரின் தரம் என்பது, அவரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து முடிவெடுக்கப்படுகின்றது. இவ்வாறு ஆராயும் போது ஒரு அறிவிப்பாளரைப் பற்றி ஒரு ஹதீஸ் கலை அறிஞருக்குத் தெரிந்த செய்தி மற்றவருக்குத் தெரியாமல் போகலாம். அல்லது அவரை விட இவருக்குக் கூடுதலாகத் தெரிந்திருக்கலாம். இது போன்ற காரணங்களால் ஒரு அறிவிப்பாளரைப் பற்றி இமாம்களிடத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு.
பல ஹதீஸ் கலை அறிஞர்கள் ஓர் அறிவிப்பாளரை நல்லவர் என்று கூறியிருப்பார்கள். ஒரே ஒருவர் மட்டும் அந்த அறிவிப்பாளரைப் பலவீனமானவர் என்று கூறி அதற்குத் தக்க சான்றையும் கூறுகின்றார் என்றால் இந்த ஒருவரின் விமர்சனத்தையே நாம் ஏற்க வேண்டும். ஏனெனில் ஒருவரை நல்லவர் என்று கூறுபவர்களுக்கு அவரது குறையைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். அவரைக் குறை கூறுபவர் தக்க சான்றின் அடிப்படையில் கூறும் போது அந்த விமர்சனத்தின் அடிப்படையில் அவரைப் பலவீனமானவர் என்றே முடிவு செய்ய வேண்டும். இது பெரும்பான்மை அடிப்படையிலோ, அல்லது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ முடிவு செய்யப்படும் விஷயமல்ல என்பதே இதற்குக் காரணம்.
பலவீனமான அறிவிப்பு என்று தெரிந்த பின்னரும் அதைப் பின்பற்றி அமல் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? என்று கேட்டுள்ளீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? இலலையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் தான் பலவீனமான ஹதீஸ்களாகும்.
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
(அல்குர்ஆன் 17:36)
உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பால் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி)
நூல்: திர்மிதீ 2442
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப் பட்டுள்ளது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனமும்  ஆதாரப் பூர்வமான ஹதீசும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே பலவீனமான ஹதீஸ்களைப் பின்பற்றி அமல் செய்யக் கூடாது. அது குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமானதாகும்.

உருவப்படம் இருக்கும் இடங்களில் தொழலாமா?

உருவம் இருக்கும் இடங்களில் தொழக்கூடாது என்பதற்கு பின்வரும் செய்தி நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

ஆயிஷா (ர­) அவர்கள் அறிவிப்பதாவது எங்களிடம் உருவம் பொறிக்கப்பட்ட ஆடை இருந்தது. அதை நான் நபி ஸல் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களுக்கு முன் வைத்தேன். நபி ஸல் அவர்கள் அதை தடை செய்தார்கள்.
                                              நூல்:தாரமி2547
இது அல்லாமல் நாம் தொழுது கொண்டிருக்கும் போது நம்முடைய கவனத்தை திசை திருப்புகின்ற பொருளையோ. ஆடையையோவைக்ககூடாது.
ஆயிஷா(ரலி)அவர்கள்கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுதுகொண்டிருக்கும்போது) அதன் வேலைப்பாடுகளை  ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், ”எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான்’ (நகர ளி) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிரிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டதுஎன்றுசொன்னார்கள்.
ஆயிஷா (ர) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், ”நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு  இருந்தேன். அது என்னைக்  குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
                                             நூல்:புகாரி373.
எனவே உருவப்படங்கள் உள்ள இடங்களிலோ அல்லது நம்மை திருப்புகின்ற படங்கள் மற்றும் ஆடைகள் இவைகள் இருக்கும் இடத்தில்தொழக்கூடாது.

திருக்குர்ஆன் வினாடி வினா

1.  கேள்வி : அல்லாஹ்வே பெயரிட்ட நபிமார்களின் பெயர் என்ன?
பதில் : யஹ்யா (அலை), ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:7, 3:45)
2.   கேள்வி :மனிதன் இறந்தால் அவனை அடக்கம் செய்ய வேண்டுமென மனிதனுக்கு கற்றுக் கொடுத்தது எது?
பதில் : காகம் (அல்குர்ஆன் 5:31)


