அனைத்துப் புகழும் அகில உலகையும் படைத்தது பரி பக்குவப்படுத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக -

Wednesday, 31 October 2012

பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்

ஒரே ஆண் பெண்ணிலிருந்து தான் இந்த உலக மக்கள் அனைவரும் தோன்றினார்கள். இவர்களில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இறைவனுக்குப் பிடித்தமான வாழ்வை வாழ்வதின் மூலமே இறைவனிடத்தில் நெருங்கமுடியும்.
 ஆணாக பிறப்பது உயர்வு என்றும் பெண்ணாக பிறப்பது தாழ்வு என்றும் நினைப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் முறையான வாழ்வை வாழாவிட்டால் அவன் இறைவனிடத்தில் மட்டமானவனாகிறான். கொடுங்கோலனுடைய மனைவியாக இருந்தாலும் இறைவனுக்கு உவப்பான காரியங்களை செய்தால் அவள் இறைவனிடத்தில் மதிப்புமிக்கவளாகிறாள்.
ஒரு காலத்தில் தாழ்வாக கருதப்பட்டப் பெண்களை கண்ணியப்படுத்துவதற்காகபெண்கள் இந்நாட்டின் கண்கள் என்றெல்லாம் கூறி பொதுவாக எல்லாப் பெண்களையும்சிறப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் எல்லாப் பெண்களும்சிறப்புக்குரியவர்கள் என்றக் கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை.
மாறாக இஸ்லாம் காட்டிய வழியில் நடக்கும் நற்குணமுள்ள பெண்களே தங்கம் வெள்ளிவைரம் முத்து பவளம் வைடூரியம் போன்ற உலகில் கிடைக்கும் விலையுயர்ந்தபொருட்கள் அனைத்தையும் விட மதிப்பிற்குரியவர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம் (முழுவதும்)பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும்மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2911)
ஒரு மனிதன் சேமிக்கின்ற சொத்துக்களில் சிறந்ததை உனக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு அது நல்ல பெண்மனியாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவுத் (1417)
மார்க்கமுள்ளப் பெண்னே ஆனுடைய வெற்றிக்குக் காரணமாக இருப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1.
அவளது செல்வத்திற்காக.
2.
அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3.
அவளது அழகிற்காக.
4.
அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)
நூல் : புகாரி (5090)
     
ஒரு பெண் நல்ல பெண்ணாக திகழ வேண்டுமென்றால் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை அவள் கடைபிடிப்பதன் மூலமே அவ்வாறு திகழ முடியும். அந்த வழிமுறைகளை ஒவ்வொன்றாக விளக்கி வெற்றிக்கு வழிகாட்டுவதே இந்நூலின் நோக்கம்.
   
இஸ்லாத்தில் பெரும்பாலான சட்டத்திட்டங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை. என்றாலும் இரு சாராரின் உடற்கூறுகள் குணங்கள் பலவீனங்கள் பொறுப்புகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தனித்தனியான சட்டங்களையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
   
அவ்வாறு பெண்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய விஷயங்கள் ஆதாரத்துடன் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தவறு ஏதும் இருந்தால் நம் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் போது இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்வோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

                                                       -அப்பாஸ் அலி 
ஒவ்வொரு தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் Click செய்து படித்துக்கொள்ளுங்கள் 

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா?



பெண்கள் அறுப்பதற்கு எவ்வித தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றிநபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : கஅபு இப்னு மாலிக்(ரலி),
நூல் : புகாரி(5504)
இறுதியாக
பெண்களுக்கு மாத்திரம் பிரத்யேகமான பல சட்டங்களை அறிந்துகொண்டோம். தொழும்முறை உளூ செய்யும் முறை தயம்மம் இன்னும் பல விஷயங்களில் ஆண்களுக்குசொல்லப்பட்ட அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு பொருந்தும். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் பெண்களும் ஆண்களைப் போன்றவர்கள் தான் என்று கூறியுள்ளார்கள்.
பெண்கள் ஆண்களைப் போன்றவர்களாவார்கள்.
அறிவிப்பவர் : உம்மு சுலைம் (ரலி)
நூல் : அஹ்மத் (25869)
இவற்றைத் தெரிந்துகொள்ள நபிவழியில் தொழுகைச் சட்டங்கள் என்ற புத்தகத்தை வாங்கிப் படித்துக்கொள்ளுங்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஒப்பாரி வைக்கக்கூடாது



துக்கம் மேலிடும் போது சப்தமிட்டு ஒப்பாரி வைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். ஒப்பாரி வைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம்உறுதிமொழி வாங்கினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)
நூல் : புகாரி (1306)

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களிடத்தில் இரண்டு(கெட்ட பண்புகள்) உள்ளது. அவர்களிடத்தில் உள்ள அந்த இரண்டும் இறைநிராகரிப்பாகும். (ஒன்று) வம்சாவழியில் குறையை ஏற்படுத்துவதாகும். (மற்றொன்று) இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பதாகும்.
அறிவிப்பவர் ; அபூஹரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (100)
(
துன்பத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக்கிழித்துக்கொள்பவனும் அறியாமைக்கால (மாச்சரியங்களுக்கு) அழைப்புவிடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி)
நூல் : புகாரி (1294)
ஆனால் ஒப்பாரி வைக்காமல் கவலைப்பட்டாலோ சப்தமிடாமல் கண்ணீர் வடித்தாலோ குற்றமில்லை.
சஅத் பின் உபாதா (ரலிலி) நோயுற்றபோது நபி (ஸல்) அவர்கள், அப்துர்ரஹ்மான்பின் அவ்ஃப் (ரலிலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலிலி), அப்துல்லாஹ் பின்மஸ்ஊத் (ரலிலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில்நுழைந்தபோது (சஅத் பின் உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், " என்ன? இறந்துவிட்டாரா?'' எனக் கேட்டார்கள். "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!'' என்றனர்.  நபி (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத்தொடங்கினர்.  பின் நபி (ஸல்) அவர்கள், "(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்ôலை- பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து- எனினும் இதன்காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான். 
   
உமர் (ரலிலி) அவர்கள்  ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால் கம்பினால் அடிப்பார்கள்; கல்லெறிவார்கன்.  இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1304)
   
கணவன் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கமாக இருக்கலாம். மற்றவர்கள் யார் இறந்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக்கூடாது. மூன்று நாட்கள் கழிந்து விட்டால் சகஜ நிலைக்குத் திரும்பிவிட வேண்டும்.
நான், தமது சகோதரரை இழந்திருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலிலி) அவர்களிடம்சென்றேன். அவர் நறுமணம் பூசிக்கொண்டு, “"இது எனக்குத் தேவையில்லைதான்ஆயினும் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண் தனது கணவனைத் தவிர வேறு யாருடைய இறப்பிற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதுதனது கணவன் இறந்துவிட்டால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்' என நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது  நின்றவாறு கூற நான் கேட்டிருக்கிறேன்''  என்றார்.
   
அறிவிப்பவர் : ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி)
நூல் : புகாரி (1282)