3.   கேள்வி : உருக்கிய செம்பைப் போலும் கொதிக்க வைக்கப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்குமே அந்த மரத்தின் பெயர் என்ன?
பதில் :  ஸக்கூம் (அல்குர்ஆன் 44 : 43-46)
4.   கேள்வி : நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குழந்தைகளின் பெயர் என்ன?
பதில் : இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை) (அல்குர்ஆன் 14 : 39)
5.   கேள்வி : காளைக் கன்றை கடவுளாக சித்தரித்தவன் யார்?
பதில் : சாமிரீ (அல்குர்ஆன் 20 : 87,88)
6.   கேள்வி : கடவுளாக சித்தரிக்கப்பட்ட காளைக் கன்றை நபி மூஸா (அலை) அவர்கள் என்ன செய்தார்கள் ?
பதில் : அதை நெருப்பில் எரித்து அதன் சாம்பலை கடலில் தூவினார்கள்.     (அல்குர்ஆன் 20 : 97)
7.   கேள்வி : நபி மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரிடம் எந்த அற்புதத்தை காட்டி அல்லாஹ் உடன்படிக்கை எடுத்தான் ?
பதில் : தூர் மலை தலைக்கு மேல் உயர்த்தி (அல்குர்ஆன் 2: 93, 7:171)
8.   கேள்வி : ஜாலூத் என்பவன் யார்?
பதில் : நபி தாவூத் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த கொடுங்கோல் மன்னன் (அல்குர்ஆன் 2 : 251)
9.   கேள்வி : தாவூத் நபி எந்த மன்னரின் கீழ் வீரராக திகழ்ந்தார்கள்?
பதில் : தாலூத் (அல்குர்ஆன் 2 : 247 -251)
10.   கேள்வி : ஐயாயிரம் வானவர்களைக் கொண்டு உதவி செய்வேன் என்று எந்த போர்க்களத்தில் அல்லாஹ் கூறினான்?
பதில் : பத்ர் (அல்குர்ஆன் 3 : 123-125)

பன்றி இறைச்சி ஏன் தடை?

பன்றி நமக்கு ஏன்? ஹராம்?
இஸ்லாம் மட்டும் பன்றி இறைச்சியை தடை செய்ய வில்லை மாறாக கிரித்தவமும் பன்றி இறைச்சியை தடை செய்திருக்கிறது.

பைபிளின் அத்தியாயம் 11 லெவிட்டிஸ் 7 முதல் 8.
பைபிள் 14 டியூட்டர்னோமி வசனம் 8
பைபிள் 65 இஷையா 2 முதல் 5 வரை. பன்றி இறைச்சியை தடை செய்யும் வசனங்களை பார்க்கலாம்.
எனவே இஸ்லாம் மட்டும் பன்றி இறைச்சியை தடை செய்யவில்லை. மற்ற மதங்களும் பன்றி இறைச்சியை தடை செய்திருக்கிறது.
மேலும் பன்றி இறைச்சியை இஸ்லாம் தடை செய்வதற்கு மருத்துவ ரீதியான காரணங்களும் இருக்கின்றன.
பன்றி இறைச்சி சாப்பிடுவதால் 4 விதமான குடல் புழுக்கள் உண்டாகின்றன.
வட்டப்புழு, (ரவுண்ட் வார்ம்) ஊசிப்புழு இன் வார்ம், கொக்கிப்புழு கூக் வார்ம்,
நாடாப்புழு இது மனித இரத்த நாளங்களை சென்றடைகின்றது.
இதனால் மனித உறுப்புகள் பாதிப்படைகின்றது.
இதில் திரிகுரா திச்சுராஸிஸ் என்ற மற்றொரு குடல் புழு உண்டாகின்றது.
மும்பையி­ருந்து வெளியாகும் மாதப்பத்திரிக்கை வெளியிடும் அதிர்ச்சி தகவல் அதாவது அமெரிக்கர்களிடையே தங்களுடைய மனைவியை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உள்ளது. இதே போல் மும்பையிலும் இது போன்று நடைபெறுவதாக வெளியிட்டுள்ளது. பன்றியும் தங்களுடைய செயல்களை இப்படித்தான் செய்கின்றது. அமெரிக்க கலாச்சாரத்தை பின்பற்றுவதினால் நம் மக்களிடமும் இது காணப்படுகின்றது.
குறுக்கு விசாரனை:
மேற்கிந்தியர்கள் இதை சாப்பிடுவதினால் இந்த நோய் அவர்களை தாககுவதில்லையே ஏன்?
யுவந்நீரை டாக்டர் சுட வைத்து குடிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அதைப்பின்பற்றுவோர் குறைவாக இருக்கிறார்கள். சுடவைக்ககாமல் குடிப்பவர்கள்தான் அதிகம். அப்போது இந் நோய் வரவில்லை என்று கேட்க முடியுமோ? முடியாது. பொதுவாக கொஞ்சம் கொஞசமாகத்தான் நோய்கள் தாக்கும்.
எனவே மருத்துவ ரீதியிலும் இதில் தீங்கு இருப்தால் இதை இஸ்லாம் தடை செய்திருக்கடிறது.
தற்போது பன்றியினால் ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலையும் ஆதற்கு அதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
புழுக்களைப்பற்றி மேலும் சுஜாதா எழுதிய ஏன் எதற்கு எப்படி 2 பக்கம் 70. என்ற புத்தகத்தை பார்க்க

வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துக் கொடுத்தாலும் நாம் சாப்பிடலாமா?


 "இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது'' என்ற வசனத்தின் படி வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துக் கொடுத்தாலும் நாம் சாப்பிடலாமா?
முதலில் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் என்றால் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்ட அஹ்லுல் கிதாப் என்ற வாசகம் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.
பொதுவாக எல்லா யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார் களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப் பட்டன.
(பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6)
"இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன்'' என்று ஈஸா நபி கூறியதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.  (பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6)
இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக் காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ண இவ்வசனம் (5:5) அனுமதிக்கிறது என்பது தவறாகும் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.
இரண்டாவதாக, பன்றியை அவர்கள் அறுத்துக் கொடுத்தால் உண்ணலாமா? என்றால் கூடாது என்றே கூறவேண்டும். ஏனெனில் திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களையும் ஏற்றவர்கள் இதை அறுத்துக் கொடுத்தாலே உண்ணக் கூடாது என்று கூறும் போது, இரண்டாம் நிலையில் உள்ள வேதம் கொடுக்கப்பட்டவர்கள் கொடுத்ததை எவ்வாறு உண்ணமுடியும்?
மேலும் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் வாழ்கிறோம். அவர்கள் பன்றி இறைச்சியை சாப்பிடுகிறார்கள்; மதுவை அருந்துகிறார்கள்; அவர்களுடைய பாத்திரத்தை (நாங்கள் பயன்படுத்தும் போது) என்ன செய்வது?'' என்று கேட்ட போது, "வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லையானால் அதை (நன்றாக) கழுவிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அஹ்மத் (17071) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை சிந்தித்தால் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துத் தந்தாலும் ஹராம் என்பதை விளங்கலாம்.
எனவே வேதக்காரர்கள் நமக்குத் தடை செய்யப்படாத உணவுப் பொருட்களைத் தந்தால் அதை நாம் உண்ணலாம் என்றே இந்த வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்று மதத்தைச் சார்ந்தவர்களை நோய் விசாரிக்கலாமா?

முஸ்லிமாக இருப்பவர், மற்றொரு முஸ்லிம் நோயுற்றிருக்கும் போது விசாரிப்பது அவசியமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, நோயுற்றால் நோய் விசாரிக்கச் செல்வது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ 1240)
மாற்று மதத்தவர்கள் நோயுற்று இருக்கும் போது நோய் விசாரிக்கச் செல்ல வேண்டுமென கட்டளையிடா விட்டாலும் அதை (நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள்  அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு "இஸ்லாத்தை ஏற்றுக் கொள்!'' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், "அபுல்காஸிம் - நபி (ஸல்) அவர்களின் - கூற்றுக்குக் கட்டுப்படு'' என்றதும். அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள் "இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்'' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினாôர்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1356
மாற்று மதத்தவர்களை நோய் விசாரிக்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் மிகத் தெளிவான சான்றாகும்.
அவர்களது நோய் நிவாரணத்திற்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யலாமா? என்ற கேள்விக்கு செய்யலாம் என்பதே பதில். காரணம். மாற்று மதத்தவர்கள் ஓரிறைக் கொள்கையை நிராகரிக்கும் போது அவர்களின் பாவங்களை மன்னிக்குமாறு கோருவதைத் தான் அல்லாஹ் தடுத்துள்ளான்.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக் கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. (அல்குர்ஆன் 9:113)
பாவமன்னிப்பு கேட்பது தான் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்காக நாம் நோய் நிவாரணம் கேட்கலாம். அதே நேரத்தில் "அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்குரிய நல்வாய்ப்பை அவர்களுக்கு வழங்கு' என்று கேட்பதும் முக்கியமானதாகும்.

பூஜைக்கு உதவலாமா?

எங்கள் (அரசு) அலுவலகத்தில் மாதந்தோறும் ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சாமி போட்டோ வைத்து, பூஜை என்ற பெயரில் பொரி கடலை தருவார்கள். இதைச் சாப்பிடலாமா? வேண்டாம் என்று கூறினால், "நீங்கள் தான் இந்தச் சாமிகளை நம்பவில்லையே! அப்படியானால் வெறும் பொரி கடலை என்று நினைத்துச் சாப்பிட வேண்டியது தானே!' என்று கேட்கிறார்கள். நம்மைப் பொறுத்த வரை வெறும் சடங்கு தானே! இதைச் சாப்பிடுவதில் என்ன தவறு? மேலும் இதற்காகப் பத்து ரூபாய் வழங்குவதில் தவறுண்டா?



தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:173
இந்த வசனத்தில் "அறுக்கப் பட்டவை' என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.
இந்த அடிப்படையில் தான் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்லிம்கள் என்ற பெயரில் அவ்லியாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்.
சாமியை நம்பவில்லை என்பதால் அந்த உணவுகளைச் சாப்பிடலாம் என்று கூற முடியாது. நாம் நம்பா விட்டாலும் அதை வணங்குபவர்கள் அந்த உணவில் புனிதம் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.
இந்த உணவை இஸ்லாம் தடுத்துள்ளது என்ற அடிப்படையில் தான் உண்ணக் கூடாது என்று கூறுகிறோமே தவிர, அதில் புனிதம் இருப்பதால் சாப்பிடக் கூடாது என்று நாம் கூறவில்லை.
இஸ்லாத்தின் பார்வையில் இது போன்ற பூஜைகள் இறைவனுக்கு இணை கற்பித்தல் என்ற மிகப் பெரும் பாவச் செயலாகும். எனவே இதற்காகப் பணம் கொடுப்பதும் கூடாது. அரசு அலுவலகம் என்பதால் அதில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்துவது அரசியல் சட்ட அடிப்படையிலும் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்

காட்டுவாசிகளுக்கு இறுதி நாளின் தீர்ப்பு என்ன?

காட்டுவாசிகளுக்கு இறுதி நாளின் தீர்ப்பு என்ன? அவர்களுக்கு இறைவனை அறிய வாய்ப்புகள் உண்டா?
மூஸா நபியவர்கள் பிர்அவுனிடம் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த போது அவன் மூஸா நபியிடம் ஒரு கேள்வியைக் கேட்டான். நீங்கள் எந்தக் கேள்வியைக் கேட்கிறீர்களோ அந்தக் கேள்வியைத் தான் கேட்டான்.
"முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் கேட்டான். "அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 20:51, 52)
"இப்போது தான் நீர் ஒரு கடவுளைப் பற்றிப் பேசுகிறீர். உமது பிரச்சாரம் சென்றடையாத மக்களைப் பற்றி என்ன தீர்ப்பு சொல்லப் போகிறீர்?'' என்பது இக்கேள்வியின் கருத்து.
"அது பற்றிய ஞானம் என் இறைவனுக்குத் தான் உள்ளது; என் இறைவன் தவறான முடிவு எடுக்க மாட்டான்; எதையும் மறக்கவும் மாட்டான்'' என்று மூஸா நபியவர்கள் விடையளித்தார்கள். அவர்கள் நரகவாசிகள் என்றோ, சுவர்க்கவாசிகள் என்றோ கூறாமல் அதன் முடிவை இறைவனிடம் விட்டு விட்டார்கள்.
நீதி செலுத்துவதை அதிகம் விரும்புகிற இறைவன் எந்த அநீதியான தீர்ப்பும் வழங்க மாட்டான். நியாயமான தீர்ப்பே வழங்குவான்.
யார் யார் சொர்க்கம் செல்வார்கள்? நரகம் செல்வார்கள்? என்று முடிவு செய்வது நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது.
தவறே செய்யாத ஒரு குழந்தையைக் கூட சொர்க்கவாசி என்று நாம் முடிவு செய்யக் கூடாது. இதை இறைவனுடைய அதிகாரத்திலேயே விட்டுவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துக்கள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக் குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை'' என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்'' என்று கூறினார்கள்.  முஸ்லிம் (5175)
எனவே, எந்தப் பிரச்சாரமும் சென்றடையாத மக்கள் விஷயமாக நம்மை விட அதிகம் நியாயம் வழங்கும் இறைவன் சரியான தீர்ப்பை வழங்குவான் என்ற பதிலோடு நிறுத்திக் கொள்வது தான் நமக்குள்ள உரிமையாகும்.

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்

பூகம்பம், சுனாமி ஏற்பட்ட நாடுகள்

பசிபிக் பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.
1700, ஜனவரி : அமெரிக்காவில் பூகம்பம். ரிக்டர் அளவு 9 புள்ளி. இதனை தெடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.
1730, ஜுலை : சிலியில் பூகம்பம். ரிக்டர் அளவு 8.7 புள்ளி. இதில் 3 ஆயிரம் பேர் மரணம்.
1755, நவம்பர்: போர்ச்சுகல் பூகம்பம். ரிக்டர் அளவு 8.7 புள்ளி. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் மரணம்.
1868, ஆகஸ்ட்: சிலியில் பூகம்பம். ரிக்டர் அளவில் 9 புள்ளி. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8.8 புள்ளி. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்.
1931, நியூசிலாந்த் பூகம்பம். இதில் 256 பேர் மரணம்
1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8.1 புள்ளி. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.
1960, மே: தெற்கு சிலியில் பூகம்பம். ரிக்டர் அளவில் 9.5 புள்ளி. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.
1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் பூகம்பம். ரிக்டர் அளவு 9.5 புள்ளி. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் பூகம்பம். ரிக்டர் அளவு 9.2 புள்ளி. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.
1976, சீனாவில் பூகம்பம் 8 ரிக்டர் அளவில் வந்தது. மிக மேசமான பேரழிவு, சுமார் 3 லட்சம் பேர் மரணம், காயமடைந்தவர்கள் 2,20,000, வீடு வாசல் பாதிக்கபட்டவர்கள் 3 மில்லியன், வகுப்பறைகன் 6,900 ல் 300 குழந்தைகள் இறந்தன.
1993,  ஆண்டு ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் பூகம்பம். ரிக்டர் அளவில் 9 புள்ளி. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள். தமிழ்நாட்டில் 7 ஆயிரம் நபர். இந்தியாவில் 10 ஆயிரம் மரணம்.
2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8.1 புள்ளி. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் பூகம்பம். ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.
2010 ஜனவரி: ஹெய்தியில் பூகம்பம் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள். இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள். அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.
2010, பிப்ரவரி : தென் அமெரிக்காவான சிலியில் பூகம்பம். இதில் 215 மரணம்
2010, அக்டோபர் : பாகிஸ்தானில் ஒரு வார வெள்ளதால் மரணித்தவர்கள் 1500, காணாமல் போனவர்கள் 1000, வீடு வாசல்கள் இல்லாமல் பாதிக்கபட்டவர்கள்  13 மில்லயன் போர்.
2011, பிப்ரவரி : நியூசிலாந்த் பூகம்பம். ரிக்டர் அளவு 6.3 புள்ளிகள். இதில் சுமார் 100 பேர் மரணம், 300நபர்காணவில்லை.2011, மார்ச்: ஜப்பானில் பூகம்பம்ரிக்டர் அளவில் 8.9 புள்ளி. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது. சுனாமி பலியானவர்கள் 1.800, 10 ஆயிரம் நபர் காணவில்லை.

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்

ஓரிக் கொள்கை மறுப்பு, விபச்சாரம், அளவு மோசடி, துரோகம், ஓரினச் சேர்க்கை, லஞ்சம், நீதியின்மை, தீவிரவாதம், அமானித மோசடி, கொலை, கொள்ளை, வரதட்சனை, பொய், பித்தலாட்டம் இதுப் போன்ற ஏராளமான செயல்களை மனித நேயத்திற்கும் மனிதனுக்கும் இந்த சமுதாயம் செய்துவருகிறது.

முந்தைய வரலாற்றில் படிப்பினை
ஷுஐப் (அலை)

அளவில் மோசடி செய்தவர்கள்
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ 7:85
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் : 7: 85

பூகம்பம் தாக்கியது
فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ (91) الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَانُوا هُمُ الْخَاسِرِينَ (7:92)
உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோர் (அதற்கு முன்) அங்கே வசிக்காதவர்களைப் போலானார்கள். ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோரே இழப்பை அடைந்தோரானார்கள்.
அல்குர்ஆன் 9:91,92

லூத் (அலை)
ஓரினச் சேர்க்கை ஈடுபட்டார்கள்
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ (80) إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ (7:81)
"நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.) இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.
அல்குர்ஆன் 7: 81,82
மழையால் அழிக்கப்பட்டன
فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِنْ سِجِّيلٍ مَنْضُودٍ (82) مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ وَمَا هِيَ مِنَ الظَّالِمِينَ بِبَعِيدٍ (11:83)
நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல் மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப் பகுதியாக்கினோம்.  (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை.
அல்குர்ஆன் 11:82,83

ஸமூது (அலை)
ஆணவம் கொண்டவர்கள்
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ (6) إِرَمَ ذَاتِ الْعِمَادِ (7) الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ (8) وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ (9) وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ (10) الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ (11) فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ (12) فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ (89:13)
ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையாஉலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லைமலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்) ஸமூது சமுதாயத் தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படி ஆக்கினான்?)  அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர். அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள். எனவே உமது இறைவன் வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.
அல்குர்ஆன் 89: 6,13
மிக கடுமையான புயல்
فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ (15) فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَى وَهُمْ لَا يُنْصَرُونَ (41:16)
ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்டனர். "எங்களை விட வலிமை மிக்கவர் யார்?'' எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர்எனவே இவ்வுலக வாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காக கெட்ட நாட்களில் அவர்கள் மீது கடும் புயல் காற்றை அனுப்பினோம். மறுமையின் வேதனை (இதை விட) மிகவும் இழிவுபடுத்தக் கூடியது. அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
அல்குர்ஆன் 41:15,16
பெரும் சப்தம்
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ (5) وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ (7) فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ (69:8)
            ஸமூது சமுதாயத்தினரோ பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமை யான கொடிய காற்றால் அழிக்கப்பட்டனர். அதை ஏழு இரவுகளும், எட்டு பகல் களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான். அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப் போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர். அவர்களில் எஞ்சியோரை நீர் காண்கிறீரா?
அல்குர்ஆன் 69:5,8

பிர்அவ்ன் சம்பவம்
إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ (28:4)
ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான்.
அல்குர்ஆன் 28:4
என்னை தவிர வேற இறைவன் இல்லை
وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرِي (28:38)
"பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். "ஹாமானே! எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்'' என்றான்.
அல்குர்ஆன் 28:38
நான் மிகப் பெரிய இறைவன்
فَحَشَرَ فَنَادَى (23) فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى (79:24)
நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
அல்குர்ஆன் 79:24
கடலில் மூழ்கடிக்கப்பட்டான்
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ (90) آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91) فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (92)10
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாய மாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 10:91,92
ஒழுக்க கேடு
وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا (17:32)
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
அல்குர்ஆன் 17:32
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இதுப்போன்ற அழிவு ஏன் ஏற்படவில்லை?
18 أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ شَهِدَ بَدْرًا وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ الْعَقَبَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ بَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلَا تَسْرِقُوا وَلَا تَزْنُوا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ وَلَا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ وَلَا تَعْصُوا فِي مَعْرُوفٍ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ فَبَايَعْنَاهُ عَلَى ذَلِك * رواه البخاري
பத்ருப்போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர் களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, "அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட் டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத் திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
நூல் : புகாரி 18
7056 عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَهُوَ مَرِيضٌ قُلْنَا أَصْلَحَكَ اللَّهُ حَدِّثْ بِحَدِيثٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِ سَمِعْتَهُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ فَقَالَ فِيمَا أَخَذَ عَلَيْنَا أَنْ بَايَعَنَا عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي مَنْشَطِنَا وَمَكْرَهِنَا وَعُسْرِنَا وَيُسْرِنَا وَأَثَرَةً عَلَيْنَا وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ إِلَّا أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا عِنْدَكُمْ مِنْ اللَّهِ فِيهِ بُرْهَانٌ * رواه البخاري
"நாங்கள் உற்சாகமாயிருக்கும்போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும்போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளை யை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்தி-ருப்பவர் களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர'' என்று எங்கüடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்கüடம் பெற்ற பிரமாணங்கüல் அடங்கும்.
நூல் : புகாரி 7056
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ  60:12
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 60:12
மனித நேயம் என்றால் என்ன?
மனிதனுக்கு இரக்கம் காட்ட வேண்டும்
7376 عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْحَمُ اللَّهُ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ *  رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கள் மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 7376

13 أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ * رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 13
4578 عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَتَعَاهَدْ جِيرَانَكَ * رواه مسلم

தீமை பெருகி விட்டால் நல்லவர்கள் அழிக்கப்படுவார்கள்
3346 قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ * رواه البخاري
நான் "அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமா'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்; தீமை பெருகிவிட்டால்...'' என்று பதிலüத்தார்கள்.
நூல் : புகாரி 3346